> என் ராஜபாட்டை : October 2010

.....

.

Wednesday, October 27, 2010

ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.  மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.  இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.  இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.  ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.  அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”  இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்”  என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி..  ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.  எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.  ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”

http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai.jpg?w=432&h=576

பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:  “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.  ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.  ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.  தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.


கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.


ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,  வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,  ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.  அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் .  சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.  உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு  நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.  அதுவும் எப்படி ?  பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.


http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_sun.jpg?w=400&h=400

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல்  ‘ஜிவுஜிவு’  என்று தோற்றமளித்த சூரியன்,  அவரை மிகவும் கவர்ந்து விட்டது.  மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை,  சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.  வாயுபுத்திரன் அல்லவா ?  அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.  வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.  பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.  வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.


அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.  ஆனால், அனுமன் சென்ற வேகத்தில்  ராகு பகவானால் செல்ல முடியவில்லை.  சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.  இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.  அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.  இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.  அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.  ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்  உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்,  ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.


http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai_2.jpg?w=300&h=400

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.

வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும்.  இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.  தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.  இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.  இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.  ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

http://balhanuman.files.wordpress.com/2010/10/jangiri.jpg?w=250&h=250

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.  சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.  தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.   அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே  — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.  அவர்கள் இனிப்பு விரும்பிகள்.  எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.  அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன..  மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி”  என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

நன்றி : நண்பனின் மெயில்

Gurvayur Nirmallayam......... Beautiful Moments in World



 
 
 
 
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.
...Join Keralites, Have fun & be Informed.



Magic தேசிய கொடி

நண்பன் அனுப்பிய mail.
சரியாக 30 Seconds  கொடியில் உள்ள சக்கரத்தை  பார்க்கவும் . பின்பு அருகே உள்ள வெள்ளை நிறத்தை பார்க்கவும் .  நமது தேசிய கொடி தெரியும் .

 image001.jpg
 
 




--

Thursday, October 7, 2010

எச்சரிக்கை !

எச்சரிக்கை !
கழுத்தையும் நெரிக்கும்     " கசகசா "      பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!



'மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு

சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா
உங்களுக்கு? சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக
வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை
மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில்,
தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.
அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த
நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும்
புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக்
கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து
பரப்புங்கள். இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக்
கூடாது!'

- இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது.
இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்
!

*சென்னை **செய்த **எச்சரிக்கை!*

முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம்.
''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில்,
கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய
அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில்
இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே
போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக்
கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

 கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம்
மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார்
ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று
நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது
அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப்
பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே,
மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில்
கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல்
கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த
குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம்
ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த
ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப்
பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா
பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து
அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி,
அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி
கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர்
நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான
பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு
சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும்
கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது
முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு
உத்தரவு இட்டார்கள்.

 நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம்
இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில்
அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட
அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள்,
வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே
கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.

*சிக்கன், **மட்டன், **சிறை!*

கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில்
வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும்
செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட
கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா
நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா
நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.

*'**கீட்டமைன்' **கெட்ட **நேரம்!*

ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர்
மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி
நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர்,
மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக
அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு
வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார்
செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை
சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை
உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே,
மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா
நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால்,
கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து
இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில்
வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச்
சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப்
பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட
பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு
மேனியுமாக ரெய்டு நடக்கிறது.

உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான்
செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன்
பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம்.
(Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''
கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை
செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த
குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து
கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம்.
இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில்
ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக்
கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை
மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள்
மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக்
குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள்
வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள்.
அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ,
'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ
சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு
கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான்.
சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும்
அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது
கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில்
இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.

ஸ்டார் பார், குளிர்பான கிக்!

இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன்
கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி
இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும்
இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து
குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும்
கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.

*கசகசா **ஏன் **கதி **கலக்குது?*


உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு
சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.
இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக்
காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை
பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல்
இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை
சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு.
கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான்.
மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும்
பயன்படுத்தப்படுகின்றன.


