> என் ராஜபாட்டை : July 2013

.....

.

Wednesday, July 31, 2013

இலவசமாக ராஜேஷ்குமார் நாவல்கள்







தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000  மேற்பட்ட நாவல்கள் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் . குடும்பக்கதை , சிறுகதை , தொடர்கதை என பல எழுதினாலும் இவர் புகழ் பெற்றது கிரைம் நாவல்கள் மூலமாகத்தான் .

இவரின் கற்பனை கதாபாத்திரம் தான் விவேக் , ரூபலா . இருவரும் இணைந்து பல கதைகளில் துப்பறியும் வேலை செய்துள்ளனர் . சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு .

இப்படிபட்ட எழுத்தாளரின் சில நாவல்களை உங்களுக்கு வழங்குவதில் சந்தோஷமடைகிறோம் . விரைவில் இன்னும் பல எழுத்தாளர்களின் நாவல்கள் வரும் .எந்த எழுத்தாளர் வேண்டும் என பின்னுட்டம் இடுங்கள் .

ராஜேஷ்குமார் நாவல்கள் :


























இதையும் படிக்கலாமே :

கதம்பம் 27/07/13

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?



Saturday, July 27, 2013

கதம்பம் 27/07/13




அன்பு நண்பர்களே , கதம்பம் என்ற பல்சுவை தொகுப்பை மிக நீண்ட நாளாக எழுத முடியவில்லை . இனி மாதம் ஒரு முறையாவது எழுத முயற்சிக்கிறேன் .

நண்பர்கள் :

கடந்த செவ்வாய் அன்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது . அங்கு சென்ற பின் பதிவுலக நண்பர்கள் சிலரை பார்க்க நினைத்தேன் . ஆனால் நண்பருக்காக போனதால் முடியவில்லை . கரை சேரா அலைகள் அரசன் அவர்களுக்கு போன் செய்தேன் . பின்பு மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கு போன் செய்தேன் . அலுவலகம் கிளம்பு போகிறேன் என சொன்னவர் , திடிரென இருங்கள் செந்தில் வருகிறார் , அவருடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என சொன்னார் .





சிவாவும் , KRP செந்திலும் வந்தார்கள் . சுமார்  ஒரு மணிநேரம் பேசினோம் . மிக ஜாலியாக இருந்தது . இருவரும் என்னமோ நீண்ட நாள் நண்பர்கள் போல பேசினார்கள் . நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை . பதிவர் சந்திப்பில் அந்த குறை தீரும் என எண்ணுகிறேன் .
====================================================================


அரசியல் :

மோடிக்க விசா தரகூடாது என அமெரிக்காவுக்கு 29 MP கள் கடிதம் .

# அதுவும் போர்ஜரியா பலர் கையெழுத்தை யாரோ போட்டுருக்காங்க .

# ராஜபக்ஷே இந்தியா வந்தப்ப இவர்கலாம் என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ???



28 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளார்கள் என அர்த்தம் .:  திட்ட கமிஷன்

# சென்னையில் வசந்த பவனில் 2 இட்லி 42 ரூபாய் .
# இந்த வீணா போன கிமிஷன் இருக்கும் இடத்தில் பாத்ரும் கட்ட செலவு 27 லட்சம்


ரசித்த ஜோக் :

வகுப்பில் காப்பி அடித்த மாணவனை இனி காப்பி அடிக்க மாட்டேன்னு 100 தடவை இம்போசிஷன் எழுத சொன்னார் ஆசிரியர் . அந்த மாணவன் எழுதியது கிழே ..

#include
void main( )
{
int i;
for(i=1;i<=100;i++)
{
printf(இனி காப்பி அடிக்கமாட்டேன் );
}
}


முகபுத்தகத்தில் எனது STATUS

ஒருவரை பிடிக்கா விட்டால் உடனே விலகிவிடு . இல்லையெனில் இறுதியில் அவமானமே மிச்சம் இருக்கும் .


இதுவரை S.P.பாலசுப்ரமணியம் குரல்தான் உலகிலேயே அழகு என்று இருந்தான் , என் மகன் சரணின் அப்பா என்ற குரலை போனில் கேட்கும் வரை .

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி
நல்ல நண்பர்களை பெற்றவர்களே .



 இது உண்மையா ?


Monday, July 22, 2013

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..







இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...


  1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .


  1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .


  1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .

  1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .

  1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும் கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .

  1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .

  1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .

மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

  1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .

  1. உங்கள் கணக்கில் Mobile Notification option Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

  1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .

  1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .


ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Friday, July 19, 2013

மரியான் : விமர்சனம்








ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .

கதை :

ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .


+ பாயின்ட் :

தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும்  தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .

கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .

இருவரின் காதல் எபிசொட் .

A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .

பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .

பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .

ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .


- பாயின்ட் :

ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .

இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)

ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .

மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .

தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .

திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?

படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .


ஆனந்த விகடன் மார்க் : 42

குமுதம் : பார்க்கலாம் 

ராஜபாட்டை மார்க் : 5/10

குறிப்பு : சிங்கம் 2  நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .


Wednesday, July 17, 2013

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?





தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களையும் , அதிக எதிர்பார்ப்பையும் , அதிக வசூலையும் கொண்ட நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான் . விஜயின் கடந்த படம் துப்பாக்கி 100 கோடியை தாண்டி வசூல் செய்தததாக சொல்கின்றனர் . இந்நிலையில் அவரின் அடுத்த படம் தலைவா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது .

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படபிடிப்பு முடிந்து சென்சார் சென்ற படத்தை பார்த்த குழுவினர் , படம் அருமையாக உள்ளது என்றும் , இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் சொல்லி " யூ " சான்றிதழ் வழங்கி உள்ளனர் . இதனால் பட குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் .


குறிப்பு : படம் ஆகஸ்டு 15  அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது .


இதையும் படிக்கலாமே :