> என் ராஜபாட்டை : October 2013

.....

.

Thursday, October 31, 2013

ஆரம்பம் : "அதிரடி " விமர்சனம்

தல அஜித் , ஆர்யா , நயன் தாரா , டாப்சி என பெரிய நடிகர் பட்டாளங்களும் , பில்லா வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் பலரை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் ஆரம்பம் . 

கதை :

புல்லட் புருப் ஊழலில் சிக்கும் ஒரு அரசியல்வாதி , அவரின் பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு இந்திய அரசிடம் அளிக்கும் கதை . இதற்க்கு கம்பியுட்டரில் புகுந்து விளையாடும் ஆர்யா எப்படி உதவுகிறார் ,டாப்சி யார் , நயன்தாரா யாருக்கு ஜோடி என்பதை வெண்திரையில் பார்க்கவும் . முழுகதையும் சொல்ல வேண்டாம் என தான் சொல்லவில்லை .


+ பாயிண்ட் :

அஜித் நடிப்பு . தனது சக நடிகர்களை விட்டு தன்னைபுகழ்ந்து கொள்ளும் பல நடிகர்களுக்கு மத்தியில் அனைவருக்கும் இணையான முக்கியத்துவம் தந்து நடித்தத்தர்க்கு பாராட்டலாம் .


கார் சேசிங்க காட்சியில் தானே நடித்தது .

நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மெசேஜ் உள்ள கதை .

இறுதி காட்சியில் அஜித் பேசும் வசனங்கள் .

 சமகாலங்களில் நடந்த சில அரசியல் கேலி கூத்துகளை காட்டியது ( வெளியுறவுத்துறை அமைச்சர் மேசையில் தேசிய கொடி தலைகிழாக இருந்தது .)

பாடல்கள் படமாக்கபட்ட விதம் .

பின்னணி இசை .

ஆர்யாவின் துள்ளல் நடிப்பு .

டாப்சியின் மேக்கப்


- பாயிண்ட்ஸ் :

ஆங்கில படமான சுவர்ட் பீஷ் இல் இருந்து சில காட்சிகளை சுட்டது .


காமெடி காட்சிகள் குறைவு .

நயன்தாராவை கொஞ்சம் (!!) கிழவி போல காட்டியது .

மன்க்காத்தாவை நினைவு படுத்தும் 200 கோடி கொள்ளை .


மொத்தத்தில் :

இது தல ரசிகர்களுக்கு அதிரடி திபாவளி என்பதில் ஐயமில்லை .

விஜய் ரசிகர்கள் சில நாட்கள் வயிற்று எரிச்சலடுடன் இருப்பார்கள் .

"நல்ல பக்கா ஆக்க்ஷன்  படம் "


ஆனந்த விகடன் :  44

குமுதம் : நன்று 

ராஜபாட்டை : 8/ 10

(மயிலாடுதுறையில் ரத்னா , கோமதி இரண்டில் வந்துள்ளது )

Tuesday, October 29, 2013

இந்த தீபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா ?

இந்த திபாவளிக்கு நமது வெட்டி பிளாகர் சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளோம் . கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         நஸ்ரியா வெடி.

இந்த வெடிமுழுவதும் நன்றாக துணியை சுற்றி திரி மட்டும் தெரியும் வண்ணம் வெடிக்க வேண்டும் . இல்லை என்றால் வெடிக்காது நம்மை பார்த்து நையாண்டி செய்யும் . பதிவர் ஆ.வி க்காக ஸ்பெஷல்லாக செய்தது .

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது காப்பி டம்பளர் வைத்தால்தான்  வெடிக்கும்.

3.      ஆரூர் மூனா வெடி:

இந்த வெடியை பக்கத்துல போய் "அரே ஊ சம்போ சத்தமா சொல்லணும் . அப்பத்தான் வெடிக்கும் .

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும். பின்னணி இசை வைத்தால் நலம் .

6.      காங்கிரஸ்  புஷ்வாணம்  :

இதை பற்றவைக்கும் முன் அருகில் சில்லறை காசு வைக்கவேண்டும் . இத்தாலியில் இருந்து சிக்னல் இருந்தால்தான் எரியும் .

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

இது நம்ம வீட்டில் வெடிக்குமா , அடுத்த வீட்டில் வேடிக்குமானு தெரியாது . பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்).

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.

     12. காமெடி கும்மி வெடி :

                    இது எதுக்காக வெடிக்கும் , யார் மேல வேடிக்கும்னே தெரியாது . 
                பத்தவச்சவங்க மேலேயே வெடிக்கும் . வெடிக்காட்டி சிரிப்பு சத்தம்
               வரும் . யாருக்கும் தொல்லை இல்லாத வெடி .
    
