“கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த இளம் பெண் சவுமியா வயது 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி ஊயிருக்கு துடித்துகொண்டு இருக்கும் போது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவிந்தசாமி. இவருக்கு இப்போது தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது”
- செய்தி.
எனது கேள்வி
- இவர் தூக்குதண்டனையும் ரத்து செய்ய சொல்லி போராடுவிர்களா?
- வேலைக்கு போன ஒரு பெண்னின் கனவுகளையும், உடலையும் சிதைத்த இந்த காமபேய்க்கு வக்காலத்து வாங்குவிற்களா?
- ஒரு மரணத்திர்க்கு இன்னொறு மரணம் தீர்வாகாது என்றால் இதுக்கு முடிவு என்ன?
- அவன் ஒரு மாற்றுதிரனாளி , இருந்தாலும் அவன் செய்தது கொடுரம் அல்லவா?
- ராஜிவ்காந்தி கொலை வழக்கு என சொல்கின்றிர்கள், ஆனால் அவருடன் இறந்தது பல அப்பாவிகள் அல்லவா? இலங்கையுடன் சம்பந்தம் இல்லாத அவர்களை கொன்றது குற்றமல்லவா?
- 14 வருட சிறைவாசம் தான் ஒரு உயிரின் மதிப்பா?
- பலரை துடிக்க துடிக்க கொன்ற அப்துல் கசாப்பிற்க்கு என்ன தண்டனை கொடுகலாம்?
- எல்லாவற்றிர்க்கும் பயிற்சிபெற்ற தீவிரவாதி சிறையில் மட்டும் திருந்துவார்கள்?
- தவறு செய்பவன் தமிழனாக இருந்தால் என்ன , கடவுளாக இருந்தால் என்ன தவறு தவறுதானே?
- நாம் ஆயிரம் சொல்லலாம் ஆனால் உறவுகளை இழந்த வலி பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே தெரியும்.?
- அரசியல் காரணத்துகாக மூன்று அப்பாவி பெண்களை பேருந்தில் வைத்து உயிருடன் எரித்த கயவர்களும் தமிழ்ர்கள்தான் அவர்களுக்காக ஏன் போராடவில்லை?
- மரணதண்டனை இருக்கும்போதே இவ்வளவு நடக்கின்றதே, இல்லாமல் போனால், எது செய்தாலும் சிறைதான் எதாவது விஷேஷதினத்தில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம் வராதா?
டிஸ்கி : இது என் நீண்ட நாள் கேள்விகள், சரியா? தவறா? என தெரியாது.
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
Tweet |
நியாயமான வினாக்கள் ராஜபாட்டை!
ReplyDeleteநியாயமான கேள்விகள்.
ReplyDeleteதவறு செய்பவன் தமிழனாக இருந்தால் என்ன , கடவுளாக இருந்தால் என்ன தவறு தவறுதானே//
ReplyDeleteதவறுக்கு தான் இந்தியா-ல ஆதரவு ....
என்ன தான் பண்ண ?
வணக்கம் - ராஜா,
ReplyDeleteநிறைய கேள்விகள் - நியாயமான கேள்விகள்...
ஆனால் - சில விடயங்களை ஆய்வதற்கு நாம் எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடிய விஷயங்களில் பதில் சொல்ல முடியாது. கற்பழிப்பு, தீவிரவாதம் என்ற சென்சிடிவ் விஷயம் போல.
..... நான் எழுதுவது பதிவு போல ஆகிவிடக் கூடாது என்பதனால் --- ஒரே ஒரு செய்தி.... இந்த மூன்று பேருடைய வழக்கில் --- நோக்கம் - அவர்கள் நிரபராதிகள் என்பதனால்.... குற்றவாளிகள் இறந்து விட்டார்கள் என்பதனால் நிரபராதிகளை தூக்கில் போடா முடியுமா என்ன? அது இல்லாமால் வழக்கு நடந்ததில் உள்ள குளறுபடிகள்.... மேல்மட்ட அரசியல் வாதிகளின் பங்கு என்று அது இருபது ஆண்டுகால வரலாறு.... அதை மீண்டும் சென்சிடிவ் ஆக்க வேண்டாமே.
... ரொம்ப முக்கியம் .. பயம் என்கிற ஒன்றை வைத்து நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட முடியாது. தண்டனைகள் எதற்காக மற்றவர்களைப் பயமுருத்துவதற்காகவா --- அல்லது நமது சாட்டிச்பாக்ஷனுக்கா ......நேரம் கிடைக்குமெனில் எழுதுகிறேன்.
நியாமான சந்தேகங்கள்தான் சகோ உங்களுடையது.
ReplyDeleteமரண தண்டனை கூடாது எனில் யாருக்கும் கூடாது!
ReplyDeleteமரண தண்டனை என்பது பாகுபாடின்றி முற்றாக இல்லாது ஒழிக்கப்படவேண்டும். மரண்தண்டனை இருப்பதனால் குற்றங்கள் இல்லாதுபோய்விட்டதா என்ன? இந்த உலகின் சமூக மற்றும் அரசியல்கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால்தான் இவ்விதமான குற்றச்செயலக்ள் குறையும்.
ReplyDeleteதேவை சமுதாய மாற்றம் மட்டுமே, தவறுக்கும் தப்புக்கும் வித்தியாசம் உள்ளது தோழர்... அவன் செய்தது தப்பா தவறா என்று சட்டம் முடிவு செய்யாது... தப்பு செய்தவன் எத்தனை பேர் தண்டனை அனுபவிக்கிறான் என்று கூறுங்கள்... தவறு செய்தவன் மட்டுமே தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்... இலங்கை எல்லையில் மீன் பிடிப்பதால் தான் தமிழக மீனவர்களை தாக்குகிறார்கள் இலங்கை ராணுவமும் இலங்கை மீனவர்களும்.. அதற்காக அதை நியாயம் என்று சொல்லி விடுவீர்களா? இல்லையே... முதலில் அவன் தான் குற்றவாளி என்பதை எப்படி முடிவு செய்தார்கள்... பகத் சிங் என்ற அருமையான தலைவனை தூக்கில் போட்டதால் தான் ஒரு நல்ல விடியலை நாம் இழந்து விட்டோம்... நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் தோழர், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் பட்டு விடக் கூடாது என்ற சட்டப் படி குற்றவாளிகள் தப்பித்து செல்ல தூக்கு தண்டனை இல்லாமல் போனால் உதவும் என்றால்... நிரபராதி ஒருவன் கூட உயிரிழக்கவில்லை என்ற சந்தோஷத்துடன் கூறுகிறேன்... மனிதன் உயிரை பறிக்கும் எந்த விதமான ஆயுதமும் இந்த பூமியில் இருந்து நீக்க பாடுபடுவோம்....
ReplyDeleteமேலும் இது குறித்து ஒரு விவாதம் படிக்க http://zhagaram.tumblr.com/
ReplyDeleteகேள்விகள்...கேட்கப்படட்டும்!
ReplyDeleteகேள்விகள் எழுந்தாதான் கலகம் பிறக்கும், கலகம் பிறந்தால் புரட்சி வெடிக்கும், புரட்சி வெடித்தால் நீதி கிடைக்கும்....!!!
ReplyDeleteசொல்வதற்கு ஒன்றுமில்லை
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு ஒரு வழி இருக்கு.. ஒரு நாளைக்கு 100 சவுக்கடி தப்புக்கு தகுந்தபடி 1 மாசமோ 6 மாசமோ தினமும். உயிர் போகாது ஆனா போனா நல்லா இருக்கும்ன்னு தோணும் எப்புடி?
ReplyDeleteமுட்டாள்தனமான ஒப்பீடு. சாதாரண கொலைகளுக்கு யார் எப்போது விடுதலை செய்ய சொல்லி போராடினார்கள்?
ReplyDeleteவிடை இல்லை என்னிடம்!
ReplyDeleteதங்கள் கேள்விகள் (சில) நியாயமானது தான்...
ReplyDeleteஆனால் உங்களிடம் ஒரு கேள்வி.. ஒருவனுக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதால் இப்படியான குற்றங்கள் இல்லாமல் போய்விடுமா?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
எந்த ஒரு குற்றத்துக்குமே கொலை தண்டனை ஆகாது. சாவதை விட வாழ்வதுதான் மிக கொடுமை.
