> என் ராஜபாட்டை : பயர்பாக்ஸ்ல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை மீட்க இலவச மென்பொருள்

.....

.

Thursday, July 14, 2011

பயர்பாக்ஸ்ல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை மீட்க இலவச மென்பொருள்

பயர்பாக்ஸ் (Firefox) உலாவியானது இணைய உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சில இணையதளங்களுக்குச் செல்லும் போது பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து தான் உள்ளே செல்ல வேண்டியிருக்கும்.
உதாரணமாக ஜிமெயில் போன்ற தளங்கள். இப்படி பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்கும் போது பயர்பாக்ஸ் உலவி நம்மிடம் “Remember your password” என்று சொல்லி இந்த விவரங்களைச் சேமித்து வைக்கவா என்று கேட்கும். நாமும் சேமித்து வைப்போம். அப்போது தான் சில தளங்களில் வேகமாக நுழையமுடியும்.
பின்னாட்களில் எதாவது ஒரு இணையதளத்தில் நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிடுவீர்கள். அவசரத்தில் நினைவு மறதியால் தெரியாமல் குழம்பும் நிலை பலருக்கு ஏற்படலாம்.
அப்போது பயர்பாக்ஸ் உலவியில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை மீட்டு எடுத்தால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற செய்தி தெரியாது. இந்த மாதிரி உங்களின் எல்லா இணையதளங்களுக்கான பயனர் பெயர், கடவுச்சொல்லும் பயர்பாக்சில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதையெல்லாம் மீட்டுத்தர உதவும் இலவச மென்பொருள் தான் Firefox Password Recovery Tool ஆகும்.

இந்த மென்பொருள் எந்தெந்த தளத்தில் நீங்கள் நுழையும் போது கடவுச்சொல் கொடுத்தீர்களோ அதையெல்லம் வேகமாக எளிதாகப் பட்டியலிடுகிறது.
இதை வைத்து மறந்து போன கடவுச்சொல்லை திரும்பப் பெற முடியும். மேலும் இது எல்லா விவரங்களையும் ஒரு உரைக்கோப்பாக (Text File) சேமித்துக் கொள்ளும் வசதியும் தருகிறது.

தரவிறக்க முகவரி : http://spykesoft.com/Firefox-Password-Recovery-Tool.html

Thanks: vanakamnet

10 comments:

  1. நல்லா பிரயோசனமான பதிவு மக்கா......

    ReplyDelete
  2. உபயோகப்படுத்தி பயன்படும் வகையில் சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!

    ReplyDelete
  3. சகோ /நல்ல தகவல்.....
    பகிர்விற்கு நன்றியுடன்,வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  4. புதிய பயனுள்ள தகவல் அண்ணா ...

    ReplyDelete
  5. தமிழ் 10 ல மூணுபேருக்கு ஓட்டு போட்டாத்தான் ஷேர் பண்ண முடியுமாம்......

    ReplyDelete
  6. `பயனுள்ள பதிவு பாஸ்!

    ReplyDelete
  7. எனக்கு மிகவும் உபயோகமான பதிவு,நான் அடிக்கடி மறந்துவிட்டு என் பெண்களை உதவிக்கு அழைப்பேன்.(அவர்களுக்கு என் கடவு சொல்கள் அனைத்தும் அத்துப்படி) நன்றி, ராஜா

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல் , நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  9. பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  10. firefox 5 verion not supported.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...