> என் ராஜபாட்டை : May 2014

.....

.

Tuesday, May 27, 2014

வைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNLOAD MP3)
 
          கவிதைகளை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது . அதுவும் வைரமுத்து கவிதை என்றால் கேட்கவே வேண்டாம் . அனைவருக்கும் பிடிக்கும் வகையில் , அனைவரும் ரசிக்கும் வகையில் எளிய நடையில் கவிதை எழுவதில் வல்லவர் நமது கவி பேரரசு வைரமுத்து அவர்கள் . அவர் பல கவிதை நூல்கள் எழுதியுள்ளார் . அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளது . அவரின் பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்றுள்ளது .


       அவரின் கவிதையை படித்து ரசிப்பதே தனி சுகம், அதுவே அவர் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் உங்களுக்காக அவர் தனது குரலில் தன கவிதைகளை உங்களுக்காக படித்து இல்லையில்லை பாடி காட்டுகிறார் . அவரின் கம்பிர குரலில் அந்த அழகிய கவிதைகளை உங்கள் செவிவழி சுவைக்க வாருங்கள் . இதோ உங்களுக்காக .....·        விறகு 
·        அழைப்பு 

·        நயாகரா 


·        மதுரை 


உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு பகிருங்கள் ....

Thursday, May 22, 2014

ஓவியன்சில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்துபோய்விட்டேன் . அவ்வளவு அழகான ஓவியங்கள் . எளிமையான அதே சமயம் அழனான பென்சில் ஓவியங்கள் . அந்த ஓவியரின் பெயர் கோபி . சென்னை ஓவிய கல்லூரியில் படித்துவருகிறார் .உங்கள் பார்வைக்கு அவரின் சில ஓவியங்கள் .

இதை வரைந்த அழகிய கரங்கள் இவருடையதுதான் ...


இவரின் முகநூல் பக்கம் :GOPI OVN

Wednesday, May 14, 2014

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்
               இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .


AMAZON.IN


                  இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது .

நன்மைகள் :
  
 •    CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை .
 • எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் .
 • பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி .
 • SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் .
 • 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி .

இந்த தளம் செல்ல :   AMAZON.IN
TRADUS.COM


               அடுத்த பாதுகாப்பான , பெரிய ஆன் லைன் ஷாப்பிங் தளம் இது . இங்கு அனைத்து வகை மொபைல் , புத்தகம் , பெண்களுக்கான உடைகள் , குழந்தைகளுக்கான பொருட்கள் கிடைக்கும் .

நன்மைகள் :

 •  குறைந்த விலையில் பொருட்கள் .
 • ஆன் பெண் என பிரித்து தேடலாம் .
 • பயமில்லாமல் கிரடிட் கார்ட் பயன்படுத்தலாம் .

 இந்த தளம் செல்ல :  TRADUS.COM
SHOPCLUES.COM


           இதில் மொத்தமாகவும் , சில்லறையாகவும் பொருட்கள் வாங்கும் வசதியுள்ளது . சில பொருட்கள் மற்ற தளங்களைவிட மிக குறைவான விலையில் கிடைகிறது . இந்த தளத்தை போய் பாருங்கள் .

நன்மைகள் :

 •  சண்டே ஸ்பெஷல் என ஒரு ஆபர் சண்டே அன்று மட்டும் தருகிறார்கள் . பல பொருள்களின் விலைகள் அதிரடியாக குறைக்கபட்டு இருக்கும் .
 • அதிக பட்ச தள்ளுபடி உள்ளது 
 • விரைவான சேவை .

இந்த தளம் செல்ல : SHOPCLUES.COM


 
EBAY.COM


              மிகவும் பழமையான , அதிக மக்கள் பயன்படுத்தும் தளம் இது . மிகவும் நம்பிக்கையான தளம் இது . இதன் சேவை மிக விரைவானது மற்றும் பாதுகாப்பானது .


இந்த தளம் செல்ல : EBAY.COM
FLIPKART.COM       தற்பொழுது முன்னிலையில் உள்ள ஆன் லையன் விற்பனையகம் இது . இங்கு இல்லாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்களும் , சலுகைகளும் கொட்டிக்கிடக்கிறது .

நன்மைகள் :

 • அப்ளிடேட் என்ற முறை மூலம் நீங்கள் உருப்பிணாரக் சேர்ந்து உங்கள் மூலம் யாராவது பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் .
 • விரைவான சேவை .
 • COD முறை உண்டு .
 
இந்த தளம் செல்ல : FLIPKART.COM


 இது போல பலதள ங்கள் உள்ளது விரைவில் அவற்றையும் பார்ப்போம் .

Wednesday, May 7, 2014

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ....வரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .

பெற்றோர்களுக்கு :


 • மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .

 • இந்த மார்க் வச்சு மாடுதான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .

 • தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திபயனில்லை .

 • அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .

 • எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கிதரேன்னு சொல்லாதிங்க .

 • அவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஈன அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .

மாணவர்களுக்கு :


 • மதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நேனைத்துகொள்ளுங்கள் .

 • எக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...?

 • அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .

 • நண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்புகள் நெறைந்ததா என பார்த்து சேருங்கள் .

 • இதுவரை படித்தது வேறுமாதிரி இனி படிப்பு வேற மாதிரி என்பதை உணர்ந்து படியுங்கள் .

 • நல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவி செய்யுங்கள் .

 • உங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .

தேர்வு முடிவுகளை பார்க்க :

·       www.dge1.tn.nic.in

·       www.dge2.tn.nic.in

·       www.dge3.tn.nic.in

·       www.tnresults.nic.in

ANDROID மொபைல்லில் பார்க்க :


SMS மூலம் அறிந்துகொள்ள :

TNBOARD REG.NO , DOB IN DD/MM/YYYY
TO 09282232585

இந்த வசதி 9 தேதி காலை 10 மணிக்குதான் கிடைக்கும் .Monday, May 5, 2014

ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS – பகுதி ???

ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள்  எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள் (அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...


    

      இது IPL சீசன் , கிரிகெட் ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .

2.     LADOOO        இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள் என்னிருக்கு ரீ-சார்ஜ்  செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும் தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .

இதுக்கான ரெபரல் கோடு : 1686961149


 
3.    APPSAVER


       இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .

 
4.     INDIA AGAINST  SPAM


நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள் வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும் அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .

 


ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும் சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு அளிக்கப்படும் . இங்கு பல இ புக் கிடைகிறது . உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .

 
குறிப்பு : இவையனைத்தும் GOOGLE PLAY STORE இல் இலவசமாக கிடைக்கும் .