    13. கண்ணாடி மச்சான் "சீனு " வெடி 

               வெடிக்கும் முன் தான் எப்படி வெடிக்க போகிறேன் என 15 பக்கத்துக்கு விளக்கம் சொல்லிவிட்டு தான் வெடிக்கவேண்டும் . அப்பத்தான் வெடிக்கும் . பெண்கள் வெடித்தால் உடனே வெடிக்கும் என்பது இதன் ஸ்பெஷல் .


  டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.Thursday, October 24, 2013

கதம்பம் 24-10-13                  மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுக்காக  கதம்பம் .போராட்டம் :அது என்ன விசித்திரம் என்று  தெரியவில்லை நமது நாட்டில் அரசியல்கட்சிகள் நடத்தும் எந்த போராட்டமும் ( ரயில் மறியல் , பஸ் மறியல் , சாலைமறியல் ) அந்த கட்சி தலைவர்கள் பிறந்தநாள் அல்லது அவர்கள் குடும்ப விழா நடக்கும் நாளில் மட்டும் நடப்பதில்லை . அவர்களுக்கு வசதியான நாளில் வைத்துவிட்டு அப்பாவி மக்களைத்தான் கஷ்டபடுத்துகின்றனர் . 

அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கூட நம்ம ஊர் பஸ்சை  மறைத்துதான் நடத்துகிறார்கள் . காங்கிரஸ் கூட தான் கூட்டணி என முடிவு சொல்லிவிட்டு அவர்களை எதிர்த்து ரயில் மரியலாம் . இன்னும் பல தலைவர்கள் மக்களை ஒன்னும் தெரியாத மடையர்கள் என்றே நினைக்கிறார்கள் . 


பார்த்த படம் :பலவருடங்களுக்கு முன் கேட்ட , இப்பவும் பார்க்க நினைத்த படம் "முகமது பின் துக்ளக் " . YOUTUBE இல் வேறு எதோ தேடும் போது கிடைத்தது . பிரின்ட் சரியில்லை என்றாலும் , சோ வின் பல வசனங்கள் செம . நிறைய வனங்கள் இன்றைய அரசியல் நிலைக்கும் ஒத்து  வர கூடியவை தான் .

அவற்றில் சில :

          : இதுவரை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயக்கவைதவர்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை . நானும் செய்யபோவதில்லை . எனவே எனக்கு ஒருமுறை ஓட்டு போடுங்கள் "


          " அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவன் அரசியல்வாதி
தனது அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவன் தலைவன் "

        "மக்கள் ஒரு பிரச்சனையை பற்றி தீவிரமாக பேசுவார்கள் . அடுத்த பிரச்சனை வந்துவிட்டால் முந்தய பிரச்சனையை மறந்துவிடுவார்கள் "

      "நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாருவர்கள் என தெரியும் இப்படி இவ்வளவு வேகமா மாறுவாங்கன்னு தெரியாது "

முடிந்தால் பாருங்கள் .


பார்த்து நொந்த படம் :


என் வாழ்நாளில் இரண்டு படங்கள் மட்டுமே பாதி பார்பதுக்குள்  தூக்கம் வந்தது . ஒன்று யா யா . மற்றது தனுஷின் "நையாண்டி ". படம் பார்க்க வருபவர்களை நையாண்டி செய்ய போகிறோம் என சிம்பாலிக்கா சொல்லத்தான் இப்படி பெயர் வைத்தார்களோ என்னவோ ,படம் செம போர் . இதுல நஸ்ரியா இடுப்பு பிரச்சனை வேறு . போங்கடா நீங்களும் உங்க படமும் .

படித்த புத்தகம் :


பதிவர் சந்திப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வைத்திருத்த ஸ்டாலில் "ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்  " என்ற புத்தகம்  வாங்கினேன் . இபோதான் படிக்க நேரம் வந்தது .

அதை படித்தபின் ஒரு கொலை வழக்கில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளது . நீதி துறை எப்படி இதை கண்டுகொள்ளாமல் உள்ளது என ஆச்சர்யமாக உள்ளது . உண்மையான காங்கிரஸ் காரர்கள் இதைப்படிக்க வேண்டும் . அப்புறம் சத்தியமா அவன் காங்கிரசில் இருக்கமாட்டன் .

ரசித்தது :


வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம்
ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம்
ஆச்சு சார். இந்தா தரேன்
அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த
ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்ட
எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும்
இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான்
எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க
பேசிக்கலாம்.

இதையும் படிக்கலாமே :

Saturday, October 19, 2013

தெரியுமா ?

தெரியுமா ?? என்னைபோல பல பதிவர்களுக்கு தெய்வம் இவர் . ஆமாம் இவர்தான் காப்பி பேஸ்ட்
கண்டுபிடித்தவர் 
Lawrence G. Tesler (Larry Tesler)  

Inventors of Computer Hardwares: -


1:Keyboard— Herman Hollerith, first keypunch  devices in 1930’s
-
2:Transistor— John Bardeen, Walter Brattain & Wiliam Shockley ( 1947-48)
-
3:RAM— An Wang and Jay Forrester (1951)
-
4:Trackball— Tom Cranston and Fred Longstaff (1952)
-
5:Hard Disk— IBM , The IBM Model 350 Disk File (1956 )
-
6:Integrated Circuit— Jack Kilby & Robert Noyce ( 1958)
-
7:Computer Mouse — Douglas Engelbart (1964)
-
8:Laser printer— Gary Starkweather at XEROX in1969.
-
9:Floppy Disk— Alan Shugart &IBM( 1970)
-
10:Microprocess­or— Faggin, Hoff & Mazor – Intel 4004 (1971)

List of Facebook Shortcut Keys
Ctrl + Alt + 0 — Help

Ctrl + Alt + 1 — Home
 
Ctrl + Alt + 2 — Timeline
 
Ctrl + Alt + 3 — Friends
 
Ctrl + Alt + 4 — Inbox
 
Ctrl + Alt + 5 — Notifications
 
Ctrl + Alt + 6 — Account Settings
 
Ctrl + Alt + 7 — Privacy
 
Ctrl + Alt + 8 — About
 
Ctrl + Alt + 9 — Terms
 
Ctrl + Alt + m — New Message                      உண்மைதானே ???/
                                                                      அடபாவிகளா ...

                     மனமிருந்தால் மார்க்கம் உண்டு
படித்து பாருங்கள் :


FACEBOOK TRICKS 2013
 

Wednesday, October 9, 2013

திருமணம் ஆகாத ஆண்களுக்கு ...

சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா சூப்பர் மேட்டருங்க. மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு...
  உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...

தொகுதி 1

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 


J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48

S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள்
பெயரில் காணப்படும் எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. (கூட்ட
வேண்டாம்..).(உதாரணமாக...Kannan - 60 20 46 46  20 46 )
பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால்
24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

பின்னர் பெற்ற எண்  தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்க வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை  வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22


J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24


S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Try to Read 


Monday, October 7, 2013

ஆரம்பம்
இப்போ நாம பதிவில் பார்க்க போவது நம்ம தல நடித்து திபாவளி அன்று   வெளிவர இருக்கும் ஆரம்பம் படம் பற்றிய செய்திகள் அல்ல .(இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா !!) . நமது ராஜபாட்டை வலைத்தளம் 500 பின்தொடர்பவர்களை நெருங்குகிறது (நல்ல எழுதுற ஆளுங்களை யாரும் கண்டுகிறது இல்லை . உன்னை போல வென்னையதான் தொடர்கிறார்கள் என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை ). அத்துடன் 6,00,000 ஹிட்ஸ் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது .

இந்த சந்தோஷமான நேரத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் .ராஜபாட்டை மூலம் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் . பல ஊருகளில் ,முகம் தெரியாதவர்கள் கூட நண்பர்களாக கிடைத்ததில் மிக்க மகிஷ்சி . ஆனால் அடுத்த படியாக என்ன செய்யலாம் என்று ஒன்றும் தோன்றவில்லை . இந்நிலையில் நண்பர் அப்துல் பாசித் ஆங்கில வலைத்தளம் ஆரம்பியுங்கள் விளம்பரம் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்க  உண்டு என்றார் .


தமிழே நமக்கு தத்துகுத்து , இதுல இங்கிலீஷ் வேறயா என்று தோன்றியது . இங்கிலீஷ் மீடியத்தில் வேலைபார்ப்பதால் இங்கிலீஷ் "மீடியமாகதான் " வரும் . இருந்தாலும் எதோ ஒரு தைரியத்தில் (உங்களை நம்பி ) ஆரம்பித்துவிட்டேன் .(அப்பாடி தலைப்பு வந்துட்டு ).

