> என் ராஜபாட்டை : March 2015

.....

.

Tuesday, March 17, 2015

இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்யவேண்டுமா ?                              இன்றைய இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும் . FILPKART, AMAZON, EBAY என பல தளங்கள் உள்ளன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சலுகைகளை வழங்கிவருகிறது . இன்று நாம் பார்க்கபோவது கொஞ்சம் வித்தியாசமான தளம் . இது நீங்கள் முன்பே தெரிந்த தளம் தான் . வித்தியாசம் அவர்கள் வழங்கும் ஆபர் தான் .


                   ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனமான SNAPDEAL தனது ANDROID அப்ளிகேஷன் பயன்படுத்தும் வாடிகையாலர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது . இதன் மூலம் கொஞ்சம் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம் .


* முதலில் CLICK HEREலிங்கில் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் .

* அல்லது PLAY STORE இல் SNAPDEAL என தேடி டவுன்லோட் செய்யவும் .

* உங்கள் ஆண்ட்ரைடு போனில் இன்ஸ்டால் செய்யவும் .

* செய்து முடித்ததும் முதல் பக்கத்தில் ஒரு REFERER CODE கேட்கும் அதில்  J2qG507643 என டைப் செய்யவும் .

* ரெபரல் கோட் இல்லாமல் உங்கள் கணக்கில் பணம் ஏறாது .

* பின்பு உங்கள் மெயில் ஐடி கொடுத்து கணக்கு துவங்கவும் .

* இப்போது உங்கள் கணக்கில் ரூபாய் 50 ஏறி இருக்கும் .

* உங்கள் மொபைல் என்னை சேர்த்த பின் உங்களுக்கு தனியாக ரெபரல் கோட் கிடைக்கும் . இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்க்கலாம் . அவர்களுக்கும் ரூபாய் 50 கிடைக்கும் . உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும் .

* இப்படி சேரும் பணத்தில் நீங்கள் SNAPDEAL மூலம் ஏதாவது பொருளை வாங்கலாம் .

நன்மைகள் :

* மிக சிறிய அளவு அப்ளிகேஷன் ( 5MB)

*உடனடியாக பணம் ஏறும் .

* எத்தனை நண்பர்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம் .குறிப்பு :

கண்டிப்பாக ரெபரல் கோட் கொடுத்தால் மட்டுமே பணம் ஏறும் . இல்லையெனில் சாதாரண அப்ளிகேஷனாக இது செயல்பட துவங்கும் .

உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரியாக 30 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் .

REFERER CODE J2qG507643 


 இதையும் பாருங்கள் :


இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

Monday, March 9, 2015

ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
           பலபெயர்கள் எப்படி வந்தது ஏன் வந்தது என நமக்கு தெரியாது ஆனாலும் நாம் தினமும் அதை பயன்படுத்தி வருகிறோம் . அப்படி பட்ட சில பெயர்களின் காரணத்தை நாம் இன்று பாப்போம் .

கடிகாரம்:
              "கடிகை' என்றால் "நாழிகை' என்று பொருள். நாழிகையை அளக்கும் கருவி ஆரமாக வந்தபோது ""கடிகாரம்'' என்ற சொல் தோன்றியிருக்கலாம்.
கெஜட்:
1566-ஆம் ஆண்டு இத்தாலிய அரசாங்கத்தின் மிக முக்கியமான செய்திகளைப் பெரிய பலகையில் எழுதி வெனிஸ் நகரத்தின் முக்கியமான வீதிகளில் குறிப்பிட்ட இடங்களில் வைத்தார்கள். அதைப் பார்த்துப் படிக்கும்போது மக்களிடமிருந்து கட்டணமாக ""கெஜட்டா'' என்னும் இத்தாலிய நாணயம் வசூலிக்கப்பட்டது. பின்னர்தான் அரசாங்கச் செய்திப் பத்திரிகைக்கு ""கெஜட்'' எனப் பெயர் வந்து அதுவே நிலைத்துவிட்டது.
பாண்டேஜ்:
பண்டைக்காலத்தில் எகிப்தில் பிணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகப் பிணத்தின் தலை முதல் கால்வரை போர்த்தி வைக்கும் பழக்கத்திலிருந்துதான், இன்று மருத்துவ உலகில் பழக்கத்திலிருக்கும் "பாண்டேஜ்' முறை வந்தது.


