> என் ராஜபாட்டை : November 2011

.....

.

Wednesday, November 30, 2011

பல்சுவை வலைதளம் விருது
இந்த மாதத்திற்க்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நம்து விக்கியுலம் வெங்கட்  அவர்கள். பதிவர்களால் செல்லமாக வீடியோ விக்கி என அழைக்கப்படுபவர் இவர்.

 1. இவரால் தான் YOUTUBE என்ற தளமே பிரபலமானது
 2. இவருக்கு உள்குத்து போடவே தெரியாது.
 3. இலங்கை பதிவர்கள் எல்லாரும் இவர்க்கு நெருங்கிய நண்பர்கள்
 4. தமிழிக்கு இவரால் அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை “கிளிச்சிக்காஸ்”
 5. இவருக்கு கோபமே வராது. (மீறி வந்தா..)

வியட்னாம் பற்றியும், அங்கு உள்ள வாழ்கைமுறை பற்றியும் அருமையாக எழுதியவர். இவர் எழுத்தில் கிண்டல் தலைவிரித்தாடும்( சில சமயம் சர்சைகளும்).  யாரும் அறியாத ஆனால் அனைவரும் விரும்பும் வகையில் வீடியோகளை தேடிபிடித்து பதிவு செய்வதில் கில்லாடி. இவருக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

Tuesday, November 29, 2011

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

சமிபத்தில் திரு பத்ரி அவர்களின் நடிகர் அஜித்பற்றி ஒரு பதிவை நான் பிரசுரம் செய்திருந்தேன். அந்த பதிவை பற்றியும் , பதிவர்கள் பற்றியும் மிகவும் மட்டகரமாக வினவு தளம் ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அதில் இருந்து சில பகுதிகளும், சில கேள்விகளும்.


//பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று தோற்கடிக்க முடியாதவன் என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா? //


வினவுவில் இந்த கட்டுரையை எழுதியவர் கட்டில் ரகமா?( பெஞ்ச்!!) ரசிகனை இழிவுபடுத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது?


// ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?
//

எங்க ஊருல பஸ் ஸ்டாண்ட் சரியில்ல அது உங்களுக்கு தெரியுமா? உலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது..

// தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா?
//

இது லூசுதனமான வாதம். இப்ப பஸ் கட்டணம் உயர்ந்ததுக்கு ஏன் நீங்கள் சாகும்வரை உண்ணாவிருதம் இருக்ககூடாது?

// அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள்.
//

உங்களிடம் வேலைபார்பவர்களுக்கு நீங்கள் ஏன் சம்பளம் தருகிறிர்கள்? திறமைக்கும், மார்கெட்க்கும்தான் மரியாதை. உங்களுக்கு வரும் அளவு என் வலைக்கு பார்வையாளர்கள் ஏன் வருவதில்லை எது நியாயமா என நான் கேட்டால் அது எவ்வளவு கேனதனமான இருக்குமோ அதுபோல இருக்கு உங்கள் கேள்வி.

// படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது.
//

ஏன் புத்தகத்தை இலவசமாக அளிக்கவேண்டியதுதானே? ஒரு 2 ரூபாய் புத்தகத்தை இலவசமாக தர துப்பில்லை, 190 ரூபாய் பிரியானி போட்டவரை குற்றம் சொல்ல வெட்கமா இல்லை.

// தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?
//

அண்ணே நீங்க தினமும் 100 பேருக்கு நல்ல உணவும், வருடா வருடம் 100 குழந்தைக்கு படிப்பு செலவையும் செய்ரிங்களா? நீங்களே நன்கொடை தாருங்கள் என பிச்சை எடுக்குறிங்க, இதுல நல்லது செய்றவங்களை கிண்டல் பண்ணுறிங்க.

// ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!//

நாங்க திருந்துறது இருக்கட்டும், நீங்கள் எப்ப திருந்த போறிங்க?
அடுத்தவங்களை குறைமட்டுமே சொல்லுவது ஒரு சைக்கோ குணம். முடிந்தால் நல்லது செய்யுங்கள் , நல்லது செய்வோறை பாரட்ட கற்றுகொள்ளுங்கள். இல்லை மூடிகிட்டு சும்மா இருங்க.

டிஸ்கி: அந்த பதிவின் Link
டிஸ்கி 2: பதிவுலகில் யாரிடமும் சண்டை போடகூடாது என நினைத்தேன். நம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.Sunday, November 27, 2011

மறக்ககூடாத 10
இது சமையல் செய்யும் பெண்களுக்கும்( சில ஆண்களுக்கும்), உணவை விரும்பி  அல்லது அளந்து சாப்பிடும் அணைவருக்கும் தேவையான குறிப்புகள். 1. இனிப்பு செய்தால் ஏலம் சேர்க்கவும், இது அஜிரணம் வராமல் தடுக்கும்.  
 2. மாமிச உணவு சமைத்தால் அதில் பூண்டு, மிளகு சேர்க்கவும்
 3. சாம்பார், அல்லது கார குழம்பில் அதிக அளவு பூண்டு சேர்க்கவும், இது ரத்த கொழுப்பை சீராக்க பயன் படும்.
 4. பெல்லாரி வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம் 2600 மடங்கு நல்லது.
 5. மலை பூண்டை விட சிறு பூண்டு நல்லது இது மாரடைப்பை தடுக்கும்
 6. மிளகு அலர்ஜி வராமல் தடுக்கும்
 7. சுக்கு பயன்படுத்தினால் மைரோன் தலைவலி வராமல் தடுக்கலாம்.
 8. வாயு அதிகம் தரும் வாழைகாய், உருளை பொரியல் செய்யும் போது அதில் பெருங்காயம் சேருங்கள், அது வாயுவை கட்டுபடுத்தும்.
 9. வெந்தயம் உடலில் நார்சத்தை அதிகரிக்கும்
 10. மஞ்சள் உணவில் சேர்ப்பது உங்கள் மருத்துவ செலவை கட்டுபடுத்தும்
Friday, November 25, 2011

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..இன்று நமது டுபாகூர் டி.வியில் சமைத்து பார் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து  “அப்பளம் சுடுவது எப்படி?” என செய்துகாட்டபோகின்றார்கள்.

தேவையான பொருள்: அப்பளம் சுட என்ன தேவையோ அதை
                    எடுத்துகொள்ளவும்.

விஜய் : நேயர்களே ! நாம் இன்று எப்படி அப்பளம் சுடுவது என கத்தி சாரி கத்துதரபோகிறார் நம்ம தல.

அஜித் : வாணக்கம்.

விஜய் : வாணக்கம் இல்லை, வனக்கம்,

அஜித் : முதலில் இடுப்பை பத்த வைக்கனும்.

விஜய்  : அடபாவி அது அடுப்பு.

அஜித் : அடுப்பில் ஜட்டியை போடனும்..

விஜய்  :  ஆமாம் அடுப்புல ஜட்டிய போடு, இடுப்புல நெருப்பை வை..

அஜித் : ஜட்டி, அடுப்புமேல வைப்பாங்கல அது..

விஜய்  : அய்யா .. அது ஜட்டி இல்லை சட்டி.

அஜித் : சட்டில என்னய ஊத்து..

விஜய்  : உன்னை ஏன் அதுல ஊத்தனும்?

அஜித் : என்னை இல்லை என்னெய் அதாவது ஆயில்..

விஜய்  : சரி..சரி.. அப்புறம்..

அஜித் : கொஞ்ச நேரம் ஆனதும் ஆயில் குதி குதினு குதிக்கும்..

விஜய்  : சனியனே அது கொதி, கொதினு கொதிக்கும்..

அஜித் : யெஸ்.. யெஸ்.. அதுல ஆப்பாளத்தை போடு.. அது கொர்ருனு பொரியும்..

விஜய்  : அது.. ஆப்பாளம் இல்லை.. அப்பளம், சொல்லு பார்போம்.

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  : உன் வாய்ல கொள்ளிவைக்க.. ஆப்பாளாம் இல்லை அப்பளம் சொல்லு..

