> என் ராஜபாட்டை : ஆசிரியர்

.....

.
Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Thursday, June 5, 2014

அலட்சியம்





          "இன்றைய அ (லட்சியம் )
           நாளைய ஏ (மாற்றம் )"     என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவிதியையே மாற்றிவிடுகிறது . ஒரு பேருந்து ஓட்டுனரின் அலட்சியம் சில உயிர்கள் போக காரணமாக உள்ளது , ஒரு காவலரின் அலட்சியம் பல திருடர்கள் உருவாக காரணம் , ஒரு அரசின் அலட்சியம் நாடு கெட்டு குட்டிசுவராக காரணம் . 

இந்த பதிவில் நாம பார்க்க போவது அலட்சியமாக பேப்பர் திருத்திய சில ஆசிரியர்களின் அலட்சிய நடவடிக்கைகளை . முதலில் கீழே உள்ள படத்தை பாருங்கள் இது ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் கணினி அறிவியல் பொது தேர்வு விடைத்தாள் . இதில் மதிப்பெண்  எப்படி போடபட்டுள்ளது என பாருங்கள் .



54 + 20  = 64 என கூட்டி போட்டுள்ளனர் . இதை போட்டவரை விட இதை சரிபார்த்து ஒப்புதல் அளித்த இருவரை என்ன சொல்வது ? 10  மதிப்பெண்கள் என்பது சும்மாவா ?


அதே மாணவனின் ஆங்கில தேர்வு தாளின் முதல் பக்கம் இது ...



இதிலும் 29+33+26+4  = 82 என போடபட்டுள்ளது . இதிலும் பத்து மதிப்பெண் குறைவு . இதை திருத்த ஒருவர், அதை சரிபார்க்க ஒருவர் , கடைசியில் இருவர் செய்ததையும் சரிபார்த்து கையெழுத்து போட ஒருவர் என மூவர் பார்த்து போட்ட மதிப்பெண் இதுதான் . இது இரண்டும் ஒரே மாணவனுக்கு நிகழ்ததுதான் சோகம் .  இப்போது அந்த மாணவர்க்கு கூடுதலாக 20 மதிப்பெண் வருகிறது .

சில கேள்விகள் :

அந்த மாணவர் விடைத்தாள் நகல் கேட்டதால் இது தெரிந்தது , கேட்காமல் விட்டுருந்தால் என்னவாகும் ?


விடைத்தாள் கேட்காத மாணவர்களில் பலருக்கு இது நிகழ வாய்ப்புள்ளதே ?


இந்த விடைத்தாள் பெற 500 ரூபாயும் , மீண்டும் சரியான மதிப்பெண் பெற 510 ரூபாயும் கட்டவேண்டும் , யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஏன் மாணவன் தண்டம் அழ வேண்டும் ?


மதிப்பெண் குறைவாக வந்ததால் அந்த மாணவன் ஏதாவது தவறான முடிவெடுத்தால் யார் பொறுப்பு ?


இப்போது திருத்தியவர்கள் மேல்தான் தவறு என அப்பட்டமாக தெரிகிறது , மாணவனின் பணம் திரும்ப கிடைக்குமா ?


இவ்வாறு தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை தர பட்டது என ஏன் எந்த அறிவிப்பும் இல்லை ? குறைந்த பட்சம் அந்த மாணவனுக்காவது தெரியபடுத்தலாமே ?


இதுபோல திருத்தியவர் செய்த தவறுக்கு மாணவனிடம் பணம் வாங்ககாமல் மதிப்பெண்ணை மாற்றி தரலாமே ?