நன்றி : Mail  அனுப்பிய நண்பனுக்கு

Friday, October 1, 2010

எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்

நன்றி :
எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்


எந்திரன் படத்தை Houston இல் 20 நிமிடத்திற்கு முன்னால் பார்த்து விட்டு, இதோ இங்கே சுடச் சுட விமர்சனம். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம் இது வரை இந்தியாவில் வந்ததில்லை. டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் திரையிடப் படும் ஆங்கிலப் படங்களையும் சேர்த்து. ரஜினி படங்களை விரும்பாத வேறு மாநில மக்களோடு வாதிடும் பொது, அதிகமாகப் பயன்படுத்தப்படும் closing statement: "உனக்கு மல்லிகை பிடிக்கும். எனக்கு ரோஜா பிடிக்கும். அது அவரவர் இஷ்டம். அது போல் உனக்கு உன் ஊர் நடிகனை பிடிக்கும். எனக்கு ரஜினி ஐ பிடிக்கும்". பூக்களை பிடிக்கும் அனைவருக்கும் 'எந்திரன்'/(ROBOT) பிடிக்கும்.
வசீகரன்(ரஜினி-1) என்கிற விஞ்ஞானி 10 வருட காலமாக அயராது உழைத்து 'ச்சிட்டி'(ரஜினி-2) என்கிற ஒரு ரோபோட் ஐ செதுக்குகிறார்.  அந்த ரோபோட்டை பல திறைமைகளோடு உருவாக்கி நமது நாட்டு ராணுவத்தில் அதனை பயன் படுத்த (பணிபுரிய!) வைப்பதே அவர் லட்சியம். 'சிட்டி'(chitti என்று படிக்கவும்) க்கு பல திறைமைகள் இருந்தாலும், அதற்க்கு உணர்ச்சிகள் இல்லை என்ற காரணத்தினால், அதனை தவறாக பயன்படுத்தி கேடு விளைவிக்க வாய்ப்பு உள்ளதென்று அதற்க்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இந்நிலையில்  வசீகரனுக்கும்,   வசீகரனின் காதலி சானா(ஐஸ்வர்யா) விற்கும் சிட்டி பல சாகசங்கள் புரிகிறான். அதே சமயத்தில் வசீகரனின் professor Bohra (டேனி) எந்திரன் களை (அழிக்கும் சக்தியாக) வடிவமைத்து உருவாக்கும் முயற்ச்சியில் தோற்றுப்போகிறார். சிட்டி க்கு உணர்ச்சிகள் இருந்தால் மட்டுமே மனித குலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நம்பும் வசீகரன், சிட்டி க்கு உணர்ச்சிகளை செலுத்திகிறார். அதனால் ஏற்ப்படும் விளைவுகளும் அதனை வசீகரன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதிப் படம்.
ரஜினி தனது இளமை காலத்தில் இருந்தததை விட, வசீகரனாக வரும் ரஜினி இன்னும் பிரெஷ் ஆக இருக்கிறார். 'காதல் அணுக்கள்' பாடலில் அந்த slow motion இல் கூலேர்சில் சில நொடிகள் நடந்து வரும் ரஜினிக்கும் அவரது ஸ்டைல்க்கும் அரங்கமே அதிர்கிறது. அந்த கிளிப்பிங் மட்டும் youtube இல் சில நாட்களில் பல லட்சம் hits பெரும். வசீகரன் ரஜினி நன்றாகவே நடனம் ஆடுகிறார். இது வரை  வந்த ரஜினி படங்களிலேயே, நடனத்தில் இந்த அளவு வசீகரம் இந்த வசீகனிடம் தான் பார்க்க முடிகிறது.
இடைவேளை வரை வரும் சிட்டி ரஜினி க்கு - சிவாஜியும், அண்ணாமலையும், பாட்சாவும், பில்லாவும், முரட்டு காளையும் இணைந்து வந்தாலும் இணையாகாது. அந்த சிட்டியின் சாகசங்களுக்கு மட்டுமே ரஜினியின் தீவிர ரசிகன் அல்லாதவர்கள் கூட இந்த படத்தை பல முறை பார்க்க கூடும். அந்த சிட்டியின் தோற்றம் அருமை. சிட்டியின் சாகசங்கள் என train இல் நடக்கும் சண்டை காட்சி, பிரசவம் பார்க்கும் காட்சி என பிரமித்து விளக்கினால் படத்தின் ஒவ்வொரு pixel யும் விவரிக்க வேண்டியிருக்கும். 
Second half இல் வரும் காட்சிகளுக்கு ஈடு இணையாக சொல்ல இதுவரை இந்திய சினிமாவில் உதாரங்களே இல்லை. கிராபிக்ஸ் இது வரை பல இந்தியப் படங்களில் பயன் படுத்தப் பட்டிருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல ஒரு குறை இல்லாமல் நேர்த்தியாக  பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வில்லன் கதாப்பாத்திரத்தில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்று ரஜினி மீண்டும் நிருபித்துள்ளார். Second half இல் ரஜினி பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும், அசைவிற்கும் அரங்கத்தில் கைதட்டல் பறக்கிறது. மேற்க்கூறிய அனைத்து விஷயங்களையும் தூக்கி சாப்பிடுகிறது படத்தின் கடைசி 20 நிமிட climax.
ஐஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்று சொல்வதை விட அழகு ஐஸ்வர்யாவாய் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 
சந்தானம், கருணாஸ் பாத்திரங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. கலாபவன் மணி சம்பந்தமான காட்சிகள் அனாவிசயம். அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் பத்து வருட உழைப்பபான ரேபோவை கார்ப்பரேஷன் குப்பையிலா வீசுவார்கள்?! குறைகள் என்று தேடிப்பார்த்தால் இவைகள் தான்
வசனங்கள் ஒவ்வொன்றும் மிக கச்சிதமாகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது. இடை வேளை வரை வரும் ஒவ்வொரு வசனமும் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது. கணினி சம்பந்தமான வசனங்களும், ஆங்கில வசனங்களும் ஆங்காங்கே இருப்பதால் எல்லாராலும் எல்லா வசனங்களும் வரவேர்க்கப்படும் என்பது சந்தேகம்.  இந்த கதைக்கு அப்படிப்பட்ட வசனங்கள் தவிர்க்கப்பட இயலாது. 
ARR இன் பாடல் அனைத்தும் சில வாரங்களாகவே பிரபலம். பாடல்கள் அனைத்தும் நன்றாக காட்சியமைக்கப் பட்டுள்ளன. movie making இன் ஒவ்வொரு department உம் மிக சிறப்பாக வேலை செய்துள்ளார்கள். ஷங்கர் உடைய முந்தய படங்கள் எல்லாம் 'எந்திரன்'இன் ஒத்திகையோ என்று தோன்றும் அளவிற்கு இந்த படம் கற்பனைக்கு மிஞ்சிய திரைக்கதையும், சிறந்த காட்சி அமைப்புகளும் கொண்டுஉள்ளது. இப்படம் வசூலில் மிகச்சிறந்த சாதனை படைக்கும் என்பது எந்த அளவும் ஐயம் இல்லை. இது போன்ற இன்னொரு படம் ஷங்கரிடம் இருந்தோ , ரஜினியிடம் இருந்தோ கூட  வர இனி வாய்ப்பு இல்லை என்று தோன்றும் அளவிற்கு உள்ளது.
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் ...


எந்திரன் - விமர்சனம்


வந்தான்... வென்றான் ...