> என் ராஜபாட்டை : படித்ததில் பிடித்தது

.....

.

Saturday, May 30, 2009

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

எங்கோ... தூரத்தில்

ஒரு சொட்டு மழை வீழ்ந்தவுடன்

பரவி வருகிறதே.. மணம்...

அது போலத்தான் உன் நினைவும்

நினைக்கும்போதே நெஞ்சில் பரவும்

ஆயிரம் பேர் கூடி நின்றாலும்

அரை நொடியில் உனை அறிவேன்

அலுவலகப் பணிமுடிந்து

பின்னிரவில் என் வீடு கடந்துபோகும்

உன் வாகனச் சத்தம்கேட்க...

ராட்சசியாய் விழித்திருப்பேன்

தடதடவென்ற வண்டியின்சத்தத்தோடு

என் இதயமும்போட்டி போடும்,

நீ கடந்து போகும்ஒரு நொடிக்காக..

காத்திருப்பேன்ஒரு நாள் முழுக்க...

இதோ..

உன் வண்டிச் சத்தம்..

அழைப்பு மணியின் அலறல்..

தூக்கக் கலக்கத்தில் சோர்வோடு..

கதவு திறக்கிறேன்..

நாம் காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம்

என் காதல் கணவனே..

நன்றி :எஸ்.விஜயா செல்வராஜ்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...