ReplyDeleteஃஃஃஃஃநாம் ஆயிரம் சொல்லலாம் ஆனால் உறவுகளை இழந்த வலி பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே தெரியும்.?ஃஃஃஃ
ReplyDeleteஇதை நான் ஏற்றுக் கொள்கிறேன் சகோ... ஆனால் சோனியா குடும்பம் போல உயிர் எடுத்தால் தான் வலி தீரும் என்றால்.. ராஜீவ் செத்த போது இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டு அசுரவதம் என கொண்டாடியல்லவா இருக்கணும்...
இந்த பதிவு சிந்தனைக்கு...
ReplyDeleteசில நியாயமான கேள்விகள் தான்... ஆனால், பதில் சொல்வார் யாரோ?
ReplyDeleteதண்டனைகள் கடுமையாக்கப்படுவதே குற்றங்களை ஓரளவேனும் குறைப்பதற்கு சிறந்த வழி ... நாம் இதிலும் இனம் , மொழி , மதம் என்றெல்லாம் பாகுபாடு பார்த்தால் நாடு உருப்படாது ...
ReplyDeleteநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!தவறுகள் திருத்தப்படலாம். தெரிந்தே செய்த தப்புகளுக்கு தண்டனை தான். உங்களின் கேள்விக் கணைகளில் அர்த்தம் உள்ளது.
ReplyDeleteகேட்கரதேல்லாம் கேட்டுட்டு , டிஸ்கி வேற?
ReplyDeleteநியாயமான கேள்விகள். அதுவும் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிச்சுட்டான் அதனால் விடுதலை செய்யணும் என்று ஆரம்பித்து பின்னர் அவர்கள் தப்பே செய்யலை என்று அரசியல் கலந்து விட்டார்கள்.
ReplyDeleteதப்பு செய்தவன் எல்லாம் தண்டனை அனுபவிக்கிறானா என்றால் போலீஸ் நீதிமன்றம் எதுவும் வேண்டாம். பேயாட்டம் ஆடுவானுங்க...தமிழர்கள்தானே என்று விட்டுவிட வேண்டியதுதான்.
என்னைப் பொறுத்தவரை யாருக்குமே மரணதண்டனை கூடாது.ஆனால் ஆயுள்தண்டனை கண்டிப்பாக வேண்டும்.
கொலையில் அரசியல் கொலை, தனிநபர் விரோதக் கொலை என்று தரம் பிரிக்கணும் போல இருக்கு.
அப்புறம்...ராஜீவுடன் இறந்தவர்கள் தமிழர்கள் இல்லை. ஜப்பானியர்கள் என்று நிரூபணம் ஆகிவிட்டது நீங்கள் இன்னும் அறியவில்லையா?
பொதுமையில் தங்கள் கேள்வி நியாமாகத்
ReplyDeleteதோன்றினாலும் மரணதண்டனை வேண்டாம்
என்பதே என்கருத்து!
புலவர் சா இராமாநுசம்
// 12. மரணதண்டனை இருக்கும்போதே இவ்வளவு நடக்கின்றதே, இல்லாமல் போனால், எது செய்தாலும் சிறைதான் எதாவது விஷேஷதினத்தில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம் வராதா?//
ReplyDeleteஇந்த ஒரு கேள்வி.. 10000000000000000000000000000000.............. கேள்விகளுக்கு சமானம்.
//எது செய்தாலும் சிறைதான் எதாவது விஷேஷதினத்தில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம் வராதா?//
ReplyDeleteமதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்ஸிலர் லீலாவது தி.மு.கவினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குதண்டனை இல்லை. ஆயுள்தண்டனைதான். தானைத் தலைவர், தன்மானச்சிங்கம் அய்யா கலைஞர், அண்ணா பிறந்தநாள் என்று சொல்லி தண்டனையை குறைத்து விடுதலை செய்துவிட்டார்...ஒண்ணும் பண்ண முடியலை...யாராக இருந்தாலும் மரணதண்டனை வேண்டாம்...ஆனால் கடுமையான ஆயுள் தண்டனை வேணும். (இதுல...கோழிக்கறி வேற...)
நீங்கள் கேட்ட கேள்வி சரிதான், ஒப்பீடுதான் சரியில்லை.
ReplyDelete1. கேரள சம்பவம், மற்றும் அப்துல் கசாப் சம்பவம் இரண்டுமே நேரடிக் குற்றவாளிகள்.
2. ராஜிவ் கொலையாளி எனக்கருதப்படும் மூவர் நிலை அப்படி இல்லை. இவர்களும் ஒரு விதத்தில் தொடர்புடையவராக ஊடகத்தின் வாயிலாகவும், அரசியில் காரணங்களுக்காகவும் வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த எதிர்தரப்பு வாதங்களில் பல கேள்விகளுக்கு அரசிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை அப்படி இருக்கையில் ஒருதரப்பு வாதங்களை வைத்து தீர்ப்பு எழுதுவது எந்தவிததில் நியாயம்.
நீங்கள் ஒரு பதிவை போடுவதற்கு முன் அவ்வழக்கை நன்கு தெரிந்து விட்டு போடவும். கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காக கேட்கவேண்டாம்.
*இப்பொழுது வாச்சாத்தி வழக்கும் ஊடகத்தினால் வழங்கப்பட்ட அநீதி என்றுதான் என்னப்படுகிறது.
நீங்களாவது எனக்குத் தெரியவில்லை என்று கேள்விகளை பதிவாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணியத்தோடு. ஆனால் தினமலர் எழுதிய விதம் தான் படு மோசம்.
ReplyDeleteராஜிவ்காந்தி கொலை வழக்கு என சொல்கின்றிர்கள், ஆனால் அவருடன் இறந்தது பல அப்பாவிகள் அல்லவா? இலங்கையுடன் சம்பந்தம் இல்லாத அவர்களை கொன்றது குற்றமல்லவா?
ReplyDeleteநல்ல கேள்விதான் ராஜபாட்டை சும்மா ஒரு கேள்வியை கேட்டு விட்டால் மட்டும் போதாது. எதற்கு பின்விளைவு எது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி அமைதி படை என்கிற பயங்கரவாத படை நடத்தி அங்கு அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தார்களே, ஈழத்து தமிழ் பெண்களின் கர்ப்பை சூறையாடினார்களே இந்திய ஹிந்தி கயமை ராணுவம், உங்கள் பயங்கரவாத படை செய்த அட்டூழியங்களுக்கு அதை செய்த ஒரு ராணுவ வீரனுக்காவது தூக்கு கொடுக்கப்பட்டதா? சரி இதை எல்லாம் செய்ய இந்த ராஜிவ்தானே காரணம் அவருக்கு யார் தண்டனை கொடுப்பார்கள் உங்களால் வாங்கி கொடுக்க முடியுமா? அவர் பல்லாயிரம் உயிர்களை எடுத்தார் அதற்க்கு நீதி கிடைக்க வில்லை சிலவருடங்கள் கழித்து கொன்றவர்களை கொள்பவர்கள் எங்களுக்கு மாகாத்மா என்று அந்த கொலைக்கு ஒருசிலர் பலி வாங்கினார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது வரம்பு மீறி பல மக்களை கொன்று குவிக்கும் பொது இப்படித்தான் நடக்கும் என்று. ஈழத்து பெண்களை கற்பழித்து கொன்ற இந்திய கயமை ரானுவத்து வீரனுக்கு தூக்கு கொடுங்கள் அப்படி தூக்கு கொடுக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் கொடுங்கள் சரியா?
14 வருட சிறைவாசம் தான் ஒரு உயிரின் மதிப்பா?
இல்லைதான் அதே நேரம் பல்லாயிரக்கணக்கில் உயிர்களை கொன்றவர்களை வெளியே வைத்து விட்டு ராஜீவ் கொலையில் நேரடி சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் அப்படி இருக்க டீபாய் அளவுக்கு கூட அதில் சம்மந்தம் இல்லாதவர்களை தண்டித்தே ஆகவேண்டும் என்ற பெயரில் வேண்டும் என்றே இதனை வருடம் சிறையில் வைத்திருப்பது நியாயமா? உங்கள் வாதப்படியே வைத்தாலும் டீபாய் அளவுக்கு வேலை பார்த்தவர்களுக்கு இருபது வருடம் சிறை போதுமானது தானே. நியாயத்தை சொல்லுங்கள்.
7 .பலரை துடிக்க துடிக்க கொன்ற அப்துல் கசாப்பிற்க்கு என்ன தண்டனை கொடுகலாம்?
என்ன கசாபோடு நிருத்திடீன்கள் கசாபுக்கு தூக்கு கொடுங்கள் ஆனால் ரத யாத்திரை என்கிற பெயரில் றேத்த யாத்திரை நடத்தி பல்லாயிரக்கணக்கில் உயிர்களை கொன்று குவித்தானே அதவானி இவனுக்கு என்ன தண்டனை? பாகல்பூர், மீரட், பீவாண்டி, நெல்லி கலவரங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்த ஹிந்துத்துவா பயங்கரவாதி ஒருத்தனுக்காவது தூக்கு உண்டா?
இப்போது மலோகேன் குண்டுவெடிப்பு முதல் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வரை உள்ளே இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு யார் தூக்கு கொடுப்பார்கள். நடக்காது சாரே நீதி ஒரு பக்கம். அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்படித்தான் செய்வார்கள் அதை கண்டு புலம்பும் நீங்கள் அந்த பாதிப்புகளை நடத்தியவர்கள் யார்? எதன் காரணமாக் எது நடந்தது என்று பாருங்கள் நீங்கள் வெறும் பின்விளைவை மட்டும் வைத்து பேசுகிறீர்கள். இது நடக்க காரணமான முன் விளைவுகளை பற்றியும் பேசுங்கள் சும்மா கேள்வி கேட்டு விட்டு போவது எளிது.
2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இவரின் உண்ணா விரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வதுஆண்டு ஆகிறது என்னையா கிளிச்சீங்கள் இந்த பயங்கரவாத ராணுவத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ஏன் சுட்டார்கள்?பேருந்து நிலையத்திலே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கர்ப்பிணி பெண்ணுக்கும் கிராம மக்களும் வித்தியாசம் தெரியாத ஒரு ராணுவத்தை பார்த்து என்ன சொல்வீர்கள்?
சத்தீஷ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களை கொன்று குவிக்கும் ராணுவத்தை என்ன சொல்வீர்கள், வீரப்பனை பிடி என்றால் மலையோர கிராமத்து பெண்களை கற்பழித்து சூறையாடிய கொன்றார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை. நீதி செத்த நாட்டில், நேர்மை செத்த நாட்டில் பாதிக்கப்பட்டவன் நீதியை தன் கையில் எடுப்பான் அதுவே அங்கு அடைக்கிறது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கு என சொல்கின்றிர்கள், ஆனால் அவருடன் இறந்தது பல அப்பாவிகள் அல்லவா? இலங்கையுடன் சம்பந்தம் இல்லாத அவர்களை கொன்றது குற்றமல்லவா?
ReplyDeleteநல்ல கேள்விதான் ராஜபாட்டை சும்மா ஒரு கேள்வியை கேட்டு விட்டால் மட்டும் போதாது. எதற்கு பின்விளைவு எது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி அமைதி படை என்கிற பயங்கரவாத படை நடத்தி அங்கு அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தார்களே, ஈழத்து தமிழ் பெண்களின் கர்ப்பை சூறையாடினார்களே இந்திய ஹிந்தி கயமை ராணுவம், உங்கள் பயங்கரவாத படை செய்த அட்டூழியங்களுக்கு அதை செய்த ஒரு ராணுவ வீரனுக்காவது தூக்கு கொடுக்கப்பட்டதா? சரி இதை எல்லாம் செய்ய இந்த ராஜிவ்தானே காரணம் அவருக்கு யார் தண்டனை கொடுப்பார்கள் உங்களால் வாங்கி கொடுக்க முடியுமா? அவர் பல்லாயிரம் உயிர்களை எடுத்தார் அதற்க்கு நீதி கிடைக்க வில்லை சிலவருடங்கள் கழித்து கொன்றவர்களை கொள்பவர்கள் எங்களுக்கு மாகாத்மா என்று அந்த கொலைக்கு ஒருசிலர் பலி வாங்கினார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது வரம்பு மீறி பல மக்களை கொன்று குவிக்கும் பொது இப்படித்தான் நடக்கும் என்று. ஈழத்து பெண்களை கற்பழித்து கொன்ற இந்திய கயமை ரானுவத்து வீரனுக்கு தூக்கு கொடுங்கள் அப்படி தூக்கு கொடுக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் கொடுங்கள் சரியா?
