> என் ராஜபாட்டை : உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

.....

.

Wednesday, September 14, 2011

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..


பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.


1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள்.

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedgetAdd HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.

4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.

ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.        5) இதை Add பன்னி save செய்யவும்.இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால்

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.
53 comments:

  1. கடைசி வரிதான் அற்புதம்.

    ஆனா..... 'தில்' வேணுமே!!!!!!!

    நம்ம பதிவு திருடுபோனதும் ஒப்பாரி வச்சு மீட்ட கதை தனி:-)

    ReplyDelete
  2. மொக்கையா சொன்னாலும் பதிவுத்திருடர்களுக்கு நல்ல சாட்டைஅடி.கவனம் இதையும் காப்பி பன்னப்போறாங்க..

    ReplyDelete
  3. //இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால் …

    நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.//

    ஹா..ஹா..ஹா.. சூப்பர்!!!!

    ReplyDelete
  4. பதிவு எழுதாதீங்கன்னு சொல்லுவீங்க என்கிறதை முன்னாலயே கொஞ்சம் எதிர்பார்த்தேன். ;))

    ReplyDelete
  5. ஹா..ஹா.. இத தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  6. குட் ஐடியா ராஜா..

    //இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.

    இ லைக் இட்.

    ReplyDelete
  7. நல்ல படைப்பு என்றால் எழுத்தாளரின் பெயருடன் அல்லது வலை இணைப்புடன் பதிவிடுவதால் எழுத்தாளருக்கு பெருமை தான் அதனால் எழுதுவதை நிறுத்த வேண்டாம்

    ReplyDelete
  8. அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

    இந்த வரி அசத்தல்

    ReplyDelete
  9. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  10. //இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால் …

    நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.//


    குபீர் என்று சிரிப்பு வந்தது நண்பா... கலக்குறீங்க...

    ReplyDelete
  11. இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.


    இந்த வரியை படிக்கும் பொழுது மயில்சாமி சொல்வது போலவே இருக்கு நண்பா

    ReplyDelete
  12. சார், உங்களுக்கு மூளை மட்டும் 50 கிலோ சார்..

    ReplyDelete
  13. இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால் …

    நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.//

    நி ஒரு பிரபல பதிவர்னு நினைத்து உன் பதிவை காப்பிய...,

    அசத்தல் பகிர்வு.

    ReplyDelete
  14. கலக்கல் மொக்கய்யா ஹிஹி!

    ReplyDelete
  15. நிச்சயமா ஒரு பயலும் திருட மாட்டான்!

    ReplyDelete
  16. எதுவும் HTML code கொடுத்து இருப்பீங்கன்னு வந்தால் பயங்கரமா காமெடி பன்னியிருக்கீங்க. கலக்கலான பதிவு.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. காலைல வந்ததுமே முதல் பதிவா இத படிக்க வந்தேன் பாருங்க.. ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  19. அது சரி - அதனாலே தான் நான் எழுதறத நிறுத்திட்டேன் - சரியா

    ReplyDelete
  20. இவளவுதான் உங்களால் முடியுமா??

    உங்களிடத்தில் இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்!!

    ReplyDelete
  21. அடங்கொன்னியா!!!!!!!!!! எட்றா அந்த அறிவாளை

    ReplyDelete
  22. ஏன் இந்தக் கொலைவெறி?????...நல்லகாலம் மீதம் உள்ளதைப் பார்க்காமல் என் கணக்கில் நுழையப்பார்த்தேன்.....தப்பிசிற்ரன் ஹி.ஹி ...ஹி ...நீங்க சொன்னமாதிரிப் போட்டால் எவன்தான் திருடுவான் ?...ஹி ..ஹி ..ஹி .......மிக்க நன்றி சகோ சிரிக்க வைத்தொரு பகிர்வு போட்டதற்கு ...................

    ReplyDelete
  23. மொத்தமா மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு சார் ....

    ReplyDelete
  24. நல்ல மனசுடன் தான் நீங்க எழுதி இருக்கீங்கப்பா.. ஆனா படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது... காப்பி அடிப்போரை ஒன்னுமே செய்ய முடியலன்னா பதிவே போடாதீங்கன்னு சொன்னீங்க பாருங்க :) அங்க தான் சிரிப்பு கண்ட்ரோல் பண்ண முடியலை....

    இன்னொருத்தர் பதிவை தன்னுடையதா போட்டுக்கொள்ளும்போது அவர்களின் மனசே கண்டிப்பா இகழும்...

    அருமைப்பா.. நகைச்சுவையா சொன்னாலும் சொல்ல வந்த கருத்து பெஸ்ட்....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு..

    ReplyDelete
  25. இந்த ஐடியாவும் சூப்பரா இருக்கே பாஸ்.

    ReplyDelete
  26. Kappi thool,,,,,,
    paste ethalam vikkaama irunthal::::copy paste
    panna mudiyaathillai ???

    ReplyDelete
  27. Kappi thool,,,,,,
    paste ethalam vikkaama irunthal::::copy paste
    panna mudiyaathillai ???

    ReplyDelete
  28. Kappi thool,,,,,,
    paste ethalam vikkaama irunthal::::copy paste
    panna mudiyaathillai ???

    ReplyDelete
  29. Kappi thool,,,,,,
    paste ethalam vikkaama irunthal::::copy paste
    panna mudiyaathillai ???

    ReplyDelete
  30. நினைத்து நினைத்து சிரித்தேன் நண்பா.

    ReplyDelete
  31. மாப்பிள இருந்தாலும் உனக்கு குசும்பு அதிகம் டா..

    ReplyDelete
  32. அடி தூள் மாமூ....
    சும்மா பிச்சு உதறி பிண்ணி பேத்து எடுத்துடீங்க... பாவம் களவாணிப் பசங்க..!

    ReplyDelete
  33. யோவ் பாஸ்.... வேணாம் அளுதுருவன்...... வலிக்குது பா ..
    நானும் நம்ம்பி வந்தேன் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  34. //நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.//

    ராசா ராசா,

    உங்கள என்ன சொல்லி பாராட்டறதுன்னே தெரியலியேப்பா.

    நெசமாவா பயன்மிக்க பதிவு அண்ணே!

    ReplyDelete
  35. மொக்கைய சென்ஸார் பண்ண வழியில்லையா?

    ReplyDelete
  36. இன்றுதான் உங்கள் வலைதளத்திற்கு முதன் முறை வந்தேன். உங்க பதிவை படித்து கட்டுப்படுத்த முடியாத சிரிப்புதான்.நீங்களும் நாகப்பட்டினமா ?இன்றுதான் ஊர்க்கார முதல் பதிவர் பக்கம் வந்துள்ளேன் .வேறு யார் இருக்கிரார்களேன்று தெரியாது.தொடருகிறேன்.

    ReplyDelete
  37. திருட்டு எல்லா இடத்துலையும் இங்கயும் தவிர்க்க முடியாத ஒன்று.. திருந்தனும்

    ReplyDelete
  38. ஹ ஹ ஹ மொக்கை
    அட இது கூட நல்லாத்தான் இருக்குல்ல

    ReplyDelete
  39. நானும் என்னவோ ஏதோன்னு ரொமப சீரியசா படிச்சிட்டு வந்தேன் நமக்கு பயன் படும் என்ரு
    ஹா
    ஹஆ

    ReplyDelete
  40. பதிவு ஓப்பன் ஆகவே
    ரொமப் டைம் எடுக்குது

    ReplyDelete
  41. ஹாஹா. இது எப்டி இருக்கு தெரியுமா?

    ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவது எப்படி என்பதற்கு வடிவேலு கொடுக்கும் ஐடியா போல இருக்கு.

    ReplyDelete
  42. தொழில்நுட்ப பதிவு சூப்பர் lol

    ReplyDelete
  43. romba nalla irukuthu..

    ReplyDelete
  44. ஹா ஹா சூப்பர்

    ReplyDelete
  45. ((((இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.)))

    இப்படியா பயமுர்த்துவது...

    ReplyDelete
  46. அட உங்களை நம்பி வந்தேனே இப்படியா பண்ணுவது ....?

    ReplyDelete
  47. இது நம்ம ஊரு மிலிட்டரி ஹோட்டல் டெக்குனிக்காவுல இருக்கு.....

    ReplyDelete
  48. அண்ணே உங்க நியூஸ்லெட்டர் லிங்க கிளிக் பண்ணா எங்கேயோ வெளம்பரத்துக்கு போவுது.. அப்புறம் தான் உங்க பக்கம் வருது, என்னன்னு பாருங்கண்ணே...... (http://adf.ly/2imKz இதுதான் அந்த விளம்பர லிங்...)

    ReplyDelete
  49. ///விளங்காதவ்ர்கள், ///


    உள்க்குத்து?

    #யோவ், நான் உங்க பதிவு எதையும் திருடலை மை லார்ட்.....

    ReplyDelete
  50. நானும் சீரியசா படிச்சிகிட்டே வந்து.....செம ஜோக்...சூப்பர்

    ReplyDelete
  51. ஆஹா..!! எப்டீங்க இப்படி :-))))

    கடைசி வரியை தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல உங்க கையாலயே செதுக்கி வையுங்க. இல்லைன்னா, அதையும் காப்பியடிச்சு தன்னோட சிந்தனைன்னு சொல்லிடுவாங்க :-)))))))

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...