> என் ராஜபாட்டை : December 2011

.....

.

Saturday, December 31, 2011

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

முஸ்கி 1  : இது நண்பர் நீருபன் என்னை பற்றி எழுதிய கோபமான 
                       (கிண்டலான ) பதிவுக்கு (திட்டலுக்கு ) எதிர் பதிவு அல்ல .

முஸ்கி 2 :  அப்படி என்ன திட்டனர் , கிண்டினார் என அறிய ஆவலாக 
            உள்ளவர்கள் இங்கே செல்லவும் பதிவுலகில் வேகமாகப் பரவி அன்பான  பதிவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் ..

நான் ஆசையுடன் எழுதும் பதிவில் அல்லது நமது வலைப்பூவில் சில சமயம் வைரஸ் வரலாம் . வைரஸ் பல வகை உண்டு . சும்மா ஜாலியா வந்து போகும் வைரஸ் , புது folder உருவாக்கி இடத்தை வேஸ்ட் பண்ணும் .

சில வைரஸ் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை அழித்துவிடும் . சில சமயம் மென்போருளைகூட தாக்கும் . இத்தகைய வைரஸ் பாதிப்பில் இருந்தது உங்கள் கணினியை காக்க சில ஆண்டி வைரஸ் உங்களுக்காக ..1 . AVAST 


2 . AVG


3. AVIRA 


4 . ESETINDIA 


5. KASPERSKY


6. IMMUNET 


7. CLAMWIN 


8. CLOUD ANTIVIRUS


9. BITDEBENER


10. ZENOK


இதில் உங்களுக்கு எது நன்றாக உள்ளது என தோன்றுகிறதோ அதை பயன் படுத்துங்கள் ..

டிஸ்கி 1 : என் மாணவன் ஒரு தவறு செய்தால் அவனை தனியாக கூப்பிட்டு கண்டிப்பேன் , அப்படியும் திருந்தவில்லை எனில் அவனை திருத்த முயற்சிப்பேன் ஆனால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவன் வருத்தப்படும் அளவுக்கு , மனம் புண் படும் அளவுக்கு குறை சொல்லமாட்டேன் .


டிஸ்கி 2 : திரும்பவும் சொல்றேன் இது உள்குத்து பதிவு அல்ல ....Monday, December 26, 2011

SMS - சிறுகதை
“எப்படிடா.. உனக்கு மட்டும் நிறைய பிகர் மாட்டுது” ஆபிஸ் விட்டு செல்லும் வழியில் ரவியிடம் கேட்டான் விஜய். “அது பெரிய விஷயமில்லடா… உன் மொபைல எடுத்துகோ யாராது புது நம்பர்க்கு அல்லது உனக்கு தெரிந்த ஆனால் உன் நம்பர் தெரியாத பிகருக்கு ஒரு Message அனுப்பு. “

“என்ன அனுப்பனும்…”- விஜய்

this is my new number, if you receive this message pls sent mesg or missed call” by பாரதி “ னு அனுப்பு”

“எதுக்கு இந்த மாதிரி அனுப்பனும் ?”

“ பாரதினு பெயர் பார்த்ததும் அது ஆணா ? பெண்ணானு தெரியாது, சிலர் நீ அனுப்புற SMS ய் கண்டுக்கமாட்டாங்க, சிலர் “நீங்க யாருனு” பதில் SMS அனுப்புவாங்க, அல்லது கால் பன்னி கேட்ப்பாங்க, அப்படி பேசுரவங்களுக்கிட்ட பிட்டு போட்டு புடிக்கவேண்டியதுதான்.”- ரவி

“செம ஐடியாடா!!! சரி நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு புறப்பட்டான் விஜய்.

“கமலா, கமலா என அழைத்துகொண்டே வீட்டிர்க்குள் வந்தான் ரவி.
“சமையல்கட்டில் இருக்கேன்ங்க..” என்றாள் கமலா.

“காப்பி எடுத்துவாமா” என கூறி சோபாவில் அமர்ந்த நேரம் கமலாவின் மொபைலில் SMS RING அடித்தது. என்ன SMS என எடுத்துபார்த்தான், அதில்…

“this is my new number, if you receive this message pls sent mesg or missed call” by பாரதி

டிஸ்கி : இது சிறுகதைனு நினைத்து எழுதியிருக்கேன், நல்லா இல்லைனா திட்டாதிங்க.


Saturday, December 24, 2011

நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

நம்ம விஜய் ரசிகர்களுக்காக ...
 


இது  சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ...
பாடல்கள் பதிவிறக்கம் செய்ய :

நண்பன் பாடல்கள் 

Friday, December 23, 2011

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

இது ஒரு மீள் பதிவு :சிரிக்காதிங்க.. சீரியஸாதான் சொல்லுரேன். அவர் மிக பெரிய நடிகரா இருக்கலாம். உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்களாம், அதுக்காக அவர் இப்படி செய்யலாமா?


மூனு படம் எடுத்தாலும் நல்ல படமா எடுத்த சுசிந்தரன் கூட சேர்ந்து இப்படி பன்னுவார்னு நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன பண்ணிடார்னு கேட்கின்றிற்களா? என்னிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமல் தனது அடுத்த படத்திற்க்கு “ராஜபாட்டை” என எனது BLOG பெயரை வைத்துள்ளார்.

என்னிடன் கேட்டால் தராமலா போய்விடுவேன்(குடுத்து..குடுத்து சிவந்த கரங்கள் என்னுடையது). கோடிகனக்கான FOLLOWERS, லட்சகனக்கான HITS உடன் உலகம் முழுவதும் பார்க்கபடும் வலைதளம் எனது.(சீ..இதுலாம் ஒரு பொழப்புனு கருனும், சி.பியும் திட்டுரது என் காதுல விழவில்லை)


சரி , எதோ நடந்தது நடந்துபோச்சு( நடக்காதது பறந்து போச்சா?) என் வலை பெயரை வைதுள்ளிற்கள் உங்கள் படம் வெள்ளி விழாகான வாழ்துக்கள்.

டிஸ்கி : “என் ராஜபாட்டை “ என்ற பெயர் நடிகர் சிவகுமார் எழுதிய அவரின் சுயசரிதையின் தலைப்பு என கண்டுபிடிக்காத அணைவருக்கும் என் நன்றி.Thursday, December 22, 2011

2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?2011 ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் பல திரைபட்ங்கள் வந்தன. எதிர்பார்க்காத சில படங்கள் வெற்றிபெற, மிகவும் எதிர்பார்க்க பட்ட படங்கள் மன்னைகவ்வியது. வருடத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்க்காத வெற்றி என்றால் அது சிறுத்தை படம் பெற்ற வெற்றிதான். காவலன் நன்றாக ஓடியது.

பாடல் பிரபலம் ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் போனது ஈசன். சத்திமின்றி சம்பாதித்து கொடுத்தது தூங்கா நகரம். சில மாதங்களுக்கு முன் வந்து சக்கைபோடு போட்டது “தல”யின் மங்காத்தா. பின்புவந்த விஜயின் “வேலாயுதம்” சூர்யாவின் “7 ஆம் அறிவு” இரண்டும் வெற்றிகொடினாட்டியது.
சிம்புவின் ஓஸ்தி , வானம் போலவே ஆட்டம் கண்டது. தனுஷின் “மயக்கம் என்ன..” லாப-நஷ்டமின்றி போனது. பாலாவின் “அவன்-இவன்” தோற்றாலும் விஷால் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அடுத்து வந்த “வெடி” புஃஸ்வாணம் ஆனது தனிகதை.

கீழே சில படங்கள் உள்ளன. உங்களுக்கு பிடித்த படம் எது என்பதை sidebar இல் உள்ள poll box இல் ஓட்டு போடவும். நீங்கள் விரும்பும் படம் இதில் இல்லை எனில் பின்னுடத்தில் குறிப்பிடவும்.