14 வருட சிறைவாசம் தான் ஒரு உயிரின் மதிப்பா?
இல்லைதான் அதே நேரம் பல்லாயிரக்கணக்கில் உயிர்களை கொன்றவர்களை வெளியே வைத்து விட்டு ராஜீவ் கொலையில் நேரடி சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் அப்படி இருக்க டீபாய் அளவுக்கு கூட அதில் சம்மந்தம் இல்லாதவர்களை தண்டித்தே ஆகவேண்டும் என்ற பெயரில் வேண்டும் என்றே இதனை வருடம் சிறையில் வைத்திருப்பது நியாயமா? உங்கள் வாதப்படியே வைத்தாலும் டீபாய் அளவுக்கு வேலை பார்த்தவர்களுக்கு இருபது வருடம் சிறை போதுமானது தானே. நியாயத்தை சொல்லுங்கள்.
7 .பலரை துடிக்க துடிக்க கொன்ற அப்துல் கசாப்பிற்க்கு என்ன தண்டனை கொடுகலாம்?
என்ன கசாபோடு நிருத்திடீன்கள் கசாபுக்கு தூக்கு கொடுங்கள் ஆனால் ரத யாத்திரை என்கிற பெயரில் றேத்த யாத்திரை நடத்தி பல்லாயிரக்கணக்கில் உயிர்களை கொன்று குவித்தானே அதவானி இவனுக்கு என்ன தண்டனை? பாகல்பூர், மீரட், பீவாண்டி, நெல்லி கலவரங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்த ஹிந்துத்துவா பயங்கரவாதி ஒருத்தனுக்காவது தூக்கு உண்டா?
இப்போது மலோகேன் குண்டுவெடிப்பு முதல் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வரை உள்ளே இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு யார் தூக்கு கொடுப்பார்கள். நடக்காது சாரே நீதி ஒரு பக்கம். அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்படித்தான் செய்வார்கள் அதை கண்டு புலம்பும் நீங்கள் அந்த பாதிப்புகளை நடத்தியவர்கள் யார்? எதன் காரணமாக் எது நடந்தது என்று பாருங்கள் நீங்கள் வெறும் பின்விளைவை மட்டும் வைத்து பேசுகிறீர்கள். இது நடக்க காரணமான முன் விளைவுகளை பற்றியும் பேசுங்கள் சும்மா கேள்வி கேட்டு விட்டு போவது எளிது.
2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இவரின் உண்ணா விரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வதுஆண்டு ஆகிறது என்னையா கிளிச்சீங்கள் இந்த பயங்கரவாத ராணுவத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ஏன் சுட்டார்கள்?பேருந்து நிலையத்திலே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கர்ப்பிணி பெண்ணுக்கும் கிராம மக்களும் வித்தியாசம் தெரியாத ஒரு ராணுவத்தை பார்த்து என்ன சொல்வீர்கள்?
