> என் ராஜபாட்டை : September 2011

.....

.

Friday, September 30, 2011

பதிவர் powder star Dr. ஐடியா மணிக்கு ஒரு பகிரங்க கடிதம்.



ஐயா கும்புடுறேன்( இது உங்கள் ஸ்டைல்தான்)

முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். ஆமாம் நீங்க தமிழ்மணத்தில் இரண்டாம் இடம் பிடித்தமைக்கு. தமிழ்மணத்தில் முதல் 20 ல் இடம் பிடிப்பதே அரிதான நேரத்தில் இரண்டாம் இடம் என்பது சாதனைதான். மீண்டும் வாழ்த்துகள், வளருங்கள், தொடருங்கள்.

இந்த கடிதம் எழுதகாரனமே மேலே சொன்ன விஷயத்திற்க்கு நீங்கள் போட்ட பதிவும், அதில் சொன்ன சில விஷயங்களும் தான். நீங்கள் கடுமையாக சாடிய விஷயம் copy & paste பற்றி.

“விகடன் போன்ற முன்னனி இத்ழ்களின் படைப்புகளை திருடி பதிவு போட்டி ஹிட்ஸை எகிறசெய்தல்! “

எல்லா விஷயமும் எல்லருக்கும் தெரியும் என சொல்ல முடியாது. நான் பேருந்தில் செல்லும் போது கடையில் விகடன் அல்லது முன்னனி இதழ்களின் விளம்பரங்களை பார்க்கும் போது வாங்க தூண்டும் அல்லது படிக்க தூண்டும். அந்த ஒரு விஷயத்துகாக அந்த இதழை வாங்கவேண்டுமா என தோன்றும். இந்த நேரத்தில் கைகுடுப்பது நீங்கள் சொன்ன பதிவர்கள்தான்.

அவர்கள் திருடவில்லை, தனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இது எப்படி தவறு ஆகும். சொந்த சரக்கை மட்டும்தான் எழுதவேண்டும் எனில் நீங்கள் உதாரனத்திற்க்கு திருகுறள், ராமாயனம் , etc என எதிலிருந்தும் எடுக்க கூடாது.

“ விகடனை பதிவை சுட்டு, ஹிட்ஸ் வாங்கி நம்பர் ஓன்னாக வந்தேன் என்றால் நண்பர்கள் என்னை நாயினும் கடயனாக ம்திப்பர்.”

நீங்கள் யாரை மனதில் வைத்து இப்படி எழுதுகின்றிர்கள் என நன்றாக தெரிகிறது. அவர் copy & paste மட்டும் பன்னுவதில்லை. copy & paste வரும் ஹிட்ஸை விட அவரின் சொந்த பதிவிர்க்கு வரும் ஹிட்ஸ் அதிகம். சக பதிவரை இப்படி விமர்சிப்பது தவறு என்பது எனது எண்ணம்.

“ இனி தமிழ்மணத்தில் copy & paste க்கு இடம் இல்லை என தீர்மானம் எடுக்கவேண்டும்.”

தமிழ்மணம் இல்லை என்றால் பதிவுலகம் இருக்காதா? யாரும் பதிவே எழுதமாட்டார்களா? வடிவேலு பானியில் சொன்னால் “என்ன இது சின்னபிள்ளைதனமால இருக்கு?”

யாரும் பார்க்காத, பலருக்கு தெரியாத விஷயத்தை எதாவது ஒரு தளத்தில் அல்லது இதழில் படித்தால் அதை பகிர்வதில் என்ன தப்பு.

“copy & paste பண்னி பதிவுகள் போடும் ஒரு பதிவரை முன்னனி பதிவர் என அடையாளம் காட்டுவது தமிழ்மனத்திர்க்கு மாபெறும் அவமானம்”

Only copy & paste என்றால் நான் ஒத்துகொள்கிறேன். சொந்த பதிவுடன் , தமக்கு பிடித்த , ரசித்த , வாசித்த பதிவை copy & paste செய்வதை தவறு என சொல்லமுடியாது.


இவையனைத்தும் என் சொந்த கருத்து. தவறு எனில் மன்னிக்கவும்.

கொசுறு: நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?

அன்புடன்..

(தனது, & மற்றவர்) மகிழ்ச்சிகாக பதிவிடும் ஒரு பதிவர்.

Thursday, September 29, 2011

காசு இருந்தால்தான் கடவுள் தரிசனமா ?



இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள மனைவி வீட்டிற்க்கு சென்றேன். அவர்கள் வீட்டு அருகே உள்ள திருவானைகாவல் கோவிலுக்கு செல்வோம் என மனைவி ஆசைப்பட்டதால்( மிரட்டியதாக யாரும் நினைக்க வேண்டாம்) சென்றேன். அங்கு நடந்த சில விஷயங்கள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கட்டண தரிசனம் :

சாமியை அருகில் காண 10 ரூபாய் கட்டனம், இன்னும் அருகே சென்று பார்க்க 50 ரூபாய். விஷேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுபடுத்த வேண்டுமானல் கட்டனம் விதிக்கலாம். கூட்டமே வராத, சாதாரன நாட்களில்கூட ஏன் எந்த நடைமுறை?



அப்படியே கட்டணம் விதித்தே தீரவேண்டுமெனில் ஒரு முறை எடுக்கும் டிக்கெட் அந்த கோவிலில் உள்ள அனைத்து சாமியையும் தரிசிக்க போதுமானது என வைக்கலாமே. ஒவ்வொறு சாமிக்கும் ஒவ்வொறு டிக்கெட் எடுக்கவேண்டும் என்பது எந்தவிததில் சரி ?

சில்லரைக்கு பதில் விபூதியா?

கடைகளில் ஒரு ரூபாய் சில்லரை இல்லையெனில் அதற்க்கு பதில் சாக்லெட் தருவார்கள். அதுபோல 10 ரூபாய் குடுத்து அர்ச்சனை டிக்கெட் வாங்கினால், 3 ரூபாய்க்கு குங்கும பொட்டலம் தருகிறார்கள். அர்ச்சனை முடிந்து பூசாரியே குங்குமம் தரும் போது இது வேறு எதுக்கு?




திருமணஞ்சேரி கொடுமை :

இதைவிட பெரிய கொடுமை திருமணஞ்சேரியில் சாமி கும்பிடுவது.
ஊருக்குள் வரும் போதே ஊள்ளுர்வாசிகள் கோவில் நிதி என ஒரு amount ஆட்டை போடுவார்கள். 

பார்க்கிங் வசதியே இருக்காது ஆனால் பார்கிங் கட்டணம் என கொள்ளை. 

அர்ச்சனை டிக்கெட் 20 

விளக்கு ஏற்ற 20 

பூஜை முடிந்ததும் மோளம் அடித்தவர்களுக்கு 20(கோவிலில் சம்பளம் தனி)

ஊள்ளே விளக்குக்கு தனி amount 

          ஒருமுறை சாமிதரிசனம் செய்ய குறைந்தது 100 வேண்டும்.






ஏங்க !! கடவுள் எல்லாருக்கும் சமம்னா காசு குடுத்தாமட்டும் நல்ல பாக்கலாம் என்பது என்ன நீயாயம் ? என சமதர்மம் ?








Wednesday, September 28, 2011

பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி ?

DAVID  BLAINE    மேஜிக் உலகின் முடிசூடா மன்னன் . சாதாரண சீட்டு கட்டில் இருந்து அந்தரத்தில் மிதக்கும் அதிசயம் வரை அனைத்தையும் செய்யகூடிய அபூர்வ மனிதர்.(நித்யானந்தா அந்தரத்தில் பறப்பேன் என புருடா விட்டது போல இல்லை ).

அவர் செய்த பல மேஜிக் வீடியோவின் தொகுப்புகள் உங்களுக்காக ..
தெருவில் செய்யும் மேஜிக் :

அவரின் மிக சிறந்த மேஜிகில் ஒன்று இது :



சீட்டு கட்டு மேஜிக் :


டிஸ்கி  1  : பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில்  முதலிடம் பெற ஏதாவது மேஜிக் இருக்கா ? 

டிஸ்கி 2  : தலைப்பை ஏட்டிக்கு போட்டியாக வைத்தால் தான் வேலைக்கு ஆகும் 
                     என யாரோ சொன்னதால் தான் இந்த தலைப்பு .



Tuesday, September 27, 2011

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

      
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற கோஷத்தோடு கிளம்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடப்பாறை விழுங்கிய நிலைக்கு வந்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை வலைவீசித் தேட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளது அவரது கட்சி.

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் செல்வாக்கை கொண்டுள்ள பா.ம.க., கடந்த 15 ஆண்டுகளாக தமக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருப்பது போன்ற பிரமை ஒன்றை பில்ட் பண்ணி வந்திருந்தது. அதற்குக் காரணம், கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்ததுதான்.ஆனால், 15 வருடங்களாக ஒரே கூட்டணியில் இருந்தால் போர் அடிக்கும் அல்லவா? அதனால், ‘இந்தப் பக்கம் ஒரு தாவல், அந்தப் பக்கம் ஒரு பாய்ச்சல்’ என்ற ஜிம்நாட்டிக்ஸ் வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. ஒருதடவை தி.மு.க. கூட்டணி, மறுதடவை அ.தி.மு.க. கூட்டணி என்று மாறிமாறி வந்ததில், இவர்களுக்கும் தமிழகம் தழுவிய அளவில் ஏதோ செல்வாக்கு இருப்பது போல தோற்றம் காட்ட முடிந்தது.

பா.ம.கா., பொருத்தமற்ற மாம்பழம் சின்னத்தை உதறிவிட்டு, பொருத்தமாக பென்டூலம் சின்னத்தை பெற்றிருக்கலாம். அந்தளவுக்கு கூச்சமில்லாமல் தாவக்கூடிய கட்சி அது.இப்போது, பா.ம.க. இளவரசருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை யாரும் கொடுக்காத விரக்தியில் திடீரென கடப்பாறையை விழுங்கப்போக, “சரிப்பா.. தனித்தே போட்டியிடுங்க” என்று தி.மு.க., அ.தி.மு.க. என்ற இவர்களது இரு முன்னாள் கூட்டாளிகளும் கழட்டி விட்டுவிட்டார்கள்.
போட்டியிடலாம். அதில் சிக்கல் இல்லை. பாதணிகளை வைத்து அரசாண்ட கதைபோல, இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மாம்பழத்தையா வேட்பாளராக நிறுத்த முடியும்?

போட்டியிட ஆட்கள், அவசரமாக தேவையாக உள்ளது.வட மாவட்டங்களில் இவர்களுக்கு இன்னமும் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், பதவிக் கனவுகளுடன் போட்டியிட ஆட்கள் முன்வருவார்கள். சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போதியளவு ஆட்கள் விருப்ப மனு கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றைய மாவட்டங்களில், முக்கியமாக தென் மாவட்டங்களில்தான், மாம்பழம் என்றாலே அலறி ஓடுகிறார்கள். தென்மாவட்டங்களில் சகல இடங்களிலும் போட்டியிட வைக்கத் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கும், விருப்ப மனு கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிலையில் மிரண்டு போயுள்ளது கட்சி!

மற்றைய கட்சிகள் தத்தமது பட்டியல்களை வெளியிடத் தொடங்கிவிட்ட நிலையில், இவர்களும் வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் லிஸ்ட்டை வெளியிடலாம். கொஞ்சம் சேர்ப்பு வேலைகள் செய்தால், இரண்டாவது லிஸ்ட்டையும் ஒப்பேற்றி விடலாம் என்று வைத்துங் கொள்ளுங்களேன்.மூன்றாவது லிஸ்ட்டுக்குத்தான் ஆள் பிடிக்க வேண்டியுள்ளது. 

ஆள்பிடிக்க, காடுவெட்டி குருவை கோணியுடன் அனுப்பவா முடியும்? உங்களிடம் நல்ல ஐடியா ஏதாவது இருந்தால், வைத்தியர் ஐயாவுக்கு கொடுங்கள், பிளீஸ்.

நன்றி : விறுவிறுப்பு.காம்

Monday, September 26, 2011

இலவசமா பேசலாம் வாங்க…



இந்திய ரயில்வேயில் அறிமுகபடுத்தபட்டுள்ள (எனக்கு இப்பதான் தெரிந்தது) ஒரு வசதியயை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ticket's current status மற்றும் பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு 97733-00000 என்ற எண்ணுக்கு உங்கள் PNR நம்பரை SMS பன்னவும். (இதுக்கு சாதாரன கட்டனம் மட்டும்).

சில இலவச எண்கள்:
விமான போக்குவரத்து

Indian Airlines                            - (1800 180 1407)
Jet Airways                                - (1800 22 5522)
Spice Jet                                   - (1800 180 3333)
AirIndia                                     - (1800 22 7722)
Kingfisher                                 - (1800 180 0101)

வங்கிகள்

ABN AMRO                               - (1800 11 2224)
Canara Bank                              - (1800 44 6000)
Citibank                                    - (1800 44 2265)
Corporation Bank                      - (1800 443 555)
Development Credit Bank          - (1800 22 5769)
HDFC Bank                               - (1800 227 227)
ICICI Bank                                 - (1800 333 499)
ICICI Bank NRI                           - (1800 22 4848)
Indian Bank                               - (1800 425 1400)
ING Vysya                                - (1800 44 9900)
State Bank of India                    - (1800 44 1955)

வாகன தயரிப்பாளர்கள்

Mahindra Scorpio                      - (1800 22 6006)
Maruti                                       - (1800 111 515)
Tata Motors                              - (1800 22 5552)

கணினி

AMD                                         - (1800 425 6664)
Apple Computers                      - (1800 444 683)
Canon                                       - (1800 333 366)
Cisco Systems                          - (1800 221 777)
Compaq - HP                            - (1800 444 999)
Data One Broadband                 - (1800 424 1800)
Dell                                          - (1800 444 026)
Epson                                      - (1800 44 0011)
Genesis Tally Academy                         - (1800 444 888)
HCL                                          - (1800 180 8080)
IBM                                          - (1800 443 333)
Microsoft                                  - (1800 111 100)
Seagate                                    - (1800 180 1104)
Symantec                                 - (1800 44 5533)
TVS Electronics                        - (1800 444 566)
Wipro                                       - (1800 333 312)
Zenith                                       - (1800 222 004)

அலைபேசி( Cell Phones)

BenQ                                        - (1800 22 08 08)
Bird CellPhones                        - (1800 11 7700)
Motorola MotoAssist                 - (1800 11 1211)
Nokia                                        - (3030 3838)
Sony Ericsson                          - (3901 1111)

 
டிஸ்கி : இலவசமா பிகர்கிட்ட பேசலாம் என்ற என்னத்தில் வந்து ஏமாத்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல.



Sunday, September 25, 2011

விநாயகரை கைது செய்து விசாரணை நடத்தும் ஹிட்லரின் நாஜி உளவுத்துறை : ஆஸ்திரேலிய அட்டூழியம்



ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் விநாயகரை அவமதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது.
 
இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது.
 
அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ், இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார். 
 
நன்றி : KINGTAMIL.Com

Saturday, September 24, 2011

தீவிரவாதிகள் பிடியில் பதிவர்கள்.




ஒரு கட்டிடத்தில் நமது பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சமயத்தில் ஒரு தீவிரவாதி உள்ளே புகுந்து அனைவரையும் பிடித்து கொள்கிறான். அந்த நேரத்தில் அவர்கள் ரியாக்ஷன் அப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

சீனா : நாம வேனா வாரம் ஒருத்தரை தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை
        நடத்த அனுப்பலாமா?

சித்ரா : ஐயா.. இது வலைசரம் இல்லை.. கொலை சரம்.

சீனா : நீ போய் ஒரு டான்ஸ் ஆடு. அதை பார்த்து அவன் பயத்துல
        செத்துடுவான். நாம தப்பிச்சுடுலாம்.

கூடல் பாலா: அய்யோ ! வேண்டாம்.. பில்டிங் கொஞ்சம் பழசு.. நான் வேணா
         தீவிரவாதிக்கு எதிரா ஒரு போராட்டம் நடத்தட்டா?

சீனா : 2 நாளாதான் போராட்டம் நடத்தாம இருக்க.. வேண்டாம் விடு.

வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?

சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
        எடு. அவன் தானே ஒடிடுவான்.

வேடந்தாங்கல் கருன் : நம்ம சி.பி எங்கே ?

சீனா : புதுசா கண்னடிக்கும் கன்னி” னு ஒரு கில்மா படம் வந்து இருக்கு. அத பார்த்து விமர்சனம் எழுத போயிருக்கார். வாங்க பலே பிரபு நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க ?

பலே பிரபு : நான் அந்த தீவிரவாதியின் பயோடேட்டா வை வாங்கி என்
               வலையில் போடவா ?

சீனா : நீ ஒன்னும் போடவேண்டாம். அதோ வந்தேமாதரம் சசி வாரார்
        அவர்கிட்ட கேட்போம்.

சசி : வைரஸ்களிடம் இருந்து தப்பிபது எப்படி தெரியுமா ?

கருன் : முதலில் தீவிரவாதியிடம் இருந்து தப்பிபது எப்படினு சொல்லு ?

சசி : ஆண்டி வைரஸ்…….

சி.பி : என்னது ஆண்டியா ? எங்கே?

சசி : யோவ்.. நான் சொன்னது ANTI VIRUS

சி.பி ; அதோ விக்கி தக்காளி வாரான். அவங்கிட்ட கேட்போம்.

விக்கி : என் குட்டிசுவர் தொடரை படிக்க சொல்லுவோம். அத படிச்சுடு
          அவன் எப்படி உயிரோடு இருப்பானு பார்கிறேன்.

ரமேஷ் : நம்ம டெர்ரர் கும்மி குருப்பை விட்டு கலாய்க சொல்லலாமா?

சி.பி : 4 நாள் கழித்து கொல்லுரவன் உடனே கொன்னுடுவான்.

நாஞ்சில் மனோ : நான் என் லேப்டாப் வச்சு எதாவது பண்ணடா ?
கவிதைவீதி சௌந்தர் : வேண்டாம் . அப்புறம் நான் கவிதை சொல்லி உன்னை கொன்னுடுவேன் .
                                 சரி எங்கே நம்ம தமிழ்வாசி ?
நாஞ்சில் மனோ : அவர் எப்பவோ ஆதிவாசியா போய்டார் .

