> என் ராஜபாட்டை : June 2015

.....

.

Saturday, June 27, 2015

அதிரடி

                 தமிழ் சினிமாவில் பல காட்சிகள் நம்மை வெகுவாக கவர்ந்து இருக்கும். சிலருக்கு சென்டிமென்ட் காட்சிகள் , சிலருக்கு ரொமான்ஸ் காட்சிகள் , சிலருக்கு நகைசுவை காட்சிகள் என மறக்க முடியாத ரொம்ப பிடித்த காட்சிகள் இருக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்த காட்சிகள் என்று சில காட்சிகள் உள்ளது. அது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான். 

            நான் மிகவும் ரசித்த சில காட்சிகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறேன் . நீங்களும் பார்த்து ரசியுங்கள் ..

1. பாட்ஷா 

                   எப்போது பார்த்தாலும் புதிதாகவே  பார்பதுபோல இருக்கும் அருமையான ஆக்ஷன் காட்சி இது . ரஜினியின் இமேஜை பெருமளவு உயர்த்திய படம்/ காட்சி இது .
2. தீனா 

              தீனா படத்தில் வரும் இந்த காட்சியும் செம ரகளையாக இருக்கும். அஜித்தின் செயலும் , லைலாவின் எக்ஸ்பிரஷனும் செமையாக இருக்கும் .


3. பையா 

               பையா படத்தின் செம ஸ்டைலான , கலக்கலான சண்டை காட்சி இது. பின்னணி இசையும் , கார்த்தியின் ஆவேசமும் அருமையாக இருக்கும்.


4. மங்காத்தா 
          இந்த படத்தில் பல காட்சிகள் செம அசத்தலாக இருக்கும். படத்தின் துவக்கத்தில் வரும் தலையின் அறிமுகம் முதல் படம் பட்டையை கிளப்பும். முக்கியமாக கொஞ்ச நேரமே வரும் இந்த காட்சியில் கைத்தல் காதை பிளக்கும் .


5. ஜில்லா 

          விஜய்யின்  படங்ககளில் ஆரம்ப காட்சி எப்போதுமே கலக்கலாக இருக்கும். ஜில்லாவில் முதல் சண்டைகாட்சியில் அறிமுகம் ஆகும்போது செம ரகளையாக இருக்கும் .


Sunday, June 14, 2015

கேள்விகள் – விமர்சனம்ஆசிரியர் பற்றி ..

           இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சியமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமுக நல ஆர்வலர் (கொஞ்ச காலம் )அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு Oô¨ அவர்கள். இவர் பல கட்டுரைகள் , நாடகங்கள் , புத்தகங்கள் எழுதியுள்ளார்.சில திரைப்படங்கள்  திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார்.

நூல் பற்றி ...

இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடன் எடுத்த பேட்டியின் தொகுப்புதான் இது .  ஒவ்வொரு பேட்டியும் வெவ்வேறு காலகட்டத்தில் , வெவ்வேறு பத்திரிகையில் வந்தது. இதில் மொத்தம் 15  பிரபலங்களின் பேட்டிகள் உள்ளது. திரைத்துறை , எழுத்தாளர், பத்திரிக்கையாளர் , சமுக ஆர்வலர் , ஈழ மண்ணை சேர்த்தவர் , அரசியல்வாதி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை சார்த்தவர்கள்.

முதலில் நடிகர் கமலஹாசனுடன் எடுத்த பேட்டி. இது 1982  இல் எடுக்கபட்டது. தீம்தரிகிட என்னும் பத்திரிகையில் வந்தது. வழக்கம் போல வழ வழ கேள்விகளாக இல்லாமல் கேள்விகள் ரொம்ப ஷார்ப்பாக வருகின்றது. இதுக்கு கமலின் பதில் வழக்கம் போல சில இடங்களில் பளீர், சில இடங்களில் சுளீர்,  சில இடங்களில் குழப்பம். ஆனாலும் பணத்துக்காகத்தான் சினிமாவில் உள்ளேன் என்று வெளிப்படையாக சொன்னது பெரியவிஷயம்தான். சினிமா வெறும் என்டர்டெயின்மென்ட்தான் , அதனால் ஏதேனும் நல்ல விளைவுகள் வந்தால் அது உபரி லாபம்தான் என கமல் சொல்வது அப்பட்டமான உண்மை.


