சினிமா ரசிகர்களுக்கு இந்த திபாவளி நல்ல விருந்தாக அமையபோகின்றது. காரணம் விஜய் நடிப்பில் “வேலாயுதம்” மற்றும் சூர்யா நடிக்கும் “ 7 ம் அறிவு” படமும் ஒரே நேரத்தில் வெளிவருகின்றது. இதனால் சிம்புவின் “ஓஸ்தி”, தனுஷின் “மயக்கம் என்ன?” போன்ற சில படங்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டன. இந்த இரண்டு படங்களில் வெற்றி பெற போவது எது என்பதை நாம் அலசுவோம்( ரீன் பவுடர் போட்டு)
வேலாயுதம்
ஆஸ்கார் மூவிஸ் சார்பாக ரவிசந்திரன் தயாரிக்கும் படம் இது. ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் படம். தொடர் தோல்விக்கு பின் விஜய்யும், தில்லாலங்கடி தோல்விக்கு பின் ராஜாவும் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது. மிக பிரமாண்ட பொருள் செலவில் தயாராகும் படம்.
பாடல்கள் அணைத்தும் இப்போதே மிகவும் பிரபலமாகிவிட்டது. படத்தின் டிரைலர் கூட அருமையாக இருப்பது பிளஸ் பாயிண்ட். இந்த படம் விஜய் ரசிகர்களை எமாற்றாது என நம்பலாம்.
7 ஆம் அறிவு
சூர்யா நடித்த படங்களில் மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான். தீனா, ரமனா, கஜினி என்ற பிரமாண்ட வெற்றிக்கு வின் முருகதாஸ் இயக்கும் படம். ரெட்ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிபோய் இருக்கின்றது.
ஹரிஸ்ஜெயராஜ் இசை படத்திர்க்கு மிக பெரிய பலம். படல்கள் இப்போதே பட்டிதொட்டியெல்லால் பட்டையை கிளப்புகிறது. போதிதர்மர் என்பவரை பற்றிய உண்மை கதை என்பதால் இன்னும் எதிபார்ப்பு அதிகமாக உள்ளது.
ஜெயிக்க போவது யார் ?
இந்த படம்தான் ஜெயிக்கும் என சொல்ல நான் ஜோதிடர் அல்ல.(அப்ப எதுக்கு இந்த பதிவுனு கேட்ட்க கூடாது) நம்ம பிளாக் சைட்பாரில் ஒரு POLL Box உள்ளது. எது வெற்றி பெரும் என நீங்கள் நினைக்கின்றிர்களே அதுக்கு ஓட்டு போடுங்கள்.
விஜய், சூர்யா இருவர்க்கும் நமது வாழ்த்துகள்.
Tweet |
நண்பா இது விஜய் மற்றும் சூர்யா மட்டும் சம்மந்த்தப்பட்டது இல்லை, இது ஒரு டீம் வொர்க் என்பது தாங்கள் அறிந்தததே அவர்களை மனதில் கொண்டு இரண்டும் வெற்றி பெற வேண்டும் என்றே பிரார்த்திப்போம்..
ReplyDeleteமாப்ள உங்க பதிவுக்கு நன்றி...தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹி ஹி...
ReplyDeleteஎனக்கு என்னமோ வேலாயுதம் மாஸ் ஹிட் ஆகி தொலஞ்சிடும் போல தெரியுது..
ReplyDeleteஎலாம் அறிவு பாடல்களில் அடி வாங்கியிருக்கு. கதையும் பழைய கதை. பார்ப்போம்.எது வேணும்னாலும் நடக்கலாம் நண்பரே.
என்னமோய்யா விஜயை பார்த்து மக்கள் பேதி ச்சே ச்சீ பீதி ஆகாமல் இருந்தால் சரிதான்....!!!
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநாளை தெரிந்துவிடும்
இரண்டு படங்களுமே வெற்றி பெறும் அதிலும் ஏழாம் அறிவு சூப்பர் ஹிட் ஆகும்..?
ReplyDeleteஇரண்டு படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
பொறுத்திருந்து பார்ப்போம்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி படங்கள் நல்லா வரும்
ReplyDeleteஇரண்டையும் பாப்போம்
பவர் ஸ்டாரின் ஆனந்தத் தொல்லை படமே வெற்றி பெரும் என்பது மாற்றமுடியாத நியதி....!
ReplyDeleteநம்ம டாக்குடறு வேலைக்கு ஆவாரா?
ReplyDelete//தொடர் தோல்விக்கு பின் விஜய்யும், //
ReplyDeleteஅண்ணாச்சி இடையில காவலன் என்று ஒரு படம் வந்ததா ஞாபகம்
இரண்டு படமுமே ஜெயிக்கும்.
ReplyDelete//நம்ம பிளாக் சைட்பாரில் ஒரு POLL Box உள்ளது. ///
ReplyDeleteவேலாயுதம் எகுறுதே
ஏழாம் அறிவு அருமையான கதை.சூர்யாவின் நடிப்பு அசத்தும்.ஆனால் எல்லாருக்கும் பிடிக்குமா என்பதுதான் கேள்வி.விஜய்ன் கூத்தைத்தானே ரசிக்கும் மனநிலையில் இன்றைய இளைஞர் உலகம் !
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDelete7வது அறிவுக்கு சான்ஸ் இருக்கு . ஏன்னா சூர்யா படம் அவ்வளவா ஏமாற்றாது :-)
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கு என்னமோ ரெண்டுமே புஸ் ஆக போற மாதிரி தான் இருக்கு
ReplyDeleteஇன்னும் ஒரு நாள்!
ReplyDeleteநிச்சயமா நல்ல படம்னா அது 7 ஆம் அறிவாத்தான் இருக்கும்.ஆனால் ஜெயிக்கப் போறதென்னவோ வேலாயுதமாத்தான் இருக்கும்.எது ஜெயிச்சா என்ன எது தோத்தாத்தான் என்ன நமக்கென்ன ஆகப்போகுது.பொழுது போகலன்னா ரெண்டையும் பாத்திட்டு போறம்.
ReplyDeleteiniya diwali nalvaalthukal tholargale
ReplyDeleteசித்தாரா மகேஷ் nice said tholare
ReplyDeleteவேலாயுதம் அதிக நாள் ஓடும்... ஏழாம் அறிவு அதிக வசூல் அள்ளும்...
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்....
ReplyDeleteயாருக்கு வெற்றி என்பதில் எதற்கு சந்தேகம்...
வெற்றி சூர்யாவுக்கே.....
அது தான் இல்லையே... F.NIHAZA
ReplyDeleteஎதுக்கும் டெரர்கும்மி கிட்ட டாகூடர் படத்த பத்தி ஒரு நல்ல வார்த்தை சொன்னால் படம் பார்ப்போம் இல்லாட்டி ஊட்லேயெ ஊய்ந்து கடப்போம்
ReplyDeleteஅதாவது டெரர் கும்மி நல்ல வார்த்தை சொன்னாதான் படம் பர்க்கிரது.இல்லாட்டி டீவீல போட்டா கூட ஆஃபிஸ்க்கு போய்டுவோம்
ReplyDelete