> என் ராஜபாட்டை : மனைவி அமைவதெல்லாம் ....

.....

.

Thursday, August 21, 2014

மனைவி அமைவதெல்லாம் ....

“மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் “ என்பார்கள். அது 100/100 சரியான கருத்து. சரியில்லாத மனைவியால் அழிந்த குடும்பங்கள் பல, நல்ல மனைவியால் சாதித்த கணவர்கள் பலர். என்னடா திடிர்னு மனைவியை பற்றி தத்துவம்லாம் சொல்றானேன்னு பார்கின்றிர்களா ? ஒண்ணுமில்ல நாளை  (22-8-14) எனது அன்பு மனைவியை கைபிடித்த நாள் .

வெற்றிகரமான வாழ்வில் ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.

நான் அதிகமாக செலவு செய்கிற ஆள் இல்லை. வெளியில் சென்றால் டீ குடிக்க கூட யோசிப்பேன். நூறு ரூபாய் கொடுத்துபார்த்தாலும் அதே சினிமாதான் ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் அதே சினிமாதான் என குறைந்த கட்டண டிக்கெட் தான் எடுப்பேன். ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு சட்டை எடுப்பதைவிட இருநூறு ரூபாய் என ஐந்து சட்டை எடுக்கலாமே என யோசிப்பேன். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அடிகடி என்னிடம் சொல்வது (சபிப்பது ) “நீ செய்ற கஞ்ச தனத்துக்கு உனக்கு வாய்ப்பவள் பயங்கர செலவுகாரியா இருப்பாள் பாரு “ என்றுதான். ஆனால் கடவுள் நல்லவர்களை கை விடமாட்டார் என்ற கொள்கையின் அடிப்படையில் என்னையும் கைவிடவில்லை .

சிக்கனமாக இருப்பதில் எனக்கு சமமானவள். இதுவரை தனக்கு என எதையும் (நகை , புடவை ) கேட்டதில்லை. என்னையும் வீண் செலவு செய்ய வைத்ததில்லை. அதுபோல வீட்டில் உள்ளவர்களுக்கு செலவு செய்வதை என்றுமே தடுத்ததில்லை , ஏன் என கேட்டதும் இல்லை.

“கட்டுன பொண்டாடி கண்ணுல தண்ணி வந்தா
அவன் ஆம்பளையே இல்லை “
என்ற சூப்பர் ஸ்டாரின் வரிகளை இன்றுவரை கடைபிடிக்கிறேன். அவளும் இதுவரை எனக்கு கண்ணிர்  வர அளவு அடித்ததில்லை ( அய்யயோ உண்மைய உளறிடேனா ??). இனியும் இது தொடரும் என நெனைக்கிறேன்.

நிம்மதியான , சந்தோஷமான வாழ்க்கைக்கு ...

 • விட்டு கொடுங்கள்
 • மனம்விட்டு பேசுங்கள்
 • ஆபிஸ் கோவத்தை வீட்டில் காட்டாதிங்க
 • அவளையும் ஒரு குழந்தையா நினையுங்கள்
 • அருமையான தோழியாக பாருங்கள்
 • இரண்டாவது தாயாக பாவியுங்கள்

                                           உங்கள் வாழ்த்துக்களை எதிர்நோக்கி ..
                                                                   K.ராஜா
                                                                   R.சக்தி பிரியதர்ஷினி
                                                                   R.S.சரண்

24 comments:

 1. அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பா.. என்றும் பிரியாணியும் லெக் பீஸும் போல இணைபிரியாது வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நஸ்ரியா திருமண கவலையிலும் என்னை வாழ்த்திய ஆவிக்கு ஆயிரம் நன்றிகள்

   Delete
 2. வாழ்த்துக்கள் உங்களுக்கும் என் சகோதரிக்கும் வாழ்க பல்லாண்டு................

  ReplyDelete
 3. என் மனம் கனிந்த திருமண வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ராஜா

  ReplyDelete
 5. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 6. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே
  இன்று போல் என்றும் வாழ்க

  ReplyDelete
 7. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.... இனியும் பல்லாண்டு காலம் இதேபோல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்....

  ReplyDelete
 8. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் வாத்தி ஐயா!

  ReplyDelete
 10. இதே போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. என்றும் வெற்றிகரமான வாழ்க்கையாகவே அமைய வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 12. Happy wedding day ji have a success full year and also I am going to get marriage(31.8.2014) pls wish me for some as u

  ReplyDelete
 13. பிலேட்டட் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. உங்க மனைவி ரொம்ப அழகு சார்:))
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

   Delete
 15. வாழ்க வாழ்கவே.... வாழ்க வாழ்கவே.... வாழ்க வாழ்க வாழ்க "மணமக்கள் " வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே.....வாழ்க வாழ்க வாழ்க.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...