அதே 1982 இல் சமூகவியல் ஆரச்சியாலரான பேராசிரியர் ரஜனி கோத்தாரி அவர்களின் பேட்டியில் வரும் ஒரு வரத்தை “இப்போ நடப்பது குண்டர்களின் ஆட்சி “. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த வார்த்தை இந்தியாவுக்கு பொருந்தும் என நினைக்கிறன்.

1994 இல் சுபமங்களா இதழ்காக சோ அவர்களுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. எல்லாரும் ஜெய்த்த பின் எனக்கு இதுதான் குறிக்கோள், நோக்கம் என கதைவிடுவது உண்டு ஆனால் சோ நான் படுக்கும் போதும் சரி இப்பவும் சரி எந்த நோக்கமும் வைத்துகொல்வதில்லைன்னு வெளிப்படையாக சொல்கிறார். இப்போ தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்கனும்னு சொல்வது போல அன்று டி.கே . சண்முகம் அவர்கள் நாடகங்களுக்கு தமிழில்தான் பேர்வைக்கனும்னு சொல்ல உடனே அதே மேடையில் சோ அவர்கள் என் அடுத்த நாடகத்தின் தலைப்பு “கோவாடிஸ் “ என அறிவித்தார். இது லத்தீன் பேர். அப்பவே ரொம்ப லொள்ளுபிடித்தவர் போல . சிவாஜி , எம் ஜி யார் பற்றி அவரின் தகவல்கள் புதுசு. நாடகத்துறையின் எதிர்காலம் பற்றிய அவரின் கருத்து , சின்னத்திரையின் வரோய் பற்றி எல்லாம் அருமையாக பேசியுள்ளார்.

1996  இல் தினமலர் தீபாவளி மலர்க்காக கருணாநிதியுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வார்த்தை விளையாட்டில் கலைஞ்சரை மிஞ்ச ஆள் இல்லை என்பார்கள் , இதில் தி.மு.க வின் பலம் எது பலவீனம் எது என்றதுக்கு பலம் மக்கள் மன்றம், பலவீனம் பத்திரிகைகள் என பேட்டி எடுப்பவரையே கிண்டல் செய்கிறார். அது ஒருவகையில் உண்மைதான். பத்திரிகை உலகில் அதிகம் விமர்சிக்கபட்டவர் இவராக தான் இருப்பார். ஆனாலும் சண் டிவியால்தான் தமிழ் வளருதுன்னு சொல்வதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

2001 இல் வின்நாயகன் என்ற பத்திரிக்கைக்காக நடிகர் அஜித்திடம் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வழக்கம் போல தன் மனதில் பட்டத்தை அப்படியே பேசுகிறார் தல. சொந்தமாக படம் எடுத்து நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் என ஓபனாக சொல்கிறார். தமிழ் புத்தகங்களை விட ஆங்கில புத்தகம் அதிகம் படிப்பேன் என்கிறார். கோபத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் , அரசியல் எனக்கு வேண்டாம் , ரசிகர்மன்றம் தேவையில்லை என அவரின் அதிரடிகள் தொடர்கிறது.

திரு வள்ளுவன், சுப்பண்ணா , கோமல் சுவாமிநாதன் , அசோகமித்திரன் , சிட்டி , யாசின் மாலிக் , நெடுமாறன் , பிரபஞ்சன், ஜெயபாலன் அக்னிபுத்திரன் என பலரது பேட்டிகளும் இதில் உள்ளது.

