
இணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா? ஆங்கிலத்தில் கற்கவேண்டுமா? தமிழில் கற்க வேண்டுமா? தமிழ் விளக்கவுரையுடன் கற்கவேண்டுமா? அல்லது தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஆங்கில விளக்கவுரையுடன் கற்க விரும்புகின்றீர்களா? பிற மொழிகளில் கற்க விரும்புகின்றீர்களா?
எப்படி விரும்புகின்றீர்களோ அப்படியெல்லாம் உங்கள் வசதிகேற்பக் கற்கலாம்.
விரும்பி கற்க விரும்புவோர் எவரும் இருந்தால் அவர்களுக்காவது பரிந்துரைக்கலாம் அல்லவா? இதோ அதற்கானத் தளங்கள்.
திருக்குறள் தமிழில்
http://kural.muthu.org/திருக்குறள் ஆங்கிலத்தில்
http://nvkashraf.co.cc/nvashraf/kur-eng/closeindex.htmதிருக்குறள் தமிழில் எழுதப்பட்டு அதற்கான விளக்கவுரைகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கே சொடுக்கிச் செல்லுங்கள்.
இன்னுமொரு சுட்டி:
http://www.thirukkural.com/திருக்குறள் தமிழில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தளம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் குறள்களுக்கு ஆங்கிலத்திலேயே விளக்கவுரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
http://acharya.iitm.ac.in/cgi-bin/show_kural_ad.pl?1இன்றைய புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாமலும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் திருக்குறள் கற்பிப்பதானால், இதோ இத்தளத்தை பரிந்துரையுங்கள். தமிழிலும், தமிழ் சொற்களை தமிலிங்கிலீஸிலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆங்கிலத்திலும் ஆங்கில விளக்கவுரையும் உள்ளது.
http://www.shaivam.org/siddhanta/sanga_kural.htmபன்னாட்டு மொழிகளில் திருக்குறள்
35 பிற மொழிகளில் இத்தளத்தில் திருக்குறளை மொழிமாற்றியுள்ளனர். அதில் அரபி, கொங்கணி, மராத்தி, சவுராத்திரா, லத்தீன், பிரஞ்சு, இந்தி, கன்னடா, ரஸ்யா, ஜப்பனீஸ், சைனீஸ், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இங்கே பார்க்கலாம். அல்லது உங்களுக்கு தெரிந்த வேற்று மொழி நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm