> என் ராஜபாட்டை : January 2015

.....

.

Monday, January 26, 2015

கதம்பம் 26-1-15



கடந்த ஒரு மாதமாக ஒரு பதிவு கூட எழுத முடியவில்லை . ஏன் எழுதவில்லை என நேரிலும் , போனிலும் , மின் அஞ்சலிலும் வருத்தபட்ட கோடானகோடி நல்உள்ளங்களுக்காக இனி அடிகடி எழுதுவேன் .(எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு !!!)


யார் அந்த பதிவர் ?


    மார்ச் மாதம் ஒரு பிரபல தொழில்நுட்ப பதிவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அவர் உங்கள் அனைவருக்கும் தெரிந்த பதிவர்தான் . பிளாக்கர் பலருக்கும் இவர் நல்ல நண்பர். என்னை போல அமைதியான நல்ல மனிதர் (!!!). அவர் யார் என தெரிய கடைசி வரை படிக்கவும் .
===================================================
ரசித்த படம் :

   :எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் மோசமில்லை . விக்ரமின் அர்பணிப்பு மிகவும் அலாதியானது . பாடி பில்டராக வரும்போதும் சரி, வைரசால் கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கும் போதும் மனிதர் வாழ்த்துள்ளார். ஒரு சாதாரண கதைக்கு வித்தியாசமான , பிமாண்டமான ட்ரிட்மென்ட் ஷங்கரால் மட்டுமே முடியும்.

  எந்த எதிபார்ப்பும் இல்லாமல் பார்த்த டார்லிங் காமெடியில் பட்டையை கிளப்பியது. இப்போலாம் பேய் படங்களை பார்த்து பயம் வருவதை விட சிரிப்பு வருகிறது . மனம் விட்டு சிரித்துவிட்டு வர நல்ல படம்

 .
================================================================
படித்தது .


   பாக்யா புத்தகம் வாங்கியதும் (முன்பு...) முதலில் படிப்பது பாக்யராஜ் பதில்கள்தான் . எல்லா பதிலிலும் ஏதாவது ஒரு அழகான குட்டி கதை வைத்திருப்பார் . அந்த கதைகளை வகுப்பில் சொந்தகதை போல பலதடவை சொல்லியுள்ளேன் . அவரின் கேள்வி பதில் நூல் ஒன்று கண்ணதாசன் பதிப்பகத்தில் வாங்கினேன் . 206 பக்க புத்தகம் 85 ரூபாய்க்கு கிடைத்தது . பல அருமையான கதைகளும் , சில தத்துவங்களும் கிடைத்தது . கிடைத்தால் படித்துபாருங்கள்
.
=======================================================================
என்னாச்சு?

nhm.in இல் முன்பு விமர்சனத்துக்காக புத்தகங்கள் இலவசமாக வழங்கினர். ஆனால் இப்போது அதுபோல அளிப்பதில்லை என நினைக்கிறேன் . ஏன் ? என்னாச்சு ? விவரம் அறிந்தவர்கள் செப்பலாமே .(ஓசி புக் படிப்பது தனி சுகம் #மனசாட்சி , ஊசின்னு சொல்லாதிங்க , விலையில்லா புக்னு சொல்லுங்க # ராசா )
==============================================
ரசித்த நகைசுவை:

அப்பா : டேய் நைட்ல போனை சார்ஜ் போடாத , பேட்டரி சூடாக்கி வெடிச்சுடும் .
மகன் : தெரியும்பா , அதான் சார்ஜ் போடும்போதே பேட்டரியை கழட்டி வச்சுடுவேன்

===========================================================
யார் அடிச்சா
பொறி கலங்கி
பூமி அதிருதோ
.
.

.
.
அவதான் பொண்டாட்டி

========================================
ஆச்சர்ய மனிதன் :


சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் இல் உள்ள ஒரு கடைக்கு சென்றேன். அங்கு வேலைபார்க்கும் ஒருவர் மிகவும் கவர்ந்துவிட்டார். பலரும் பல வித பொருள்கள் கேட்க அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல் விலையை சொல்லி , பொருளை எடுத்துகொடுத்து அவர்களை சந்தோஷமாக செல்ல உதவினார் . 4 மணிக்கு பாஸ் இரண்டே நிமிடம் சாப்பிட்டுவறேன்னு போனார் சரியா இரண்டு நிமிடத்தில் திரும்பினார் . மீண்டும் அதே போல் படப்படவென வேலை . விடுமுறை நாளில் கூட இப்படி வேலைபார்க்கும் ஒருவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது . நாமெல்லாம் இப்படி வேலைபார்த்தால் இரண்டே நாளில் ஊரைவிட்டு ஓடிடுவோம் .

டிஸ்கி : அந்த பதிவரின் வலைதளத்தின் பெயர் அந்த பத்தியிலேயே இருக்கு கண்டுபிடியுங்கள் .