சத்தீஷ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களை கொன்று குவிக்கும் ராணுவத்தை என்ன சொல்வீர்கள், வீரப்பனை பிடி என்றால் மலையோர கிராமத்து பெண்களை கற்பழித்து சூறையாடிய கொன்றார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை. நீதி செத்த நாட்டில், நேர்மை செத்த நாட்டில் பாதிக்கப்பட்டவன் நீதியை தன் கையில் எடுப்பான் அதுவே அங்கு நடக்கிறது
இந்தியாவில் நீதி துறை, காவல்துறை எல்லாம் ஒரு சார்பாக நடப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காததால் அவர்கள் சட்டத்தை தங்கள் கைகளை எடுக்கிறார்கள். இந்த கேள்விகள் அனைத்தும் அதிகார வார்கங்களை நோக்கி கேட்கப்பட வேண்டியதே. குற்றம் செய்தது யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அதே நேரம் குற்றத்துக்கு தகுந்த தண்டனை இல்லாமல் இருப்பது தவறே ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லோரும் இப்போது உயிரோடு இல்லை அதற்காக உயிரோடு இருப்பவர்கள் சிலரை பிடித்து தூக்கு கொடுத்து அதற்க்கு பழி வாங்குகிறேன் பேர்வழி என்று சொல்வது முறையில்லை. அதே நேரம் தூக்கிலிடப்பட வேண்டிய கொலை குற்றவாளிகள் எல்லாம் வெளியே உலாவுகிறார்கள். மும்பை பால் தாக்ரேயை எடுத்துக்கொள்ளுங்கள் எதனை கொலைகளை பண்ணி இருப்பான் அவன் அவன் மீது ஒரு நடவடிக்கை உண்டா? கன்னட வெறியரால் எத்தனை தமிழர்களை போட்டு தள்ளினார்கள் அவர்களுக்கு தூக்கு உண்டா? முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இந்தியாதான் ஆயுதம் கொடுத்து உதவியது அவர்களை தண்டிப்பது யார்? இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்.
ReplyDelete//சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.// நன்றி வினவு.
ReplyDeleteசங்கராமனை போட்டு தள்ளிய காஞ்சி சங்கராச்சாரிக்கு என்ன தண்டனை.
சட்டம் தன் கடமையை செய்யும் வரிகளில் மட்டும் தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லை.
ReplyDeleteதமிழக மீனவர்கள் பிரச்னைக்கு வருவோம். சமீபத்தில் இந்திய கடல்படை கமாண்டர் தமிழக மீனவர்களை கடுமையாக் எச்சரித்தார் எல்லை தாண்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.
தமிழகத்தின் வளம் வாய்ந்த கட்ச தீவை சிங்கள பயங்கரவாத அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு தமிழக மீனவர்களை மிரட்டும் மானம் கெட்டவர்களே.
மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே( இந்திய கடல்படை) இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.
இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.
சட்டம் தன் கடமையை செய்யும் வரிகளில் மட்டும் தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லை. தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு வருவோம். சமீபத்தில் இந்திய கடல்படை கமாண்டர் தமிழக மீனவர்களை கடுமையாக் எச்சரித்தார் எல்லை தாண்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என்று.
ReplyDeleteதமிழகத்தின் வளம் வாய்ந்த கட்ச தீவை சிங்கள பயங்கரவாத அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு தமிழக மீனவர்களை மிரட்டும் மானம் கெட்டவர்களே.
மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே( இந்திய கடல்படை) இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.
இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.
oru samudayam padukappaga iruppadarkkagaththan arasan matrum padaigalai annalil aerpaduthinargal. makkalai kappadu arasanin kadamai. inru ulla arasiyalil makkalal thervu seyyappattaavargal atchi seygirargal. avargalal vazhi nadathappadum padayinaro alladhu kaval padayainaro manidhargalai kolvadu makkal padukappukkaga enil adhu kolayagadu. kalaieduppu.
ReplyDeleteanaal adhigarathai thavaraga payanpaduthinal adharku avargalukku dhandanai kidikkavendum. adharkkaga padaigalo kaval thuraiyo vendam enru solvadhu niyayam agadhu.
ivvalavu sattangal irukkumpode ivvalavu thavarugal nadakkiradenral sattam kaumayaga illavittal makkal oruvarai oruvar azhiththuviduvargal. makkalin kavalrgal thavaru seiyamal irukka avargalukkum kadumayana vazhigattu nerigalum avatrai meerumpodu kadum dhandanaiyum irukkumaru seyya vendum. nalla manidargalai uruvakkum paniyil irukkum aasiriyargalum kalvithittamum idhi gavanam seluthinal nallavargal uruvaagavum samudayathil ulla prachinaigalum kurayum
ReplyDeleteஒரு சமுதாயம் பாதுகாப்பாக இருக்கவே அரசன் மற்றும் படைகளை அந்நாளில் உருவாக்கி வைத்தார்கள். நமது அர்த்த சாஸ்திர நூலில் சாணக்கியர் ஒரு அரசன் குற்றவாளிகளை கொல்வது குற்றமாகாது என்றும் அது நல்வயலில் களை எடுப்பதற்கு சமம் என்றும் கூறுகிறார்.
