> என் ராஜபாட்டை : நூல் விமர்சனம்

.....

.
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Wednesday, March 23, 2016

இலவசமாக சில அருமையான நூல்கள் : பகுதி 1


          புத்தகங்கள் படிப்பது என்பது இப்போது அருகிவருகிறது. காரணம் அனைவரும் போனை நொண்டிக்கொண்டே இருப்பதால் , எனவேதான் E-Book எனப்படும் நூல் வகை இப்போது பிரபலமாக உள்ளது. பழைய நூல்கள் முதல் இன்றைய தினசரிகள் வரை இ-புக் வடிவில் வர துவங்கிவிட்டது.அப்படி உள்ள நூல்களில் அருமையான  சில நூல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

1. மதன்- வந்தார்கள் வென்றார்கள் 


             ஆனந்தவிகடனில் பணிபுரியும் போது மதன் எழுதிய நூல் இது. கார்டுனிஸ்ட் ஆக இருந்தாலும் வரலாறை தன்னால் அருமையாக எழுதமுடியும் என நிருபித்தவர். வரலாறு என்பதே படிக்க போரடிக்கும் என நினைபவர்களை கூட சந்தோஷமாக படிக்க வைத்த பெருமை மதனை சேரும்.  மன்னர்களின் ஆட்சிமுறை , படையேடுபுகள் , வெறி தோல்விகள் என அனைத்தையும் விரிவாக , விளக்கமாக எழுதிய நூல் இது.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


2. வைரமுத்து - தண்ணிர் தேசம்
 

              கவிபேரரசு என பாராட்டப்படும் வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் இது. புதினத்தை கவிதை வடிவில் எழுதிருப்பார். அப்போது மிகவும் பிரபலமாக பேசபட்ட தொடர் இது. காதலன், காதலி இருவரும் ஒரு படகில் பயணம் செய்யும் போது நிகழும் சம்பவங்களே கதை. "காத்திருந்தால் தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிகட்டி ஆகும்வரை காத்திருந்தால்" என்ற அருமையான வரி இதில்தான் வரும்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

3. வடிவேல்- வெடி வெடி வடிவேலு 


              இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்தான். வடிவேலு புகழின் உச்சியில் இருந்தபோது அவரின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பை அவரே எழுதிய தொடர் இது. சினிமாவுக்கு எப்படி வந்தார், என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார், எப்படி சமாளித்தார் என்பதை நகைசுவையுடன் சொல்லியிருப்பார்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

4. சுஜாதா : பேப்பர் வார் 

         அமரர் சுஜாதா எழுதிய கட்டுரை இது. அறிவியலை சாமான்ய மனிதரும் புரியும் வகையில் எழுதிய மிக சில எழுத்தாளர்களில் ஐவரும் ஒருவர். அறிவியல் மட்டும்  இன்றி புராணகதை, சமுக கதைகள் , கவிதைகள், வெண்பாக்கள், பாசுரம் என இவர் எழுதாத துறையே இல்லை எனலாம்.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


Sunday, June 14, 2015

கேள்விகள் – விமர்சனம்



ஆசிரியர் பற்றி ..

           இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சியமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமுக நல ஆர்வலர் (கொஞ்ச காலம் )அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு Oô¨ அவர்கள். இவர் பல கட்டுரைகள் , நாடகங்கள் , புத்தகங்கள் எழுதியுள்ளார்.சில திரைப்படங்கள்  திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார்.

நூல் பற்றி ...

இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடன் எடுத்த பேட்டியின் தொகுப்புதான் இது .  ஒவ்வொரு பேட்டியும் வெவ்வேறு காலகட்டத்தில் , வெவ்வேறு பத்திரிகையில் வந்தது. இதில் மொத்தம் 15  பிரபலங்களின் பேட்டிகள் உள்ளது. திரைத்துறை , எழுத்தாளர், பத்திரிக்கையாளர் , சமுக ஆர்வலர் , ஈழ மண்ணை சேர்த்தவர் , அரசியல்வாதி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை சார்த்தவர்கள்.

முதலில் நடிகர் கமலஹாசனுடன் எடுத்த பேட்டி. இது 1982  இல் எடுக்கபட்டது. தீம்தரிகிட என்னும் பத்திரிகையில் வந்தது. வழக்கம் போல வழ வழ கேள்விகளாக இல்லாமல் கேள்விகள் ரொம்ப ஷார்ப்பாக வருகின்றது. இதுக்கு கமலின் பதில் வழக்கம் போல சில இடங்களில் பளீர், சில இடங்களில் சுளீர்,  சில இடங்களில் குழப்பம். ஆனாலும் பணத்துக்காகத்தான் சினிமாவில் உள்ளேன் என்று வெளிப்படையாக சொன்னது பெரியவிஷயம்தான். சினிமா வெறும் என்டர்டெயின்மென்ட்தான் , அதனால் ஏதேனும் நல்ல விளைவுகள் வந்தால் அது உபரி லாபம்தான் என கமல் சொல்வது அப்பட்டமான உண்மை.


அதே 1982 இல் சமூகவியல் ஆரச்சியாலரான பேராசிரியர் ரஜனி கோத்தாரி அவர்களின் பேட்டியில் வரும் ஒரு வரத்தை “இப்போ நடப்பது குண்டர்களின் ஆட்சி “. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த வார்த்தை இந்தியாவுக்கு பொருந்தும் என நினைக்கிறன்.

1994 இல் சுபமங்களா இதழ்காக சோ அவர்களுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. எல்லாரும் ஜெய்த்த பின் எனக்கு இதுதான் குறிக்கோள், நோக்கம் என கதைவிடுவது உண்டு ஆனால் சோ நான் படுக்கும் போதும் சரி இப்பவும் சரி எந்த நோக்கமும் வைத்துகொல்வதில்லைன்னு வெளிப்படையாக சொல்கிறார். இப்போ தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்கனும்னு சொல்வது போல அன்று டி.கே . சண்முகம் அவர்கள் நாடகங்களுக்கு தமிழில்தான் பேர்வைக்கனும்னு சொல்ல உடனே அதே மேடையில் சோ அவர்கள் என் அடுத்த நாடகத்தின் தலைப்பு “கோவாடிஸ் “ என அறிவித்தார். இது லத்தீன் பேர். அப்பவே ரொம்ப லொள்ளுபிடித்தவர் போல . சிவாஜி , எம் ஜி யார் பற்றி அவரின் தகவல்கள் புதுசு. நாடகத்துறையின் எதிர்காலம் பற்றிய அவரின் கருத்து , சின்னத்திரையின் வரோய் பற்றி எல்லாம் அருமையாக பேசியுள்ளார்.

1996  இல் தினமலர் தீபாவளி மலர்க்காக கருணாநிதியுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வார்த்தை விளையாட்டில் கலைஞ்சரை மிஞ்ச ஆள் இல்லை என்பார்கள் , இதில் தி.மு.க வின் பலம் எது பலவீனம் எது என்றதுக்கு பலம் மக்கள் மன்றம், பலவீனம் பத்திரிகைகள் என பேட்டி எடுப்பவரையே கிண்டல் செய்கிறார். அது ஒருவகையில் உண்மைதான். பத்திரிகை உலகில் அதிகம் விமர்சிக்கபட்டவர் இவராக தான் இருப்பார். ஆனாலும் சண் டிவியால்தான் தமிழ் வளருதுன்னு சொல்வதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

2001 இல் வின்நாயகன் என்ற பத்திரிக்கைக்காக நடிகர் அஜித்திடம் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வழக்கம் போல தன் மனதில் பட்டத்தை அப்படியே பேசுகிறார் தல. சொந்தமாக படம் எடுத்து நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் என ஓபனாக சொல்கிறார். தமிழ் புத்தகங்களை விட ஆங்கில புத்தகம் அதிகம் படிப்பேன் என்கிறார். கோபத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் , அரசியல் எனக்கு வேண்டாம் , ரசிகர்மன்றம் தேவையில்லை என அவரின் அதிரடிகள் தொடர்கிறது.

திரு வள்ளுவன், சுப்பண்ணா , கோமல் சுவாமிநாதன் , அசோகமித்திரன் , சிட்டி , யாசின் மாலிக் , நெடுமாறன் , பிரபஞ்சன், ஜெயபாலன் அக்னிபுத்திரன் என பலரது பேட்டிகளும் இதில் உள்ளது.

வழக்கமான பேட்டி போல இல்லாமல் கேள்விகள் புதிதாக உள்ளது. சில கேள்விகள் எதிராளியை கொபபடுத்தகூடியதாக கூட உள்ளது. ஆனாலும் தைரியமாக கேள்விகளை கேட்டுள்ளார் ஆசிரியர். நூலின் பேப்பர் மட்டும்தான் கொஞ்சம் உறுத்துகிறது. மற்றபடி ஒரு அருமையாக நூல் இது. இதுபோல இவர் மற்ற பிரபலங்களிடம் எடுத்த பேட்டியையும் நூலாக்கினால் நலமாக இருக்கும்.



ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-460-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

இதையும் படிக்கலாமே ..


இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்

Sunday, June 7, 2015

மருந்தில்லா மருத்துவம்




              இணை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று மருத்துவப்பணி ஆற்றிவரும் திருமதி பி.எஸ். லலிதா எழுதிய நூல். தன்வந்திரி அவார்ட், வைத்திய பூஷன் போன்ற விருதுகள் பெற்றது மட்டுமின்றி பல சமுக சேவைகள் செய்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

             இன்று சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் சென்றால் பத்து டெஸ்ட், பதினைந்து மாத்திரை, இருபது ஊசி என உயிரை எடுக்கும் பலர் உள்ளனர். இதுற்குப் பயந்து நாமே மெடிக்கலில் மாத்திரை கேட்டால், கொடுப்பது 10 / +2  படித்துவிட்டு வேலைபார்க்கும் ஆட்களே. இவர்கள் கொடுக்கும் மருந்தால் தலைவலி உடனே போனாலும் வேறு ஏதாவது பின்விளைவுகள் வருமோ என பயம் வருகிறது.  நோயே இல்லாமலும் வாழ முடியாது இன்றைய சூழலில். இதுபோல குழப்பத்துக்கு விடை சொல்வதுதான் இந்த நூல்.

               நம் அன்றாட வாழ்வில் கேள்விப்பட்ட ஒரு மருத்துவ முறைதான் “ரெய்கி”. ரெ என்றால் பிரபஞ்சம், கி என்றால் உயிர்சக்தி, கி என்றால் ப்ராணா (மூச்சு பயிற்சி). இவை இணைந்த ஒரு சொல்தான் ரெய்கி ஆகும். மற்ற முறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம், மற்ற மருத்துவமுறைகளில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது, இதன் நன்மைகள் என்ன, இதில் ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா என்பதைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த நூல்.

           நம் உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருகின்றது. அந்த ஒளிவட்டம்தான் கண்ணுக்குப் புலனாகா காந்தசக்தியாகும் அதுக்கு “ஆரா” என்று பெயர். அதுபோல உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. வண்டி நன்றாக ஓட சக்கரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல மனிதன் இயங்க இந்த சக்கரம் முக்கியம். ஒவ்வொரு சக்கரமும் “ஓம், ஆம், ஹம், யம், ரம், வம், லம்“ என்ற மந்திரச் சொற்களை மூலாதாரமாக கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுத்து அதில் வரும் நோயைக் கட்டுபடுத்துகின்றது.

        அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு புள்ளியை உற்றுப் பார்த்து மனதை ஒருமுகபடுத்துவதைத்தான் தியானம் என்கின்றோம். தியானம் எங்கே, எப்போது, எப்படி செய்யவேண்டும் என ஆசிரியர் தெளிவாக கூறுகின்றார்.

    ரெய்கி பயற்சியில் உள்ள ஐந்து நிலைகள் என்ன, ரெய்கியின் தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாக இரண்டு அத்தியாயங்களில் சொல்லியுள்ளார். குண்டலினி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

          மணிபூரகம் சக்கரம் பற்றிக் குறிப்பிடும்போது குழந்தைகளின் கல்வியறிவு சார்ந்தது எனக் குறிப்பிடுகிறார். குழந்தை கருவில் இருக்கும்போதே தாய் நல்ல கதைகள், அருமையான இசை எனக் கேட்டால் அது குழந்தையை நல்லவிதமாக பாதிக்கும். இதைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

            சாதாரணமாக் கிராமங்களில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நிறைய ரெய்கியிலும் உள்ளன. கிராமத்தில் இந்த மருத்துவமுறையைப் பற்றி அறியாமலே சொல்லியுள்ளனர். உதாரணமாக : குழந்தையைத் தலையில் தட்டாதே என்பார்கள். காரணம் உச்சந்தலையில் உள்ள எலும்பு வளர்ச்சி பற்றியதுதான். சரியான உணவுமுறை, புராணக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லுதல் போன்றவை. எண்ணெய்க் குளியல் என்பதுகூட இதுபோல்தான். குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் சொல்வதுகூட ஒரு பயிற்சிதான். நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் பலவற்றை மறந்து வாழ்கிறோம். புதிய நோய்களுக்கு அடிமையாகிறோம்.

                இசையில் ரெய்கி மற்றும் தங்கப் பந்து தியானம் என்றால் என்ன என்று எளிதில் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். வண்ணங்கள் கூட மருத்துவக்குணம் கொண்டவை என்பது இவரின் கருத்து.

