> என் ராஜபாட்டை : கேள்விகள் – விமர்சனம்

.....

.

Sunday, June 14, 2015

கேள்விகள் – விமர்சனம்



ஆசிரியர் பற்றி ..

           இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சியமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமுக நல ஆர்வலர் (கொஞ்ச காலம் )அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு Oô¨ அவர்கள். இவர் பல கட்டுரைகள் , நாடகங்கள் , புத்தகங்கள் எழுதியுள்ளார்.சில திரைப்படங்கள்  திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார்.

நூல் பற்றி ...

இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடன் எடுத்த பேட்டியின் தொகுப்புதான் இது .  ஒவ்வொரு பேட்டியும் வெவ்வேறு காலகட்டத்தில் , வெவ்வேறு பத்திரிகையில் வந்தது. இதில் மொத்தம் 15  பிரபலங்களின் பேட்டிகள் உள்ளது. திரைத்துறை , எழுத்தாளர், பத்திரிக்கையாளர் , சமுக ஆர்வலர் , ஈழ மண்ணை சேர்த்தவர் , அரசியல்வாதி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை சார்த்தவர்கள்.

முதலில் நடிகர் கமலஹாசனுடன் எடுத்த பேட்டி. இது 1982  இல் எடுக்கபட்டது. தீம்தரிகிட என்னும் பத்திரிகையில் வந்தது. வழக்கம் போல வழ வழ கேள்விகளாக இல்லாமல் கேள்விகள் ரொம்ப ஷார்ப்பாக வருகின்றது. இதுக்கு கமலின் பதில் வழக்கம் போல சில இடங்களில் பளீர், சில இடங்களில் சுளீர்,  சில இடங்களில் குழப்பம். ஆனாலும் பணத்துக்காகத்தான் சினிமாவில் உள்ளேன் என்று வெளிப்படையாக சொன்னது பெரியவிஷயம்தான். சினிமா வெறும் என்டர்டெயின்மென்ட்தான் , அதனால் ஏதேனும் நல்ல விளைவுகள் வந்தால் அது உபரி லாபம்தான் என கமல் சொல்வது அப்பட்டமான உண்மை.


அதே 1982 இல் சமூகவியல் ஆரச்சியாலரான பேராசிரியர் ரஜனி கோத்தாரி அவர்களின் பேட்டியில் வரும் ஒரு வரத்தை “இப்போ நடப்பது குண்டர்களின் ஆட்சி “. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த வார்த்தை இந்தியாவுக்கு பொருந்தும் என நினைக்கிறன்.

1994 இல் சுபமங்களா இதழ்காக சோ அவர்களுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. எல்லாரும் ஜெய்த்த பின் எனக்கு இதுதான் குறிக்கோள், நோக்கம் என கதைவிடுவது உண்டு ஆனால் சோ நான் படுக்கும் போதும் சரி இப்பவும் சரி எந்த நோக்கமும் வைத்துகொல்வதில்லைன்னு வெளிப்படையாக சொல்கிறார். இப்போ தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்கனும்னு சொல்வது போல அன்று டி.கே . சண்முகம் அவர்கள் நாடகங்களுக்கு தமிழில்தான் பேர்வைக்கனும்னு சொல்ல உடனே அதே மேடையில் சோ அவர்கள் என் அடுத்த நாடகத்தின் தலைப்பு “கோவாடிஸ் “ என அறிவித்தார். இது லத்தீன் பேர். அப்பவே ரொம்ப லொள்ளுபிடித்தவர் போல . சிவாஜி , எம் ஜி யார் பற்றி அவரின் தகவல்கள் புதுசு. நாடகத்துறையின் எதிர்காலம் பற்றிய அவரின் கருத்து , சின்னத்திரையின் வரோய் பற்றி எல்லாம் அருமையாக பேசியுள்ளார்.

1996  இல் தினமலர் தீபாவளி மலர்க்காக கருணாநிதியுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வார்த்தை விளையாட்டில் கலைஞ்சரை மிஞ்ச ஆள் இல்லை என்பார்கள் , இதில் தி.மு.க வின் பலம் எது பலவீனம் எது என்றதுக்கு பலம் மக்கள் மன்றம், பலவீனம் பத்திரிகைகள் என பேட்டி எடுப்பவரையே கிண்டல் செய்கிறார். அது ஒருவகையில் உண்மைதான். பத்திரிகை உலகில் அதிகம் விமர்சிக்கபட்டவர் இவராக தான் இருப்பார். ஆனாலும் சண் டிவியால்தான் தமிழ் வளருதுன்னு சொல்வதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

2001 இல் வின்நாயகன் என்ற பத்திரிக்கைக்காக நடிகர் அஜித்திடம் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வழக்கம் போல தன் மனதில் பட்டத்தை அப்படியே பேசுகிறார் தல. சொந்தமாக படம் எடுத்து நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் என ஓபனாக சொல்கிறார். தமிழ் புத்தகங்களை விட ஆங்கில புத்தகம் அதிகம் படிப்பேன் என்கிறார். கோபத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் , அரசியல் எனக்கு வேண்டாம் , ரசிகர்மன்றம் தேவையில்லை என அவரின் அதிரடிகள் தொடர்கிறது.

திரு வள்ளுவன், சுப்பண்ணா , கோமல் சுவாமிநாதன் , அசோகமித்திரன் , சிட்டி , யாசின் மாலிக் , நெடுமாறன் , பிரபஞ்சன், ஜெயபாலன் அக்னிபுத்திரன் என பலரது பேட்டிகளும் இதில் உள்ளது.

வழக்கமான பேட்டி போல இல்லாமல் கேள்விகள் புதிதாக உள்ளது. சில கேள்விகள் எதிராளியை கொபபடுத்தகூடியதாக கூட உள்ளது. ஆனாலும் தைரியமாக கேள்விகளை கேட்டுள்ளார் ஆசிரியர். நூலின் பேப்பர் மட்டும்தான் கொஞ்சம் உறுத்துகிறது. மற்றபடி ஒரு அருமையாக நூல் இது. இதுபோல இவர் மற்ற பிரபலங்களிடம் எடுத்த பேட்டியையும் நூலாக்கினால் நலமாக இருக்கும்.



ன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-460-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

இதையும் படிக்கலாமே ..


இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...