வழக்கமான பேட்டி போல இல்லாமல் கேள்விகள் புதிதாக உள்ளது. சில கேள்விகள் எதிராளியை கொபபடுத்தகூடியதாக கூட உள்ளது. ஆனாலும் தைரியமாக கேள்விகளை கேட்டுள்ளார் ஆசிரியர். நூலின் பேப்பர் மட்டும்தான் கொஞ்சம் உறுத்துகிறது. மற்றபடி ஒரு அருமையாக நூல் இது. இதுபோல இவர் மற்ற பிரபலங்களிடம் எடுத்த பேட்டியையும் நூலாக்கினால் நலமாக இருக்கும்.ன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-460-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

இதையும் படிக்கலாமே ..


இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்

Thursday, June 11, 2015

இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்
                 நாம் ஏற்கனவே இலவசமாக ரீ சார்ஸ் செய்ய சில அப்ளிகேஷன்கள் பார்த்தோம் . இன்று நாம் பார்க்க போவது அதுபோல இப்பது பிரபலமாக இருக்கும் இரண்டு ANDROID அப்ளிகேஷன்களை தான் . இவை மிகவும் எளிதான , நம்பிக்கையான அப்ளிகேஷன்கள் ஆகும் .


1. FREE MOBILE RECHARGE

                  இதன் பெயரே இதை பற்றி சொல்லிவிடும். ANDROID வைத்திருக்கும் அனைவரும் வைத்திருக்கவேண்டிய அப்ளிகேஷன் இது. மிகவும் குறைந்த அளவு மெம்மரி சைஸ் கொண்டது இது. பயன்படுத்துவதும் எளிது.

நன்மைகள் :

சாதாரண அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் கூட 5 முதல் 10 ரூபாய் வரை கிடைகிறது .

உங்கள் நண்பர்களை இணைத்தால் ஒவ்வொருவருக்கும் 24 ரூபாய் கிடைக்கும்

உங்கள் நண்பர்களை பலவகையில் அழைக்கும் வசதி .

உடனடியாக பணம்ஏறும் .

இதை உங்கள் மொபைல் மூலம் டவுன்லோட் செய்ய :  CLICK HERE2. FREEB

     இதுவும் முந்தைய அப்ளிகேஷன் போல மிகவும் அருமையான ஒன்றாகும். இதையும் பயன்படுத்தி பாருங்கள். இதிலும் பலவகையான ஆபர்கள் கிடைகின்றது .

நன்மைகள் :

மிக குறைந்த அளவு பைல் சைஸ்

அதிகபட்ச பணமதிப்பு நீங்கள் செய்யும் ஒவ்வொரு டவுன்லோடுக்கும் .

மற்றும் பல வித்தியாசமான ஆபர்கள் உண்டு .

உங்கள் நண்பர்களை இணைத்தால் ஒவ்வொருவருக்கும்  20 ரூபாய் கிடைக்கும்

இதை உங்கள் மொபைல் மூலம் டவுன்லோட் செய்ய :  CLICK HERE

Sunday, June 7, 2015

மருந்தில்லா மருத்துவம்
              இணை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று மருத்துவப்பணி ஆற்றிவரும் திருமதி பி.எஸ். லலிதா எழுதிய நூல். தன்வந்திரி அவார்ட், வைத்திய பூஷன் போன்ற விருதுகள் பெற்றது மட்டுமின்றி பல சமுக சேவைகள் செய்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

             இன்று சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் சென்றால் பத்து டெஸ்ட், பதினைந்து மாத்திரை, இருபது ஊசி என உயிரை எடுக்கும் பலர் உள்ளனர். இதுற்குப் பயந்து நாமே மெடிக்கலில் மாத்திரை கேட்டால், கொடுப்பது 10 / +2  படித்துவிட்டு வேலைபார்க்கும் ஆட்களே. இவர்கள் கொடுக்கும் மருந்தால் தலைவலி உடனே போனாலும் வேறு ஏதாவது பின்விளைவுகள் வருமோ என பயம் வருகிறது.  நோயே இல்லாமலும் வாழ முடியாது இன்றைய சூழலில். இதுபோல குழப்பத்துக்கு விடை சொல்வதுதான் இந்த நூல்.

