> என் ராஜபாட்டை

.

.

.

.

Thursday, November 20, 2014

கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள்

நமது அன்றாட வாழ்வில் கணினியின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது கணினியில் பலதரபட்ட மென்பொருள்களை நிறுவி வைத்திருப்போம். நமக்கு தேவையான அனைத்தும் வைத்திருப்போமா என்பது சந்தேகம்தான். இதோ உங்களுக்காக உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்களின் பட்டியல் ...


1. ICECREAM PDF CONVERTER


                  இது உங்கள் ஆபிஸ் கோப்புகளை PDF ஆக மாற்ற உதவுகிறது . மிகவும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளது இதன் சிறப்பு .

MS-WORD => PDF
MS-WORD => PDF
MS EXCEL => PDF
IMAGE => PDF
EBOOK=> PDF

PDF=> ANY FORMAT(JPG, BMP, PNG, TIFF)


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HERE

2. WISE PROGRAM UNINSTALLER


                நாம் நமது கணினியில் நிறுவியிருக்கும் பல மென்பொருள்கள் தேவையில்லாத போது அழிக்க வேண்டிவரும் . அப்போது சில மென்பொருள்கள் முழுவதுமாக அழியாது . தேவையில்லாமல் கணினியின் நினைவகத்தில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் . இது போன்ற பிரச்சனைகளில் உதவுவதுதான் இந்த மென்பொருள் . நாம் அழிக்க நினைக்கும் மென்பொருளை சுத்தமாக அழிப்பதுதான் இதன் சிறப்பம்சம் .


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HERE


3.VSO Media Player 1.4.8.494
           நாம் விரும்பும் பாடல்கள் , படங்களை அருமையான தரத்துடன் பார்க்க உதவும் புதிய மென்பொருள் இது . இதில் மற்ற பிளையேர்களில் உள்ளதை விட பல சிறப்பம்சங்கள் நிறைதுள்ளது .இது BLU-RAY DISC கூட சப்போர்ட் செய்யும் இந்து முக்கியமானது .


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HEREThursday, November 13, 2014

இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா ?(E-BOOK இல்லை ...)

நல்ல நூல்கள் மிக சிறந்த நண்பர்களுக்கு சமம் என சொல்வார்கள். நம்ம தலைவர் சுஜாத்தா கூட "தினமும் குறைந்தது 20 பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள் , அது எந்த நூலாக இருந்தாலும் பரவாயில்லை " என சொல்லுவர் . ஆனால் இன்று நூல்கள் விற்கும் நிலையில் காசு கொடுத்து நூல் வாங்குவது சிலருக்கு கஷ்டமாக உள்ளது .(விலைவாசி அப்படி ...)

படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், படித்த நூலை பற்றி விரிவாக விவாதிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்க ஒரு பதிப்பகம் முடிவுசெய்துநூல்களை இலவசமாக வழங்கிவருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

ஆம் , கிழக்கு பதிப்பகம் தான் அந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது . இது ஒரு தரமான பதிப்பகம் என்றும் , பல ஆயிரகணக்கான நூல்களை வெளியிட்ட பெரிய பதிப்பகம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் இந்த இலவச நூல்கள் .

எப்படி பெறுவது ?


 • முதலில்  இங்கு  கிளிக் செய்து கிழக்கு பதிப்பகத்தின் அபிஷியல் வலைத்தளம் செல்லவும் .

 •  இங்கு பல நூல்களின் விவரங்கள் இருக்கும் . அதில் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை தெரிவு செய்யவும் .

 • அதன் கிழே ஒரு படிவம் இருக்கும் . அதனை கவனமாக நிரப்பவும் .
 • "submit" பட்டனை அழுத்தவும் .
 •  அவ்வளவுதான் .நான்குநாட்களில்நீங்கள்கேட்டபுத்தகம்உங்கள்இல்லம்வந்துசேரும் .

நிபந்தனை :

 • இலவசமாக வாங்கும் புத்தகத்தை படித்து அதை பற்றி 400 - 1000 வார்த்தைகளுகுள் ஒரு மதிப்புரை எழுத வேண்டும் .
 • நீங்கள் எழுதும் மதிப்புரை அவர்கள் தளத்தில் வெளியிடப்படும் .

டிஸ்கி : ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கலாம் . ( நான் இதுவரை இரண்டு வாங்கியுள்ளேன் )

Tuesday, November 4, 2014

சில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்
கடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. 

பிரபல பதிவர் , கவிதை மன்னன் அரசன் , கன்னி பெண்களின் அண்ணன் சாரி கண்ணன் “கோவை ஆவி” மற்றும் பதிவுலக மார்கேண்டயன் துளசிதரன் அய்யா நடித்துள்ளனர் . இயக்கம் குடந்தை மண்ணின் மைந்தர் R.V.சரவணன் அவர்கள் .


கதை :

கதை மிக சிறியதுதான் . (சின்ன கதைய எடுத்தாதாம் அது குறும்படம் , பெரிய கதைனா அது பெரும்படம் !!!). ஆட்டோவில் ஒனன்றாக வரும் இருவர் ஐந்து ரூபாய் சில்லறை பாக்கியில் நண்பர்களாகின்றனர். உறவினர் காரில் வந்ததால் தான் நண்பனையும் அழைத்து செல்ல தேடும் ஒருவரும் , பஸ்ஸில் கஷ்டபட்டு ஏறி நண்பருக்காக சீட்டு போட்டு காத்திருக்கும் ஒருவர் என சில நொடிகளில் ஏற்பட்ட நட்பு எப்படி ஆழமாக மாறியது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்ஸ்


இயக்கம் மிக அருமை , முதல் படம் போலவே இல்லை .


அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் / கடக்கும் சம்பவத்தை எடுத்தது 


மிக குறைவான கதாபாத்திரங்கள் .


மூவரின் அருமையான நடிப்பு .


மிக இயல்பான வசனங்கள் .


- பாயின்ட் :

குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்த உடனே அது ரஜினிபோல நடக்கவில்லை என குறை கூற கூடாது எனவே முதல் முயற்சி என்பதால் எந்த குறையையும் சொல்ல மனமில்லை .


ஆச்சரியம் :

ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .டிஸ்கி : திரைப்படத்தில் இயக்குனர்கள் ஒரு காட்சியில் தலையை காட்டுவார்கள் அதுபோல இதிலும் இயக்குனர் சரவணன் ஒரு காட்சியில் வருகிறார் .Wednesday, October 15, 2014

நட்பு நீடிக்க ...

உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .


நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .


நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்


நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )


விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .


கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .


நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .


நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?


நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .


பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .

நண்பர்களின் மொபைல் போனை நொண்டாதிர்கல் . மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்கள் போனை பயன்படுத்துங்கள் .

அவர்கள் அனுமதியின்றி அவர்கள் மொபைல் நம்பரை யாருக்கும் அளிக்காதிர்கள் .இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இது ஒரு மீள் பதிவு

Wednesday, September 17, 2014

இந்தியா முழுவதும் இலவசமாக பேச ஒரு ANDROID APPLICATION

          இன்றைய மொபைல் உலகில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது போல அதில் பயன்படுத்த படும் அப்ளிகேஷன்களும் தினம் தினம் புதுசு புதுசாக வந்துகொண்டே உள்ளது . அதில் மிக உபயோகமான சில அப்ளிகேஷன்களை நாம் அடிகடி பார்த்துவருகிறோம். 

             இன்று நாம் பார்க்க போவது இந்தியா முழுவதும் இலவசமாக பேச உதவும் ஒரு அருமையான அப்ளிகேஷனை பற்றிதான். அதன் பெயர் DINGALING. சமிபத்தில் வெளியாகி சக்கைபோடு போடும் VOIP அப்ளிகேஷன் இது.


பயன்கள் :


 • ·         இந்தியா முழுவதும் இலவசமாக பேசலாம் .

 • ·         மாதம் 1 ½ மணி நேரம் இலவசமாக பேசலாம் .
 • ·         மொபைல் , லேன்ட்லைன் என எதுக்கு வேண்டுமானாலும் பேசலாம் .
 • ·         உங்கள் சொந்த எண்ணையே பயன்படுத்த முடியும் .
 • ·         இதை DINGALING WEBSITE மூலமாகவும் பயன்படுத்தலாம் . ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .
 • ·         வெளிநாடுகளுக்கு மிக குறைவான கட்டணத்தில் பேசலாம் .
 • ·         மிக குறைந்த அளவு INTERNET DATA பயன்பாடு .
 • ·         மிக விரைவாக இணைப்பு கிடைகிறது .
 • ·         இதுவரை நீங்கள் பயன்படுத்திய நிமிடங்கள் , மீதி உள்ள நிமிடங்கள் என விவரத்தை எளிதில் அறியும் வசதி .


குறைகள் :


 • ·         குரல் மிக தெளிவாக உள்ளது என சொல்ல முடியாது , ஆனாலும் ரொம்ப மோசமில்லை .
 • ·         சில சமயங்களில் புது எண்ணை காட்டுகிறது .
 • ·         இணைப்பு அளிக்கும் முன் ஒலிக்கும் குரல் தமிழில் இல்லை .


மற்றபடி மிக அருமையான அப்ளிகேஷன் இது . நான் பயன்படுத்திவருகிறேன் . நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .


தரவிறக்கம் செய்ய :

FOR ANDROID   :: DINGALING

FOR IPHONE   :: DINGALING

FOR WEBSITE   :: DINGALING


·          

ad1