> என் ராஜபாட்டை : சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

.....

.

Saturday, July 6, 2013

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி




கடந்தமுறை ஜெ. முதல்வராக இருந்த போதே அரசு கேபிள் கொண்டு வந்து மூலைமுடுக்கேல்லாம் அரசு கேபிள் வர முயர்சி செய்தார், ஆனால் முடியவில்லை. பின் வந்த கருணாநிதி அந்த திட்டதையே முடக்கிவைத்தார்.

2011 தேர்தலில் ஜெ. அமோக வெற்றி வெற்று ஆட்சி அமைத்ததும் அந்த திட்டத்திற்க்கு உயிர் குடுத்தார். அரசு கேபிள் நன்றாக செயல்பட துவங்கியது. தமிழ் நாடு முழுவதும் ஓளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது, மக்களும் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

ஆனால் அரசு கேபிளில் சன் நெட் ஓர்க் சேனல்கள் தெரியாது போனதால் மக்களிடம் பெரிய அதிர்ச்சி எற்ப்பட்டது. தமிழகத்தில் அசைக்க முடியாத வளர்ச்சி பெற்று உள்ளது சன் டி.வி. குடும்ப பெண்களின் முக்கிய பொழுதுபோக்கே சன் டி.வி சீரியல்கள் என்றால் அது மிகையல்ல.

சன் டி.வி இல்லாதது அரசு கேபிள்க்கு பெரிய அடியாக இருகின்றது. அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் மற்ற கட்டண சேனல்களான STAR SPORTS, TEN SOPRTS, SONY, DISCOVERY, ANIMAL PLANET, SONY MAX, AXN, HBO, ESPN போன்ற முன்னனி நிருவனங்கள் தங்கள் சேனலை ஒளிப்பரப்ப அனுமதி தந்தன. ஆனால் சன் டி.வி பிடிவாதமாக மறுத்து வருகின்றது.

சன் டி.விக்கு செக் வைக்கும் விதமாக அதை அரசுடமை ஆக்கிவிடலாம் என ஜெ . எண்னுகின்றார். அப்ப்டி செய்யும் பட்சத்தில் சன் டி.வியை அடக்கி வைத்த மாதிரியும் இருக்கும், அரசு கேபிள்லும் நன்றாக வரும் என எண்ணுகின்றார். அப்படி செய்தால் சன் நிருவாகம் வழக்கு தொடரும் அபாயம் உள்ளது. இதற்க்கும் ஒரு வழிவைத்துள்ளார் ஜெ.

முன்பு இந்திராகாந்தி தனியார் விமானங்களை அரசுடமை ஆக்கினார், நேரு கூட தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கினார். இந்த வாதங்களை முன் வைத்து வழக்கில் வெற்றி பெறலாம் என ஜெ. நினைக்கிறார். இந்த விவகாரம் மாறன் குருப்க்கு தெரியவந்ததால்தான் இப்போது சன் டி.வியில் அர்சு பற்றி அதிகமாக விமர்சனம் செய்து செய்திகள் வருவதில்லை.

சன் டி.வி அரசுடமை ஆகுமா? இல்லையா? என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.




இது போல இன்னும் பல அரசுடமை ஆக்கும் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS
உரிமை : ராசா, ராசா (ராக்கெட் ராசா)

இது ஒரு மீள் பதிவு

7 comments:

  1. புலி புலி வருதுன்னு பல வருசமா சொல்றாங்க வந்தபாடு இல்லை

    ReplyDelete
  2. அரசுடமையாக ஆக வழியில்லை என்றே தோன்றுகிறது...!

    ReplyDelete
  3. சாத்தியம் மிகவும் குறைவு.

    ReplyDelete
  4. என்னாது சிரிக்கலைன்னா சுட்டுபுடுவியா ? வாத்தி எதுக்குய்யா கோபப்படுறாப்புல காமெடி பண்ணிகிட்டு எதுக்குய்யா இப்பிடி மிரட்டுதே ஹி ஹி.

    ReplyDelete
  5. ஏங்க இப்படி கொளுத்தி போடுறீங்க?

    ReplyDelete
  6. சன் டி.வி அரசுடமை ஆக்குவதின் நோக்கம் அரசு கேபிளில் அது தெரிய வேண்டுமென்று. அப்படி சன் நிறுவனத்தார் அரசு கேபிளில் காண்பிக்க அனுமதித்து விட்டால், அரசுக்கு எதிரான செய்திகளை அப்போதும் சன் டி வி ஒளி பரப்பினால் "யானை தன் தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுக் கொண்ட" கதையாகிவிடுமே! மேலும் வலுக்கட்டாயமாக அந்த சன் டி வி யை அரசுடமையாக்கினால், அதன் பிறகும் சன் டி.வி யின் தரம் அப்படியே தொடரும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?....முத்து ஐயர்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...