> என் ராஜபாட்டை : எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்

.....

.

Friday, October 1, 2010

எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்

நன்றி :
எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்


எந்திரன் படத்தை Houston இல் 20 நிமிடத்திற்கு முன்னால் பார்த்து விட்டு, இதோ இங்கே சுடச் சுட விமர்சனம். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம் இது வரை இந்தியாவில் வந்ததில்லை. டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் திரையிடப் படும் ஆங்கிலப் படங்களையும் சேர்த்து. ரஜினி படங்களை விரும்பாத வேறு மாநில மக்களோடு வாதிடும் பொது, அதிகமாகப் பயன்படுத்தப்படும் closing statement: "உனக்கு மல்லிகை பிடிக்கும். எனக்கு ரோஜா பிடிக்கும். அது அவரவர் இஷ்டம். அது போல் உனக்கு உன் ஊர் நடிகனை பிடிக்கும். எனக்கு ரஜினி ஐ பிடிக்கும்". பூக்களை பிடிக்கும் அனைவருக்கும் 'எந்திரன்'/(ROBOT) பிடிக்கும்.
வசீகரன்(ரஜினி-1) என்கிற விஞ்ஞானி 10 வருட காலமாக அயராது உழைத்து 'ச்சிட்டி'(ரஜினி-2) என்கிற ஒரு ரோபோட் ஐ செதுக்குகிறார்.  அந்த ரோபோட்டை பல திறைமைகளோடு உருவாக்கி நமது நாட்டு ராணுவத்தில் அதனை பயன் படுத்த (பணிபுரிய!) வைப்பதே அவர் லட்சியம். 'சிட்டி'(chitti என்று படிக்கவும்) க்கு பல திறைமைகள் இருந்தாலும், அதற்க்கு உணர்ச்சிகள் இல்லை என்ற காரணத்தினால், அதனை தவறாக பயன்படுத்தி கேடு விளைவிக்க வாய்ப்பு உள்ளதென்று அதற்க்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இந்நிலையில்  வசீகரனுக்கும்,   வசீகரனின் காதலி சானா(ஐஸ்வர்யா) விற்கும் சிட்டி பல சாகசங்கள் புரிகிறான். அதே சமயத்தில் வசீகரனின் professor Bohra (டேனி) எந்திரன் களை (அழிக்கும் சக்தியாக) வடிவமைத்து உருவாக்கும் முயற்ச்சியில் தோற்றுப்போகிறார். சிட்டி க்கு உணர்ச்சிகள் இருந்தால் மட்டுமே மனித குலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நம்பும் வசீகரன், சிட்டி க்கு உணர்ச்சிகளை செலுத்திகிறார். அதனால் ஏற்ப்படும் விளைவுகளும் அதனை வசீகரன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதிப் படம்.
ரஜினி தனது இளமை காலத்தில் இருந்தததை விட, வசீகரனாக வரும் ரஜினி இன்னும் பிரெஷ் ஆக இருக்கிறார். 'காதல் அணுக்கள்' பாடலில் அந்த slow motion இல் கூலேர்சில் சில நொடிகள் நடந்து வரும் ரஜினிக்கும் அவரது ஸ்டைல்க்கும் அரங்கமே அதிர்கிறது. அந்த கிளிப்பிங் மட்டும் youtube இல் சில நாட்களில் பல லட்சம் hits பெரும். வசீகரன் ரஜினி நன்றாகவே நடனம் ஆடுகிறார். இது வரை  வந்த ரஜினி படங்களிலேயே, நடனத்தில் இந்த அளவு வசீகரம் இந்த வசீகனிடம் தான் பார்க்க முடிகிறது.
இடைவேளை வரை வரும் சிட்டி ரஜினி க்கு - சிவாஜியும், அண்ணாமலையும், பாட்சாவும், பில்லாவும், முரட்டு காளையும் இணைந்து வந்தாலும் இணையாகாது. அந்த சிட்டியின் சாகசங்களுக்கு மட்டுமே ரஜினியின் தீவிர ரசிகன் அல்லாதவர்கள் கூட இந்த படத்தை பல முறை பார்க்க கூடும். அந்த சிட்டியின் தோற்றம் அருமை. சிட்டியின் சாகசங்கள் என train இல் நடக்கும் சண்டை காட்சி, பிரசவம் பார்க்கும் காட்சி என பிரமித்து விளக்கினால் படத்தின் ஒவ்வொரு pixel யும் விவரிக்க வேண்டியிருக்கும். 
Second half இல் வரும் காட்சிகளுக்கு ஈடு இணையாக சொல்ல இதுவரை இந்திய சினிமாவில் உதாரங்களே இல்லை. கிராபிக்ஸ் இது வரை பல இந்தியப் படங்களில் பயன் படுத்தப் பட்டிருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல ஒரு குறை இல்லாமல் நேர்த்தியாக  பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வில்லன் கதாப்பாத்திரத்தில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்று ரஜினி மீண்டும் நிருபித்துள்ளார். Second half இல் ரஜினி பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும், அசைவிற்கும் அரங்கத்தில் கைதட்டல் பறக்கிறது. மேற்க்கூறிய அனைத்து விஷயங்களையும் தூக்கி சாப்பிடுகிறது படத்தின் கடைசி 20 நிமிட climax.
ஐஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்று சொல்வதை விட அழகு ஐஸ்வர்யாவாய் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 
சந்தானம், கருணாஸ் பாத்திரங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. கலாபவன் மணி சம்பந்தமான காட்சிகள் அனாவிசயம். அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் பத்து வருட உழைப்பபான ரேபோவை கார்ப்பரேஷன் குப்பையிலா வீசுவார்கள்?! குறைகள் என்று தேடிப்பார்த்தால் இவைகள் தான்
வசனங்கள் ஒவ்வொன்றும் மிக கச்சிதமாகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது. இடை வேளை வரை வரும் ஒவ்வொரு வசனமும் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது. கணினி சம்பந்தமான வசனங்களும், ஆங்கில வசனங்களும் ஆங்காங்கே இருப்பதால் எல்லாராலும் எல்லா வசனங்களும் வரவேர்க்கப்படும் என்பது சந்தேகம்.  இந்த கதைக்கு அப்படிப்பட்ட வசனங்கள் தவிர்க்கப்பட இயலாது. 
ARR இன் பாடல் அனைத்தும் சில வாரங்களாகவே பிரபலம். பாடல்கள் அனைத்தும் நன்றாக காட்சியமைக்கப் பட்டுள்ளன. movie making இன் ஒவ்வொரு department உம் மிக சிறப்பாக வேலை செய்துள்ளார்கள். ஷங்கர் உடைய முந்தய படங்கள் எல்லாம் 'எந்திரன்'இன் ஒத்திகையோ என்று தோன்றும் அளவிற்கு இந்த படம் கற்பனைக்கு மிஞ்சிய திரைக்கதையும், சிறந்த காட்சி அமைப்புகளும் கொண்டுஉள்ளது. இப்படம் வசூலில் மிகச்சிறந்த சாதனை படைக்கும் என்பது எந்த அளவும் ஐயம் இல்லை. இது போன்ற இன்னொரு படம் ஷங்கரிடம் இருந்தோ , ரஜினியிடம் இருந்தோ கூட  வர இனி வாய்ப்பு இல்லை என்று தோன்றும் அளவிற்கு உள்ளது.

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...