> என் ராஜபாட்டை : விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?

.....

.

Wednesday, July 17, 2013

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?

தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களையும் , அதிக எதிர்பார்ப்பையும் , அதிக வசூலையும் கொண்ட நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான் . விஜயின் கடந்த படம் துப்பாக்கி 100 கோடியை தாண்டி வசூல் செய்தததாக சொல்கின்றனர் . இந்நிலையில் அவரின் அடுத்த படம் தலைவா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது .

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படபிடிப்பு முடிந்து சென்சார் சென்ற படத்தை பார்த்த குழுவினர் , படம் அருமையாக உள்ளது என்றும் , இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் சொல்லி " யூ " சான்றிதழ் வழங்கி உள்ளனர் . இதனால் பட குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் .


குறிப்பு : படம் ஆகஸ்டு 15  அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது .


இதையும் படிக்கலாமே :


7 comments:

 1. அன்பின் ராஜா - விஜயின் தலைவா ஆக்ஸ்ட் 15 வெளி வருவது குறித்தும் வெற்றிகரமாக ஓடும் என்பதும் சென்ஸார் சர்டிஃபிகேட் " U " சான்றிதழ் வழங்கியது குறித்தும் பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

 2. ஒரு யூ சான்றிதழ் கொடுத்ததற்கு இம்புட்டு டெர்ர....ர்ரான தலைப்பாண்ணே...

  தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 3. பதிவின் தலைப்பே தப்புங்க ராஜா!! விஜய் படத்தை பார்க்கலாமான்னுதான் தலைப்பு வச்சிருக்கனும்!!

  ReplyDelete
 4. தலைப்பிற்கு அணுக வேண்டியது உங்களிடம் தான்... ஹா.. ஹா...

  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. நான் கூட என்னமோன்னு நெனச்சேன் போங்க

  ReplyDelete
 6. சரியான தேதியை சொன்னமைக்கு நன்றி அப்போதான் படம் வெளிவரும் அன்று காட்டுக்குள் ஓடிப்போயி ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...