வரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு
தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய
வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .
பெற்றோர்களுக்கு :
- மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .
- இந்த மார்க் வச்சு மாடுதான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .
- தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திபயனில்லை .
- அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .
- எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கிதரேன்னு சொல்லாதிங்க .
- அவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஈன அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .
மாணவர்களுக்கு :
- மதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நேனைத்துகொள்ளுங்கள் .
- எக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...?
- அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .
- நண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்புகள் நெறைந்ததா என பார்த்து சேருங்கள் .
- இதுவரை படித்தது வேறுமாதிரி இனி படிப்பு வேற மாதிரி என்பதை உணர்ந்து படியுங்கள் .
- நல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவி செய்யுங்கள் .
- உங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .
தேர்வு முடிவுகளை பார்க்க :
ANDROID மொபைல்லில் பார்க்க :
SMS மூலம் அறிந்துகொள்ள :
TNBOARD REG.NO , DOB IN DD/MM/YYYY
TO 09282232585
இந்த வசதி 9 தேதி காலை 10 மணிக்குதான்
கிடைக்கும் .
Tweet |
அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தேவையான பதிவு! சிறப்பான அறிவுரைகள்! நன்றி!
ReplyDelete