 1. மங்காத்தா
 2. வேலாயுதம்
 3. 7 ஆம் அறிவு
 4. தூங்கா நகரம்
 5. சிறுத்தை
 6. காவலன்
 7. தெய்வதிருமகள்
 8. பாஸ் (எ) பாஸ்கரன்
 9. யுத்தம் செய்
 10. எங்கேயும் எப்போதும்

Wednesday, December 21, 2011

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.
இது ஒரு தொடர் பதிவு. (யாரும் ஓடாதிங்க..). இந்த 2011 ஆம் வருடத்தில் நான் பெற்ற சந்தோஷ, துக்கங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்.


இந்த வருடத்தில்…..

படித்ததில் பிடித்த புத்தகம் : ரத்தம் ஓரே நிறம் ( சுஜாத்தா நாவல்)

பிடித்த பாடல் : 1. உன்பேரே தெரியாது..( எங்கேயும் எப்போதும்)
              2. வந்தனமா.. வந்தனம்..(ஈசன்)
              3. மங்காத்தா தீம் மீயுசிக்

ரசித்த படம்  : மங்காத்தா

உருகிய படம் : எங்கேயும் எப்போதும்

சிரித்த படம் : சிறுத்தை

சென்ற இடம் : ஊட்டி பிளாக் தண்டர்

வாங்கிய பொருள் : HONDA CD 100 SS

புதிய நண்பர்கள் :
பேசியவர்கள் :கருன், கவிதைவீதி சொளந்தர், ராஜி,
                நக்கிரன்(நாய்-நக்ஸ்), சீனா ஐயா.

பேசாதவர்கள் : சிபி, நாஞ்சில் மனோ, தமிழ்வாசி,
        கூடல்பாலா, மற்றும் நிறைய பிளாக் நண்பர்கள்.

சாதனை : ஜனவரில் 2 followers இன்று 271 followers.

மிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன்

வருத்தம் : எனது முன்னாள் மாணவனின் மரணம்.
          முல்லை பெரியார் பிரச்சனை.

ஆச்சர்யம் : மருத்தவ தொழில் பார்த்துகொண்டே கவிதையில்
             கலக்கும் என் மாணவன் மயிலன்(மயிலிறகு).


இதை ஒரு தொடர் பதிவாக எழுத ஆசை. இதை தொடர சிலரை அழைகிறேன்.
 1. நாஞ்சில் மனோ
 2. கருன்
 3. மயிலன்
 4. ராஜி


Sunday, December 18, 2011

பெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருள்-(இலவசமாக.) 
நாம் நமது தகவல்களை பல இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டி இருக்கும். முன்பு CD, DVD யில் தவல்களை பதிவு செய்து எடுத்து சென்றோம். அதில் பல குறைபடுகள் இருந்தன. அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், மிக விரைவாக தகவல்களை ஏற்றி, இறங்க உதவுகின்றது பெண்டிரைவ்கள்.

பெண்டிரைவை பல கனினிகளில் மாற்றி, மாற்றி பயன் படுத்துவதால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம். இதனால் பயத்துடனே அதை பயன் படுத்தவேண்டியிருக்கின்றது. இந்த பிரச்சனையை தீர்க்கவந்த மென்பொருள்தான் USB DISK SECURITY .

இதை உங்கள் கனினியில் நிறுவியபின் நீங்கள் பெண்டிரைவை கனினியில் இனைக்கும்போதெல்லாம் வைரஃஸை அழித்துவிட்டுதான் அனுமதிக்கும். இதனால் நீங்கள் கவலையின்றி பெண்டிரைவ் பயன்படுத்தலாம்.

மென்பொருள் தரவிரக்க : USB DISK SECURITY .

டிஸ்கி : இந்த மென்பொருளுக்கு REGISTERATION KEY பெற KEYGEN இணைக்கப்பட்டுள்ளது.

Thursday, December 15, 2011

மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.முஸ்கி: உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது +2 படித்து கொண்டிருந்தால் அவர்களுக்காக இது.

இன்னும் 3 மாதங்களில் பொதுதேர்வு எழுதபோகின்றார்கள். பதிவுலகின் சார்பில் அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் என அன்பு சகோதரி ராஜி அவர்கள் விருப்பபடியும், உருப்படியாக எதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதலாலும் இந்த முயர்சி.