               நம் அன்றாட வாழ்வில் கேள்விப்பட்ட ஒரு மருத்துவ முறைதான் “ரெய்கி”. ரெ என்றால் பிரபஞ்சம், கி என்றால் உயிர்சக்தி, கி என்றால் ப்ராணா (மூச்சு பயிற்சி). இவை இணைந்த ஒரு சொல்தான் ரெய்கி ஆகும். மற்ற முறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம், மற்ற மருத்துவமுறைகளில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது, இதன் நன்மைகள் என்ன, இதில் ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா என்பதைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த நூல்.

           நம் உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருகின்றது. அந்த ஒளிவட்டம்தான் கண்ணுக்குப் புலனாகா காந்தசக்தியாகும் அதுக்கு “ஆரா” என்று பெயர். அதுபோல உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. வண்டி நன்றாக ஓட சக்கரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல மனிதன் இயங்க இந்த சக்கரம் முக்கியம். ஒவ்வொரு சக்கரமும் “ஓம், ஆம், ஹம், யம், ரம், வம், லம்“ என்ற மந்திரச் சொற்களை மூலாதாரமாக கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுத்து அதில் வரும் நோயைக் கட்டுபடுத்துகின்றது.

        அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு புள்ளியை உற்றுப் பார்த்து மனதை ஒருமுகபடுத்துவதைத்தான் தியானம் என்கின்றோம். தியானம் எங்கே, எப்போது, எப்படி செய்யவேண்டும் என ஆசிரியர் தெளிவாக கூறுகின்றார்.

    ரெய்கி பயற்சியில் உள்ள ஐந்து நிலைகள் என்ன, ரெய்கியின் தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாக இரண்டு அத்தியாயங்களில் சொல்லியுள்ளார். குண்டலினி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

          மணிபூரகம் சக்கரம் பற்றிக் குறிப்பிடும்போது குழந்தைகளின் கல்வியறிவு சார்ந்தது எனக் குறிப்பிடுகிறார். குழந்தை கருவில் இருக்கும்போதே தாய் நல்ல கதைகள், அருமையான இசை எனக் கேட்டால் அது குழந்தையை நல்லவிதமாக பாதிக்கும். இதைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

            சாதாரணமாக் கிராமங்களில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நிறைய ரெய்கியிலும் உள்ளன. கிராமத்தில் இந்த மருத்துவமுறையைப் பற்றி அறியாமலே சொல்லியுள்ளனர். உதாரணமாக : குழந்தையைத் தலையில் தட்டாதே என்பார்கள். காரணம் உச்சந்தலையில் உள்ள எலும்பு வளர்ச்சி பற்றியதுதான். சரியான உணவுமுறை, புராணக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லுதல் போன்றவை. எண்ணெய்க் குளியல் என்பதுகூட இதுபோல்தான். குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் சொல்வதுகூட ஒரு பயிற்சிதான். நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் பலவற்றை மறந்து வாழ்கிறோம். புதிய நோய்களுக்கு அடிமையாகிறோம்.

                இசையில் ரெய்கி மற்றும் தங்கப் பந்து தியானம் என்றால் என்ன என்று எளிதில் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். வண்ணங்கள் கூட மருத்துவக்குணம் கொண்டவை என்பது இவரின் கருத்து.

               எந்த நல்ல விஷயமும் கொஞ்சம் கஷ்டபட்டால்தான் கிடைக்கும். ஆனால் நம்மவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்க வேண்டும், அதுவும் கஷ்டப்படாமல் நிவாரணம் கிடைக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு இது சரி வராது. தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல், உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு போன்ற செய்கைகள் மூலம் உடலை எப்படிக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வது எனச் சொல்லியுள்ளார். இந்தநூலில் உள்ளவற்றை அப்படியே எல்லாரும் செய்வார்களா என்றால் கஷ்டம்தான். ஆனால் ரெய்கி என்றால் என்ன, அதன் பயன் என்ன என்பதை புரிந்துகொள்ள உதவும் நல்ல நூல் இது என்பதில் ஐயமில்லை.

இது மதிப்புரை . காம் தளத்தில் நான் எழுதிய பதிவு :

பதிவுக்கு செல்ல .....


ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-366-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234