எனவே நல்ல உள்ளங்கள் , நண்பன் நல்ல இருக்கணும் என நினைப்பவர்கள் (எப்பூடி !!!) கண்டிப்பாக (தயவு செய்து ) உங்கள் ஆதரவை தரவும் . இந்த தளத்தில் இனைததுபோல அதிலும் இணையவும் .

உங்கள் ஆதரவால் கொஞ்சம் நல்ல பதிவுகள் போட முயற்சிக்கிறேன் .(அப்பவும் முயர்ச்சிதானா ???). ஆட்சென்ஸ் கிடைத்ததும் வரும் விளம்பரங்களை கண்டிப்பாக நீங்கள் கிளிக் செய்வீர்கள் என எனக்கு தெரியும் . ஏனென்றால் பதிவுலகில் நல்லவர்களே அதிகம் .(யாருப்பா அது ஐஸ் ...ஐஸ் ..ன்னு கத்துறது .)
அந்த தளத்தின் லிங்க் :


தல ரசிகர்கள் மன்னிச்சு :Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்மூன்று தனி தனி கதைகள் இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதுதான் முதல் கதையின் ஹீரோ அஸ்வின்அவரது காதலி சுவாதிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் இவர் ஒரு விபத்தை செய்ய அதில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு ரத்தம் வேண்டும் . அதை எப்படி பெற்றார் என்பது ஒரு கதை .

இரண்டாவதில் சுமார் மூஞ்சி குமார் என செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவரது (ஒருதலை ) காதலி நந்திதாக்கு காதல் வரவழைக்க செய்யும் கோமாளித்தனங்களும் , கலோபரங்களும் .

முன்றாவது கதையில் ஒரு பெண் (பொம்பளை ) தனது கள்ள காதலர்களுடன் (கவனிக்கவும் காதலனுடன் இல்லை காதலர்களுடன் ) இணைந்து தனது கணவனை போட்டு தள்ளிகிறார் . இவர்கள் கையில் சேதுபதியின் செல் கிடைகிறது .

இந்த மூன்று கதையும் கடைசியில் எப்படி எங்கே இணைகிறது என்பதை சிரிக்க  சிரிக்க சொல்லியிருக்கிறார்கள் .


+ பாயிண்ட்ஸ் :

விஜய் சேதுபதியின் நடிப்பு . படத்துக்கு படம் நடிப்பு மெருகேறுகிறது .

தனக்கு அதிகம் ஸ்கோப்  இல்லாத படம் என்றாலும் ஒத்துக்கொண்டு நடத்ததுக்கு சேதுபதிக்கு பாராட்டலாம் .

கட்டபஞ்சாயத்து ஆளாக வரும் சுகர் பேஷன்ட் பசுபதி . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடம் .

கடைசி 25 நிமிடங்கள் அதிரடி காமெடி .

அஸ்வினின்  அலட்டல் இல்லாத நடிப்பு

சுவாதியின் புன்னகை (!!!!!!!)

போஸ்டர் டிசைன்

சிந்திக்க துண்டாத தொடர் காமெடி

வில்லனாக இருப்பவர்களுடன் ஆண்டி நடத்தும் உரையாடல் - பாயிண்ட்ஸ் :

நெறைய காட்சிகளில் டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பது போல காட்டுவது . ஏற்கனவே நாட்டில் தன்னியாடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டு .( அதுக்கு பிரதிபலனா கடைசியில் குடி குடியை கெடுக்கும்னு மெசேஜ் சொல்லிடாங்க )

ரோபோ சங்கரை கொஞ்ச நேரம் மட்டும் வைத்துகொண்டது , (அண்ணன் வந்தா ஸ்க்ரீனே பத்தமாட்டுது )

பாடல்கள் சுமார்தான் .

பின்னணி இசை பரவாயில்லை ரகம் ( காமெடி படத்திற்கு இதற்க்கு மேல் தேவையில்லை என நினைத்து விட்டார்கள் போல )

மலையாளியை காட்டிகொடுப்பவர்கள் போல காட்டியது . மலையாளத்தில் டப் பண்ணுனா தமிழன் காட்டி கொடுப்பதுபோல மாத்திடுவானுங்க .

இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஸ்லொவ் 

ஆனந்த விகடன் மார்க் : 43

குமுதம் : ஓகே

ராஜபாட்டை :  6.5/10

மொத்தத்தில் :

"மனசுவிட்டு சிரித்துவிட்டு ஏன் சிரித்தொம்னு யோசிக்க வேண்டாம்னு நினைப்பவர்கள் பார்க்கலாம் . கொடுத்த காசுக்கு நஷ்டம் இல்லை "


இதையும் படிக்கலாமே 

FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
 FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID