> என் ராஜபாட்டை : துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?

.....

.

Wednesday, November 14, 2012

துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?

நேற்று தீபாவளிக்கு வந்து ரசிகர்களின் பெறும் ஆதரவுடன் , மகிழ்ச்சியுடன் வெற்றி நடை போடுகிறது இளைய தளபதியின் துப்பாக்கி படம் . விஜய் ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர் . ஆனால் நேற்று மதியம் வந்த செய்தி இந்த
மகிழ்சியை குலைப்பதாக உள்ளது .


முஸ்லிம்கள் எதிர்ப்பு :

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் , தேச துரோகிகளாகவும் காட்டபடுவதாக கூறி நாளை விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்த போவதாக ஒரு முஸ்லீம் அமைப்பு அறிவித்துள்ளது .

அந்த அமைப்பிடம் சில கேள்விகள் :

  1. நீங்கள் இதற்க்கு முன் விஜயகாந்த் , அர்ஜுன் படங்கள் பார்த்ததே இல்லையா ?
  2. பாகிஸ்தான் ஓர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தீவிரவாதிகள் வருவதுபோல காட்டினால் அவர்களை எந்த மதமாக காட்டமுடியும் ?
  3. படத்தில் தீவிரவாதியாக காட்டுவதால் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என நினைக்கும் அளவு தமிழன் ஒன்றும் கேனையன் அல்ல .
  4. அப்துல் கலாம் , ஷாருக்கான் போன்றர்களை அமெரிக்க விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் அவமான அப்டுத்தும் போது கூட இந்த அளவு வேகம் காட்டாதது ஏன் ?
  5. எந்தனையோ படங்களில் இந்துக்களை (99 % படங்களில் ) வில்லனாக காட்டுகின்றனர் . பல படங்களில் கிருத்துவர்களை வில்லனாக காட்டுகின்றனர் . இதற்க்கு அந்த மத அமைப்புகள் எதுவும் எதிர்க்கவில்லையே ?
  6. கடவுளை இல்லை என்று சொல்லி படம் எடுத்தால் கூட அதையும் பார்த்து ரசிப்பான் தமிழன் .
  7. நேற்று படம் பார்த்த முஸ்லீம் நண்பர்கள் யாரும் இந்த POINT OF VIEW வில் படம் பார்த்ததாக தெரிய வில்லை . அவர்களை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு படமாக தான் பார்க்கின்றனர் .
  8. கந்தகார் விமான கடத்தலை மையமாக வைத்து பயணம் படம் வந்தபோது இதுப்போல சில விமர்சனம் வந்தது அந்த விமானத்தை உண்மையில் கடத்தியது யார் ?
  9. சாமியார்களை கிண்டல் செய்து , விமர்சித்து எத்தனையோ படம் வந்தது அதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே ?
  10.   இன்னும் படமே வெளி வராத நிலையில் விஸ்வருபம் படத்திற்கு எப்போதே எதிர்ப்பது சரியா ?


டிஸ்கி : இந்த போராட்டத்தால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்குமே தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என்பது என் எண்ணம .

டிஸ்கி : என் முஸ்லீம் மாணவர்கள் சிலரிடம் இது பற்றி கேட்ட போது படம் பார்க்கும் போது எங்களுக்கு எப்படி ஒரு எண்ணம தோன்றவில்லை என கூறியதால் தான் இந்த பதிவு .

டிஸ்கி : படத்தை படமாக மட்டும் பாருங்கள் ( இது அனைத்து சாதி மற்றும் மததினர்க்கும் பொருந்தும் )

டிஸ்கி : ஏதாவது தவறாக , யார் மனமாவது புண் படும் வண்ணம் எழுதி இருந்தால் மன்னிக்கவும் .

35 comments:

  1. நல்ல கேள்விகள்... அதற்கு டிஸ்கிகள் பதில்கள்...

    ReplyDelete
  2. u r not right as i had many bitter experiences, media's definetly should stop these kind of attitude towards muslims.

    answers for ur questions:

    1.If arjun and vijayakanth did something wrong then, vijay-murugadoss can also do the same mistake? one more thing arjun/vijayakanth movies have limitation of reach to the masses.