ஏக்கர்:
நிலத்தின் அளவைக் குறிக்க ஏக்கர், ஏக்ரா என்று சொல்கிறோம். அந்தச் சொற்கள் வழக்குக்கு வந்த விதம் இப்படித்தானாம். ""யோக்'' என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பே ஏக்கர், ஏக்கரா என்பது. "யோக்' என்றால் "நுகம்' என்பது பொருள். நுகத்தில் கட்டிய மாட்டைக் கொண்டு விடியற்காலை முதல் இருட்டும்வரை ஓட்டக்கூடிய நில அளவிற்குத்தான் "ஏக்கர்' என்ற பெயர் ஏற்பட்டது.

தரங்கம்பாடி - ஒரு சிறு விளக்கம்:

"தரங்கம்பாடி' என்பது ஒரு கடற்கரை கிராமம். "தரங்கம் பாடி' என்பது தனித் தமிழ். "தரங்கம்' என்றால் அலை. அலை ஓயாமல் பாடிக் கொண்டிருக்கும் பாடி தரங்கம் பாடி. "பாடி' என்பதற்கு ஊர் என்பதும் பொருள்.

புயல்:

                புயலுக்கு ஆங்கிலத்தில் "சைக்ளோன்' என்று பெயர் எப்படி வந்தது என்றால் "சைக்ளோன்' என்ற பதத்திற்கு கிரேக்க மொழியில் ""பாம்புச் சுருள்'' என்று பெயர். காற்று சுழன்று, சுழன்று அடிப்பதால் அதற்கு அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வெப்பப் பிரதேசங்களில் வீசும் சுழற்காற்றுகளையே "சைக்ளோன்' என்று சொல்கிறோம்.

மனிதன்:

மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். நினைக்கும் கருவி மனம். மனத்தையுடையவன் "மனிதன்'. தமிழில் "மனிதன்', வடமொழியில் "மநுஜர்', ஆங்கிலத்தில் "மேன்' - இவையெல்லாம் "மன்' என்ற பகுதியாகவே பிறந்தன.

பினாங்:
          மலேசிய மொழியில் "பினாங்' என்றால் "வெற்றிலை' என்று பொருள். தமிழர்கள் முதன்முதலாக இங்கு "வெற்றிலை பாக்கு' வியாபாரம் நடத்த வந்திருந்தாலும் பினாங்கில் வெற்றிலைதான் அதிகமான விளைபொருள். அதனால் "பினாங்' என்ற பெயரே அந்நகரத்திற்கு நிலைத்துவிட்டது.

லைப்ரரி:

            நூல் நிலையத்திற்கு ஆங்கிலத்தில் "லைப்ரரி' என்று பெயர். "லிபர்' என்ற லத்தீன் சொல்லின் மூலமாகப் பிறந்ததுதான் "லைப்ரரி'. "லிபர்' என்னும் சொல்லுக்கு "நூல்களின் தொகுப்பு' என்று பெயர்.

பேண்ட்:

            முதன்முதலாக ஜப்பான் நாட்டில் "பாண்ட்லூ' (PANTLU)என்ற என்ற சர்க்கஸ் கோமாளிதான் பெரும்பாலோர் இன்று அணிந்து வரும் "PANT' என்று சொல்லக்கூடிய முழுக்கால் சட்டையை அணிந்து வந்தார்கள். அப்போது முதல் முழுக்கால் சட்டைக்கு (PANT) "பாண்ட்' என்ற பெயர் ஏற்பட்டது.

வாட்டிகன்:
             கிறிஸ்துவ மதத் தலைவர் போப்பாண்டவர் வசித்து வரும் நகருக்கு "வாட்டிகன்' என்று பெயர். "வாட்டிகன்' என்றால் ""கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்'' என்று பொருள்.


பாட்மிண்டன்:
                       பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம் ஆண்டுக்கு முன் பூனா (POONA)என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குச் சென்று "பாட்மிண்டன்' என்ற எஸ்டேட் பகுதியில் விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராகவே அமைந்துவிட்டது.

வாலிபால்:
            வாலி (VOLLEY) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாறி, மாறி அடித்தல் என்று பொருளாகும். அந்த அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர்தான் "வாலிபால்' என்பதாகும்.


ரூபாய்:
            "ரூபாய்' என்ற சொல் "ரூப்யம்' என்ற வடமொழிச் சொல்லில் மருவி வந்ததாகும். கௌடில்யர் தன் அர்த்த சாஸ்திரத்தில் ""ரூப்யரூபம்'' என்று வெள்ளி நாணயங்களுக்கும், ""தாமிர ரூபி'' என்று செப்பு நாணயங்களுக்கும் பெயர் வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

டையமண்ட்:
            வைரத்தை ஆங்கிலத்தில் டையமண்ட் (DIAMOND) என்று கூறுவார்கள். இந்தப் பெயர் ""உடைக்க முடியாதது'' என்றும் அர்த்தம் கொண்ட கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது.

நன்றி : வாட்ஸ்அப்

இதையும் படிக்கலாமே ?

 விஜய் ரசிகர்கள் வாழ்க .... 

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

 

Wednesday, March 4, 2015

விஜய் ரசிகர்கள் வாழ்க ....
                         இன்றைய தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் , அடுத்த சூப்பர் ஸ்டார் என தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் இளைய தளபதி "விஜய் " தான். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது அதே சமயம் பல பிரச்சனைக்குள்ளலாகிறது . அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என குழம்பி இருப்பதில் அடுத்த ரஜினி இவர் .

                  இவருக்கு தமிழ் நாட்டில் பல கோடிகணக்கான ரசிகர்கள் இருகின்றனர் . பல்லாயிரகணக்கான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. தனது ரசிகர்களை வெறும் கைதட்டலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் என ஒன்று துவங்கி அதன் மூலம் பல மக்கள் நல திட்டங்களை செய்துவந்தார், வருகிறார் .


          இப்போது தமிழகத்தில்விவசாய மாவட்டமான தஞ்சை டெல்டா பகுதியில் மீதேன் என்னும் அரக்கனை களமிறக்க அரசு முயல்கிறது . இதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் , கடையடைப்புகள் , கவன ஈர்ப்பு என நடத்தி வருகிறது என்பது நமக்கு தெரியும் .

             இந்த மக்களில் வாழ்வாதார போராட்டத்திற்கு இதுவரை எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை , முதன் முதலாக விஜயின் ரசிகர் மன்றத்தினர் இரண்டு தினகளுக்கு முன்பு மீதேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் . போலீசார் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தனர் .

               வெறும் சினிமா ரசிகனாக இல்லாமல் மக்கள் நலனுக்கு தேவையான ஒரு விஷயத்தில் போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை . வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என இனி யாரும் அவர்களை கிண்டல் செய்ய முடியாது . 35  பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இது ஆரம்பம்தான் .


               விஜயின் மற்றரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினால் , அவர்களுடன் அஜித் , ரஜினி, கமல் ,விக்ரம் என அனைத்து ரசிகர்களும் களம் இறங்கி போராடினால் மீதேன் திட்டத்தை ஒரேயடியாக நிறுத்தலாம் . நடக்குமா ?


இதையும் படிக்கலாமே :  

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

Tuesday, March 3, 2015

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்இன்று மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அனைவரும் எபோழுதும் போனும் கையுமாகத்தான் உள்ளனர். போன் வைத்திருப்பதில் மிக பெரிய கஷ்டமே அதுக்கு ரீ சார்ஜ் செய்வதுதான் . இபோழுது நெட், மெசேஜ் , கால் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டது . இந்த நிலையில் இலவசமாக கொஞ்சம் கிடைத்தால் நன்றாக தானே இருக்கும் .இதோ உங்களுக்காக ஒரு தளம் .


நன்மைகள் :

 * மிக எளிதான இதில் இணையலாம் . நீங்களும் இணைய இங்கே கிளிக்கவும் .* சின்ன சின்ன விளையாட்டுகள் , போட்டிகள் , பொது அறிவு தகவல்கள் மூலம் உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிக்கொள்ளலாம் .


* சேர்ந்த உடன் 9000 பாயின்ட் கிடைக்கும் .* நூறு  பாயின்ட் என்பது ஒரு ரூபாய் .

* உங்கள் நண்பர்களை இணைப்பது மூலம் ஒவ்வொரு நபருக்கும் தலா 5 ரூபாய் கிடைக்கும் .


* குறைந்த பட்சம் ஒருவர் இணைந்தால் போதும் நீங்கள் அந்த பணத்தை எடுத்துகொள்ளலாம் .* எல்லா தொலைதொடர்பு நிறுவனத்திலும் ரே சார்ஜ் செய்துகொள்ளலாம் .

* உடனே பணம் ஏறுகிறது .* சில இணையதளங்களில் இணைவதன் மூலம் குறைந்தது 5 ரூபாய் முதல் பெறலாம் .* இலவசமாக sms அனுப்பும் வசதியும் உண்டு .

* ஜோதிடம் பார்க்கும் வசதியும் உண்டு .


இந்த தளத்தில் இணைய |: CLICK HERE TO JOIN