இணை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில்
முதுகலைப்பட்டம் பெற்று மருத்துவப்பணி ஆற்றிவரும் திருமதி பி.எஸ். லலிதா
எழுதிய நூல். தன்வந்திரி அவார்ட், வைத்திய பூஷன் போன்ற விருதுகள் பெற்றது
மட்டுமின்றி பல சமுக சேவைகள் செய்து பல நூல்கள் எழுதியுள்ளார்.
இன்று சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் சென்றால் பத்து டெஸ்ட், பதினைந்து
மாத்திரை, இருபது ஊசி என உயிரை எடுக்கும் பலர் உள்ளனர். இதுற்குப் பயந்து
நாமே மெடிக்கலில் மாத்திரை கேட்டால், கொடுப்பது 10 / +2 படித்துவிட்டு
வேலைபார்க்கும் ஆட்களே. இவர்கள் கொடுக்கும் மருந்தால் தலைவலி உடனே போனாலும்
வேறு ஏதாவது பின்விளைவுகள் வருமோ என பயம் வருகிறது. நோயே இல்லாமலும் வாழ
முடியாது இன்றைய சூழலில். இதுபோல குழப்பத்துக்கு விடை சொல்வதுதான் இந்த
நூல்.
நம் அன்றாட வாழ்வில் கேள்விப்பட்ட ஒரு மருத்துவ முறைதான் “ரெய்கி”. ரெ என்றால் பிரபஞ்சம், கி என்றால் உயிர்சக்தி, கி என்றால் ப்ராணா (மூச்சு பயிற்சி).
இவை இணைந்த ஒரு சொல்தான் ரெய்கி ஆகும். மற்ற முறைக்கும் இதற்கும் என்ன
வித்தியாசம், மற்ற மருத்துவமுறைகளில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது,
இதன் நன்மைகள் என்ன, இதில் ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா என்பதைப் பற்றி
விரிவாக அலசுகிறது இந்த நூல்.
நம் உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருகின்றது. அந்த ஒளிவட்டம்தான்
கண்ணுக்குப் புலனாகா காந்தசக்தியாகும் அதுக்கு “ஆரா” என்று பெயர். அதுபோல
உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. வண்டி நன்றாக ஓட சக்கரம் எவ்வளவு முக்கியமோ
அதுபோல மனிதன் இயங்க இந்த சக்கரம் முக்கியம். ஒவ்வொரு சக்கரமும் “ஓம், ஆம்,
ஹம், யம், ரம், வம், லம்“ என்ற மந்திரச் சொற்களை மூலாதாரமாக கொண்டுள்ளது.
இவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுத்து
அதில் வரும் நோயைக் கட்டுபடுத்துகின்றது.
அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு புள்ளியை உற்றுப் பார்த்து
மனதை ஒருமுகபடுத்துவதைத்தான் தியானம் என்கின்றோம். தியானம் எங்கே, எப்போது,
எப்படி செய்யவேண்டும் என ஆசிரியர் தெளிவாக கூறுகின்றார்.
ரெய்கி பயற்சியில் உள்ள ஐந்து நிலைகள் என்ன, ரெய்கியின் தத்துவங்கள்
என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாக இரண்டு அத்தியாயங்களில் சொல்லியுள்ளார்.
குண்டலினி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
மணிபூரகம் சக்கரம் பற்றிக் குறிப்பிடும்போது குழந்தைகளின் கல்வியறிவு
சார்ந்தது எனக் குறிப்பிடுகிறார். குழந்தை கருவில் இருக்கும்போதே தாய் நல்ல
கதைகள், அருமையான இசை எனக் கேட்டால் அது குழந்தையை நல்லவிதமாக பாதிக்கும்.
இதைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.
சாதாரணமாக் கிராமங்களில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நிறைய
ரெய்கியிலும் உள்ளன. கிராமத்தில் இந்த மருத்துவமுறையைப் பற்றி அறியாமலே
சொல்லியுள்ளனர். உதாரணமாக : குழந்தையைத் தலையில் தட்டாதே என்பார்கள்.
காரணம் உச்சந்தலையில் உள்ள எலும்பு வளர்ச்சி பற்றியதுதான். சரியான
உணவுமுறை, புராணக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லுதல் போன்றவை. எண்ணெய்க்
குளியல் என்பதுகூட இதுபோல்தான். குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச்
சொல்வதுகூட ஒரு பயிற்சிதான். நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் பலவற்றை
மறந்து வாழ்கிறோம். புதிய நோய்களுக்கு அடிமையாகிறோம்.
இசையில் ரெய்கி மற்றும் தங்கப் பந்து தியானம் என்றால் என்ன என்று
எளிதில் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். வண்ணங்கள் கூட மருத்துவக்குணம்
கொண்டவை என்பது இவரின் கருத்து.
எந்த நல்ல விஷயமும் கொஞ்சம் கஷ்டபட்டால்தான் கிடைக்கும். ஆனால்
நம்மவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்க வேண்டும், அதுவும் கஷ்டப்படாமல்
நிவாரணம் கிடைக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு இது சரி வராது.
தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல், உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு போன்ற
செய்கைகள் மூலம் உடலை எப்படிக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வது எனச்
சொல்லியுள்ளார். இந்தநூலில் உள்ளவற்றை அப்படியே எல்லாரும் செய்வார்களா
என்றால் கஷ்டம்தான். ஆனால் ரெய்கி என்றால் என்ன, அதன் பயன் என்ன என்பதை
புரிந்துகொள்ள உதவும் நல்ல நூல் இது என்பதில் ஐயமில்லை.
இது மதிப்புரை . காம் தளத்தில் நான் எழுதிய பதிவு :
பதிவுக்கு செல்ல .....
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-366-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234
Tweet |
இந்த அனைத்து முறை வைத்தியங்களைப் பற்றியும் அறிந்திருந்தாலும் முயன்றதில்லை....நல்ல பதிவு
ReplyDeleteபுத்தகத்தின் விலையையும்
ReplyDeleteகுறிப்பிட்டிருக்கலாமே ?