> என் ராஜபாட்டை : August 2011

.....

.

Wednesday, August 31, 2011

பொறாமைத் “தீ” !
இது ரமலான் மாதம். எனவே திருக்குர்ஆனில் இருந்து சில வரிகள்..

-          இவர்கள் இறைவன் தன் அருளினால், மக்களுக்கு வழப்கியிருப்பதைக் கண்டு, அவர்கள் மீது பொறாமை கொள்கின்றார்களா ?

(திருக்குர்ஆன் 4 : 54)
-          (நபியே !) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழகையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம்.

(திருக்குர்ஆன் 20: 131)

-          (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என பிரார்தனை புரியுங்கள்.
(திருக்குர்ஆன் 113 : 5)

-          இருவரை தவிர வேறு யார்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது.

§         இறைவனால் ஞனாம் வழங்கப்பெற்று, அதன் வழி நடந்து அதனை பிறருக்கும் கற்றுத் தருபவர்.

·         இறைவனால் செல்வங்கள் வழங்கப்பெற்று அதனை நல்வழியில் செலவழிப்பவர்கர்

(நூல் : புகாரி)

-          நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.

(நூல்: அபூதாவூத்)

Tuesday, August 30, 2011

மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்
தலயின் 50 வது படம், தேர்தல் முடிவிற்க்கு பின் சன் பிக்சர்ஸ் வெளியிடும் முதல் படம். பல தோல்விகளூக்கு பின் வந்துள்ள அஜித் படம், என பல சிறப்புகளுடன் வந்துள்ளது மங்காத்தா.

கதை :

ஒரு திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அஜித். ஒரு பெரிய திருட்டை செய்துவிட்டு வாழ்கையில் செட்டில் ஆக நினைக்கிறார். அதற்க்கு துனையாக ப்ரேம்ஜி,வைபவ்  மற்றும் சிலரை கூட்டு சேர்த்து கொண்டு ஒரு சூதாட்டகிளப்பை குறிவைகின்றார். 500 கோடி சூதாட்டம் நடக்கும் நாளில் அதை கொள்ளையடிப்பது இவர்களின் திட்டம்.

அது நடந்ததா, அல்லது சி.பி.ஐ அதிகாரி அர்ஜீனிடம் சிக்கி கொண்டார்களா? வேறு ஒரு கூட்டத்தில் மாட்டி கொண்ட தனது காதலி திரிஷாவை காப்பாற்றினாரா? என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.


முதல் காட்சியில் போலிஸ் உடையில் வந்து இறங்கும் அஜித்தை பார்கையில் தீயேட்டரில் விசில் பறக்கிறது. அதும் அவர் சிக்ரெட் பிடித்து கொண்டே சண்டை போடுவது அருமை. ப்ரேம்ஜியுடன் தண்ணீ அடித்துவிட்டு அஜித் பண்ணும் அலம்பல் தீயேட்டரை அதிரவைகிறது.

“மச்சி ஓப்பந்த பாட்டில்” பாடலில் நடனம் கலக்கல். “நண்பனே..” பாடல் மெலடி டிராமா. திரிஷா சில காட்சிகள் மட்டும் வந்தாலும் பளிச்சினு இருக்கார்.( வார்த்தை உபயம் : சி.பி). அஞ்சலி , லட்சுமிராய், ஆட்ரியா வந்தார். போனார்.

கலக்கல் வசனங்கள் :

 1. எத்தனை நாளுக்குதான் நான் நல்லவனா நடிப்பது.
 2. கரன்ஸி வந்தால் காதலும் வரும், கருமாதியும் வரும்( இரண்டும் ஒன்றுதானே ?)
 3. வாழ்கையே ஒரு சூதாட்டம், எப்ப ஜெய்போம், எப்ப தோர்ப்போம் என யாருக்கும் தெரியாது ?
 4. நான் சீட்டு கட்டுல ராஜாவா இருக்க ஆசைபடுறேன், ஜோக்கரா இல்ல..
 5. ப்ரேம்ஜி : பாஸ் உங்கள பாத்துதான் டெய்லி வாக்கிங் போக கத்துகிட்டேன். (உள்குத்து)
 6. ப்ரேம்ஜி : என்ன பாஸ் .. அவன் அவன் 1 லட்சம் கோடி, 1 அரை லட்சம் கோடினு கொள்ளை அடிக்கிறான், நாம வேறும் 500 கோடிதான் அடிக்கபோறோம்.

இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள் :

 1. அஜித்தின் அறிமுக சண்டைகாட்சி
 2. கடைசிவரை அஜித்தை வில்லனாகவே காட்டியது.
 3. இடைவேளைக்கு பின் வரும் அந்த கார் சேஃஸிங் காட்சி.
 4. அர்ஜீன் வரும் காட்சியில் அவருக்கு முக்கியதுவம் குடுத்தது.
 5. பாடல்களை சிறப்பாக படமாக்கியது.

இயக்குனரிடம் சில கேள்விகள் :

 1. நாளை கிளப்க்கு போகலாம் என சொல்லும் போது அஜித்துக்கு தாடி இல்லை, ஆனால் மறுனாள் கிளப்பில் இருக்கும் போது தாடி இருக்கே எப்படி ?
 2. இவ்வளவு பெரிய கொள்ளை திட்டத்தில் காமெடி திருடன் ப்ரேம்ஜீயை ஏன் செர்க்க வேண்டும் ?
 3. ஓஷன் லெவன் படத்தில் பல காட்சிகள் இதில் வருகிறதே ஏன்?
 4. 3 கதா நாயகிகள் இருந்தும் அவர்களை ஏன் சரியாக பயன்படுத்தவில்லை( ஹீ..ஹீ)


இது எல்லா சென்டர்களிலும் 35 நாள் ஓடும்.

எதிர்பார்கபடும் ஆனந்தவிகடன் மார்க் : 45

எதிர்பார்கபடும் குமுதம் ரேட்டிங் : நன்று

என் கமெண்ட் : “மங்காத்தா “ WINNING GAMEடிஸ்கி : நேற்று இரவு கனவில் இந்த படத்தை பார்தேன்.

Monday, August 29, 2011

என்னடா இது !!..இந்த மதுரை (கரை வேட்டிகளு)க்கு வந்த சோதனை!


மதுரை, இந்தியா: கடந்த சில ஆண்டுகளாகக் காணக்கிடைக்காத காட்சி ஒன்றைக் கண்டு களிக்கிறார்கள் மதுரை மக்கள். மக்களை விடுங்கள்.. மதுரை காவல்துறையினரே, தங்கள் கைகளைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்! “கனவிதுவா.. நிஜமிதுவா..” அப்படியென்ன காட்சி? கட்சிக்கரை வேட்டி கட்டிய உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும், காவல்துறையினரைக் கண்டவுடன் பவ்வியமாக ‘விஷ்’ செய்துவிட்டுச் செல்கின்றனர்!

கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரையில், கரைவேட்டி கட்டிய உடன்பிறப்புகள்தான் காவல்துறையினரை ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.காவல்துறை பயிற்சியில் போலீஸ்காரர்கள் விரைப்பாக நிற்பதற்கு ஒரு கமான்ட் உண்டு. “அட்டேன்ஷன்” என்று கமான்ட் கொடுத்தால் விரைப்பாக நிற்பார்கள், பயிற்சியின்போது! அதெல்லாம் போலீஸ் மைதானத்தில்தான். கடந்த ஆட்சியின்போது, வெளியே பொலீஸ்காரரைக் கண்டால் வேறு ஒரு கமான்ட் இருந்தது.அது என்ன தெரியுமா?  “எங்கிட்ட வாணாம்..  அண்ணன்கிட்ட சொல்லிருவேன்”

இந்தக் கமான்டை கேட்ட மாத்திரத்தில் மதுரை ஜில்லாவிலே எந்தப் போலீஸ்காரரும் விரைப்பாகத்தான் நிற்க வேண்டியிருந்தது. அதெல்லாம் ஒரு அழகிய கனாக்காலம்! இப்போது மதுரை ‘அண்ணனே’ விரைப்பாக இல்லை.இப்போது ஆட்சி மாறி, கட்சிக் கரைவேட்டி உடன்பிறப்புகள், காவல்துறையினரைக் கண்டால் பவ்வியமாகப் போவது ஒன்றும் ஆச்சரியமில்லை. மதுரையில் முன்பு சால்னா வாங்க அனுப்பியவர்களை, எப்போது ‘சாத்தலாம்’ என்று  சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.ஆனால், கரைவேட்டி ரத்தத்தின் ரத்தங்களின் ஓவர் பவ்வியத்துக்கு என்ன காரணம்? கட்சிக்குள்ளே ஏதாவது மனித உரிமை வகுப்புகள் நடக்கின்றனவா?அதெல்லாம் இல்லை. இது வேறு விவகாரம்!

“அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது சொந்த அலுவல்களுக்காகவோ இந்த நபர் எங்களிடம் சிபாரிசுக்கு வரவில்லை”  போலீசாரிடம் நற்சான்று கடிதம் பெறவேண்டிய தேவை அ.தி.மு.க. பகுதிச் செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதுதான் விஷயம்.ஆட்சிக்கு வந்தவுடனேயே, கடந்த ஆட்சியின்போது நடந்ததுபோல தனது ஆட்சியிலும் நடக்கக்கூடாது. போலீசார் சுதந்திரமாக பணியாற்றினால் தான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

இதையடுத்து, “நீங்கள் யாரும் போலீசாரிடம் சிபாரிசுக்கு செல்லக்கூடாது. இதை உறுதிசெய்யும் வகையில், அவர்களிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும்” என்று ஒரு கடிதம், அ.தி.மு.க. ஒன்றிய குழு செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அட, இதுகூட நல்லா இருக்கே! மாதம் ஒருமுறை சான்றுக் கடிதம் பெறவேண்டும் என்று அம்மா கடிதம் எழுதினால், இன்னும் விசேஷமாக இருக்குமே!

நன்றி : விறுவிறுப்பு.காம்

Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்து.
விபத்துகள் நடப்பது நமது அன்றாடவாழ்வில் சகஜம்.  சில விபத்துகள் நம் நினைவை விட்டு விலகாதவையாக அமைந்துவிடும். காரணம் அதன் அழிவு மற்றும் உயிர் இழப்பின் அளவு. அப்படி நடந்த சில விபத்துகளின் தொகுப்புதான் இந்த பதிவு.

 1. 2000 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து :

பீகாரில் நடந்த இந்த ர்யில் விபத்தில் 2000 பேர் இறந்தனர். உலகில் நடந்த விபத்தில் மிக கொடியது இது.கோசி ஆற்றில் விழுந்து , ஆற்று வெள்ளத்தில் 5 பெட்டிகள் அடித்து செல்லபட்டதால் உயிரிழப்பு அதிகமானது.

 1. 250 பேர் பலியான அரியலூர் ரயில் விபத்து.

தமிழ் நாட்டில் நடந்த விபத்தில் மிக பெரிய விபத்து இது. திருச்சிக்கு அருகே உள்ள கல்லம் என்ற இடத்தில் “மருதையாறு” ஒடுகிறது. பலத்தமழையில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. 23-11-56 அன்று காலை “தூத்துகுடி எக்ஸ்பிரஸ்” கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 250 பேர் பலியானர்.
 1. 1500 பேர் பலியான தனுஷ்கோடி புயல்

1964 ம் ஆண்டு டிசம்பர் 23 ல் தென் தமிழ் நாட்டை கடுமையான புயல் தாக்கியது. ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியில் கடல் பொங்கி உள்ளே வ்ந்தது. அங்கு உள்ள ரயில் நிலையத்திலும், சுங்க இலாகா அலுவலகத்திலும் பலர் இருந்தனர். இந்த விபத்தில் சுமார் 1500 பேர் இறந்தனர்.

 1. 115 பேர் பலிகொண்ட தூத்துகுடி சினிமா கொட்டகை விபத்து

   29.7.79 அன்று தூத்துகுடியில் உள்ள “ லட்சுமி டூரிங் டாக்கீஸ்” சினிமா கொட்டகையில் பாவமன்னிப்பு படம் ஒடியது.  அன்று ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.  மாலை 4 மனிக்கு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 115 பேர் இறந்தனர். 86 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 1. 90 குழந்தைகளை பலிகொண்ட பள்ளி தீ விபத்து :

16-7-2004 அன்று கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 48 சிறுவர்கள், 42 சிறுமிகள் என 90 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழ் நாட்டில் நடந்த கொடுமையான விபத்தில் முதலிடம் இதுதான்.


இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்துகளில் மிகவும் பெரியது

“காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்வது..”


Saturday, August 27, 2011

விவாகரத்து ஸ்பெஷல் எது எதுக்கோ கேக் வெட்டி கொண்டாடுறாங்க , மனசு ஒத்து (வெறுத்து ) பிரியும் விவாகரத்துக்கு கேக் வெட்டி கொண்டாடினா எப்படி இருக்கும் ? அப்படி பட்ட புண்ணியவான்களுக்கு இதோ ...
 
 கேக்  மொத்தமாகவும் சில்லரயகவும் கிடைக்கும் இடம் : 
பிரபு தேவா- 9 தாரா கேக் ஷாப் - கோடம்பாக்கம்

Friday, August 26, 2011

பல்சுவை வலைதளம் விருதுஇந்த மாதத்திற்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நமது நாஞ்சில் னோ அவர்கள்.


அவரின் சிறப்புகள் :

 1. ஒரு லேப் டாப் வைத்து 10 பதிவு போடுவது.
 2. குற்றாலத்தில் குளித்ததை வைத்து பல பதிவுகள் போடுவது.
 3. பதிவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குவது.( ரொம்ப நல்லவரு)
 4. தனது டெர்ரர் புகைபடங்களை பயப்படாமல்(நமக்குதான் பயம் வரும்) தனது தளத்தில் வெளியிடுவது.
 5. தக்காளியையும் , சிபியையும் கலாய்த்து பதிவு போடுவது.
 6. பல லட்சகணக்கான வாசகர்களின் வேண்டுகோளுக்கினெங்க தனது வலைதளத்தில் HEADER AREA ல் இருந்த தனது புகைபடத்தை எடுத்தது.

இப்படி இவரை பற்றி பல 1000 கனக்கான சிறப்புகள் சொல்லலாம். ஆனால் நேரம் இல்லாததால்(நிறைய பொய் சொல்லகூடாது என்பதால்) இத்துடன் முடிக்கிறேன்.

இத்தகய சிறப்பு வாய்ந்த அண்ணன் மனோவுக்கு இந்த விருதை வழங்குவதில் உன்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.

Thursday, August 25, 2011

2G ல் ஜெயலலிதாவுக்கு தொடர்பு

தமிழ் நாட்டில் உள்ள எல்லாரயும் இளிச்சவாயர்கள் எனறும் காதில் பூ வைத்தவர்கள் என்றும் எண்ணி கவிஞர்(!)கனிமொழியும் அவர் சார்பாக அவர் வக்கீல் சுஷில்( வண்டு முருகன்) சொன்ன பொண்மொழிகள்.

 1. கலைஞர் டி.வியில் நான் 15 நாள் மட்டுமே இயக்குனர். (அப்ப நீங்க கவிஞர் இல்லயா?)

 1. அவர் M.P என்பதை C.B.I மறைத்து விட்டது.( ஒட்டு வாங்கி ஜெய்திருந்தால் தெரிந்திருக்கும்)

 1. 230 கோடியை அவர் எப்படி செலவு செய்தார் என சி.பி.ஐ நிருபிக்கவில்லை. (அதான் கலைஞர் டி.வி இருக்கே)

 1. இந்த ஏலமுறை மன்மோகன் ஒப்புதலுடந்தான் நடந்தது. (அப்பாடா ! ராசா சொன்னதை இவரும் உறுதி செய்துவிட்டார். 1000 இருந்தாலும் ராசா வாக்கே ரோசாக்கு தெய்வ வாக்கு)

 1. மக்களவை தலைவரிடம் அனுமதி வாங்காமல் கைது செய்துவிட்டார்கள்.( நல்ல வேலை கருணாநிதியிடம் அனுமதி வாங்கவில்லைனு சொல்லல)

 1. சி.பி.ஐ அரசியல் காழ்புனர்சி காரனமாக வழக்கு தொடர்ந்துள்ளது.(உங்க அரசியல் அவர்களுக்கும் பிடிக்கவிலை போல)

 1. கனிமொழி ஒரு பெண், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.   ( அப்ப ஜெயலலிதா, நளினி இவர்களாம் யாரு?)

 1. சி.பி.ஐ அவர் M.P என்பதை மறைத்து நீதி மன்றதை ஏமாற்றுகிறது. ( நீங்க 230 கோடிய மறைச்சீங்க)

 1. 2 G யில் எந்த ஊழலும் நடக்கவில்லை என பிரதமர், சிதம்பரம், கபில்சிபல் கூறிவிட்டனர். ( ஏன் வடிவேலு, குஷ்பு வை விட்டுடிங்க… சின்ன திருடனுக்கு பெரிய திருடன் சாட்சி!!)


போக.. போக இப்படியும் சொல்லலாம்……..!

 1. கனிமொழி வருங்கால தமிழக முதல்வர் எனவே விடுதலை செய்யவேண்டும்.

 1. பெயரில் மொழி என உள்ளது எனவே தேசிய மொழிக்கு மதிப்பலித்து விடுதலை செய்யவேண்டும்.


 1. கனிமொழி டி.வி யே பார்பதில்லை, அப்புறம் எப்படி கலைகர் டி.வியுடன் தொடர்பு இருக்கும்(ராசாவுடன் மட்டும்ஹீ..ஹீ).

4. இரட்டை(2 ) இலையை சின்னமாக வைத்து இருப்பதால் 2G ல
அ.தி.மு.க தான் மோசடி செய்துள்ளது. எனவே 2G ல்
ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளது.

வாங்க உங்களுக்கு எவ்வளவு பூ வேனும்.?(காதுல வச்சுக)

Wednesday, August 24, 2011

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலகமான சத்யமூர்த்தி பவனில் வைத்து, அக்கட்சியின் தமிழகப் பிரிவின் தலைவர் தங்கபாலுவின் உருவம் வரையப்பட்ட பேனரை எரித்திருக்கிறது போட்டிக் கோஷ்டி ஒன்று.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, கோஷ்டிகள் விஷயத்தில் மிகவும் தாராள மனப்பான்மையுடையது.

ப.சிதம்பரத்துக்கு ஒரு கோஷ்டி,  சுதர்சன நாச்சியப்பனுக்கு ஒரு கோஷ்டி, வாசனுக்கு ஒரு கோஷ்டி, அவரது தாசனுக்கு ஒரு கோஷ்டி என்று, டெலிபோன் டைரக்டரி தயாரிக்கும் அளவில் பல கோஷ்டிகள் உண்டு. இவர்கள் தமக்கிடையே அவ்வப்போது வேட்டி கிழித்தல், பல்லை உடைத்தல் போன்ற வீர விளையாட்டுகளை விளையாடுவதும் சகஜம்.

அக் கட்சியிலுள்ள எண்ணற்ற கோஷ்டிகளில், கிட்டத்தட்ட அனைத்துக் கோஷ்டிகளுமே தலைவர் தங்கபாலுவுக்கு எதிரானவை.இதனால், எந்தக் கோஷ்டியை விசாரிப்பது என்று புரியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளது தமிழக காவல்துறை. எந்தக் கோஷ்டியை விசாரித்தாலும், “அட.. நாமதான் எரித்தோம். அம்சமா எரிஞ்சிருச்சில்ல?” என்று சந்தோஷமாக ஒப்புக் கொள்ளும் அபாயமும் உண்டு.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சத்யமூர்த்தி பவன் காம்பவுண்டுக்குள் புகுந்த ஒரு கோஷ்டியின் தொண்டர்களே இந்த எரித்தலை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்கள்.இவர்கள் தங்கபாலு உருவம் வரையப்பட்ட பேனரை எரிப்பதற்கென்றே வந்தார்களா? அல்லது, வந்த இடத்தில் பேனரில் தங்கபாலுவின் தங்க முகத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு எரித்தார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் சரியாகத் தெரியவில்லை.

காரணம் எப்படியிருந்தாலென்ன, ஆனந்தமாக எரித்துவிட்டுப் போய்விட்டார்கள்.இதிலுள்ள சோகம் என்னவென்றால், எரிக்கப்பட்ட பேனரில் தங்கபாலுவின் புன்னகை வதனம் மாத்திரம் வரையப்பட்டிருக்கவில்லை. கர்மவீரர் காமராஜரின், உருவமும் வரையப்பட்டிருந்தது.

தங்கபாலுவின் படத்தை எரிப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் உள்ளன. ஆனால், தங்கபாலுவின் பேனரில் இருந்த காமராஜரின் உருவத்தையும் ஏன் எரித்தார்கள் என்பதுதான் குழப்பமாக உள்ளது.ஒருவேளை பேனரில் தங்கபாலுவின் திருவுருவத்துக்கு அருகே இருந்தவர், தங்கபாலுவின் சித்தப்பா என்று நினைத்து, “ஆசாமியை குடும்பத்தோடு எரிப்போம்” என்ற ஆவேசத்தில் எரித்தார்களோ, என்னவோ! 

(தற்போதைய காங்கிரஸ் தொண்டர்களில் பலருக்கு காமராஜர் என்றால் யாரென்றே தெரியாது என்பதாக ஒரு பேச்சு உண்டு)

நன்றி : விறுவிறுப்பு . காம்

Tuesday, August 23, 2011

நீங்களும் டாக்டர்தான்

சிறு சிறு விஷயத்துக்கு எல்லாம் டாக்டரை பார்பது என்பது தேவையில்லை. உங்கள் உடம்பை நீங்களே கவனித்துகொள்ளலாம். உங்களுக்கேன சில மருத்துவ குறிப்புகள்.


 1. உலர்ந்த திராட்சையை சிறிது சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் நல்ல மிளகு பொடி கலந்து மென்று சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும். 1. ஒரு கப் வெள்ளரிச்சாற்றுடன் ஒரு தேன் கரண்டி எலுமிச்சபழச் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்


 1. காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.


 1. தீமையான புகை/ போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது பாதுகாப்பு. இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு அடிகடி தலை கிறுகிறுப்பு இருக்கும். கொத்தமல்லி விதைகளை வறுத்து பொடித்து தண்ணிரில்(தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்) கலந்து அருந்தினால் கிறுகிறுப்பு மறையும்.


 1. கொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.


 1. கறிவேப்பிலையை அரைத்து நெல்லி அளவு எடுத்து ஒரு கப் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சீதபேதி நீங்கும்.

Monday, August 22, 2011

இன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்

"தாய்மடித் தூக்கமாக
தலைகோதும் காதலியாக
கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக
செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக
இருப்பவளே மனைவி"

நன்றி :கார்த்திக்.சி

  ஆம் .. என்தேவதை சக்தியை கண்டுபிடித்த நாள். தாய்க்கு தாயாக , அன்பு மனைவியாக , நல்ல தோழியாக எனக்கு வாய்தவள்.


  இன்று என் முதல் திருமண நாள்


வாழ்வின் நகர்வுகளை
எனக்காக சுமப்பவள் நீ
என்று புரிகையில் -
உன் மீதான அன்பே
வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!!
—————————————————————————
காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் -
நிறைய முகங்கள் வந்து போகின்றன;
நீ மட்டுமே -
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!
—————————————————————————
ன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக -
தெரிந்திருக்கிறார்கள்;
ஆனால் -
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
இதயத்தையும் -
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!

கவிதை உதவி :http://vidhyasaagar.com

Sunday, August 21, 2011

அழகு குட்டிகள்

அழகு குட்டிகள் உங்கள் பார்வைக்கு


Saturday, August 20, 2011

கலைஞரிடமிருந்து ‘அந்த’ வார்த்தையா? எல்லாம் ரொம்ப ஓவருங்க!

 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தனக்கு எதிராக கேவலமான முறையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு கண்ணியமான முறையில் பதில் கொடுத்து, தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறார். அவர்மீது கேவலமான முறையில் குற்றச்சாட்டைச் சுமத்தியவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு சிறியதாக ஒரு பிளாஷ்பேக் உண்டு.

“போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் இஸ்லாமியர் என்பதால்தான், அவர்மீது அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கின்றது” என்று ஒரு அறிக்கை விட்டிருந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. (அறிக்கைதான் விடமுடியும். பின்னே, அவரால் சட்டசபையில் எழுந்து பேசத்தான் முடியுமா?) இதற்கு சட்டசபையில் பதில் கொடுத்த விஜயகாந்த், “அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்துப் பழி வாங்கியவர் கருணாநிதி. அப்போது இஸ்லாமியர் என்று பார்க்கவில்லையே” என்றார்.

விஜயகாந்தின் கூற்றுக்கு பதிலடியாக அடுத்த அறிக்கை விட்டார் கருணாநிதி. “பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை” என்றது, பழுத்த அரசியல்வாதி என்று அழைக்கப்படும், அவரது அறிக்கை.
இந்த அறிக்கைக்கு பதில் தெரிவித்துள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், “முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதை மறு பரிசீலனை செய்து, தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும். தி.மு.க. அதைச் செய்யாது. ஆனால், ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடப்பதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். எனது பேச்சுக்கு, “பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை” என்று கூறுகிறார்.

அவரை “கலைஞர்’ என்றுதான், இன்றுவரை கண்ணியத்துடன் நான் பேசுகிறேன். அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்?” என்று கூறியுள்ளார்.கண்ணியமாகப் பேசுவதா? திராவிட பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்களுக்கு அதிலெல்லாம் அவ்வளவாகப் பழக்கமில்லையே!

நன்றி : விறுவிறுப்பு . காம்

Friday, August 19, 2011

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?
நீங்கள் ஒரு ஆபத்தில் மாட்டியுள்ளிர்கள் யாரும் காப்பாற்ற வராத நிலையில் ஒருவர் வருகிரார். அவர் நல்லவரா , கெட்டவரா என உங்களுக்கு தெரியவில்லை. பலர் நல்லவர் என்றும் சிலர் கெட்டவர் என்றும் சொல்லுகின்றனர். அந்த நிலையில் நீங்கள் என்ன செய்விற்கள்?
அவர் உதவியை ஏற்று கொள்விற்களா? அல்லது அவரை பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பிர்களா?

அப்படி ஆபத்தில் உள்ளது இந்தியா. காப்பாற்ற பாடுபடுபவர் அன்ணா ஹசாரே. ஊழலுக்கு அதிராக அவர் போராட துவங்கியதும் அவரை பற்றிய சர்ச்சைகளும் துவங்கிவிட்டது. அவரை பற்றி குறை மற்றும் குற்றம் சுமத்தும் சிலருக்கும் , அவர் போராட்டதை தடுக்க நினைக்கும் அரசுக்கும் என் மனதில் தோன்றிய சில கேள்விகள்

 1. அவர் 20 வருடமாக தனது இயக்கத்தின் வரவு செலவு கணக்கை காட்டவில்லை.

- நாதாரிகளா.. 20 வருடமாக என்ன புடுங்கிகொண்டா இருந்திங்க? அவர் போராட்டம் நடத்த போகிறார் என்றதும் தான் நியாபகம் வந்ததா?

 1. உண்ணாவிரதம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்.

-          தங்கபாலுக்கும் அந்த கட்சியில உள்ள ஒருத்தருக்கும் சண்டைனா ரோட்டுல வந்து சாலைய மறைக்கிறனுங்க, நில அபகரிப்புனு கைது பன்னினா அதுக்கு மறியல், அப்பலாம் பாதிக்கபடாத மக்களா இப்ப பாதிக்க படுறாங்க.

 1. முதலில் அவர்  ஊழல் செய்யாதவர் என நிருபிக்கடும். அப்புறம் போராடடும்.

-          ஒரு திருடன் (வால்மீகி) எழுதின ராமாயணத்தை ஏத்துக்குறோம். ராமாயணத்தை பார்த்த நாம் வால்மீகியின் வாழ்கையை கண்டுகொள்ளவில்லை. அவன் திருடனாகவே இருந்தாலும் அவன் சொன்ன கருத்தை பார்த்தோம்.

 1. ஊழலுக்கு எதிராக போராட இவர் என்ன காந்தியா ?

-          காந்தி மட்டும் தான் போராட வேண்டுமா? . இப்ப காந்தியே வந்தாலும் அவர் மேல ஊழல் சொல்லுவாங்க.

-          தவறே செய்யாதவந்தான் ஊழலுக்கு எதிரா போராடவேண்டுமெனில் பிறந்த குழந்தைதான் போராடவேண்டும்.

 1. சட்டதை இயற்றவேண்டியது நாடாளும் மன்றமும், அமைசரவையும் தான். தனிமனிதன் சொல்லுவதை  சட்டமாக்க முடியாது.

-          போங்கடா கொய்யாலுங்கலா.. இப்ப உள்ள சட்டமே ஆங்கிலயேர்களிடம் இருந்து சுட்டது.

-          அமைச்சரவையில் உள்ள பாதிபேர் தீகார்ல இருக்காங்க. மீதி உள்ளவங்களும் விரைவில் போவாங்க போல.. இவர்கள் எப்படி ஊழலுக்கு (தனக்கு)எதிரா சட்டம் ஏற்றுவார்கள்?


அன்னா ஹசாரே செய்வது தவறு என சொல்பவர்களே உங்கள் மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள்(என்னையும் சேர்த்து) நல்லவரா? நீங்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகள் நல்லவர்களா?”


இவை என் சொந்த கருத்துகள். தவறு எனில் பிண்னுட்டத்தில் குறிப்பிடவும்.


Thursday, August 18, 2011

910,603,234,300,000

என்னத்த சொல்ல ? இதுலாம் யார் அப்பன் வீட்டு காசு ? இதுக்கு நாம என்ன பண்ண போறோம் ? 

Wednesday, August 17, 2011

டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…
டென்ஷனா ?

வேலை பளுவா? அல்லது குடும்ப தகறாரா?(மனைவியிடம் அடி வாங்குற நம்ம நாஞ்சில் மனோ அண்ணன் போல) எதாவது காரனத்தால் அடிகடி டென்ஷன் வருதா? உங்களுக்குதான் இந்த பதிவு.

ஏதாவது இருக்கையில் நேராக அமர்ந்து கொள்ளவும். அல்லது படுக்கையில் தளர்வாக படுத்துக் கொள்ளவும்(காலனி அனிய வேண்டாம்). இரு கைகளின் விரல்களையும் விரைவாக மடக்கி சிறிது நேரம் உள்ளங்கையில் அழுத்தமாக வைத்துவிட்டு, மெல்ல விரியுங்கள். இதை மூன்று முறை செய்தால் போதும்.

பிறகு கண்களை மூடிக்கொண்டு, 8 முறை சீராக மூச்சுவிடுங்கள். னீலவானம், பசுமையான மலை, மலர்கள் நிறைந்த தோட்டம் போன்ற அழகிய இயற்கைகாட்சிகளை மனகண்னால் பாருங்கள்.  ஒரு பரவசௌணர்வு உடல் முழுவதும் பரவும். பிறகு மெல்ல கண்விழியுங்கள். டென்ஷன் ஓடிவிடும்.


தூக்கம் வரவில்லையா ?

படுக்கையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள். 16 முறை மூச்சை ஆழமாக இழுத்து மெல்ல வெளியில் விடுங்கள். பிறகு படுக்கையில் மல்லாந்து படுத்து, 8 முறை ஓரே சீராக சுவாசியிங்கள். அதாவது 1 முதல் 8 வரை மனதில் எண்ணிக் கொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். சில நொடிகள் மூச்சை உள்ளே நிறுத்திக் கொண்டு 1 முதல் 12 வரை மந்தில் எண்ணிக் கொண்டு மூச்சை வெளியேற்றுங்கள்.

பிறகு , வலதுபுறமாக ஒருக்களித்துப் படுத்து 16 முறையும், இடதுபுறமாக ஒருகளித்துப் படுத்து 32 முறையும் சீராக சுவாசித்து விடுங்கள்.  பிறகு உடலை தளர்வாக்கிக் கொள்ளுங்கள். சுகமான தூக்கம் வரும்.


இன்னொறு முறை:

உறைந்த தயிரின் மேல் நிற்க்கும் தெளிந்த நீரை எடுத்து, உள்ளங்களில் அழுத்தித் தேய்த்து விட்டு படுத்துக் கொள்ளுங்கள். மனதில் எதாவது எண்ணம் ஒடினால், கண்னை மூடி அதை ஆழ்ந்து கவனியுங்கள். அந்த எண்ணம் நின்றுவிடும். ஆழ்ந்த உறக்கம் வரும்.

டிஸ்கி : இது பூம்புகார் கடற்கரையில் சுண்டல் வாங்கிய பேப்பரில் இருந்த தகவல்.

Tuesday, August 16, 2011

உலக மெகா ஜோக்

நபர் 1: நம்ம ஆளுங்க, நீதிபதிய ரொம்ப பயமுறுத்திவெச்சிட்டாங்க போல ?

நபர் 2: எப்படி சொல்றே..?

நபர் 1 : பின்னே நம்ம தலைவர் மீதான வழக்கை கி.பி 2050 ஆகஸ்ட் 25 க்கு தள்ளி வச்சுடார்னா பாத்துக்கயேன்.
=====================================================================

தொண்டன் :தலைவரே ! உங்கள பார்க்க சி.பி.ஐ ஆபீஸர்ஸ் வந்து
                இருக்காங்க..

தலைவர் : அப்பாயின்மெண்ட் வாங்கி இருக்காங்களா?

தொண்டன் : அரெஸ் வாரண்ட்டே வாங்கி இருக்காங்களாம்.

=====================================================================

சி.பி : ரெண்டு நாளா உங்க செல்லுக்கு ட்ரை பண்றென்.. கிடைக்கவே
         இல்லையே ?

மனோ : எனக்கே கிடைக்கல என் செல்போன் தொலைந்து ரெண்டு
          நாளாச்சு.

=====================================================================
அஞ்சு வருடமா எங்க தலைவரை தொகுதி மக்கள் தேடினாங்க..

இப்ப.?

போலீஸ் தேடிகிட்டு இருக்கு
=====================================================================

கோயிந்து கொஸ்டீன் :

“ விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தர்றதா போன ஆட்சியில வாக்கு கொடுத்திங்களே பெரியவரே இப்ப நடக்குறத பாத்தா கொடுத்த மாதிரி தெரியலையே.. எல்லாம் எடுத்த மாதிரி இருக்கே..?”

நன்றி : ஆனந்தவிகடன்

உலக மெகா ஜோக் :

“ இனி எந்த கூட்டணியிலும் பா.ம.க சேராதுMonday, August 15, 2011

தெரியுமா உங்களுக்கு ?

1.         இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 552 சமஸ்தானங்கள் இனைந்தது.
2.       ஐதராபாத் பட்டேல் முயர்சியால் இந்திய ரானுவ துனையுடன்  1948 செப்டம்பரில் இனைக்கப்பட்டது.
3.        காஷ்மிர் மன்னர் ஹரிசிங்கின் விருப்பதால் அது சுத்ந்திர நாடாக இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவலால் பின் இந்தியாவுடன் இனைத்துகொள்ள சம்மதிதார்.
4.       டாக்டர் அம்பேத்கர் 1949 நம்பர் 26 ல் அரசியல் சாசனத்தை உருவாக்கினார்.
5.        1950 ஜனவரி 26 இந்தியா குடியரசானது.

பல மதங்கள், பல இனங்கள், பல மொழிகள் என வேறுப்பட்டு இருந்தாலும் நாம் அணைவரும் ஒரு புள்ளியில் இனைந்து நிற்கின்றேம். அது இந்தியர் என்ற் புள்ளி.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இனைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

“இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் “