பலபெயர்கள் எப்படி வந்தது ஏன் வந்தது என நமக்கு தெரியாது ஆனாலும் நாம் தினமும் அதை பயன்படுத்தி வருகிறோம் . அப்படி பட்ட சில பெயர்களின் காரணத்தை நாம் இன்று பாப்போம் .
கடிகாரம்:
"கடிகை' என்றால் "நாழிகை' என்று பொருள். நாழிகையை அளக்கும் கருவி ஆரமாக வந்தபோது ""கடிகாரம்'' என்ற சொல் தோன்றியிருக்கலாம்.
கெஜட்:
1566-ஆம் ஆண்டு இத்தாலிய அரசாங்கத்தின் மிக முக்கியமான செய்திகளைப் பெரிய
பலகையில் எழுதி வெனிஸ் நகரத்தின் முக்கியமான வீதிகளில் குறிப்பிட்ட
இடங்களில் வைத்தார்கள். அதைப் பார்த்துப் படிக்கும்போது மக்களிடமிருந்து
கட்டணமாக ""கெஜட்டா'' என்னும் இத்தாலிய நாணயம் வசூலிக்கப்பட்டது.
பின்னர்தான் அரசாங்கச் செய்திப் பத்திரிகைக்கு ""கெஜட்'' எனப் பெயர் வந்து
அதுவே நிலைத்துவிட்டது.
பாண்டேஜ்:
பண்டைக்காலத்தில் எகிப்தில்
பிணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகப் பிணத்தின் தலை முதல் கால்வரை போர்த்தி
வைக்கும் பழக்கத்திலிருந்துதான், இன்று மருத்துவ உலகில்
பழக்கத்திலிருக்கும் "பாண்டேஜ்' முறை வந்தது.
ஏக்கர்:
நிலத்தின்
அளவைக் குறிக்க ஏக்கர், ஏக்ரா என்று சொல்கிறோம். அந்தச் சொற்கள்
வழக்குக்கு வந்த விதம் இப்படித்தானாம். ""யோக்'' என்ற ஆங்கிலச் சொல்லின்
மொழிபெயர்ப்பே ஏக்கர், ஏக்கரா என்பது. "யோக்' என்றால் "நுகம்' என்பது
பொருள். நுகத்தில் கட்டிய மாட்டைக் கொண்டு விடியற்காலை முதல் இருட்டும்வரை
ஓட்டக்கூடிய நில அளவிற்குத்தான் "ஏக்கர்' என்ற பெயர் ஏற்பட்டது.
தரங்கம்பாடி - ஒரு சிறு விளக்கம்:
"தரங்கம்பாடி' என்பது ஒரு கடற்கரை கிராமம். "தரங்கம் பாடி' என்பது தனித்
தமிழ். "தரங்கம்' என்றால் அலை. அலை ஓயாமல் பாடிக் கொண்டிருக்கும் பாடி
தரங்கம் பாடி. "பாடி' என்பதற்கு ஊர் என்பதும் பொருள்.
புயல்:
புயலுக்கு
ஆங்கிலத்தில் "சைக்ளோன்' என்று பெயர் எப்படி வந்தது என்றால் "சைக்ளோன்'
என்ற பதத்திற்கு கிரேக்க மொழியில் ""பாம்புச் சுருள்'' என்று பெயர். காற்று
சுழன்று, சுழன்று அடிப்பதால் அதற்கு அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வெப்பப் பிரதேசங்களில் வீசும் சுழற்காற்றுகளையே "சைக்ளோன்' என்று
சொல்கிறோம்.
மனிதன்:
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது
பொருள். நினைக்கும் கருவி மனம். மனத்தையுடையவன் "மனிதன்'. தமிழில்
"மனிதன்', வடமொழியில் "மநுஜர்', ஆங்கிலத்தில் "மேன்' - இவையெல்லாம் "மன்'
என்ற பகுதியாகவே பிறந்தன.
பினாங்:
மலேசிய மொழியில் "பினாங்'
என்றால் "வெற்றிலை' என்று பொருள். தமிழர்கள் முதன்முதலாக இங்கு "வெற்றிலை
பாக்கு' வியாபாரம் நடத்த வந்திருந்தாலும் பினாங்கில் வெற்றிலைதான் அதிகமான
விளைபொருள். அதனால் "பினாங்' என்ற பெயரே அந்நகரத்திற்கு நிலைத்துவிட்டது.
லைப்ரரி:
நூல் நிலையத்திற்கு ஆங்கிலத்தில் "லைப்ரரி' என்று பெயர். "லிபர்' என்ற
லத்தீன் சொல்லின் மூலமாகப் பிறந்ததுதான் "லைப்ரரி'. "லிபர்' என்னும்
சொல்லுக்கு "நூல்களின் தொகுப்பு' என்று பெயர்.
பேண்ட்:
முதன்முதலாக ஜப்பான் நாட்டில் "பாண்ட்லூ' (PANTLU)என்ற என்ற சர்க்கஸ்
கோமாளிதான் பெரும்பாலோர் இன்று அணிந்து வரும் "PANT' என்று சொல்லக்கூடிய
முழுக்கால் சட்டையை அணிந்து வந்தார்கள். அப்போது முதல் முழுக்கால்
சட்டைக்கு (PANT) "பாண்ட்' என்ற பெயர் ஏற்பட்டது.
வாட்டிகன்:
கிறிஸ்துவ மதத் தலைவர் போப்பாண்டவர் வசித்து வரும் நகருக்கு "வாட்டிகன்'
என்று பெயர். "வாட்டிகன்' என்றால் ""கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச்
செய்திகளைப் பரப்பும் இடம்'' என்று பொருள்.
பாட்மிண்டன்:
பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம்
ஆண்டுக்கு முன் பூனா (POONA)என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு
விளையாட்டாகும். இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள்
நாட்டிற்குச் சென்று "பாட்மிண்டன்' என்ற எஸ்டேட் பகுதியில்
விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராகவே அமைந்துவிட்டது.
வாலிபால்:
வாலி (VOLLEY) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாறி, மாறி அடித்தல் என்று
பொருளாகும். அந்த அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர்தான் "வாலிபால்'
என்பதாகும்.
ரூபாய்:
"ரூபாய்' என்ற சொல் "ரூப்யம்' என்ற
வடமொழிச் சொல்லில் மருவி வந்ததாகும். கௌடில்யர் தன் அர்த்த சாஸ்திரத்தில்
""ரூப்யரூபம்'' என்று வெள்ளி நாணயங்களுக்கும், ""தாமிர ரூபி'' என்று செப்பு
நாணயங்களுக்கும் பெயர் வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
டையமண்ட்:
வைரத்தை ஆங்கிலத்தில் டையமண்ட் (DIAMOND) என்று கூறுவார்கள். இந்தப்
பெயர் ""உடைக்க முடியாதது'' என்றும் அர்த்தம் கொண்ட கிரேக்கச்
சொல்லிலிருந்து வந்தது.
நன்றி : வாட்ஸ்அப்
இதையும் படிக்கலாமே ?