    2.Pakistan and afghanistan is muslim populated countries, but there are christians,sikhs and hindus are also living there.my question is why portraying the villains as they belong to the these countries? i am not saying that pakistan is wonderful country,where all are peace loving.it is one of the most disaster nation in the world. its like developing hatred among the viewers against these countries.

    3.you might be mature enough to not considering all muslims are terrorist, but majority of non-muslims believe that muslims are dangerous/terrorist,and they are not belong to india.honestly you speak with them they will tell the truth, this prejudice comes from the media portrait.
    4.entire nation showed their feeling for treating APJ and srk.
    5.even show muslims as villain of a particular story, not as terrorist,am not saying that all muslims are god fearing and honest/peace lovers and more over no films show hindu terrorism and christian terrorism as there is no christian terrorism in india other than the mass conversion.
    7.their point of view might differ, but i have more experience and they will also experience the same if these kind of portrayal continues.
    8.yes, i admit that the flight was hijacked by muslim terrorist.

    ReplyDelete
  3. நீங்கள் கூறியது 100% உண்மை ....



    இந்த போராட்டத்தால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்குமே தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என்பது என் எண்ணம .


    நான் ஏற்கனவே நினைத்ததை கூறிவிட்டீர்கள்

    ReplyDelete
  4. கோவை&மும்பை என்று இரண்டே உதாரணங்களை வைத்து மட்டுமே புனைவுக்கதை புனைவோர்....

    ஹிந்துத்துவ ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதிகளை வைத்து... நம் நாட்டில் அவர்கள் வரிசையாக நிகழ்த்திய சுமார் பத்து குண்டுவெடிப்புகளை பற்றி படம் எடுக்க யாருக்காவது தில் இருக்கா..? இல்லையே..! ஏன்..? மெஜாரிட்டி மக்களிடம் அது ஓடாது... ஃப்ளாப் ஆகும் என்பதல்ல காரணம்..!

    மெய்யான காரணம் என்னவெனில்... எவனாவது பாகிஸ்தானிலிருந்து குஜராத் வழியே வந்து மாவீரர் ஹேமந்த் கர்கரேயே போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பான் என்ற பயம்தானே...?

    "அவனைப்போல் அசிங்கமாக இன்னொருவன்"..! 'த்தூ....ப்பாக்கி'...!

    ReplyDelete
  5. சரியா சொன்னிங்க தல

    ReplyDelete
  6. அருமை அருமை அருமை நண்பரே
    என் மனதில் உள்ளதை அப்படியே வெளிபடுத்தினிர்கள் .
    இன்று காலை அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்க்கும் முஸ்லிம் நண்பரிடம் கூட
    நீங்கள் கேட்ட 1 கேள்வியை கேட்டேன்.
    நீங்க கேட்ட அனைத்து கேள்விகளும்
    சரியானவையே !
    ஒவ்வொரு கேள்வியும் ..
    அனாவசிய மத பிரச்னையை தூண்டுபவருக்கு செருப்படியாக இருக்கட்டும் .
    இது போன்ற சிலரால் அவர்கள் அனைவரின் மேல் கோபம் வருகிறது .

    தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் .
    உங்கள் கருத்தை வைத்துதான் உங்கள் தளத்தில்
    இந்த சிறந்த பதிவை படிக்க முடிந்தது ..
    உங்கள் கருத்துகள் என் தளத்தில் முக்கியமானவை ..
    தொடரட்டும் உங்கள் உணர்வின் எழுத்துகள் ...

    ReplyDelete
  7. அரசியல் ஆதாயம் பெறுவதற்காக செய்யும் போராட்டங்கள்தான் இதெல்லாம்.

    ReplyDelete
  8. காஸ்மீரிலும் மணிப்பூரிலும் இந்திய ராணுவம் பெண்களை கற்பழிப்பது முதல் காணாமல் போக செய்வதுவரை இந்திய ராணுவம் புரியும் தேச பக்தி செயல்களை பற்றி திரைபடம் எடுக்க தமிழ் திரைபட துறையில் எவருக்காவது துனிச்சல் இருக்கா

    https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/602571_491497524217344_1417254068_n.jpg

    ReplyDelete
  9. இந்த படத்தில் இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லாத ஸ்லீப்பர் செல்ஸ் என்ற வார்த்தையை சொல்லி இருக்குறீர்கள்....ஆனால் ஸ்லீப்பர் செல்ஸ் பற்றி விரிவாக சொல்லவில்லை..சமுகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் வெறுப்பில் உள்ளவர்கள்தான் ஸ்லீப்பர் செல்களாக மாறுகிறார்கள் என இந்த படத்தில் போகிற போக்கில் சொல்லி இருக்கீறீர்கள்

    இந்த சமுகத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெறுப்படைந்தவர்கள் உங்கள் பார்வையில் வெறும் முஸ்லிம்கள் மட்டும்தானா?பிறகேன் நீங்கள் ஸ்லீப்பர் செல்களாக முஸ்லிம்களை மட்டும் காட்டி உள்ளீர்கள்? இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளாக காட்டி கொண்டு இருந்த முஸ்லிம்களை இப்போது இந்தியாவில் உங்கள் ஊரில் உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என மறைமுகமாக பொதுமக்களுக்கு பயமுறுத்தும் விதமாக இப்படத்தில் காட்டி இருக்கீறீர்கள்!

    ReplyDelete
  10. எந்தனையோ படங்களில் இந்துக்களை (99 % படங்களில் ) வில்லனாக காட்டுகின்றனர் . பல படங்களில் கிருத்துவர்களை வில்லனாக காட்டுகின்றனர் . இதற்க்கு அந்த மத அமைப்புகள் எதுவும் எதிர்க்கவில்லையே ?

    Endru ketuleergal Villanaga kaatuvatharkum Theeviravathiyaga kaatuvatharkum niraya vithiyasam irukku bro melum Hinduthuva theeviravatham patri oru padam varattum appothu parunga antha padathin nilamayai

    ReplyDelete
  11. டிஸ்கி... இந்த விஷயத்தை நீங்கள் மேலோட்டமாக மட்டும் பார்க்க கூடாது...

    கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ... நீங்கள் சொல்வது போல் 99% இந்துக்களை வில்லனாக காட்டினாலும் அவர்களை இந்து வில்லன் அல்லது இந்து தீவிரவாதி என கூறியது உண்டா...

    நீங்கள் சொல்வது போல் விமானத்தை கடத்தியது முஸ்லிமாக இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் என கூறுங்களேன்.. ஏன் முஸ்லிம் தீவிரவாதிகள் என கூறுகின்றீர்கள்?

    எங்கே முஸ்லிம் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

    ReplyDelete
  12. என்ன சரியான கேள்வி???....இதில் வேறு correct correct என்று சொல்லும் சிந்தனையற்ற மனிதர்கள்.
    ஒரு முஸ்லிம் மத இயக்குனர் உங்களது தமிழர்கள் அல்லது உங்கள் ஈழத்து தமிழர்களின் போராட்டத்தை வேறுவிதமாக சித்தரிக்கும் படங்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா.. முழு உலகமும் தமிழ் தீவிரவாதிகள் என்று சொல்லும் போது நீங்கள் மட்டும் தமிழ் போராளிகள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
    நீங்கள் எங்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உங்கள் பொழுதுகளை போக்கலாம். இது போன்று பொழுது போக்கிற்காக நாமும் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படங்களை எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  13. உண்மையான முஸ்லீம் எந்த திரைப் படமாக இருந்தாலும் ஆதரிக்க மாட்டான். காரணம் விபச்சாரத்தையும், மது போன்ற தீமைகளையும் கடுமையாக வெறுக்க வேண்டும், அந்த தீமையை செய்பவருக்கு மரணத்திர்குப் பிறகு கடுமையான தண்டனை இருக்கிறது என்று எச்சரித்த ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே. ஆனால் திரைப்படத்தில் அனைத்து தீமைகளும் கொஞ்சம்கூட வெட்க்கமில்லாமல் காட்டப் படுகிறது. எனவே தீமையை பொழுபோக்கு என்று அழைக்காதீர்கள். மத்தை

    ReplyDelete
  14. உண்மையான முஸ்லீம் எந்த திரைப் படமாக இருந்தாலும் ஆதரிக்க மாட்டான். காரணம் விபச்சாரத்தையும், மது போன்ற தீமைகளையும் கடுமையாக வெறுக்க வேண்டும், அந்த தீமையை செய்பவருக்கு மரணத்திர்குப் பிறகு கடுமையான தண்டனை இருக்கிறது என்று எச்சரித்த ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே. ஆனால் திரைப்படத்தில் அனைத்து தீமைகளும் கொஞ்சம்கூட வெட்க்கமில்லாமல் காட்டப் படுகிறது. எனவே தீமையை பொழுபோக்கு என்று அழைக்காதீர்கள். மத்தை

    ReplyDelete
  15. சபாஷ் சரியான கேள்வி.... துப்பாக்கியை தோட்கடிக்கவேணும் என்டதுக்காகா ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு பின்னால் பலமான குழு ஒண்டு செயட்படுகின்றதுபோல! ...........

    ReplyDelete
  16. விஜயகாந்த் மற்றும் அர்ஜூன் பாகிஸ்தானில் உள்ளவர்களை மட்டுமே தீவிரவாதியாகவும் முஸ்லீம்களை நண்பர்களாகவும் தான் காட்டியுள்ளனர். ஆனால் முருகதாஸ் படத்தில் முஸ்லீம் குடும்பத்தில் உள்ளவர்கள் தீவரவாதிகள் எனவும் முஸ்லீம் பெண்கள் அதை ஆதரிக்கின்றனர் என்ற காட்சியும் உருவாக்கியுள்ளனர். மற்றும் விஜய்யின் தங்கையை கொல்லும் முன் அரபிக் வார்த்தைகளை அடங்கிய பேனரை காட்டுவார்கள். இது ஆப்கான் மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் இது போல் செய்வார்கள். ஆனால் இந்தியாவில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை செய்ததில்லை. ஆக மொத்ததில் ஸ்லீப்பர் செல்கள் என்பது முஸ்லீம் சமுதாய மக்களை கலங்கப் படுத்தும் நோக்கத்தோடு உள்ளது. ஏன் முருகதாஸுக்கு தைரியம் இருந்தால் குஜராத் படுகொலைக்கு காரணமான மோடியையும், ஆர்.ஸ்.ஸ்யையும் வில்லனாக காட்டமுடியுமா? இல்லை காட்டி விட்டுத்தான் உயிரோடு இருக்க முடியுமா ? ஒட்டு மொத்த தீவிரவாதம் முஸ்லீம்கள் மட்டும் தானா? இந்து தீவிர வாதம் இல்லையா ?

    ReplyDelete
  17. இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?

    உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும்
    கிழித்தெறியப்படும்,

    ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

    யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

    1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
    ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

    15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

    ReplyDelete
  18. இந்த சொம்பு தூக்கிட்டு நாட்டாம பண்றத விட்டுட்டு வேறு ஏதாவது வேலை பாருங்க சார்!

    இஸ்லாமியர்கள் ஒன்றும் சும்மா பொழுதுபோகாமல் எதிர்க்கவில்லை எல்லாம் காரணத்தோடுதான்!!

    //படத்தை படமாக மட்டும் பாருங்கள்// நாங்க என்ன பப்படமாகவா பார்க்கிரோம்!

    ReplyDelete
  19. என்ன கொடும காந்தி தாத்தா இது ?
    படத்த படமா பாருங்கடான்னா ... அத விட்டுட்டு ....
    அது சரி ....
    ஊனமுற்ற ராணுவ வீரர்களை காட்டினதால ... இளம் ராணுவ வீரர்களுக்கு பொண்ணு கிடைக்கம போக வாய்ப்பிருக்கே இத யாரும் ஏன் கண்டுக்கல ?
    I am waiting ஆங்கிலத்துல பேசவச்சி ஆங்கில மோகத்தை தூண்டும் விதமா படம் எடுத்து இருக்காரே ... அதையும் கவனிக்கவும்

    எம்மதமும் நம்மதம்.

    ReplyDelete
  20. படங்களில் தமிழர்களை வில்லனாக காட்டியதற்காக யாரும் போராட்டம் நடத்தவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை, அதை ஏன் என்களிடம் சொல்கிறீர்கள்? நாங்கள் கேட்பது எங்களை வைத்து படம் எடுத்தது ஏன் என்பதுதான்? இஸ்லாத்தை பற்றி கொஞ்சம் படித்துப்பாருங்கள், அத்தோடு உலகில் நாடக்கும் யுத்தங்களை பாருங்கள், முஸ்லிம்களுடன் போராட்டம் நடத்தி முடிவு காணமுடியாது என்பதை தெரிந்து கொள்வீர்கள், வீணக உங்கள் நிம்மதியை கெடுத்துக்கொள்ளப்போகிறீர்களா?

    ReplyDelete
  21. 99% இந்துக்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம் ..ஆனால் அவர்களை இந்து வாக காட்டியதில்லை. ஆனால் 100% வில்லன்களாக காட்டப்படும் முஸ்லிம்களை முஸ்லிம்களாக கட்டாயம் காட்டி இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரானா துவேஷம் நம் பொது சமூகத்தில் வேர் பிடித்து விட்டது.. மாற்றுவது கடினம். The worst is yet to come.

    ReplyDelete
  22. படதே படமாத்தான் நாங்க பாக்குறோம் ....அதுக்காக நீங்க எங்க சமுகத்தே ஈளிவா பேசிகிட்டே இருப்பிங்க நாங்க பொறுத்துகிட்டு போகனுமா ... நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் yamaha motors tirur பதில் போதுமா இல்லை இன்னும் வேணுமா....நீ எல்லாம் புள்ளைகளுக்கு பாடதே சொல்லி கொடுக்குற ஆசிரியார?

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. நீங்கள் இதற்க்கு முன் விஜயகாந்த் , அர்ஜுன் படங்கள் பார்த்ததே இல்லையா? என்று கேட்டிருகீர்கள்

    பார்த்திருக்கிறோம் சில படங்களுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறோம் இதை இந்த அளவு எதிர்பதற்கு காரணம் உள்ளது .விஜகாந்த் அர்ஜுன் படங்களிலாவது பாகிதான் தீவிரவாதி என்று பாகிதான் காரனை தான் வில்லனாக காட்டுவான் . துப்பாக்கி படத்தில் எவனையு பாகிஸ்தான் தீவிரவாதியாக காட்டவில்லை . ஸ்லீப்பர் செலஸ் என்று ஒரு புதிய வார்த்தையை சொல்லி மறைமுக மாக இந்தியாவில் உள்ள முஸ்லீம்களையே முருகதாய் கூறுகிறான் . உங்கள் பக்கத்துக்கு வீட்டில் கூட இருக்கலாம் என்ற விஷமான வார்த்தையிலிருந்தே இதை நீங்கள் புரியலாம்.மேலும் அதன் தலைவன் ரொம்ப எளிமையாக படகில் வந்து முபையில் இறங்குகிறான். பாகிதநிற்கும் மும்பைக்கும் படகு போக்குவரத்து ஒன்றும் இல்லே இதிலிருந்தும் ஸ்லீப்பர் செல்ஸ் தலைவன் ஒரு இந்திய முஸ்லிம் என்றேமறைமுகமாக காட்டி இருக்கிறான் முருகதாஸ் .மேலும் ஆயிரம் பேரை கொள்ள அவனுங்க உயிரை விடுறானுங்க ஆயிரம் பேரை காக்க நாம் உயிரை விட கூடாதா அவனுங்க அவனுங்க என்று தான் குறிப்பிட்டு சொல்றான் முருகதாஸ்.

    ReplyDelete
  25. 2.பாகிஸ்தான் ஓர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தீவிரவாதிகள் வருவதுபோல காட்டினால் அவர்களை எந்த மதமாக காட்டமுடியும் என்று நண்பர் டிஸ்கி கேட்டிருக்கிறார்

    துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற இயக்கம் பாகிதான் இயக்கம் என்றோ ?அதன் தலைவன் பாகிஸ்தான் காரன் என்று எங்காவது கூறப்பட்டதா சொல்ல போனால் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற இயக்தை பற்றி சரியான் எந்த விளக்கமும் இல்லை அதுவே விஷத்தை கக்கும் ஒரு செயல்.
    அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் என்று பொத்தாம் பொதுவா ஒரு விளக்கம் ஏன் அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் மட்டும் தானா?? ஏன் முஸ்லீம்களை மட்டும் இந்திய அரசிற்கு எதிரானவர்கள் போல் காடிருகான் இந்த பொறம்போக்கு முர்கதாஸ்.

    பாகிஸ்தான் தீவிரவாதி என்று முடித்திருந்தால் இவளோ சர்ச்சைக்கு வேலை இல்லை

    ReplyDelete
  26. 3.படத்தில் தீவிரவாதியாக காட்டுவதால் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என நினைக்கும் அளவு தமிழன் ஒன்றும் கேனையன் அல்ல இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வி வேறு.

    நீங்கள் தான் அனைத்து தமிழர்களுக்கும் முகவர் போல் கூறியுள்ளீர்கள் நண்பா . கேரளாவில் முல்லை பெரியாறு பிரச்னைக்காக எடுக்க பட்ட டேம் என்ற படத்தை ஒட்டு மொத தமிழகமே புறகனிதது தமிழகத்தில் ஓடவிடாமல் செய்தது எதற்காக? என்று தெரியுமா? அதில் கூறியுள்ள கருத்துகளை கேட்டு அணையின் ஓரத்தில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் பீதி அடைய கூடாது என்ற காரணத்திற்காக என்றாவது தெரியுமா? தமிழன் கேனயன் இல்லை என்று புத்திசாளிதனே அந்த படத்தை அனுமதித்து இருக்கலாமே ...

    உங்களை போல அணைத்து தமிழரும் புத்திசாலி என்று எண்ணி உள்ளீர்கள் போலும் தமிழர்கள் பெரும்பான்மையோர் பாமரர்களே என்பதை நண்பர் முதலில் நினைவில் கொள்ளவும் /.இவளு மேதாவி போல் பேசும் நீங்களே தவாறாக புரிந்து இருக்கீங்க இத மோசமான விஷயத்தை ..

    ReplyDelete
  27. 4.அப்துல் கலாம் , ஷாருக்கான் போன்றர்களை அமெரிக்க விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் அவமான அப்டுத்தும் போது கூட இந்த அளவு வேகம் காட்டாதது ஏன்?? ?

    அமெரிக்காவில் .... நீங்கள் எவளோ பரந்த அறிவு கொண்டிருகீங்கனு புரியுது ... அமெரிகாவில் ஒரு முஸ்லீமை சோதனை செய்தான் என்றால் ஒட்டு மொத இஸ்லாமியர்களுக்கு என்ன அவமானம் இற்கு? ஏன் நீங்க போன கூடத்தான் சோதனை செய்வான் ..முஸ்லீம் பேரு இல்லை டிஸ்கி அவர்களை உடனே ரதன கம்பளம் விரித்து ஒன்றும் அவன் வர வேர்க்க மாட்டான்.எவன இருந்தாலும் சோதனை செய்ய சொல்லி அவனுக்கு உத்தரவு அந்த கடைமையை செய்கிறான் இதில் முஸ்லீம்கள் எங்கே அவமானம் படுகிறார்கள் >எதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று புரியவில்லை.

    ReplyDelete
  28. எந்தனையோ படங்களில் இந்துக்களை (99 % படங்களில் ) வில்லனாக காட்டுகின்றனர் . பல படங்களில் கிருத்துவர்களை வில்லனாக காட்டுகின்றனர் . இதற்க்கு அந்த மத அமைப்புகள் எதுவும் எதிர்க்கவில்லையே

    நண்பா மீண்டும் மீண்டும் உங்கள் அறிவை நிருபிகிரீர்கள் .. எல்லா படத்தில் வரும் வில்லனும் தான் இந்து தீவிரவாதி ,இந்து மதத்திற்காக தீவிர வாதம் கிருத்துவ மதத்திற்காக தீவிரவாதம் செய்கிறேன். என்றெல்லாம் எந்த படத்திலாவது பார்திருகீன்களா? தமிழன் முட்டாள் இல்லை என்று கூறிவிட்டு உங்கள் கேள்வி அதற்கு எதரி மறையாக் உள்ளதே நண்பா.