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  :  டேய் ! நல்லா அழுத்தி சொல்லு அப்பளம்.

அஜித் : அழுத்துனா ஆப்பாளம் நொறுங்கிடும்.

விஜய்  : என்ன எழவாது சொல்லி தொலை..

அஜித் : இந்த ஆப்பாளத்தை பாய்சன்ல தொட்டு சாப்பிடலாம்.

விஜய்  : நீ சொன்ன படி செய்தா பாய்சன்லதான் தொட்டு சாப்பிடனும். நாதாரி   
           அது பாய்சன் இல்ல பாயசம்.

விஜய்  : என்ன நேயர்களே ! நிகழ்ச்சி எப்படி இருந்தது, ஹலோ யாருப்பா 
         அங்க  கல்லை எடுக்குறது..


Thursday, November 24, 2011

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
யாரையாவது கிண்டல் செய்யவோ, சும்மா பயமுறுத்தவோ நாம் தெரியாத எண்னில் இருந்து SMS செய்வோம். இதற்க்காக தனியாக SIM CARD வாங்க வேண்டும். ஆனால் இப்போது சில WEB SITEகள் நமக்கு அந்த வசதியை தருகின்றது.

இவற்றை விளையாட்டிர்க்கு மட்டுமே பயன்படுத்துங்கள், பிரச்சனையில் மாட்டிகொள்ளாதீர்கள்.

1. வேறு எண்ணில் இருந்து அனுப்ப.

 1. முதலில் http://smsmafia.in  என்ற தளத்திற்க்கு செல்லவும்.
 2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
 3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
 4. கிழே உள்ள SEND SMS  என்ற பட்டனை அழுத்தவும்.
 5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.


2. வேறு பெயரில் அனுப்ப.


 1. முதலில் http://smsmafia.in/sid   என்ற தளத்திற்க்கு செல்லவும்.
 2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
 3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
 4. கிழே உள்ள SEND SMS  என்ற பட்டனை அழுத்தவும்.
 5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.

இவை இரண்டிலும் எண்ணும், பெயரும் அதுவே தெரிவுசெய்துகொள்ளும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10,

Wednesday, November 23, 2011

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

  
நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது.

நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod.

இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.

 •  www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

 
மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும்.

 • அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.
 பின்பு ..


 • மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.


இனி நீங்களும் கடவுளும் ஜாலியாக உரையாடலாம்.இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.

Tuesday, November 22, 2011

நெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.
இன்றைய இனைய உலகில் பல Browser இருந்தாலும் சில மட்டுமே நமக்கு மிகவும் பிடித்தமானதாக, பயன் படுத்த எளிதாக உள்ளது. நம்து தகவல்களை பாதுகாக்கவும், வேகமாக இனையத்தில் உலவவும் பயன் படும் ஒன்று நெருப்பு நரி என சொல்லபடும் FIREFOX BROWSER.

இதில் சில கோடிங்க் (CODING) மூலம் சில விஷயங்கள் செய்யலாம். அவை என்ன என்று கிழே பார்க்கலாம்.

(கோடிங்க்கை காப்பி செய்து நெருப்பு நரின் முகவரி பட்டையில்(ADDRESS BAR) பேஃஸ்ட் செய்யவும்)

 1. உங்கள் நெருப்பு நரி நடனமாட வேண்டுமா?

chrome://global/content/alerts/alert.xul

 1. நெருப்பு நரிக்குள் இன்னொறு நெருப்பு நரி வரவழைக்க..

chrome://browser/content/browser.xul

 1. firefox options வரவழைக்க.

chrome://browser/content/preferences/preferences.xul

 1. firefox bookmark manager வரவழைக்க..

chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

 1. cookies window வரவழைக்க ..

chrome://browser/content/preferences/cookies.xul

 1. Clear Private Data விண்டோ வரவழைக்க..

chrome://browser/content/preferences/sanitize.xul

 1. About Firefox விண்டோ வரவழைக்க..

chrome://browser/content/aboutDialog.xulஇந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.Monday, November 21, 2011

தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.
கிழே இரண்டு கணக்குகள் உள்ளது படித்துவிட்டு விடைசொல்லவும். ஆனால் ஒரு கண்டிஷன் பதிவை ஒருமுறை மட்டுமே படிக்க வேண்டும். முயர்சி செய்யவும்.


கணக்கு 1:

ஒரு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனில் 9 பேர் உள்ளனர். டிரைவரை சேர்த்து 10 பேர். நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள். அனைவர் கையிலும் துப்பாக்கி உள்ளது. அதில் ஒவ்வருவருக்கும் 5 குண்டுகள் டிரைவருக்கு மட்டும் 4 குண்டுகள்.

வேன் ஒரு காட்டுவழியே போகும் போது ஒரு கரடி வருகிறது, டிரைவர் மட்டும் சுடுகிறார்,கரடி தப்பிவிட்டது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு புலி வருகின்றது டிரைவர் தவிர அனைவரும் சுடுகின்றனர் புலி இறந்துவிட்டது.

திரும்பி வரும் வழியில் ஒரு ஒநாய் வருகின்றது. அனைவரும் சுடுகின்றனர், ஒ நாய் இறந்துவிட்டது. அனைவரும் வீடு வருகின்றனர். அனைவர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை ஒரு இடத்தில் வைகின்றனர்.

கேள்வி : டிரைவர் வயது என்ன?

கனக்கு 2:

வைகை எக்ஸ்பிரஸ்  மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருகின்றது. இரண்டுமே எங்குமே நிற்க்காது.

கேள்வி : எந்த எக்ஸ்பிரஸ் வேகமாக இயங்குகிறது?டிஸ்கி : ஒருதடவைக்கு மேல் படித்து விடை சொல்பவர்கள் Power star
           சினிவாசன் படத்தை 5 முறை பார்க்கவைக்கபடுவார்கள்டிஸ்கி : இந்த பதிவுக்கு மட்டும் Comment moderation செய்யபடும்.

Sunday, November 20, 2011

காதலர்களுக்காக ...

 

காதலில் ஆறு வகை உங்கள் காதல் எந்த வகை ?

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக்கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகிவிடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதாலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு.
கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். `காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை ‘இனிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது ? எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா ?

நன்றி : வணக்கம்நெட்.காம்

Saturday, November 19, 2011

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?
அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம்புங்கப்பா !)
அவரும் நல்லவர், நானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.(ஹி..ஹி..)

கருன் : ஆமா அவரும் ஆம்பளை நீயும் ஆம்பளை.. போடங்க்

சரி.. சரி . உங்கள் ஆர்வம் புரியுது, இதோ என் கவிதா சாரி கவிதை.


அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
அவள் அப்பன் எருமை மாடுபோல்
மேய்ந்துவிட்டான்.ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?

காதல் என்பது ஒரு காட்டாறு- அதை
கடந்து போக நீதாண்டி என் மோட்டாரு.சி.பி ஏன் ஒடுறிங்க ?


இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

தாய் “ என்றான்.

என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

ராஜா” என்றார்.

தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?


டிஸ்கி ; இதை படித்துவிட்டு செளந்தர் என்னை கொலைவெறியுடன் தேடுவதாக கேள்விப்பட்டேன். நான் அமலா பால் வீட்டுல பதுங்கி இருப்பதை யாரும் சொல்லிடாதிங்க.


Friday, November 18, 2011

விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே
இன்றய சினிமா உலகில் ரஜினி, கமலலுக்கு அடுத்தபடியாக ஒப்பிட்டுபார்க்கபடுவது இவர்கள் இருவரும்தான். இவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்கள் ரசிகர்கள் இடையே ஒத்துமை இருப்பதாக தெரியவில்லை. இருவரையும் பரஸ்பரம் கிண்டல் செய்து Facebook , Twitter, Blog , SMS என அனைத்திலும் கிண்டல் பதிவுகள் செய்யபடுகின்றனர்.

