நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.
எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.
மொள்ளமாரித்தனங்கள்:
1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க
2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க
3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.
4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)
5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா?
நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.
நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். மேலையூர் வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்