ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .
கதை :
ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .
+ பாயின்ட் :
தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும் தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .
கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .
இருவரின் காதல் எபிசொட் .
A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .
பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .
பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .
ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .
- பாயின்ட் :
ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .
இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)
ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .
மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .
தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .
திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?
படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .
ஆனந்த விகடன் மார்க் : 42
குமுதம் : பார்க்கலாம்
ராஜபாட்டை மார்க் : 5/10
குறிப்பு : சிங்கம் 2 நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .
Tweet |
school poliyaa ?
ReplyDeleteகட் அடிச்சிட்டு விமர்சனமா?
ReplyDeleteமுதல் ஷோ...?
ReplyDelete
ReplyDeleteதிரைகதை மட்டும் கொஞ்சம் மெதுவாக நகரும், மற்றபடி நான் வெகுவாய் ரசித்துப் பார்த்த படம்
//ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல //
ReplyDeleteபாஸ்.. படம் பார்க்கும் போது பாப்கார்ன் சாப்பிடாதீங்கன்னு சொன்னா கேட்டா தானே.. இப்போ பாருங்க முக்கியமான ஒரு காட்சிய மிஸ் பண்ணிட்டீங்க. தனுஷ் தண்ணி அடிச்சுட்டு இமான் கிட்டயும், அப்புக்குட்டி கிட்டயும் சொல்வரே.. எனக்கும் பனியை பிடிக்கும்.. ஆனா அவிங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் வாய்க்கா சண்டைன்னு..
oorukkula ethukkum bayapadama irukkara dhanush anga antha theeviravathi hindi kaarana sutta udane en apdi payaparan
ReplyDelete