> என் ராஜபாட்டை : தமிழ் சினிமா

.....

.
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Saturday, June 27, 2015

அதிரடி





                 தமிழ் சினிமாவில் பல காட்சிகள் நம்மை வெகுவாக கவர்ந்து இருக்கும். சிலருக்கு சென்டிமென்ட் காட்சிகள் , சிலருக்கு ரொமான்ஸ் காட்சிகள் , சிலருக்கு நகைசுவை காட்சிகள் என மறக்க முடியாத ரொம்ப பிடித்த காட்சிகள் இருக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்த காட்சிகள் என்று சில காட்சிகள் உள்ளது. அது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான். 

            நான் மிகவும் ரசித்த சில காட்சிகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறேன் . நீங்களும் பார்த்து ரசியுங்கள் ..

1. பாட்ஷா 

                   எப்போது பார்த்தாலும் புதிதாகவே  பார்பதுபோல இருக்கும் அருமையான ஆக்ஷன் காட்சி இது . ரஜினியின் இமேஜை பெருமளவு உயர்த்திய படம்/ காட்சி இது .




2. தீனா 

              தீனா படத்தில் வரும் இந்த காட்சியும் செம ரகளையாக இருக்கும். அஜித்தின் செயலும் , லைலாவின் எக்ஸ்பிரஷனும் செமையாக இருக்கும் .


3. பையா 

               பையா படத்தின் செம ஸ்டைலான , கலக்கலான சண்டை காட்சி இது. பின்னணி இசையும் , கார்த்தியின் ஆவேசமும் அருமையாக இருக்கும்.


4. மங்காத்தா 
          இந்த படத்தில் பல காட்சிகள் செம அசத்தலாக இருக்கும். படத்தின் துவக்கத்தில் வரும் தலையின் அறிமுகம் முதல் படம் பட்டையை கிளப்பும். முக்கியமாக கொஞ்ச நேரமே வரும் இந்த காட்சியில் கைத்தல் காதை பிளக்கும் .


5. ஜில்லா 

          விஜய்யின்  படங்ககளில் ஆரம்ப காட்சி எப்போதுமே கலக்கலாக இருக்கும். ஜில்லாவில் முதல் சண்டைகாட்சியில் அறிமுகம் ஆகும்போது செம ரகளையாக இருக்கும் .


Wednesday, March 4, 2015

விஜய் ரசிகர்கள் வாழ்க ....








                         இன்றைய தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் , அடுத்த சூப்பர் ஸ்டார் என தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் இளைய தளபதி "விஜய் " தான். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது அதே சமயம் பல பிரச்சனைக்குள்ளலாகிறது . அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என குழம்பி இருப்பதில் அடுத்த ரஜினி இவர் .

                  இவருக்கு தமிழ் நாட்டில் பல கோடிகணக்கான ரசிகர்கள் இருகின்றனர் . பல்லாயிரகணக்கான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. தனது ரசிகர்களை வெறும் கைதட்டலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் என ஒன்று துவங்கி அதன் மூலம் பல மக்கள் நல திட்டங்களை செய்துவந்தார், வருகிறார் .


          இப்போது தமிழகத்தில்விவசாய மாவட்டமான தஞ்சை டெல்டா பகுதியில் மீதேன் என்னும் அரக்கனை களமிறக்க அரசு முயல்கிறது . இதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் , கடையடைப்புகள் , கவன ஈர்ப்பு என நடத்தி வருகிறது என்பது நமக்கு தெரியும் .

             இந்த மக்களில் வாழ்வாதார போராட்டத்திற்கு இதுவரை எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை , முதன் முதலாக விஜயின் ரசிகர் மன்றத்தினர் இரண்டு தினகளுக்கு முன்பு மீதேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் . போலீசார் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தனர் .

               வெறும் சினிமா ரசிகனாக இல்லாமல் மக்கள் நலனுக்கு தேவையான ஒரு விஷயத்தில் போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை . வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என இனி யாரும் அவர்களை கிண்டல் செய்ய முடியாது . 35  பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இது ஆரம்பம்தான் .


               விஜயின் மற்றரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினால் , அவர்களுடன் அஜித் , ரஜினி, கமல் ,விக்ரம் என அனைத்து ரசிகர்களும் களம் இறங்கி போராடினால் மீதேன் திட்டத்தை ஒரேயடியாக நிறுத்தலாம் . நடக்குமா ?


இதையும் படிக்கலாமே :  

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

Monday, December 9, 2013

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமா



உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில சினிமா தகவல்கள் உங்களுக்காக . உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க .


அஜித் + சிம்பு

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரியும் . அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் . அஜித்தே சிம்பு நடிக்க வேண்டும் என விரும்பியதாக தகவல் . இது உண்மையா என விரைவில் தெரியும் .

 




விஜய் - ஜில்லா :

விஜயின் அடுத்த அதிரடி ஜில்லா என தெரியும் . துப்பாக்கியில் முஸ்லிம் அமைப்புகளால் வந்த கஷ்டத்தை அடுத்து இந்த படத்தில் ஒரு காட்சியில் முஸ்லிம் இளைனாக நடித்துலாராம் . இதில் அரசியல் வசனம் கிடையாது என்பது தயாரிப்பாளருக்கு ஆறுதல் .



அஜித் vs விஜய்  vs வடிவேலு 

நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு நடிக்கும் படம் தென்னாலி ராமன் . இந்த படத்தை பொங்கல் அன்று வெளியிடலாம் என இருக்கின்றார்கள் . அன்றுதான் விஜயின் ஜில்லா அஜித்தின் வீரம் வருகிறது . இருந்தாலும் பரவாயில்லை என தயாரிப்பாளர் நினைக்கிறார் . என்ன ஆகுதுன்னு பார்ப்போம்



சூர்யா :

சூர்யா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதுதான் இபோதைய ஹாட் நியூஸ் . ஆனால் இந்த பாடல் படத்துக்காக இல்லை ஒரு விளம்பரத்துக்கு பின்னணியில் ஓடக்கூடிய பாடல் . இது யூடுபில் பட்டையை கிளப்புகிறது .


விஜயகாந்த் மகன் :

நடிகரும் கட்சி தலைவருமான விஜயகாந்த் தனது மகனை ஹீரோவாக
கோடம்பாக்கத்தில் களம் இறக்குகிறார் .படத்திற்கு சகாப்தாம்  என பெயர் . பார்ப்போம் சண்முக பாண்டியன் சகாப்தாம் படைப்பாரா என ...









Friday, August 2, 2013

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




நமது மிக பெரிய பொழுது போக்கு சினிமாதான். என்னை போல பல பதிவர்களுக்கு பதிவு எழுத விஷயம் தருவதே சினிமா தான் இன்று நான் பார்க்க போவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சில சம்பவங்களை
 ...
வாங்க பார்க்கலாம் ..

தமிழில் முதல் .பேசும்படம்  : காளிதாஸ்

தமிழில் முதல் சமுக படம் மேனகா

தமிழில் முதல் நகைசுவைபடம் : சபாபதி

தமிழில் முதல் சான்றிதழ் பெற்ற படம் : மர்மயோகி

தமிழில் முதல் வட்டார மொழி படம் : மக்களை பெற்ற மகராசி

தமிழில் முதல் பாடல்கள் இல்லாத படம் : அந்த நாள்

தமிழில் முதல் கலர் படம் : அலிபாபாவும் நாற்பது திருடர்களும்   (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)


ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை : சுகாசினி

செவாலியர் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் : சிவாஜி

தமிழில் முதலில் கதாநாயகன் இல்லாத படம் :
ஒளவையார்


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

இதையும் படிக்கலாமே :


அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...

Wednesday, July 25, 2012

சினிமா ........சினிமா ....


 
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில் நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக மாற்றினார்.

கமல்
இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும் வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்
 
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த
112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

வீர
பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக மேலே .


"முத்த காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு
"முத்தம் கொடுப்பதை காட்டவே கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில் அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த
கேள்வியை கேட்டவர் யார் தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல் நடத்த பட்டுள்ளது.


"ஒரு கைதியின் டைரி " படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க "ஆக்ரி ராஸ்தா" என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் பாக்யராஜ். அப்போது ஒரு காட்சியில், ஒரு முழு நீள வசனத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு அமிதாபிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அதற்க்கு கடும் மறுப்பு தெரிவித்த அமிதாப், ஆங்கிலத்தில் பேசி நடித்தால் ஹிந்தி ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லி விட்டாராம். இதையடுத்து இருவருக்குமிடயே ஒரு நீண்ட விவாதம் நடந்து , இறுதியில் பாக்யராஜ் சொல்படி ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் அமிதாப்.

படம்
வெளியாகி அந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க, அதிகாலை இரண்டு மணிக்கு பாக்யராஜுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் அமிதாப். தன்னுடைய படங்களில் இரண்டு வரி கூட ஆங்கிலம் பேசி இராத அமிதாப், ஒரு நீண்ட காட்சியில் ஆங்கிலம் பேசியது உங்களால் மட்டுமே என்று பாக்யராஜை பாராட்டி இருக்கிறார்கள் ஹிந்தி திரையுலகின் பிரபல வசனகர்த்தாக்கள் சலீம் , ஜாவீத் இருவரும்.

ஒரு
இயக்குனராக தான் நினைப்பதை கொண்டு வர வேண்டும் என்பதில் எத்தனை பிடிவாதம் தனக்கு உண்டு என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ், இந்த சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.


தகவல் உதவி : Facebook Group   

Monday, May 28, 2012

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

பின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் .
படங்களை பார்த்து ஏதாவது ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல ..


தல மன்னிச்சு ..

 அடுத்த ஆஸ்கர் ரெடி 
 இதுக்கு பா .ம .க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?
 அடுத்த CSK தலைதான் 
 ரசிகைகள் முத்தமிட்டதால் வந்த வடு ..
 5 வேடங்களில் ...
 இச கார்ட் விளம்பர துதுவராக ..

 சூர்யாவுக்கு போட்டியாக சிங்கம் 3 இல் ..
 டைடானிக் 7D இல் 
 எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..

டிஸ்கி  : உலகெங்கும் வாழும் கோடிகணக்கான பவர் ஸ்டார் ரசிகர்கள் இதை கோவ படாமல் பார்த்து ரசிக்கும் படி வேண்டுகின்றோம் .


இதையும்  படிக்கலாமே :


நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

துப்பாக்கி Vs பில்லா 2

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்

 

Sunday, April 29, 2012

அஜித் : தல போல வருமா ?




இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

தினமும் காலயில் கடவுளைள வேண்டும் போது  என் ரசிகர்களு க்காகவும் வேண்டிக்கிறன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன் நாளைக்கு இல்லா மல்  போவன் . ஆனா, ஒரூ அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரூ  வேண்டுகோள் .  உங்க தன்மானத்தை  யாரூக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க . உங்க வேலைய 100 சதவிகிதம் ரசிச்சு  செய்யுங்க. நல்லாப் படிங்க . நான் பத்தாவது  வைரக்கும்தான் படிச்சேன் . வாழ்க்கையில்கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்கைளக் கத்துக்கிட்டேன் . ஆனா, படிச்சிரூந்தா இவ்வளவு  அடிபட்டு  வந்திரூக்க வேண்டிய அவசியம் இரூந்திருக்காதே . அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க . மத்தவன் கால மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்ரேன்... வாழு... வாழவிடு ..

இது கடந்த வாரம் விகடனில் வந்த அஜித்தின் பேட்டி. உங்களுக்காக நான் இருக்கின்றேன் , உங்களை கைவிட மாட்டேன் , உங்களுக்காக உயிரையும் குடுப்பேன் என வசனம் பேசும் நடிகர்கள் மத்தியில் யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க என உண்மையை பேசும் தைரியம் ரஜினிக்கு பின் அஜித்துக்கு மட்டும்தான்.

சினிமா மட்டும் இன்றி விளையாட்டுத்துறையிலும் ஆர்வம உள்ளவர் அஜித். இவர் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஹெலிகாப்டர் ஓட்ட உரிமம் வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் இவர்தான். விருது வழங்கும் விழாவுக்கு மட்டும் மனைவிகளை அழைத்து வரும் நடிகர்கள் மத்தியில் , தன மனைவியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்குவிதமாக அவரை பூபந்தாட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.

ஒரு டப்பா படத்தில் நடித்தாலே அது என்னமோ உலக பட ரேஞ்சுக்கு இருக்குனு பில்டப் குடுப்பது நமது பல ஹீரோக்களின் பழக்கம். படம் வந்த அன்றே ஏதாவது டிவி சன்னலில் இப்படி நடிச்சேன் , அப்படி நடிச்சேன் , பயங்கர ஹிட்னு கதைவிட்டு பேட்டி கொடுப்பார்கள் .(ஆனா படம் இரண்டு நாள்ல காணாம போய்டும் ). ஆனால் தன படங்களை மக்கள் மட்டும்தான் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் , நான் எந்த மீடியாவிலும் பேசமாட்டேன் , தன படம் சம்பந்த பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கருத்தில் தீவிரமாக உள்ளவர் தல.

இறுதியாக எந்த நடிகனும் செய்ய துணியாத செயல் , தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது. நீ ரசிகனாக இரு ஆனால் முதலில் உன் குடும்பத்திற்கு நல்ல பிள்ளையாக இரு அதுதான் முக்கியம் என மன்றதை கலைத்த பெருமை தலைக்குதான் உண்டு.



டிஸ்கி : இளையதளபதி ரசிகர்கள் கூட மேலே உள்ள கருத்தை ஒத்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.


இதையும் படிக்கலாமே :

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

 

அஜித் : THE REAL HERO

 

 

Tuesday, April 17, 2012

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்


ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.
ஜினி என்கிற தனி மனிதனிடம் இருக்கும் குணாதிசயங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் வெற்றிச் சூத்திரங்கள். இந்த சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாக்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும்  பொருந்தி வரும். ரஜினியின் குணாதிசயங்களை முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் எப்படி வெற்றிகரமாக லாபம் ஈட்ட முடியும் என்பதை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.
நிதானித்து முடிவெடுங்கள்..!
'கண்ணா நா(ன்) யோசிக்காம எதையும் சொல்றது இல்ல. சொன்ன பின்னால யோசிக்கறதில்ல...’ - ரஜினியின் பாப்புலர் டயலாக் இது. எதைப் பற்றியும் ஆழ்ந்து யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் ரஜினி.
உதாரணத்துக்கு, ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்துவிட்டாலும் சரி, புதிதாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றாலும் சரி, தன்னை அமைதிபடுத்திக் கொள்ள இமயமலைக்குப் போவார். தெளிவான மனநிலையுடன் திரும்புவார். பதற்றமில்லாத,  தெளிவான இந்த மனோபாவம் முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தேவை.
'முதலீட்டை ஆரம்பிக்க  பணம் இருந்தால் போதும்,  மனோபாவம் எதற்கு?’ என்று சிலர் கேட்கலாம். வெற்றிகரமான முதலீட்டிற்குப் பணம் மட்டுமல்ல, அமைதியான, தெளிவான மனநிலையும் அவசியம் வேண்டும். அப்போதுதான் சரியான பங்குகளை தேர்வு செய்து சிறப்பானதொரு முதலீட்டை ஆரம்பிக்க முடியும். பதற்றமான மனநிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாக இருக்காது.  
எளிமை அவசியம்!
KISS  -  Keep It Simple -Silly என ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அதாவது, நம் செய்கைகள் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். ரஜினி படங்களின் கதை அமைப்பைப் பாருங்கள்; எந்த படமும் தலையை பிய்த்துக் கொள்கிற மாதிரி இருக்காது. அவரது படங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினி எளிமைதான். சாதாரண ஜிப்பாதான் போட்டுக் கொள்வார். சாதாரண நோக்கியா போன்தான் அவரிடம் இருக்கும்.  
பங்குகளில் முதலீடு செய்யும் போதும் எளிமையாக, நமக்கு புரியும்படியான பங்குகளில் பணத்தைப் போடுவது நல்லது. அப்போதுதான் அதில் நம்மால் ஈடுபாட்டுடன் செயல்பட்டு அந்த பங்கை கண்காணித்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத நிறுவனங்களில் பணம் போட்டு பின்னர் வருத்தப்படுவதைவிட,  பிஸ்கெட், சர்க்கரை, டீ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இதற்கொரு உதாரணம், ஐ.டி.சி.  
நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!
'எப்ப வருவேன் எப்புடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’. இது படத்திற்காக ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக் அல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் நடைமுறை.  ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி, விழா மேடையாக இருந்தாலும் சரி,  'இத்தனை மணிக்கு நீங்க வந்துடணும்’ என்று சொன்னாலும், 'இத்தனை மணிக்கு வரேன்’ என்று சொன்னாலும், சொன்ன நேரத்தில் சொன்னபடி இருப்பார்.
அதுபோல பங்குச் சந்தையிலும் நாம் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 'டைமிங் தி மார்க்கெட்’ என்பார்கள். அதாவது, சரியான தருணத்தில் நுழைவதும் சரியான நேரத்தில் வெளியேறுவதும் சந்தையில் முக்கியம். நீண்ட நாள் முதலீட்டாளர்களைவிட  டே டிரேடர்களுக்கு இது மிக முக்கியம்.  