மாணவர்களுக்கு தேவையான வினாதாள்கள் அடங்கிய ஒரு தளத்தை கடந்த வருடம் துவங்கினேன். அதில் என்னால் முடிந்த அளவு வினா தாள்கள் இனைத்தேன். இப்போதும் இணைத்துவருகிறேன். விரும்பும் மாணவர்கள் www.nowaskme.co.nr என்ற தளத்தில் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவுலுகில் பலர் ஆசிரியர்களாக உள்ளனர்(கருன், கவிதைவீதி சௌந்தர் போல). இவர்கள் போல் ஆசிரியர்கள் உங்கள் வினாதாள்களை rrajja.mlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அதுவும் பதிவேற்றபடும். அல்லது தங்கள் முகவரியை, அலைபேசி எண்ணை கொடுத்தால் அதுவும் பிரசுரிக்கபடும். தேவைபடும் மாணவர்கள் தங்களை அலைபேசிவழியாக தொடர்புகொள்வார்கள்.

 1. இயற்பியல்(PHYSICS)

பெயர் : V.S.JAMES
அனுபவம் : 10 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9842707512

 1. விலங்கியல் (ZOOLOGY)

பெயர் : M.RAJKUMAR
அனுபவம் : 8 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9786119346

 1. கணிபொறி(COMPUTER SCIENCE)

பெயர் : கு.ராஜா
அனுபவம் : 10 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9865716374

மற்ற பாடங்களுக்கு விரைவில்..

டிஸ்கி 1: இது ஒரு முயர்சி , வேறு எதாவது ஐடியா இருந்தா தரவும்.

டிஸ்கி 2: மாலை 6 - 8 மணிக்குள்  CALL செய்யவும். பகல் நேரத்தில் CALL செய்யலாம் ஃப்ரியா இருந்தா கண்டிப்பாக பதில் சொல்வார்கள்.

Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்

திரையுலகின் முடிசூடா மன்னன் நீ ..
கேட்டவர்களுக்கு பொல்லாதவன் நீ ..
நல்லவனுக்கு நல்லவன் நீ ..
என்றும் எங்கள் தளபதி நீ ..

பல்லாண்டு வாழ்க நீ ...
.
இதுதான் ஸ்டைல் ....

இந்த பஞ்ச டயலாக்கை  எவனாது பீட் பண்ண முடியுமா ?


எப்பவும் சிங்கம் சிங்கம் தான் ....

Saturday, December 10, 2011

பதிவர்களின் பஞ்ச் டயலாக்குகள்

நமது பதிவர்கள் அணைவரும் பதிவு எழதுவதில் வல்லவர்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் அவர்கள் வலைதள பெயருக்கு முன் ஒரு பஞ்ச் டயலாக் போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

நாஞ்சில் மனோ:

நைட்டு என்றால்  கருப்பு
நாஞ்சில் மனோ என்றால் பருப்பு(சாரி) நெருப்பு

கவிதைவீதி சொளந்தர் :

என்னுடைய பேரு கவிதை வீதி
எதிரிக்கு என்னைபார்த்தாலே பீதி

சென்னை பித்தன் :

விமல்னா எத்தன்
ரமேஷ்னா ஜித்தன்
சிறுகதைனா பித்தன்.

நாய்- நக்ஸ் :

நாலுடன் இரண்டு சேர்த்தா சிக்ஸ்

நக்கலான பதிவுனா நாய்-நக்ஸ்

விக்கியுலகம் :

நாந்தாண்டா விக்கி
நீதாண்டா பக்கி

சூரிய ஜீவா :

கம்பியுட்டர்னா ஜாவா
கலக்கல்னா ஜீவா

ராஜி :

நடிப்புனா சிவாஜி
படைப்புனா ராஜி

கருன் :

காடுனா சிங்கம்
கருன்னா தங்கம்

சி.பி

சீன் என்றால் சினிமா
சி.பி என்றால் கில்மா

இறுதியாக..

நான் கிங்கு.. என்னிடம் மோதினா
உனக்கு சங்கு.

மேலே உள்ள டயலாக் ஒரு அப்பாவி குழந்தை பதிவர்க்கு.இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.


Thursday, December 8, 2011

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.

உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்