> என் ராஜபாட்டை : September 2012

.....

.

Friday, September 28, 2012

தயவுசெய்து இதை படிக்காதீங்க ..






உலகிலேயே மிக எளிமையான செயல் அட்வைஸ் செய்றது , மிகவும் கடினமானது அதை கேட்பது மற்றும் பின்பற்றுவது. கீழே உள்ள கதைகள் சிறியவையாக இருந்தாலும் அதில் மிகபெரியகருத்து அடங்கயுள்ளது . அட்வைசை விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் .(ஆனா ஓட்டு , கமென்ட் போட்டுடனும் இல்ல , நக்ஸ் சார் கிட்ட சொல்லி போன் பன்ன சொல்லிடுவேன் )


சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந
்த பழத்தைக் காண்பித்து இது என்ன பழம்என்றார்.
சாத்துக்குடிஎன்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு இப்போது சொல்லுங்கள்என்றதும் எலுமிச்சைஎனறார் . இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.

#########################################

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்என்று.

################################################

வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். இன்னும் முன்னால் போஎன்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.
மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். இன்னும் முன்னால் போஎன்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்…..  இன்னும் முன்னால் போஎன்பதுதான்!!

############################################
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார். ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார்.

டிஸ்கி : இது மெயிலில் வந்த அட்வைஸ் .

இதையும்  படிக்கலாமே :


ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1 

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 





Thursday, September 27, 2012

ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1







சினிமாவில் பலர் வந்து போய் உள்ளனர். ஆனால் சிலர் மட்டும் தான் நம்மை கவர்கின்றனர். சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனது முத்திரையை பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ .

அவர் தனது வாழ்க்கை வரலாற்றை , தான் கடந்து வந்த பாதையை சொல்லும் புத்தகம்தான் நான் பிரகாஷ் ராஜ். எளிமையான எழுத்து நடையில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .


அதில் அவர் சொன்ன சில வரிகள் :

அருவா ஆபாசம் என்று குப்பை படன் எடுத்து பணம் சம்பாதிப்பதைவிட , மொழி , கண்ட நாள் முதல் ,அழகிய தீயே போன்ற படம் எடுப்பதை பெருமையாக நினைக்கிறேன்



கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும் காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது


என் உலகம் அழகா இருந்தா நானும் அழகா இருப்பேன் என்பது தான் நிஜம


உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் தான் வாழ்கை


பெண்களை நேசிக்காமால் ஒரு ஆண் மிக சிறந்த படைப்பாளியாக மாற முடியாது


இந்த நூலை தரவிறக்கம் செய்ய :

(FOR DOWNLOD )    CLICK HERE




டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com மெயில் பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .




 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?




Monday, September 24, 2012

V.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...






வரும் 30 தேதி V.A.O தேர்வு நடைபெற உள்ளது . இந்த முறை காலி இடங்கள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம் . போட்டி அதிகம் என்பதை நினைத்து கவலை படாதீர்கள் . 10,00,000 பேர் எழுதினால் அதில் பாதி பேர் கடமைக்காக எழுதுகின்றனர். மீதி உள்ளவர்களில் சரியான தயாரிப்பு இல்லாமல் பாதி பேர் எழுதுவார்கள் . எனவே உண்மையான போட்டி என்பது குறைந்த பட்சம் 2,00,000 மட்டுமே என நினைத்து தயாராகுங்கள் .

TNPSC தேர்வு எழுதும் நண்பர்களுக்கு என்ற பதிவில் ஆன் லைனில் தேர்வு எழுத சிறந்த தளங்களை பட்டியல் இட்டு இருந்தேன் . இப்பொழுது V.A.O EXAM க்கு தேவையான சில மாதிரி வினா தாள்களை அளிக்கிறேன் . இதில் மொத்தம் நான்கு உள்ளது .



மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்ய :











மேலும் ONLINE தேர்வு எழுத :



டிஸ்கி : இந்த வினாத்தாளை தரவிறக்க ஏதேனும் பிரச்னை            
        ஏற்ப்பட்டால் rrajja.mlr@gmail க்கு மெயில் பண்ணுங்கள் .   
        உடனே அனுப்பி வைக்க படும் .

டிஸ்கி : தேர்வு எழுத போகும் அனைவருக்கும் வாழ்த்துகள் .

         ( நானும் எழுத போறேன் எனவே எனக்கும் எல்லாரும்
         வாழ்த்து சொல்லுங்க )

இதையும்  படிக்கலாமே :



ஒரு காதலன் , ஒரு காதலி

 

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

Thursday, September 20, 2012

விஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )




இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி பட டைட்டில் பிரச்னை நல்லபடியா தீர்ந்துடும்னு நம்பிக்கையா இருக்காரு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இல்லைனாலும் படம் சூப்பரா வந்துருக்குற சந்தோசத்தில ரிலீஸ் பண்ண ரெடியாயிட்டார்.விஜய் இந்த படத்தில் தீயவர்களை அழிக்கும் போலீஸா நடிச்சிருப்பதால், தீமை அழிஞ்சதக் கொண்டாடுற தீபாவளி திருநாள்ல அத ரிலீஸ் பண்ண போறாங்க.ஸோ,துப்பாக்கி தீபாவளி ரேஸ்ல வெடிக்கப்போகுது...





GEE… IS WRITE TIME TO TALK WITH YOU” ‘தலயாருக்கு போன் பண்ணினாலும் முதல்ல அவங்ககிட்ட இப்படி பெர்மிஷன் கேட்டுட்டு தான் பேசுவார். இல்ல நான் கொஞ்சம் பிஸின்னு எதிர்முனையில இருக்கிறவங்க சொன்னா ஓ.கே நோ பிராப்ளம்னு புன்னைகையோட போனை வெச்சிடுவார்.
  

A.R.Rehman இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படம் "'Raanjhnaa' -வின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படம் உங்களுக்காக. படத்தின் கதாநாயகி சோனம் கபூருடன் தனுஷ்.
 =====================================================================


இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.

சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம் உங்களுக்காக !!!

கடைசியாக  

நமது இன்றைய ஹீரோக்கள் சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார்கள் தெரியுமா ?


தகவல்  உதவி : Facebook

இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

ஹல்லோ !!! சிரிக்க முடியுமா ? முடியாதா ?

 

ஒரு காதலன் , ஒரு காதலி