இன்று என்னைபோல
, நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக
போடும் சிலர் , அடுத்தவன் சாக கிடந்தாலும் , அல்லது சாவு வீட்டில் இருந்தாலும் அதை
போட்டோ எடுத்துபோடும் சிலர் , கவிதை என்ற பெயரில் கடித்து துப்பும் சிலர் ,
இங்கும் வந்து மத வியாபாரமும் , சாதி மத சண்டையும் போடும் சிலர் .அடுத்தவன் எது
செய்தாலும் அதில் குறை மட்டுமே கண்டுபிடிக்கும் சிலர் , தன கட்சி தனக்கு விஷம்
கொடுத்தால் கூட அதை பெருமையாய் பிரசாரம் பண்ணும் கட்சிகாரர்கள் சிலர் என கலந்து கட்டி
இயங்குகிறது .
இப்போலாம் பலர்
செய்தித்தாள் பார்பதைகூட விடுவிட்டனர் காரணம் முக்கிய செய்திகள் அனைத்தும் சுட சுட
பேச்புகில் வந்துவிடுகிறதே.டிவி , ரேடியோ , செய்தித்தாள் அனைத்தின் வேலையையும்
முகநூலே செய்துவிடுகிறது. கூடவே டீ கடை , மரத்தடி , குழாயடி கூட்டம் போலவும்
செயல்படுகிறது இது .
முகநூலில்
வரும் அனைத்தையும் உண்மை என்று நம்பும் அப்பாவியா நீங்கள் ? இந்த பதிவு
உங்களுக்காகத்தான். இதில் வரும் செய்திகள் எவ்வளவு உண்மையானவை எவ்வளவு
நம்பிக்கையானவை என பார்த்தால் கொஞ்சம் அதிர்சியாகதான் இருக்கும். இதில் 50 % உண்மை
எனில் 50% பொய் கலந்துள்ளது.
சிலவருடங்களுக்கு
முன் ஈழ தமிழ் பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும் போது ஒருத்தன் “அஜித் , அர்ஜுன்
இருவரும் தனி ஈழத்துக்கு ஆதரவில்லை “ என அறிவிப்பு என்று ஒரு செய்தி போட அந்த
இருவரையும் அவர்கள் குடும்பத்தையும் படுகேவலமாக திட்டி தீர்த்தது ஒரு கூட்டம். இது
உண்மையா என கூட ஆராயாமல் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்திருந்தனர். ஆனால் ஈழ தமிழர்க்கு
ஆதரவான போராட்டத்தில் உடைந்த காலுடன் முழுநாளும் உட்கார்ந்திருத்தது அஜித்தான் .
காரைகாலில்
ஆசிட்வீச்சில் வினோதினி என்னும் பெண் பாதிக்கப்பட அவருக்கு நெறைய பேர் உதவி
செய்தார்கள். அந்த பெண்ணுக்கு உதவ என திரட்டபட்ட நிதியில் கூட பிரச்சனை என
படித்தேன். நேற்று ஒருவர் பதில் அந்த பெண்ணுக்கு உதவேண்டும் என கேட்டு வங்கி எண்ணை
கொடுத்துள்ளார். இது உண்மையா அவருக்கு திரட்ட படுகிறதா ,அவருக்கு கொண்டு
சேர்க்கபடுகிறதா என்பதை அறிய வழியில்லை .
மத்திய அரசு
வெளிநாடு வாழ இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்திற்கான சேவை கட்டணத்தில்
ஒரு குறிபிட்ட சதவிதம் உயர்த்தியது (12.5% என நினைகிறேன் ). அதாவது 1,00,000 க்கு
200 ரூபாயாக இருந்த கட்டம் 12.5% உயர்ந்து (200 * 12.5= 25) 225 ஆக மாற்றபட்டது .
ஆனால் ஒரு கூட்டம் இதை சரியாக தெரியாமல் 1,00,000 க்கு 200 ரூபாயில் இருந்து 12500
ரூபாயாக உயர்த்திவிட்டார்கள் என செய்தி பரப்ப மோடியும் , மோடிக்கு ஓட்டுபோட்ட
நம்மையும் பாரபட்சமின்றி திட்ட துவங்கியது ஒரு கூட்டம் . இதை சரியா விசாரிக்காமல் ஷேர் செய்தது ஒரு
கூட்டம் .
முகநூலில்
பெண்கள் தங்கள் முழு படங்களை போடாதீர்கள் என சொன்னால் ஆணாதிக்கவாதி , பெண்களில்
எதிரி என ஒரு கூட்டம் திட்டி தீர்கிறது . ஆனால் அந்த படங்களை தவறாக பயன்படுத்த ஒரு
கூட்டமே இருக்கிறது என தெரிந்தும் அதை ஏற்றுகொள்ள மாறுகிறார்கள். பாதிக்கபட்ட பின்தான்
உணருகிறார்கள். பலரது பேஸ்புக் புரோபைல் போட்டோ பலவருடங்களுக்கு முன் எடுக்க
பட்டதாகவோ அல்லது எதுல கொஞ்சம் அழகா தெரிகிரர்களோ அந்த போட்டோதான் இருக்கும்.
போட்டோவை பார்த்து புரொபைலில் உள்ள விவரத்தை வைத்து ஒருத்தரை நம்புவது வடிகட்டிய
முட்டாள்தனம் . ஆனால் பலர் அப்படிதான் நம்புகிறார்கள். இது கடைசியில் ஸ்க்ரீன்
ஷாட் அல்லது போலிஸ் கேசில் முடிகிறது .
எனவே நண்பர்களே
முகநூலில் நல்ல நண்பர்களை மட்டும் இணைப்போம் , நாம் பகிரும் செய்திகளின்
உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு பின்பு ஷேர் செய்வோம்.
Tweet |
நீங்கள் சொல்வதும் சரி... ஏனென்றால் உங்களுக்கு அதிகம் தெரியும்... நன்றி...
ReplyDeleteஎல்லாமே நம்ம கையிலதான் வாத்தியாரே
ReplyDeleteWell said ! problem in computer thats why....in english ...please excuse ...
ReplyDelete50 என்ன 100 சதவீதம் உண்மையின்றிதான் முகநூல் செயல்படுகிறது...
ReplyDeleteஅரட்டைக்கும் பொழுதுப்போக்குகாக மட்டுமே முகநூல் என்றாகிவிட்டது...
கண்மூடித்தனமாக நம்பாமல் செயல்பட்டால் முகநூலில் இருந்து தப்பித்துவிடலாம் அதே சமயம் நம்பினால் ஏதே ஒருவகையில் ஏமாற்றப்படுவோம்...
Nice Post.. please Follow my blog
ReplyDelete--bharatkumarr.blogspot.in
நல்ல தகவல்!!!
ReplyDeleteபலருக்கும் பாடம் புகட்டும் பதிவு
ReplyDelete