> என் ராஜபாட்டை : Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

.....

.

Monday, July 22, 2013

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...


 1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .


 1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .


 1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .

 1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .

 1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும் கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .

 1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .

 1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .

மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

 1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .

 1. உங்கள் கணக்கில் Mobile Notification option Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

 1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .

 1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .


ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

11 comments:

 1. பயனள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே !!

  ReplyDelete
 2. தேவையான நேரத்தில் தேவையான பதிவு.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 3. அதானே பார்த்தேன் எப்பவோ படிச்சாப்புல இருக்கேன்னு, மீள்பதிவு...!

  பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியது இது.

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள பதிவு

  ReplyDelete
 5. நல்ல பதிவு, நல்ல அலசல். நல்ல காரியம்... நன்றி...

  ReplyDelete
 6. நல்ல யோசனைக்கு நன்றி.

  ReplyDelete
 7. நன்றி நல்ல தகவல்

  ReplyDelete
 8. நன்றி நல்ல தகவல்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...