> என் ராஜபாட்டை : அரசியல்வாதி ஆவது அப்படி ?

.....

.

Friday, October 28, 2011

அரசியல்வாதி ஆவது அப்படி ?




டாக்டர் ஆவது எப்படி? ஆசிரியர் ஆவது எப்படி? பிளாக்கர் ஆவது எப்படி? ஏன் சாமியார் ஆவது எப்படினு கூட எல்லாரும் எழுதிட்டாங்க. ஆனா அரசியல்வாதி ஆவது எப்படினு யாரும் எழுதவில்லை. இந்த உலகத்திலேயே அதை எழுத சிறந்த நபர் நீங்கள்தான் என கூறி என்னை எழுததூண்டிய 1,00,000 க்கு மேற்ப்பட்ட பதிவர்களுக்கு நன்றி.

  1. கட்சியை தெரிவு செய்யுங்கள்.

·         எதாவது ஒரு கட்சியில்  சேருங்கள். கொள்கை, கன்றாவிலாம் பாக்காதீங்க( எந்த கட்சில இதெல்லாம் இருக்கு?).

·         அந்த கட்சியில் உங்கள் ஊர் முக்கிய புள்ளியின் பிறந்த நாள், மகள் வயசுக்கு வந்த நாள், அவர் முதல் முறை குப்புர படுத்த நாள் என அனைத்து நாளுக்கும் வாழ்த்து போஸ்டர் அடித்து அவர் கண்னில் படும் இடத்தில் ஒட்டவும்.


  1. தலைமையை காக்காபிடிக்கவும்.

·         கட்சி தலைவருக்கு பேதிவந்தா கூட உடனே அவருக்காக மண் சோறு சாப்பிடனும்(அதையும் போட்டோ எடுத்துகனும்).
·         வருங்கால நிரந்தர முதல்வர், ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் என வாய்ல வந்தத அடிச்சுவிடனும்.
·         தலைவர் கைது செய்யபடலாம் என செய்தி வந்ததும் மண்னனெய்ல தண்னிய கலந்து மேல ஊத்திகனும்(வேண்டாம்னு தடுக்க 5 பேர் ரெடியா இருக்கனும்)

  1. போட்டோ .

·         வெள்ளை வேட்டி, சட்டையில் கும்பிடுவதுபோல, வயதான கிழவியை கட்டிபிடிப்பது போல, குழந்தையுடன் உட்காந்து சாப்பிடுவது போல, 1000 மக்கலுக்கு மத்தில நிற்ப்பது போல, யேசு, ராமர், காந்தி, போல போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  1. வாக்குறுதிகள் :

·         எந்த அரசியல்வாதியும் சொன்னதை செய்யபோவதில்லை. எனவே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களூக்காக சில..

·         18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.

·         எங்கள் ஆட்சியில் வங்கால விரிகுடாவில் கண்டிப்பாக தூறு வாரப்படும்

·         எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.

·         இலங்கையில் மக்கள் தொகைகுறைய நான்கள் தான் காரணம்.

·         எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்.



டிஸ்கி : இவற்றை முயர்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல.





39 comments:

  1. எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்./

    ராஜபாட்டையில் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நீங்க காமெடியா சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், இவை அனைத்தும் உண்மையே. அந்த ஐஸ்வர்யா மேட்டர் செம காமெடி.

    ReplyDelete
  3. ஐஸ்வர்யா தான் டாப்பு ..

    ReplyDelete
  4. 18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.//

    ஹா ஹா ஹா ஹா சான்ஸே இல்லை ஹா ஹா ஹா செம கலக்கல் மக்கா...

    ReplyDelete
  5. //எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்///

    Super

    ReplyDelete
  6. /////எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.
    //////

    அண்ணே என்னாண்ணே இது?...ஹா.ஹா.ஹா.ஹா..................

    ReplyDelete
  7. சூப்பர் ஐடியாஸ்!
    //எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.//

    ஹா,ஹா,ஹா!

    ReplyDelete
  8. மாப்ளே ஏன்யா இப்பிடியெல்லாம் சொல்லி புள்ளைங்கள ஜர்க்காக்குற ஹிஹி!

    ReplyDelete
  9. தலைவர் வாழ்க..
    தலைவர் வாழ்க...
    தலைவர் வாழ்க.......

    ReplyDelete
  10. ஹா ஹா பின்னிப்புட்டீன்கள்

    ReplyDelete
  11. எங்கள் ஆட்சியில் தான் எறும்பு ஏர்ப்லேன் ஓட்டுச்சு.......

    ReplyDelete
  12. முழுசா புரிஞ்சுகிட்டீங்க, முன்னேறிடுவீங்க. ஹா ஹா ஹா.

    ReplyDelete
  13. ஹா ஹா ஹா சூப்பர்

    ReplyDelete
  14. தலைவா ...டாக்டர் ஐயா உங்கள வகுப்பு எடுக்க கூப்பிடப் போறாரு...அவரு மேட்டர் கூட நீங்க கொஞ்சம்
    சேத்ருகலாம்! கலக்கல்!

    உனது விழி வலிமையிலே!

    ReplyDelete
  15. எப்பவுமே உங்க பாட்டை.. ராஜபாட்டைதான்..!! தூள் கிளப்புங்கள் சகோதரரே..!!!

    பகிர்வுக்கு நன்றி..!!!

    ReplyDelete
  16. ஒரு வீடு வச்சிருந்தா ஒரு ஓட்டு.. சின்ன வீடு வச்சிருந்தா ரெண்டு ஓட்டா?!!!

    ReplyDelete
  17. ஆகா ரொம்ப நல்லா இருக்கே முன்னாடியே தெரிஞ்சிருந்தால் இந்த Blog எழுதுகிறதைவிட்டிட்டு அதிலை புகுந்துவிளையாடியிருக்கலாமே

    ReplyDelete
  18. வயசு, கல்வித்தகுதி என்னன்னு சொல்லவே இல்லியே

    ReplyDelete
  19. நீ வாங்கியது போதாதுன்னு எங்களையும் கோத்துவிடலாம்ன்னு முயற்ச்சியா...


    நடத்து மச்சி...

    ReplyDelete
  20. நகைச்சுவை என்ற பட்சத்தில் சரி, ஆனால் காமராஜர் கூட அரசியல் வாதி தான்... அரசியலை சுத்தம் செய்வோமே,

    ReplyDelete
  21. நல்லது..விளங்கிரும் :)

    ReplyDelete
  22. எதையாவது செய்யுங்க உருப்படியானதா செய்யுங்க!

    ReplyDelete
  23. ////டிஸ்கி : இவற்றை முயர்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல./////

    அது எந்த சங்கம்ணே...? வருத்தப்படாத வாலிபர் சங்கமா? அது அடிவாங்கறதுக்குத்தானே இருக்கு?

    ReplyDelete
  24. நகைச்சுவைக்காக எடுத்துக்கொண்டாலும்
    மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல்....'
    சரியானவர்களை நாம் தேர்ந்தெடுக்க வில்லையோ என்று....

    ReplyDelete
  25. இது சோக்கு இல்ல, உண்மைதான்:)))))

    ReplyDelete
  26. அட..சூப்பரான ஐடியாக்களை கொட்டி இருக்கீங்களே!ராஜபாட்டை ராஜா வாழ்க!

    ReplyDelete
  27. நீங்கள் எதாவது சொல்ல சொன்னதால நானும் ஏதோ சொல்லலாம்னு TRY பண்றேன். But, எண்ண சொல்லன்னு தெரியலையே.!

    அரசியல்வாதி ஆக ஆசைபடும் அனைவருக்கும் நீங்கள் பயிற்சி வகுப்பு எடுக்கலாமே.?

    ReplyDelete
  28. அப்புறம் ஒரு ஸ்கார்பியோ கார் வாங்கணும் .......

    ReplyDelete
  29. அரசியல்வாதி ஆவதற்கான அனைத்து வழிமுறைகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்...

    அருமை!!

    (பேசாம நீங்க அரசியல்ல குதிங்க!)

    ReplyDelete
  30. அகில இந்திய ரேஞ்சுல பாத யாத்திரை, குடிசைக்குள்ள கூழ் குடிக்கறது, குண்டு பூ ரேஞ்சுக்கு கற்பு - கக்கூஸ் மாதிரின்னு கதைக்கறது,கலைஞர் மாதிரி லிபியாவில் அமைது ஏற்பட மாலை வரை சாகும் வரை ஒருநாள் உண்ணாவிரதம், நாந்தான் மாவலி, இப்படியெல்லாம் கிளப்புங்க.....அரசுயல் புயலாயிடலாம்..

    நம்ம வலைப்பூ http://tamilpuzzles.blogspot.com

    ReplyDelete
  31. நீங்க aen arasiyalukku poga koodaathu ? :)

    ReplyDelete
  32. அதெல்லாம் போகட்டும், உங்கள் ட்விட்டர் பறவயை அடித்து குழம்பு வைத்து சாப்பிடணும் போல எரிச்சல் வருது, ஆனா நான் சைவம் என்பதால் தப்பித்தது..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...