ReplyDeleteஅனால் இன்றைய நிலையில் மக்களை ஆள்வோர் மற்றும் அவரது படையினர் தவறு செயும்போது அவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை நாம் செய்ய வேண்டும். அதை விடுத்து கொலை தண்டனை தேவையில்லை என்று சொல்வது ஏற்புடமை ஆகாது. அதுவும் படையினர் தம் உயிரை பணயம் வைத்தும் பல வீரர்களை பலி கொடுத்தும் பிடித்துவரும் ஒரு தீவிரவாதி அல்லது கொலைகாரனை அரசு கொலை செய்யக்கூடாது என்று சொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை. அத்தகைய தீவிரவாதிகளால் கொலையுண்ட அரசுப்படையினர் உயிர் மலிவானத அல்லது அவர்களை நம்பி குடும்பம் இல்லையா அல்லது அவர்கள் வாழ மனித உரிமை அற்றவர்களா?தீவிரவாதிகள் மனிதர்களே இல்லை. அவர்களை வேட்டையாடுவது தவறே இல்லை. அவர்கள் உருவாவது எப்படி என்று சிந்தித்து அதை தடுப்பதும் அரசின் கடமைதான் அதே சமயம் உருவான மிருகங்களை உலவவிட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது சரியல்ல. தனி மனித உரிமை என்ற பெயரில் சமுதாயத்தில் குற்றம் பெருகவும் அமைதி அழியவும் செய்ய ஒரு அரசு தேவையில்லை
நமக்குள் அத்துமீறும் கேள்விகளே இவைகள்..
ReplyDeleteகேட்கப்படும் முக்கிய நோக்கம் ஒரு உயிரின் விலை..
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்...
mmm,en manasula iruntha romba naal sandhegathathan neenga kelviyah ketrukinga.... mathavangalaam onnu sollumbothu naan matum yen ethirkanum nu ithelam pathi pesarthu ial... sila peru ithulah thapu koraiyuthaah nu ketrukaanga,apadi paartha aayul thandanai,fine uh,ithanavarusham sirai thandanai nu sentence panravanga ellam thirunthidraangalah? ila thapu than koraiyuthaah... mhmm nallavan nu 4 peru irunthaa,kettavan nu 10 peru irukaan,antha nallavan um ketta vazhilah polam nu encourage panrathu than intha thandanai koraippu.... athae nallavanah ketta vazhilah ponah ipadi patta thandanah kidaikum nu bayam iruntha antha thappah seivaanah.... raja sir potatha oru news ah padikaamah,unga veetla thangachikoh,akkako ipadi nadanthurunthaa sattapadi ena thandanah vangi kodukaa nenaipingaloh athuthan crct aahna thandanah....
ReplyDeleteநாம் ஆயிரம் சொல்லலாம் ஆனால் உறவுகளை இழந்த வலி பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே தெரியும். By A.S. Mohamed Ali
ReplyDeleteகவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.
ReplyDeleteசமுகத்தில்(உலகத்தில்) ஒருவரை ,நியாயமாகவோ ,அநியாயமாகவோ
ReplyDeleteகொலை செய்வதே மகா தவறு
அவர் யாராக இருந்தாலும் ,எந்த மதமாக இருந்தாலும் சரியே
கொலைக்கு கொலைதான் சரியான தீர்வு
பாதிக்கப்பட்டவர்கள் நாமாக இருந்தால் குற்றவாளிகளை
தண்டனையில் இருந்து தப்பிக்க விடுவோமா ?? மாட்டோம்
ஒரு உயிரை நம்மால் படைக்கமுடியுமா ?? முடியாது
அதே போன்று ஒரு உயிரை எடுக்ககுடாது