காலத்திற்கேற்ற மாற்றம்!

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்!’ - ரஜினியின் இன்னொரு பஞ்ச் டயலாக் இது. இந்த விஷயத்தில் வாரன் பஃபெட்டும் ரஜினியும் ஒரேமாதிரிதான். ஐ.டி. துறை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அதில் முதலீடு செய்யாமலே இருந்தார் வாரன் பஃபெட். பிற்பாடு ஐ.டி. நல்ல வளர்ச்சி கண்டபோது தன் கருத்தை மாற்றிக் கொண்டு முதலீடு செய்தார்.    
இதே கோட்பாட்டை ரஜினி தனது நடிப்பிலும்  பின்பற்றி வருகிறார். அறுபது வயதானபிறகும் காலத்திற் கேற்றார்போல இளமைத் துள்ளலோடு நடிக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணம், எந்திரனில் ரோபோவாக நடித்தது.
இந்த பாலிசியை முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும். சிறிது காலம் டெலிகாம் துறை பங்குகள் நல்ல வருமானம் கொடுக்கும்; அடுத்த சில காலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். காலத்திற்குத் தகுந்தாற்போல நம் முதலீட்டு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் லேட்டஸ்ட்-ஆக இருக்க வேண்டும்.  
என் வழி தனி வழி!
சிஷீஸீtக்ஷீணீக்ஷீவீணீஸீ ணீஜீஜீக்ஷீஷீணீநீலீ என சொல்வார்கள்; சந்தையில் எல்லோரும் செய்வதைப் போலில்லாமல், அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு லாபம் பார்ப்பது ஒரு யுக்தி. சென்ற வருடம் பங்குச் சந்தை சரிந்த சமயம், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டி.சி.எஸ். ஆகிய மூன்று பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. காரணம், டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்தது. ஆனால், இன்று சந்தை  ஏற்றத்தில் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பங்குகள் இறக்கத்தில் இருக்கின்றன. காரணம், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. ஏற்றமோ, இறக்கமோ தெளிவான சிந்தனையுடன் தனித்திருந்து முதலீடு செய்வது  புத்திசாலித்தனம்.
தெரியாததைச் செய்யக்கூடாது!
தெரியாத விஷயம் எதுவாக இருந்தாலும் ரஜினி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் இயக்குநர்களின் நாற்பதாவது ஆண்டு விழா மேடையில் இயக்குநர் பாலசந்தருக்கும், ரஜினிக்கும் இடையேயான உரையாடல். அந்த உரையாடலில் பாலசந்தர், ரஜினியிடம் 'நீ இவ்ளோ பிரமாதமா நடிக்கிறியே, உன்னால ஒரு படத்தை டைரக்ட் பண்ண முடியுமா?’ என்றதற்கு, ''டைரக்ஷன் என்பது எனக்குத் தெரியாத விஷயம். அதனால் நான் அதைச் செய்ய மாட்டேன்'' என்றார்.
இதுபோல, சில பங்குகள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத போது அவற்றில் முதலீடு செய்யக் கூடாது. மற்றவர்கள் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதால் ஆட்டு மந்தை மாதிரி நாமும் ஒரு பங்கை வாங்கி முதலீடு செய்யக்கூடாது.  

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

 

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

 

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?