    ReplyDelete
  29. 6 கடவுளை இல்லை என்று சொல்லி படம் எடுத்தால் கூட அதையும் பார்த்து ரசிப்பான் தமிழன்

    நீங்களே மீண்டும் மீண்டும் தமிழன் தமிழன் என்று வேறு பாடு காட்டுறீங்க நீங்க சொல்ற தமிழனின் இஸ்லாமியரும் உள்ளனர் . நாங்களும் தமிழ் மக்கள் தான் சவூதி அரேபியாவிலிருந்து ஒன்றும் குதிக்க வில்லை. அதை முதலில் விளங்கி கொள்ளுங்க. ரசிப்பது நல்ல செயல ஏன் எதிர்க்க துணிவில்லை? தன்னை பாதிக்கும் தவறான கருத்துகளை எதிர்ப்பது எல்லோருக்கும் உள்ள உரிமை .

    ReplyDelete
  30. 7 நேற்று படம் பார்த்த முஸ்லீம் நண்பர்கள் யாரும் இந்த POINT OF VIEW வில் படம் பார்த்ததாக தெரிய வில்லை . அவர்களை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு படமாக தான் பார்க்கின்றனர்

    நீங்கள் உங்களிடம் படிக்கும் நாலு மாணவர்களிடம் கேட்டு அப்படி விளங்கி கொண்டீர்கள் போலும் .அப்படி பொழுது போக்கு படமாக பார்த்திருந்தால் தமிழ் நாடு முழுவதிலிருந்தும் இருபத்திநாலு இஸ்லாம் அமைப்புகளுக்கு புகார்கள் குவிந்திருகாது நண்பா...நிதர்சனம் விளங்காமல் இன்னொருவர் இடத்தில இருந்து நீங்க பேசாதீர்கள்

    ReplyDelete
  31. கந்தகார் விமான கடத்தலை மையமாக வைத்து பயணம் படம் வந்தபோது இதுப்போல சில விமர்சனம் வந்தது அந்த விமானத்தை உண்மையில் கடத்தியது யார்?

    உண்மையில் கடத்தியது யார் இஸ்லாமியர்கள் தானே என்ற தொனியில் உங்கள் கேள்வி உள்ளது. மீண்டும் மீண்டும் நீங்கள் இஸ்லாமியர் மீது எதோ கால்புணர்ச்சியோடு கேள்விகள் கேட்பது போல தோன்றுகிறது . அதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று தெளிவாக குறிப்பிட்டு ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியை தப்ப வைக்க பாகிதான் தீவிரவாதிகள் செய்யும் கடத்தல் என்று தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்கள் மேலும் அதே படத்தில் ஒரு பாத்திரம் இவளோ பிரச்சனையும் பாபர் மசூதி இடிப்பு பிறகுதான் சொல்லுமே அது உங்களுக்கு விளங்க வில்லையா .அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வேறுபாடு நண்பர் டிஸ்கி அவர்களே ..

    ReplyDelete
  32. சாமியார்களை கிண்டல் செய்து , விமர்சித்து எத்தனையோ படம் வந்தது அதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே

    உண்மையில் அந்த சாமியார்கள் நலவர்கள் என்றால் நிச்சயம் எதிருப்பு வந்திருக்கும் ...நீங்கள் எதிர்க்காமல் இருப்பதால் நாங்கள் எதிர்க்க கூடாது என்று நினைப்பது தவறு நண்பா.. உங்க அம்மாவை தவறாக கூறினால் நான் எதிர்க்க மாட்டேன் என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?

    ReplyDelete
  33. இன்னும் படமே வெளி வராத நிலையில் விஸ்வருபம் படத்திற்கு எப்போதே எதிர்ப்பது சரியா?

    கமலின் வேஷம் ஏற்கனவே உன்னை போல் ஒருவன் , ஹேராமில் வெளுத்து விட்டது நண்பா. இப்போது அவன் காட்டும் டிரைலரிலும் அதிகமாக முஸ்லீம் கலைதான் சித்தரித்து தான் காட்டுகிறான் . அவனுக்கு எச்சரிகையாக எதிர்ப்பு குரலே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...