> என் ராஜபாட்டை : March 2012

.....

.

Friday, March 30, 2012

3 - ஒரு பார்வை


தனுஷ் , சுருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வந்துருக்கும் படம் 3 . படம் வெளிவரும் முன்பே அந்த படத்தின் "கொலைவெறி " பாடல் உலக அளவில் பிரபலமாகி எதிர்பார்ப்பை எகிரசெய்துள்ளது .
ஆனால் ..

----
---

---
---
---
--

--
--
---

நாம பார்க்க போவது 3  பட விமர்சனம்  அல்ல ..

மும்முர்த்திகள் :

பிரம்மா 


விஷ்ணு 

சிவன் 

முக்கனிகள் :


மூவேந்தர்கள் :


மூன்று முகம் :


முப்பொழுது :

காலை 

மாலை 

இரவு 

மூன்றாம் பிறை :


மூவர்ணம் :


டிஸ்கி : இது நகைசுவை பதிவு ( சிரிப்பு வரவில்லைனா நான் பொறுப்பல்ல )

டிஸ்கி 2  :  மூனு திரைவிமர்சனம் என நம்பி வந்து பல்பு வாங்கிய 
                       நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .


இதையும் படிக்கலாமே :


கதம்பம் 28-03-12 


Wednesday, March 28, 2012

கதம்பம் 28-03-12




ஏன் மாணவர்களுக்கு புரிவதில்லை ?

பனிரெண்டாம் வகுப்பு பொது தெரிவில் கணித பாட வினா தாள் கடினம் என ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக படித்தேன். மார்க் மட்டும்தான் வாழ்க்கையா ? தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்றா அர்த்தம் ? அடுத்த பத்து நாட்களில் எழுதி வெற்றி பெறலாம் . ஆனால் உயிர் போனால் ? உங்களை கண்ணுக்கு கண்ணாக , உங்கள் மீது உயிரை வைத்திருக்கும் பெற்றோர்கள் படும் கவலையை கொஞ்சம் நினைத்தால் இந்த முடிவு எடுக்க மனசு வராது. நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வைப்பதற்கு பதில் உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வையுங்கள் , இது போல தவறான முடிவு எடுக்க தோன்றாது .

===========================================================================

பிடித்த வார்த்தை :

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை

நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை

===============================================================================
உலகமகா புத்திசாலி

பா.ம.க கட்சியின் கோ.க . மணி ஒரு பேட்டியில் மின்சாரம்  தயாரிக்க எளிதான வழி ஒன்று உள்ளது, ஒரு இயந்திரத்தை தண்ணி வர வழில வச்சா அது உருண்டு மின்சாரம் வர போகுது இது கூட இந்த அரசுக்கு தெரிவில்லை

# பா.ம.க ஆட்சிக்கு வந்ததா என்ன என்ன புது திட்டம் வருமோ ?

===============================================================================
ரசித்த ஜோக் :

ஒரு படகில் கருணாநிதி குடும்பம் , ஜெயா , ராமதாஸ் , சோனியா , ராகுல்  போறாங்க , அப்ப பயல் அடித்து படகு நடு கடலில் கவிழ்ந்து விடுகின்றது . இப்ப யார் பிழைப்பா ?

--

--
--
--
பதில் : தமிழ்நாடு

====================================================================================
ரசித்த பாடல் :

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு ... வருங்கால தளபதி உதயநிதி நடித்த ஓகே .. ஓகே படத்தில் வரும் பாடல் இது .
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா ... நமக்கு
கண்ணிற் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா

-          கலக்கல் வரிகள்
-           
 ===================================================================================================

ரசித்த புகைப்படம் :


இதையும் படிக்கலாமே :

தெரியுமா உங்களுக்கு ....

 

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 


Tuesday, March 27, 2012

தெரியுமா உங்களுக்கு ....





லண்டன் கோபுரத்தில் சிறை வைக்கபட்ட போதுதான் தான் சுய சரிதையை எழுதினர் சர் வால்டர் ராலே


நாவல் என்பது ஆங்கில சொல் அல்ல அது இத்தாலிய சொல் , பொருள் கதை என்பதாகும் .

இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் : 5,700 KM

அட்லாண்டிக்கில் செப்டெம்பர் 21  அன்று மட்டும் தான் சூரியன் உதிக்கின்றது.

உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நகரம் : வான் கூவர்

எமிலி ஜோன்ஸ் நடக்கும் போது தெரு விளக்குகளை எண்ணிக்கொண்டே நடப்பார் .
 ==================================================================

எழுத்தாளர் மார்க் டேவின் குப்புற படுத்ததுதான் எழுதுவார்

========================================================== 
சர் சி.வி ராமனுக்கு ராமன் விளைவுக்காக 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .




இதையும் படிக்கலாமே :


Monday, March 26, 2012

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?





R.S.சரண்


நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.


  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.

இதையும் படிக்கலாமே   : 


அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

Saturday, March 24, 2012

ரஜினியை முந்தும் சூர்யா


சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் 'மாற்றான்'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

முதன் முறையாக 'மாற்றான்' படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா.

'மாற்றான்' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் சூர்யா - காஜல் அகர்வாலை வைத்து ரஷ்யாவில் படமாக்கி இருக்கிறார்கள். கதைப்படி, காஜல் ரஷ்ய மொழியில் பேச வேண்டிய காட்சிகள் இருந்ததால்,  ரஷ்ய மொழி வார்த்தைகள் பலவற்றை கற்றாராம் காஜல்.

இந்திய திரையுலகில் முதன் முறையாக இப்படத்திற்கு PERFORMANCE CAPTURE TECHNOLOGY மூலம் சூர்யாவின் முகபாவனைகளையும் மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.

'எந்திரன்', ' 7ம் அறிவு ' போன்ற பெரும் பட்ஜெட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் PERFORMANCE CAPTURE TECHONOLOGY-யை பயன்படுத்தி, சூர்யாவை வைத்து 2 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.


'கோச்சடையான்' படமும் இதே மாதிரி தான் தயாராக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு முன்பே மாற்றானில் இந்த TECHONOLOGYஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்.
 இந்த PERFORMANCE CAPTURE TECHONOLOGY- பற்றி மேலும் அறிய ..

Thursday, March 22, 2012

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ




தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.ண்

அவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...

அவரின் ரொமாண்டிக் லுக்

பயம்

சோகம் அல்லது செண்டிமெண்ட்

பக்தி

கோவம் 

வெட்கம்





டிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும்  பெயர் பெற்ற ஒருவர் .


டிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து என் , கடைசி எழுத்து ராஜபாட்டை நடுவில் எழுத்தே கிடையாது.

இதையும் படிக்கலாமே :

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?

 


Tuesday, March 20, 2012

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

அன்பு நண்பர்களே ..
விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

இதையும் படிக்கலாமே :

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?



Saturday, March 17, 2012

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?


1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.


2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் உட்காந்து கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.


3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.


4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.


5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.


6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)


7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.


இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். 


நன்றி : மெயில்  அனுப்பிய நண்பனுக்கு .