செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. --- - தீவிரமாக யோசிப்போர் சங்கம்.
########################################################################
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
#####################################################################
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
#####################################################################
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
#####################################################################
டிசம்பர் 31க்கும்,ஜனவரி 1க்கும்ரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
#####################################################################
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??யோசிக்கனும்...!!
#####################################################################
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
#####################################################################
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
#####################################################################
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது!?!)
#####################################################################
வாழை மரம் தார் போடும்,ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ! ஹலோ!!!!)
#####################################################################
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
#####################################################################
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும், அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
#####################################################################
T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
#####################################################################
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
#####################################################################
இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
#####################################################################
உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு