> என் ராஜபாட்டை : சூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன ?

.....

.

Friday, July 12, 2013

சூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன ?முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் - தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும், இருவருக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட்டது கிடையாது.

இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

சூர்யா - கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா 'ஸ்டுடியோ க்ரீன்' என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே நேரடியாகத் தயாரிக்கிறது. மற்ற படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.

அண்ணன் - தம்பியாக இருந்தாலும், சூர்யாவைவிட கார்த்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஞானவேல்ராஜா. குறிப்பாக, சூர்யாவைத் தேடி வரும் வாய்ப்புகளை கார்த்திற்கு மாற்றி விடுகிறார்களாம்.

வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.

'சிங்கம்-2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோவதைக் கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.

வாய்ப்புகள் பறிபோனாலும் பரவாயில்லை, திறமையான சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம்வெதும்பிப் புலம்புகிறாராம் சூர்யா.

இதை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று கருதித்தான், சொந்தமாகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா. D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.

சினிமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த கையோடு, தான் நடித்த 'சிங்கம்-2' படத்தை பெரும்பாலான இடங்களில் சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறார் சூர்யா.

தற்போது 'சிங்கம்-2' படத்திற்கு செய்த விளம்பரத்தைப் பார்த்து, தான் நடிக்கும் 'பிரியாணி' படத்துக்கும் அதுபோலவே பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் கார்த்தி.


நன்றி : விகடன் 

6 comments:

 1. சிங்கம் vs சிறுத்தை பப்ளிசிட்டி ஆரம்பம்...

  ReplyDelete
 2. ஆட்டம் ஆரம்பமாகிடுச்சோ!!

  ReplyDelete
 3. நடக்கட்டும் நடக்கட்டும்!

  ReplyDelete
 4. இதெல்லாம் சகஜமப்பா

  ReplyDelete
 5. மீடியாக்கள் ஊதி பெரிசாக்கி விடுமே!

  ReplyDelete
 6. எப்படியோ விளம்பரம் இலவசம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...