கவிதைவீதி சௌந்தர் : சரி பன்னிகுட்டி ராமசாமி எங்கே ?

நாஞ்சில் மனோ : அவர் பூமிய தேடி போய்டார் .

கருன் : அங்க பாருங்க.. நம்ம FOOD திவிரவாதிக்கு எதோ குடிக்க குடுத்தார் . அவன் மயங்கி விழுந்துடான்.

சி.பி. : வெரி குட், FOOD. எப்படி உனக்கு மயக்க மருந்து குடுக்குற ஐடியா
        வந்தது ?

FOOD :  ஐயோ ! ! நான் மயக்க மருந்து குடுக்கல.

கருன் : பின்னே என்ன குடுத்த ?

FOOD : நான் தயாரிச்ச சூப்பைதான் குடுத்தேன்.

எல்லாரும் மயக்கம் அடித்து விழுகின்றனர்.

டிஸ்கி 1: சீனா ஐயா கோவித்துகொள்ள கூடாது.

டிஸ்கி 2: சிரிப்பு வரலைனா நான் பொருப்பு இல்லை

டிஸ்கி 3: இதில் இடம்பெற்ற பதிவர்கள் தவறாக எடுத்துகொள்ளகூடாது.

இப்படிக்கு :  டிஸ்கி மேல டிஸ்கி போடும் சங்கம்.











Friday, September 23, 2011

கி.பி 2055 – காலை மணி 8 - பூமியின் கடைசி நாள் (எனது முதல் அறிவியல் சிறுகதை)






கி.பி 2055 காலை மணி 7.45
 
ஜெனிவாவில் உள்ள உலகின் தலைமை செயலகம். 213 நாடுகளின் அதிபர்கள் கூட்டம். அமெரிக்க அதிபர் ராபர்ட் மெக்கலே தனது கணீர் குரலில் “ நீங்கள் சொல்லுவது உண்மையா?” என்றார்.

“100 % உன்மை “ கண்ணாடி அனிந்த புரபசர் மித்ரன்.

நமது பூமி அழியபோகுதுனு சொல்றிங்களா?” இந்திய அதிபர் ராஜன்.


“அழியவில்லை அழிக்க போகின்றார்கள். உங்களுக்கு மீண்டும் விளக்கமாக சொல்கிறேன். ஆல்பா கிரகம் பூமியில் இருந்து 2 லட்சம் ஓளி மையில் தூரத்தில் உள்ளது. அங்கு நம்மைவிட புத்திசாலியான, பலமான உயிரினங்கள் உள்ளது. அவர்கள் அவர்கள் மசூகா கிரகத்துக்கு போக்குவரத்துகாகா  ஒரு பாலம் கட்டுகின்றனர். அந்த இரு கிரகத்துக்கும் நடுவே நமது பூமி வருவதால் இதை இடிக்க நினைக்கின்றார்கள். “

“அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினிர்களா? “-ராபர்ட் மெக்கலே,

“பேசினோம், இன்னும் 2 நிமிடம் நேரம் தருகிறோம், பூமியை காலி செய்யுங்கள் என சொல்லிவிட்டனர் “  - புரபசர் மித்ரன்

“எத்தனை மனிக்கு அழிக்கபோகின்றார்கள் “ இங்கிலாந்து அதிபர்.

“இன்று காலை 8 மணிக்கு “ - புரபசர் மித்ரன்

“இனி என்ன செய்வது..?” கியூபா அதிபர்

“மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான் “-புரபசர் மித்ரன்

மணி 7 : 49 : 50

7 : 49 : 51

7 : 49 : 53

7 : 49 : 55

7 : 49 : 57

7 : 49 : 58

7 : 49 : 59


“படார்……………..”


“சனியனே., விடிஞ்சு மணி 8 ஆகுது இன்னும் துங்குறத பாரு.. மூஞ்சுல தண்ணி அடிச்சதும் முழிக்கிற முழிய பாரு..”

Thursday, September 22, 2011

கருணாநிதி பேசுவதும்,சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்

வேதம் ஓதும் சாத்தான்




தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும், சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அதிமுக அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.  இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு முன்னால், அவர் தன்னைச் சுயபரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
  
இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதையும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.  கடந்த திமுக ஆட்சியில், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற காவலர்களின் தாக்குதல் படை முதன்முறையாக இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது. கட்டுங்கடங்காத பெரும் கலவரங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை கற்றறிந்த வழக்கறிஞர்களின் அறவழியான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு முதன்முறையாக ஏவப்பட்டது.  
1919-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது பிரிட்டிஷ் ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டு 400 பேருக்கு மேல் சுருண்டு விழுந்து செத்தனர். அந்தக் கொடிய ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு இணையாக நடந்த நிகழ்ச்சி உயர் நீதிமன்ற நிகழ்ச்சியே ஆகும்.  அதே காலகட்டத்தில் மதுரையில் அமைதியாக ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.  தலைமை நீதிபதியும், தலைமைப் பதிவாளரும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையைத் தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து தடியடி நடத்துவதற்கு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.  இத்துயர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், காவல்துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் எல்லைமீறிய தாக்குதல்களையும் கண்டித்தது. அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.  29-10-2009 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வேண்டாத நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பானவர்கள் என 4 உயர் அதிகாரிகளைப் பெயர் சுட்டி, அவர்களைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.  உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய முதலமைச்சர் கருணாநிதி இறுதிவரை முன்வரவில்லை. 

 இந்த நிகழ்ச்சிகளுக்குத் தார்மிக ரீதியில் மட்டுமல்ல, நேரடியாகவும் முதலமைச்சரே பொறுப்பு என்பதால்தான் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடைசிவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.  உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடுமைகளைப்போல, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும்.  அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார்.  ""சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட வேண்டிய பொருளாக ஆகிவிட்டது'' என குற்றம் சாட்டியிருக்கிறார். 

1972-ம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக தோன்றிய பிறகு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் வேரை அறுக்கும் முயற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. அவற்றுக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதியே ஆவார்.  அப்போது பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ. மதியழகன் எம்.ஜி.ஆரோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்ற காரணத்தால் அவருக்கு எதிராக பேரவைத் துணைத் தலைவராக இருந்த சீனிவாசனை முதலமைச்சர் கருணாநிதி பயன்படுத்தி, சட்டமன்றத்தில் ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்து சட்டமன்றத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையே மூச்சுத் திணற வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை அவமானகரமாகப் பேசி சபைக்கே வராமல் விரட்டியடித்தார்.  1990-ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைப் பெண் என்றும் பாராமல் தனது சகாக்களை விட்டுத் தாக்கச் செய்தார். சட்டமன்றத்தில் தனக்கு எதிரான நிலையெடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாமக போன்ற பல கட்சிகளையும் இரண்டாக உடைத்து சாதனை படைத்தார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க இவர் ஆற்றிய அருஞ்செயல்களைப் பட்டியலிட்டால் இடம்கொள்ளாது.  

லஞ்சம், ஊழல் போன்றவற்றின் மூலம் திரட்டிய வரைமுறையில்லாத செல்வம் போதாது என்று அப்பாவிப் பொதுமக்களின் சொத்துகளையும் தொழிற்சாலைகளையும் நிலங்களையும் மிரட்டியும் சட்டவிரோதமாகவும் பறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும், மாவட்ட அளவில் நிர்வாகிகளாகப் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்த வழக்குகளை முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துக் குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளியே வருவதற்குப் பதில், பழிவாங்கும் போக்குடன் இவர்கள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என கருணாநிதி நா கூசாது பேசுகிறார்.  மேலே கண்டவர்கள் செய்த சட்டவிரோதமான செயல்கள் அனைத்தும் இவர் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்றவைதான். அப்போது அவற்றைத் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராத இவர், இப்போது புலம்புவதில் எவ்விதப் பயனும் இல்லை. 

 சட்டம் தனது கடமையைச் செய்யும் என எத்தனை தடவை இவர் முதலமைச்சராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். இப்போது சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு எதிராகக் கூப்பாடு போடுவது ஏன்? உள்ளாட்சித் தேர்தலைப் பாரபட்சமற்ற முறையில் நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என திமுக வற்புறுத்துவது கண்டு மக்கள் நகைக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருமங்கலத்தில் தொடங்கி நடைபெற்ற துணைத் தேர்தல்கள் அத்தனையிலும் அராஜகம் கொடிகட்டிப் பறந்தது.  திருமங்கலம் தில்லுமுல்லு என்ற புதிய தேர்தல் தந்திரத்தையே கையாண்டு வெற்றி தேடித் தந்த தனது மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியவர், இன்று தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் எனப் பேசுவது மனசாட்சியைக் கொன்ற தன்மையாகும். 

 திமுகவை வீழ்த்த இந்திரா காந்தியாலே முடியாதபோது வேறு யாரால் முடியப் போகிறது எனப் பெருமை பேசியிருக்கிறார். ஏதோ இவர் இந்திராகாந்தியை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றதுபோல சவடால் அடிக்கிறார்.  1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் - ராஜாஜி கூட்டு கண்டு பயந்து இந்திராவிடம் சரணடைந்ததை மறந்துவிட்டார்.  1975-ம் ஆண்டு அவசரகால நிலைமை இருந்தபோது இவரது ஆட்சியை இந்திரா பதவிநீக்கம் செய்ததையும், இந்திராவைச் சர்வாதிகாரி என இவரும் இவரது சகாக்களும் ஏசியதையும் வசதியாக மறந்துவிட்டு 1980 பொதுத் தேர்தலின்போது, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என அவரிடம் சரண் புகுந்ததையும் மறைத்துப் பேசுகிறார். 

 இந்திராவின் தயவால் எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் பதவிநீக்கம் செய்ய வைத்து மறுதேர்தலைச் சந்தித்தும்கூட எம்.ஜி.ஆரின் வெற்றியை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.  மக்களிடம் இயற்கையாகக் குடிகொண்டுள்ள மறதியைப் பயன்படுத்திக்கொண்டு பழைய நிகழ்ச்சிகளை மறைத்தும் திரித்தும் பேசுகிற கலை அவருக்கு மட்டுமே உரியதாகும்.  ஐந்துமுறை முதலமைச்சராகப் பதவி வகித்துக் கொடிகட்டிப் பறந்தவர் இன்றைக்குக் குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநிலத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனுப்போட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகியிருப்பதும், இனி யாரிடம் முறையிடுவது எனத் தேடித்தேடி அலைவதும் பரிதாபத்துக்குரியதாகும்.

 ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.

நன்றி : தினமணி 

Wednesday, September 21, 2011

வாங்க கூகுளை ஆட்டி வைக்கலாம்.






இனைய உலகின் முடிசூடாமன்னன் கூகுள். அது நமக்கு பல வசதிகளை தருகிறது. அதில் சில விஷயங்கள் சும்மா நம்மை மகிழ்விக்க செய்யுமாறு வடிவமைத்துள்ளது. அது போல சில விஷயங்களை இன்று பார்ப்போம்.

இவை அனைத்திற்க்கும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உலவியில்(Browser) www.google.com என டைப் செய்யவும். அதில் வரும் Search Text Box இல் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து I’am Feeling Lucky என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிது  நேரம் காத்திருந்து பாருங்கள் என்ன நடக்குதுனு.

  1. Google Gravity:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் கீழே விழுந்துவிடும்.

  1. Epic Google:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் உங்கள் திரையின் அளவுக்கு பெரிதாக மாறிகொண்டே வரும்.

  1. Google Sphere:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் Search Text Box ஐ சுற்றி சுற்றி வரும்.

  1. Google Hacker:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள தகவல்கள் யாரோ ஒருவரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமுடியாதபடி மாற்றி அமைக்கபட்டதுபோல் மாறிவிடும்.

  1. Annoying Google:

கூகுள் என்ற வார்த்தைக்கு பதில் Annoying Google என வரும் இன்னும் சில மாற்றங்களும் வரும்.

  1. Google Loco:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள கூகுள் லோகோ(LOGO) ஜாலியாக நடனமாடும்.

  1. RAJA MELAIYUR :

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உலக நாயகன், பதிவுலுக குழந்தை, இந்தியாவின் வருங்காலம், தமிழகத்தின் விடிவியாழன்(எத்தனை நாளுக்கு தான் விடி வெள்ளினு சொல்றது) உங்கள் மனம் கவர்ந்த ராஜாவின் புகைபடம் வரும்.




Tuesday, September 20, 2011

தல போல வருமா ?

1 ,00 ,000 ஹிட்ச்க்கு மேல் வாரி வழங்கிய நண்பர்களுக்கு நன்றி 

சைக்கிள் ஒட்டவே டூப்பு போடுற நடிகர்களுக்கு மத்தியில் உண்மையாக பைக் , மற்றும் கார் ஒட்டி , அதுவும் இவ்வளவு வேகமாக ஓட்ட நம்ம தலையலதான் முடியும் .

அந்த அரிய வீடியோகளை பார்க்க ...

பைக் போற ஸ்பீட் அ பாருங்க ...


இப்ப சொல்லுங்க .. தல தலதான ....

Monday, September 19, 2011

திரிஷாவின் உதடு வேண்டுமா?


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும் வறண்டும் காணப்படுகின்றன.

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:

1. தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள்   
    மென்மையாக மாறும்.
2. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும்  
   குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக 
   மாறும்.
3. உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும் நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும் வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
4. லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
5. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம். லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
6. முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாகும்.
7. முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து  அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும்.
8. இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்  மென்மையாகவும் மாறும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

1 முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
2. லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.
3. லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.
4. லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்குகளின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும்.அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.சிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும் பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் லிப்லைனரும் உபயோகிக்கலாம்.
தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.
5. மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால் மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

டிஸ்கி :  திரிஷா உதடு போல வேண்டுமா ? என தலைப்பு இருக்க வேண்டும் . சும்மா ஒரு கிக்குக்கு தான் இப்படி வச்சேன் .

நன்றி :www.vanakkamnet.com

Sunday, September 18, 2011

இன்று SUNDAY எனவே .....

இன்று SUNDAY எனவே .... 


பதிவுக்கு விடுமுறை ..

போய் புள்ள குட்டியுடன் விளையாடுங்கள் ..

Saturday, September 17, 2011

“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்

சென்னை, : “தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போய்விட்டதில், நாம் மிகவும் ஏழையாகி விட்டோம்” என்று தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆட்சியில் இருந்தால்தான் கட்சிக்கு ‘பைசா வரவு ஜாஸ்தி’ என்பதை மறைமுகமாக கட்சிக்காரர்களுக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார்.தி.மு.க.வில், “கட்சி வேறு, தலைவர் வேறு, தலைவரின் குடும்பம் வேறு” என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருக்கும்வரை, பைனான்சியர்களின் கூட்டம், சினிமாக்காரர்களின் கூட்டம் என்று வித்தியாசமான கூட்டங்கள் நடைபெற்று வந்த இடத்தில், இப்போதெல்லாம் வழக்கறிஞர்களை அழைத்துத்தான் ஆலோசனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது கட்சி.கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும் குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளுக்காக வழக்கறிஞர்களைச் சந்தித்துவரும் கருணாநிதி, கட்சிக்காரர்களின் ஊழல் வழக்குகளுக்காக வழக்கறிஞர்களை அறிவாலயத்தில் சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது, “சில வாரங்களுக்குமுன் தி.மு.க.,வில் வழக்கறிஞர் அணி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டிருந்தேன். தற்போது, அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அப்படி கேள்வி கேட்டால்தான், ‘என்ன இப்படி கேட்டுவிட்டாய், நாங்கள் எல்லாம் எங்கே போய் விட்டோம்?’ என்று மார்தட்டிக்கொண்டு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவீர்கள் என்று தெரியும். அதனால்தான் அப்படி கேட்டேன்” என்று அவர்களை முதலில் குளிர்வித்தார்.

தொடர்ந்து பேசும்போது, “நமது வழக்கறிஞர்களுக்கு எல்லாம், நாம் வேலை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை, இன்றைய அரசு எமக்கு வழங்கியிருக்கிறது. சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை மீட்க, நீங்கள் எடுத்துள்ள முயற்சியை தொடர வேண்டும். அவர்களுக்கு ஜாமின் தர மாட்டோம் என்று சொல்லும்போது, அரணாக இருந்து அவர்களை மீட்க வேண்டும்” என்று எம்பிளாய்மென்ட் ஆப்பர்சூனிட்டி பற்றியும் கூறியிருக்கிறார்.இப்படிப் பேசும்போது, கட்சிக்காரர்களை வெளியே எடுக்க கட்சிதான் செலவு செய்யப்போகின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், வக்கீல்கள் ஆளாளுக்கு பில்லும் கையுமாக வந்து நின்றுவிட்டால் என்ன செய்வது?எனவே அதையும் விளக்கமாக கூறிவிட்டார் முன்னாள் முதல்வர். “கேஸ் நடத்துவதற்கு யார் செலவு செய்வது என்று நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது. தி.மு.க., பொதுத் தேர்தலைச் சந்தித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கும் கட்சி என்பதை வழக்கறிஞர்கள் மறந்து விடக்கூடாது.
செலவு செய்வதற்கு உங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எனவே இந்த கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மனதில் கொண்டு, வழக்கு செலவுகளுக்கு தலைமையிடம் எதிர்பார்க்கக் கூடாது. உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் பைசா வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ‘பக்கத்து இலையிலிருந்து வடையை எடுத்துக்கொள்ள’ ஐடியாவும் கொடுத்துள்ளார்.


Hopefully, கனிமொழிக்காக வாதாடும் வழக்கறிஞர்களிடமும் கலைஞர், இதே கயிற்றைக் கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறோம்.


நன்றி : விறுவிருப்பு .காம்

Friday, September 16, 2011

Mr. விக்கி உங்களுக்கு போட்டியாக ஒரு பதிவு

கிரிகெட் என்றால் அதிரடியும் , பரபரப்பும் இருக்கும் . (இப்ப நடக்கும் இந்தியா- இங்கிலாந்து மேட்ச் பத்தி சொல்லல )

ஆனா இங்க சில வீடியோ பாருங்க , இது காமெடி கிரிகெட் ..


இதையும் பாருங்க 


   இது கிரிகெட் இல்ல..


( விக்கி மட்டும் தான் வீடியோ பதிவா போடுவாரா ? நானும்      போடுவேன்ல  )

Thursday, September 15, 2011

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?







நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.


  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.