இருவரும் ஏறதாழ ஒறே அளவு படங்கள்தான் நடித்துள்ளனர்(விஜய் 52, அஜித் 50) , இருவரின் வெற்றி சதவிதமும் ஓன்றாகவே இருக்கும். நடனத்தில் விஜய் என்றால் நடிப்பில் அஜித். உடம்பை கட்டுகோப்பாக வைப்பதில் விஜய் கில்லாடி. விபத்து நடந்தபின்பும் பயபட்டாமல் சண்டைகாட்சியில் நடிப்பதில் விஜய் சூரர்.

ஆரம்பத்தில் தந்தையின் துனையால் சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் ஒரு நல்ல இடத்தை பிடித்தார் விஜய்.  யாருடைய துணையும் இன்றி சொந்த முறர்சியில் வெர்றி பெற்றவர் அஜித். நடிப்பு தவிர பாடுவதில் விஜய் கில்லாடி, நடிப்பை தாண்டி எந்த நடிகரும் செய்ய துணியாத கார் பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை செய்தவர் அஜித்.

மங்காத்தா வெற்றிமூலம் அஜித் கலக்கினார், இப்போ வேலாயுதம் வெர்றி மூலம் விஜய் கலக்குகிறார். இந்த பதிவின் நோக்கம் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என கண்டுபிடிப்பதுதான்( இவரு பெரிய சயிண்டிஸ்ட் வந்துடார் கண்டுபிடிக்க# மனோ).

சைடில் உள்ள Poll Box இல் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஓட்டு போடலாம்.

டிஸ்கி : இருவரையும் பிடிக்கவில்லை “எனக்கு நவரசபதிவர், ஓபாமாவே

   பாராட்டிய, கன்னி பெண்களின் கனவு நாயகன், கல்யானமான
   பெண்களின் முன்னாள் நாயகன், உலகபுகழ் ராஜாக்குதான்
   போடுவேன்” என அடம்பிடிப்பவர்களுக்காக எனது பெயரையும்
   இனைத்துள்ளேன்.
Thursday, November 17, 2011

தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?
கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த இளம் பெண் சவுமியா வயது 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி ஊயிருக்கு துடித்துகொண்டு இருக்கும் போது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவிந்தசாமி. இவருக்கு இப்போது தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது”

-         செய்தி.

எனது கேள்வி

 1. இவர் தூக்குதண்டனையும் ரத்து செய்ய சொல்லி போராடுவிர்களா?

 1. வேலைக்கு போன ஒரு பெண்னின் கனவுகளையும், உடலையும் சிதைத்த இந்த காமபேய்க்கு வக்காலத்து வாங்குவிற்களா?

 1. ஒரு மரணத்திர்க்கு இன்னொறு மரணம் தீர்வாகாது என்றால் இதுக்கு முடிவு என்ன?

 1. அவன் ஒரு மாற்றுதிரனாளி , இருந்தாலும் அவன் செய்தது கொடுரம் அல்லவா?

 1. ராஜிவ்காந்தி கொலை வழக்கு என சொல்கின்றிர்கள், ஆனால் அவருடன் இறந்தது பல அப்பாவிகள் அல்லவா? இலங்கையுடன் சம்பந்தம் இல்லாத அவர்களை கொன்றது குற்றமல்லவா?

 1. 14 வருட சிறைவாசம் தான் ஒரு உயிரின் மதிப்பா?

 1. பலரை துடிக்க துடிக்க கொன்ற அப்துல் கசாப்பிற்க்கு என்ன தண்டனை கொடுகலாம்?

 1. எல்லாவற்றிர்க்கும் பயிற்சிபெற்ற தீவிரவாதி சிறையில் மட்டும் திருந்துவார்கள்?

 1. தவறு செய்பவன் தமிழனாக இருந்தால் என்ன , கடவுளாக இருந்தால் என்ன தவறு தவறுதானே?

 1. நாம் ஆயிரம் சொல்லலாம் ஆனால் உறவுகளை இழந்த வலி பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே தெரியும்.?

 1. அரசியல் காரணத்துகாக மூன்று அப்பாவி பெண்களை பேருந்தில் வைத்து உயிருடன் எரித்த கயவர்களும் தமிழ்ர்கள்தான் அவர்களுக்காக ஏன் போராடவில்லை?

 1. மரணதண்டனை இருக்கும்போதே இவ்வளவு நடக்கின்றதே, இல்லாமல் போனால், எது செய்தாலும் சிறைதான் எதாவது விஷேஷதினத்தில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம் வராதா?


டிஸ்கி : இது என் நீண்ட நாள் கேள்விகள், சரியா? தவறா? என தெரியாது.  
          உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.Wednesday, November 16, 2011

அஜித் : THE REAL HERO


நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’
‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’
‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’
‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

- நன்றி:பத்ரி சேஷாத்ரி 
நன்றி : தமிழ் சினிமா நியுஸ்   
மற்றும் இதை தந்து உதவிய  srini vasan அவர்களுக்கு .

Tuesday, November 15, 2011

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்திகடந்தமுறை ஜெ. முதல்வராக இருந்த போதே அரசு கேபிள் கொண்டு வந்து மூலைமுடுக்கேல்லாம் அரசு கேபிள் வர முயர்சி செய்தார், ஆனால் முடியவில்லை. பின் வந்த கருணாநிதி அந்த திட்டதையே முடக்கிவைத்தார்.

2011 தேர்தலில் ஜெ. அமோக வெற்றி வெற்று ஆட்சி அமைத்ததும் அந்த திட்டத்திற்க்கு உயிர் குடுத்தார். அரசு கேபிள் நன்றாக செயல்பட துவங்கியது. தமிழ் நாடு முழுவதும் ஓளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது, மக்களும் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

ஆனால் அரசு கேபிளில் சன் நெட் ஓர்க் சேனல்கள் தெரியாது போனதால் மக்களிடம் பெரிய அதிர்ச்சி எற்ப்பட்டது. தமிழகத்தில் அசைக்க முடியாத வளர்ச்சி பெற்று உள்ளது சன் டி.வி. குடும்ப பெண்களின் முக்கிய பொழுதுபோக்கே சன் டி.வி சீரியல்கள் என்றால் அது மிகையல்ல.

சன் டி.வி இல்லாதது அரசு கேபிள்க்கு பெரிய அடியாக இருகின்றது. அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் மற்ற கட்டண சேனல்களான STAR SPORTS, TEN SOPRTS, SONY, DISCOVERY, ANIMAL PLANET, SONY MAX, AXN, HBO, ESPN போன்ற முன்னனி நிருவனங்கள் தங்கள் சேனலை ஒளிப்பரப்ப அனுமதி தந்தன. ஆனால் சன் டி.வி பிடிவாதமாக மறுத்து வருகின்றது.

சன் டி.விக்கு செக் வைக்கும் விதமாக அதை அரசுடமை ஆக்கிவிடலாம் என ஜெ . எண்னுகின்றார். அப்ப்டி செய்யும் பட்சத்தில் சன் டி.வியை அடக்கி வைத்த மாதிரியும் இருக்கும், அரசு கேபிள்லும் நன்றாக வரும் என எண்ணுகின்றார். அப்படி செய்தால் சன் நிருவாகம் வழக்கு தொடரும் அபாயம் உள்ளது. இதற்க்கும் ஒரு வழிவைத்துள்ளார் ஜெ.

முன்பு இந்திராகாந்தி தனியார் விமானங்களை அரசுடமை ஆக்கினார், நேரு கூட தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கினார். இந்த வாதங்களை முன் வைத்து வழக்கில் வெற்றி பெறலாம் என ஜெ. நினைக்கிறார். இந்த விவகாரம் மாறன் குருப்க்கு தெரியவந்ததால்தான் இப்போது சன் டி.வியில் அர்சு பற்றி அதிகமாக விமர்சனம் செய்து செய்திகள் வருவதில்லை.

சன் டி.வி அரசுடமை ஆகுமா? இல்லையா? என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.இது போல இன்னும் பல அரசுடமை ஆக்கும் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS
உரிமை : ராசா, ராசா (ராக்கெட் ராசா)