> என் ராஜபாட்டை : May 2013

.....

.

Wednesday, May 29, 2013

சிரிக்க முடியுமா ? முடியாதா ?



உங்களை சந்தோஷபடுத்தசில படங்கள் உங்கள் பார்வைக்கு . இவையனைத்தும் முகபுத்தகத்தில் இருந்து சுடபட்டவையாகும் . எனக்கு சுடுறது பிடிக்காது (!!!!) இருந்தாலும் உங்களுக்காக சுட்டுள்ளேன் . பிரித்திருக்கா என சொல்லுங்கள் .





















 ஒரே உதை எங்கே விழுவேணு தெரியாது ...

 


வெய்யில் அதிகம் அதான் இப்படி ....




பைக் எப்படிடா தான்க்குது ?




என்ன ஒரு ஐடியா ??




சரியான தீனி பண்டாரம் போல ....




நாங்கலாம் யாரு ????/



 உண்மைதானே ????




எப்பூடி ???


பாவம்டா நீ !!!!



டிஸ்கி : படங்கள் பிடித்திருக்கா ??ரசித்திர்களா ? சிரித்திர்களா ? அப்ப ஓட்டை போட்டுட்டு கமென்ட் போடலாமே ???


இதையும் படிக்கலாமே




Monday, May 27, 2013

ANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான APPLICATIONS.


 


இன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாவது ANDROID MOBILE தான் . அதில் பயன்படுத்த GOOGLE தனது PLAY STORE இல்  நிறைய FREE APPLICATIONS தருகிறது . அதில் மிகவும் முக்கியமான , கண்டிப்பாக நமது போனில் வைத்து இருக்க வேண்டிய இரண்டு  அப்ளிகேஷன்களை பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம் . இவை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் .



ஆன்ரோயிட் தொலைபேசிகளுக்கான அசத்தலான Back Up அப்ளிகேஷன்.

இதன்மூலம் ஆன்ரோயிட் தொலைபேசியில் உள்ள 

SMS, Contacts, 

Call Logs, 

 Calendar, 
 
Application 

போன்றவற்றை இலகுவாக Back up எடுத்துக்கொள்ளலாம்

FOR DOWNLOAD :



========================================================================

ஆன்ரோயிட் மொபைலில் பயன்படுத்த  மிகவும் உபயோகமான அப்ளிகேஷன் : JuiceDefender
ஆன்ரோயிட் தொலைபேசிகளில் பேட்டரி பாவனையின் நேரத்தை அதிகரிப்பதற்கான அப்ளிகேஷன் இது. தேவையற்ற நேரத்தில் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதன் மூலம் பேட்டரி பாவனைக்காலத்தை அதிகரிக்கிறது..


FOR DOWNLOAD :

https://play.google.com/store/apps/details?id=com.latedroid.juicedefender&feature


இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

தயவுசெய்து இதை படிக்காதீங்க .. 

 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

 

Tuesday, May 21, 2013

விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ???




தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து மாஸ் என்றால் அது விஜய் தான் . சமிபத்தில் வந்த துப்பாக்கி படம் 100  கோடியை தாண்டி வியாபாரம் ஆனது . அடுத்து தலைவா என்ற படத்தில் நடித்து வருகிறார் .
தலைவா படம் விஜயின் அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லபடுகிறது . இந்த படத்தில் மக்கள் போற்றும் தலைவனாக விஜய் நடிக்கிறார் என சொல்கிறார்கள் .
 
அரசியல் ஆசை விஜயை விட அவர் அப்பாவுக்கு அதிகம் உண்டு . கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதரவாக விஜய் ரசிகர்களை களம் இறக்கினார் . அடுத்து நாடாளுமன்ற தர்தல் வருகிறது . இந்த நேரத்தில் விஜயின் பலத்தை காட்ட வேண்டும் என நினைத்து தான் தலைவா படம் உருவாகிறது என சொல்கிறார்கள் . 

 சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் திருச்சியில் 15 ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி, 51 சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அப்போது அவரிடம் நீங்கள் செய்து வரும் சமூக பணிக்கு பின்னணியில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய், ஏழைகளுக்கு உதவி செய்வதால், என் மனசுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது.

அதனால் தான் தொடர்ந்து என்னால் இயன்ற அளவு ஏழை மக்களுக்கு உதவி வருகிறேன் என்றும் இதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
ஆனால் நேற்று சில ஊடகங்களில் விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் நுழைந்து மக்கள் சேவை செய்ய போவதாக வந்துள்ளது . ஆனால் இது உறுதிபடுத்த படாத தகவல்தான் . விஜய் சினிமா , அரசியல் இரண்டிலும் கலக்க வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் ஆசை .
 
ஆனாலும் அவர் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை . ரஜினி போல இல்லாமல் ஏதாவது ஒரு சரியான முடிவு எடுப்பார் என அவர் ரசிகர்கள் நம்புகின்றனர் . பார்ப்போம் என்ன நடக்க போகிறது என ? 

இதையும் படிக்கலாமே ?
 
இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 
தத்துவம் மச்சி தத்துவம்

Monday, May 20, 2013

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .







இன்று அனைவர் கையிலும் மொபைல் உள்ளது . மொபைல் வாங்குவதை  விட  கஷ்டமான காரியம் அதுக்கு தீனி (RECHARGE) போடுவது . மாதா மாதாம் SMS BOOSTER, RATE CUTTEER வேறு போடவேண்டும் . GPRS பயன்படுத்த தனி  BOOSTER போடவேண்டும் . உங்கள் கஷ்டத்தில் கொஞ்சம் பங்க்கு போட்டு கொள்ள வந்துள்ளது சில இணைய தளங்கள் . இதில் நீங்கள் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .

  1. YBOX

இதில் இணைந்த உடன் உங்கள் கணக்கில் ஒரு தொகை ஏறும . இதில் இணைவது மிகவும் எளிது .

நன்மைகள் :

·        இலவசமாக SMS அனுப்பலாம் .

·        உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் 1 ரூபாய் சேர்த்து கொள்ளலாம் .

·        10 ரூபாய் சேர்ந்ததும் உங்கள் மொபைல் க்கு RECHARGE செய்து கொள்ளலாம் .

இதில் இணைய : http://www.ypox.com


  1. ULTOO

வெகு விரைவில் பிரபலமான தளம் இது . இந்த தளத்தில் இணைந்த உடன் ஒரு ரூபாயும் , உங்கள் இ மெயில் சரியானது என நிருப்பித்தால் 2 ரூபாயும் கிடைக்கும் .

நன்மைகள் :

    • இலவசமாக SMS அனுப்பலாம் .

    • நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSக்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா வரவு வைக்க படும் .

    • உங்கள் நண்பர்களை இணைக்கலாம்

    • தினமும் LOGIN BONUS ஆக பத்து பைசா வழங்கபடுகிறது .

இதில் இணைய : http://www.ultoo.com



  1. AMULYAM

மிக நீண்ட வருடமாக உள்ள நம்பிக்கையான தளம் . இதுவரை ஒரு கோடிக்கு மேலான ரூபாயை இலவசமாக வழங்கி உள்ளது .

நன்மைகள் :

·        இதில் உள்ள விளையாட்டுகளை விளையாட்டால் உங்கள் கணக்கில் பணம் ஏறும .

·        இவர்கள் அனுப்பும் இ மெயிலை படிப்பதம் முலமும் பணம் சம்பாதிக்கலாம் .

·        உங்கள் நண்பர்கள் இணைவதன் முலமும் சம்பாதிக்கலாம் .

·        அவ்வாறு இணைந்த நண்பர்கள் ஏதேனும் OFFER FULFILL செய்தாலும் உங்களுக்கும் கமிஷன் கிடைக்கும் .

·        நீங்களே விளையாட்டினை உருவான்க்கலாம் . அது தெரிவு செய்ய பட்டால் பணம் உண்டு .

இதில் இணைய : http://www.amulyam.in 



இதையும் படிக்கலாமே :









Saturday, May 18, 2013

நேரம் : விமர்சனம்





ரெட் ஜெயன்ட் வெளியிடு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியாதால் இந்த படம் பார்க்க போனேன் . தியட்டரில் 6 மணிக்கு படம் ஆனால் 6.15 க்குதான் போனேன் . உள்ளே என்னை சேர்த்து மொத்தம் 6 பேர் தான் . நமக்கு நேரம் சரியில்லை என நினைத்து படம் பார்க்க துவங்கினேன் .

கதை

ஒரே நாளில் நடக்கும் கதை . ஹீரோ நவீன் வில்லன் வட்டி ராஜா விடம் வாங்கிய கடன் , தங்கை கணவனுக்கு தரவேண்டிய வரதடசனை இவை இரண்டையும்  மாலை 5 மணிக்குள் தரவேண்டும் இத்துடன் தன் காதலி தனக்காக வீட்டை விட்டு வந்துவிட அவளை அவள் தோழி வீட்டில் இருக்க சொல்லி 5  மணிக்கு அழைத்து செல்கிறேன் என சொல்கிறான் . வேறு ஒருவன் தர வேண்டிய பணத்துக்காக தவறுதலாக ஹீரோயினை கடத்தி 5  மணிக்குள் வட்டி ராஜா பணம் கேட்க இவை அனைத்தும் எப்படி முடிகிறது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்

  • ஹீரோ , ஹீரோயின் என அதிக புது முகங்கள் . (இதுவே பாயிண்ட் )

  • தேவையில்லாத பாடல்கள் இல்லாதது .

  • பஞ்ச் டயலாக் , குத்து பாட்டு , இரட்டை வசனம் ஏதும் இல்லாதது .

  • 1 மணி 57 நிமிடத்தில் படத்தை முடித்தது .

  • இறுதியில் வரும் நாசர் பேசும் வசனங்கள் .

  • படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஒரே சம்பவத்தில் தொடர்புடையதாக காட்டும் யுக்தி .
  • காதல் காட்சிகளை வள வள என இழுக்காமல் முடித்தது .

  • கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் .


- பாயிண்ட் :

  • சரியான விளம்பரம் இல்லாததால் இப்படி ஒரு படம் வருவதே தெரியவில்லை .

  • நாசர் வில்லனா , காமெடியனா என தெளிவில்லாமல் உள்ள குழப்பம் .

  • ஹீரோ ஆரம்பத்தில் வேலை போய்விட்டது என்கிறார் , ஆனால் அடுத்து போகும் நேர்முக தேர்வில் முன் அனுபவம் இல்லை என்கிறார் எப்படி ?

  • ஒரு I T  கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு 50,000 ரூபாய் ஒரு பெரிய தொகையா ?

  • ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சில இடங்களில் டல்லாக உள்ளது .( தியட்டர் சரியில்லையோ ??)

  • பின்னணி இசை சில காட்சிகளில் வசனத்தை மறைக்கிறது .



முடிவா !!!!!

படம் துவக்கம் மிக மெதுவாக போகிறது ஆனால் இடை வேலைக்கு பின் வேகமாக உள்ளது .
நேரம் (தியட்டரில்) இருந்தால் பார்க்கலாம் .


ஆனந்த விகடன் மார்க் : 36

குமுதம் : பரவாயில்லை

ராஜபாட்டை மதிப்பீடு : 2.5 / 5


Monday, May 13, 2013

ANDROID மொபைலில் GPRS DATA மற்றும் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.






எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :

                 -- பாதிக்கபட்ட ஒருவன் --
ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .


இது கூகிள் ப்ளேயில் இலவசமாக கிடைக்கும் . இதில் 5 முறைகள் உள்ளன . உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெரிவு செய்யலாம் .

  1. NORMAL MODE
  2. GENERAL POWER SAVING MODE
  3. INTELLIGENT POWER SAVE MODE
  4. SUPER POWER SAVER MODE
  5. ADVANCED CUSTOMIZED MODE

இதில் முதல் வகையில் சாதாரண நிலையில் உங்கள் போன் இருக்கும் . இரண்டாவது வகை நீங்கள் போனை பயன்படுத்த பொழுது GPRS, GPS, DISPLY போன்றவற்றை நிறுத்திவிடும் . இதனால் பேட்டரி மற்றும் இன்றி உங்கள் GPRS DATA பயன்பாடும் குறைக்க படுகிறது .கடைசி முன்று வகைகளும் உங்கள்       இஷ் டத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம் .

பயன்கள் :

  1. இது இலவச மென்பொருள்
  2. போன் நினைவகத்தில் (PHONE MEMORY) கொஞ்சம் தான் எடுத்து கொள்ளும் .
  3. எளிதில் மாற்றலாம்
  4. உங்கள் GPRS DATA வை தேவையில்லாமல் போன் பயன்படுத்த அனுமதிக்காது .
  5. பாட்டரி லைப் நீண்ட காலத்துக்கு வரும் .
  6. மிகவும் குறைந்த அளவு சார்ஜ் இருக்கும் போது உங்களை எச்சரிக்கும் ( BELOW 20 %)


இதையும் படிக்கலாமே :



Wednesday, May 8, 2013

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்








இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.


இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .






அத்தனைக்கும் ஆசைப்பட்டு



சே குவாரா



என் இனிய இயந்திரா


காமராஜர் 




காரல்மார்க்ஸ் 



மனசே ரிலாக்ஸ் பிளிஸ் 


==============================================
 படித்து பாருங்கள் :




 ========================================================================

விரைவில் : பென் டிரைவ் மூலம் அடுத்தவர் password ஐ சுடுவது எப்படி ?