> என் ராஜபாட்டை : April 2009

.....

.

Monday, April 20, 2009

கருப்பு பெட்டி:


நம்மவீட்டில் உள்ள பெட்டிகள் எல்லாம் துருபிடித்து கருப்பாகதான் இருக்கிறது ஆனால் அதில் என்ன இருக்கிறது? துணிகள் தானே! பிறகு என்ன இதில் ஆச்சர்யம்! இருக்கு நண்பரே, நம்மவூட்டு பெட்டி இல்ல இது, விமானத்தில் இருக்கும் ஒரு பெட்டிதான் இது ,இதனை "பிளாக் பாக்ஸ்" என்று தான் அழைப்பார்கள். விமானம் கண்டுபிடிப்புக்குபின் பல வகையான விமான சேவைகள் தொடங்கி பல பயணிகள் அதில் பயணித்தார்கள். இதில் சில விமானங்கள் விபத்துக்கு உள்ளாயின இதனால் விமானங்களின் சிதறிய பாகங்கள் மட்டுமே கிடைத்தன, ஆகையால் விமான விபத்தின் காரணம் என்னவென்று தெறியாமல் போனது, எனவே சில மறைமுக கேமிராக்களை வைத்தார்கள் அதுவும் பயனளிக்கவில்லை ஏனென்றால் விபத்தின் போது அவைகள் எரிந்துவிடுகின்றன.இதனை கருத்தில் கொண்டுதான் கருப்புபெட்டியை வடிவமைத்தார்கள் நீங்கள் நினைப்பது போல இது "கருப்பு நிறத்தில்:" இருக்காது இது பெரும்பாலும் மஞ்சல் மற்றும் ஆரஞ்சு நிறத்தை கொண்டது. இது எளிதில் எரிந்து போகாத கடினமான இரும்பினால் ஆனது, இந்த பெட்டிக்குள் தான் பல எலக்ரானிக் மீட்டர்களும்,கேமிராக்களும் இருக்கும் இது அவ்வப்போது விமானத்தின் வேகம், உயரம், விமான ஓட்டிகளின் உரையாடல் ஆகியவை பதிவாகும் விமானம் விபத்தில் சிக்கும்பட்சத்தில் இவை மட்டும் பாதுகாப்பாக இருக்கும் பிறகு இதனை கண்டெடுத்து விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பார்கள்.எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக பயன்படுவதே இதன் முக்கிய நோக்கம்