               எந்த நல்ல விஷயமும் கொஞ்சம் கஷ்டபட்டால்தான் கிடைக்கும். ஆனால் நம்மவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்க வேண்டும், அதுவும் கஷ்டப்படாமல் நிவாரணம் கிடைக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு இது சரி வராது. தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல், உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு போன்ற செய்கைகள் மூலம் உடலை எப்படிக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வது எனச் சொல்லியுள்ளார். இந்தநூலில் உள்ளவற்றை அப்படியே எல்லாரும் செய்வார்களா என்றால் கஷ்டம்தான். ஆனால் ரெய்கி என்றால் என்ன, அதன் பயன் என்ன என்பதை புரிந்துகொள்ள உதவும் நல்ல நூல் இது என்பதில் ஐயமில்லை.

இது மதிப்புரை . காம் தளத்தில் நான் எழுதிய பதிவு :

பதிவுக்கு செல்ல .....


ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-366-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Friday, December 19, 2014

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்




                      “நூறு இளைஞர்களை தாருங்கள் , இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் “ என சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்  “ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல்.

ஆசிரியர் :

 நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர் .

நூலை பற்றி :

 பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்த நாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார் , அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார் , அதானால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன , ராமகிருஷ்னா மிஷன் எப்போது , எப்படி துவங்கபட்டது என முதல் 43  பக்கங்கள் ஓடிவிடுகிறது .பின்னர் அவரின் சுற்றுபயணங்கள் பற்றிய விவரங்கள் வருகிறது. பயண கட்டுரைகள் எப்போதும் போர் அடிக்கும் ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் போரடிக்கவில்லை .

 உதாரணம் :

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர் “

பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம் .

சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான் .

பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல – சுவாமிஜி

நல்லவர்களை எதிர்க்க கண்டிப்பா நாட்டில் நாலுபேராவது இருப்பாங்க , அதுபோல சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி “ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தது .

அவரின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வருடம் அவரின் 151 வது வருடம்.

 “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி “ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது .

சிறப்புகள் :

மறைந்த நபர்களை பற்றி எழுதும் போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது .

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாக சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாற செய்த செயல்கள் பற்றிய விவரம்.

விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது.

அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது .

குறைகள் :

(குறை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை , ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ ஆசைகள் ) ....

வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம் .

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் , இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளை சேர்த்திருக்கலாம் .

துன்பம் அதிகமானதால் தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது இது சரியா என தெரியவில்லை .

பதிப்பகத்துக்கு :

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரை பற்றி , அவர் எழுதிய பிற நூல்களை பற்றி ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் ,

மொத்தத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை .


குறிப்பு : இது மதிப்புரை.காம் தளத்தில் நான் எழுதிய பதிவு .

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Friday, November 9, 2012

ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி -4





ஆன்மிக பணியில் உள்ள பலர் பல நூல்களை எழுதி உள்ளனர் . அது கடவுளை பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி இருக்காலாம் . அல்லது முக்தி அடைவது எப்படி என்பது போல இருக்கலாம் . ஆனால் சிலர் ஆன்மிகத்துடன் அன்றாட வாழ்வியலை கலந்து ஒரு அழகான கருத்து மிக்க நூலை சிலர் தான் படைக்கின்றனர் . அப்படி பட்ட ஒருவர்தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் .

இவர் நிறைய நூல்கள் எழுதி உள்ளார் . அதில் ஒன்றுதான் “அத்தனைக்கும் ஆசை படு “ . என்னடா புத்தர் ஆசையை துற என சொல்கிறார் ஆனால் இவர் அத்தனைக்கும் ஆசை படு என உல்டாவாக கூறுகிறார் என என்னுகின்ரிரகளா , இது தான் இவர் ஸ்பெஷல் .


புத்தகத்தில் இருந்து சில வரிகள் :

“ ஆசை இல்லாமல் இந்த பிரபஞ்சம் இல்லை , இந்த உடலும் இல்லை “


ஆசையினால் செய்யாமல் , அவசியத்துக்காக எது செய்தாலும் அது முழு சந்தோஷத்தை தராது .”

“இந்த உலகமே உங்களுதாக ஏற்று கொண்டால் அதில் உள்ள அனைவரும் உங்கள் சொந்தகளாக மாறிவிடுவார்கள் “

“ உங்களுக்கு சந்தோஷமானது என எதை என்று கொண்டாலும் அதனுடன் சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும் “


“ கடினமான சந்தர்பங்கள் உண்மையில் சாபங்கள் அல்ல அது உங்களுக்கு வழங்கப்படும் வரங்கள் “


“ நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர , கடுமையாக இல்லை “


“ முடிவை பற்றி கவலை படாதே , முழுமையான ஈடுபாட்டுடன் செயலை செய்யுங்கள் வெற்றி நிச்சயம் “

“வாழ்கையின் சுவராசியமே அதன் வேறுபாடுகளில் தான் உள்ளது “

இந்த புத்தகத்தை தரவிறக்க :



டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும்