> என் ராஜபாட்டை : கனிமொழி.

.....

.
Showing posts with label கனிமொழி.. Show all posts
Showing posts with label கனிமொழி.. Show all posts

Monday, December 5, 2011

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?




முன்பு காந்தி சிறைக்கு சென்று வந்தால் அல்லது நாட்டுக்காக போராடி, நாட்டு மக்களூக்காக போராடி அல்லது ஒரு கெட்ட அரசாங்கத்தை எதிர்த்து அல்லது மக்கள் உரிமைக்காக போரடி சிறை சென்று திரும்புபவர்களை தடபுடலாக , ஆடம்பரமாக வரவேற்பார்கள்.

நம்ம கனிமொழி அப்படி என்ன நல்ல விஷயம் செய்து சிறை சென்றார் என தெரியவில்லை. தமிழ்னாட்டுக்கு காவிரி நீர் தரசொல்லி போராடி அல்லது அன்னிய முதலிட்டை எதிர்த்து போராடி அல்லது குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை குறைக்க சொல்லி போராடியாது சிறை சென்றாரா? 200 கோடி ஊழல் செய்த குற்றதிர்க்காக பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு , அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது கெஞ்சி கூத்தாடி பெறப்பட்டது.

500 லஞ்சம் வாங்கி ஜெயிலுக்கு போனவன் வெளியவந்ததும் மற்றவர்களை பார்க்க வெட்கபடுகிறான், அவன் குடும்பத்தினர் மற்றவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்க்க வெட்க படுகின்றனர். ஆனால் இவருக்கு தடபுடல் வரவேற்ப்பு( இதற்க்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல). அவருக்கும் வெட்கம் இல்லை, தன் பணத்தை திருடிவிட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஒருவரை காத்திருந்து வரவேற்ற கட்சிகாரர்களுக்கும்….. விடுங்க என்னத்த சொல்ல..


டொகோமோ(Docomo) பயன் படுத்துபவர்களுக்கு..

உங்கள் மொபைலில் இருந்து TICKET என டைப் செய்து 52121 என்ற என்னிற்க்கு SMS செய்யுங்கள்.( SMS Free தான்). நீங்கள் கார் அல்லது பைக் , 50, 100 என 5000 ருபாய் வரை TALK TIME வெல்ல வாய்ப்பு உண்டு. SMS அனுப்பும் அனைவர்கும் 150 ரூபாய் TOP –UP செய்தால் 160 ரூபாய் ஏறும். உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கார் விழலாம். எனக்கு 50 ருபாய் TALK TIME பரிசாக விழுந்தது.


பொது அறிவு :

லூயிஸ் பிரவுன்-  இந்த பெயர் மருத்துவ துறையின் பெருமை. காரணம் உலகின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் இது.  1978 ஜீலை 25 ல் இங்கிலாந்தில் லெஸ்லி – ஜான் பிரவுன் தம்பதியினர்க்கு பிறந்தார்.