> என் ராஜபாட்டை : January 2016

.....

.

Saturday, January 30, 2016

வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்





     இன்னும் ஒரு மாதத்தில் +2 மாணவர்களுக்கு ஆண்டு பொது தேர்வு வர உள்ளது. அதற்காக மாணவர்களும் அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் கடினமாக தயாராகிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகத்தான் இந்த தொடர். இது அறிவுரை அல்ல கடந்த 15 வருட கல்விபணியில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. உங்கள் ஆதரவு இருந்தால் இது இன்னும் நன்றாக தொடரும்.


     முதலில் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் செலவில்லாமல் சேர கண்டிப்பாக ஆண்டவன் அருள்புரிவான். இந்த சூழ்நிலையில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

செய்ய கூடியவை மற்றும் கூடாதவைகள் :



  • ·         கஷ்டபட்டு படிப்பதைவிட இஷ்ட்டபட்டு படியுங்கள். சிலர் மிக குறைவான நேரமே படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் அதிகமாக எடுப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் மிக குறைவாக இருக்கும். காரணம் மனபாடம் செய்யும் பாடம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் புரிந்து படிக்கும் பாடம் கடைசிவரை மறக்காது தேர்வு நேரத்தில் சும்மா புரட்டிபார்த்தாலே போதும் எளிதாக தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

  • ·         கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான்னு சொல்வாங்க அதுபோல கண்ட நேரத்தில் படிப்பது சரியல்ல. காலை நேரம் என்றால் குறைந்தது நான்கு மணிக்கு ஆரம்பிக்கலாம். மாலை நேரத்தில் 6 – 10 சரியான நேரம். இரவு பத்து மணிக்கு மேல் படிப்பது வேஸ்ட். இரவு கண்விழித்து நைட் ஸ்டெடி செய்வதெல்லாம் உடம்பை கெடுத்துகொள்ளும் வேலையாகும்.

  • ·         LKG குழந்தை போல ஒரு கேள்வி பதில் படித்ததும் எழுதிபார்காமல் இரண்டு அல்லது மூன்று கேள்வி பதில்களை சேர்த்து எழுதுவது நல்லது (அவரரவர் திறமைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறலாம் ). அப்போதுதான் நாம் எதை மறக்கிறோம் என கண்டறியலாம்.

  • · பாடங்களை அன்றாட நிகழ்ச்சியுடன் இணைத்து நினைவில் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக கணினி அறிவியலில் SWITCH CASE PROGRAM எழுதும்போது புத்தகத்தில் 1 = ONE , 2= TWO என இருக்கும் இதை A= AJITH , V= VIJAY  என மாற்றிகொண்டால் புரோகிராமும் மறக்காது SYNTAX என்படும் புரோகிராம் எழுதும் வழிமுறையும் மறக்காது.

  • ·         பழைய தேர்வு விடைத்தாள்கள் , கேள்வித்தாள்கள் அனைத்தையும் சேகரித்து அதை முழுமையாக படிக்கவும். பள்ளியில் நடந்த தேர்வு விடைத்தாள்களில் நமக்கு எந்த பதிலுக்கு ஏன் மதிப்பெண் குறைக்கபட்டது என கவனித்தாலே நிறைய பிழைகளை களையமுடியும். நல்ல மதிப்பெண் / முழுமதிபேன் எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களையும் பார்க்கவேண்டும். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என உணரவேண்டும்.

  • ·         கணித பாடத்தை மனபாடம் செய்யும் ஆட்கள் இன்னும் இருகின்றார்கள். அப்படி செய்யாமல் ஒத்த கருத்துடைய மாணவர்களுடன் இணைந்து போட்டுபார்கலாம். நமக்கு தெரிந்த கணக்கை மற்ற மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது நாமும் படித்ததுபோல ஆச்சு, சொல்லிகொடுத்தாபோலவும் ஆச்சு, நமக்கு தோன்றாத புதிய சந்தேகங்களை மற்றவரிடம் இருந்து வரும்போது அதை எப்படி சரிசெய்யலாம் என கற்க உதவுகிறது.

  • · ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாள் தேவை என கணக்கிடவேண்டும். நாம் எடுக்க நினைக்கும் மதிப்பெண்ணை பெரிதாக எழுதி நமது அறையில் ஓட்டலாம்.

  • ·    நண்பர்களுடன் வீண் அரட்டை, இருசக்கரவாகனத்தில் ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு ..


  • ·         நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதரவான வார்த்தைகளை கூறுங்கள். பள்ளியில் தற்பொழுது நடக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை காட்டி அவனை திட்டாதீர்கள். “நீ எல்லாம் எதுக்கும் லாக்கில்லை “ என சொல்லாதிர்கள். அப்படி பெயர் பெற்ற பிள்ளைகள்தான் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருகின்றார்கள். “உன்னால் முடியும் படிப்பா, உன்னால் முடிஞ்ச அளவு டிரை செய்” என பாசிட்டிவாக பேசுங்கள்.

  • ·         தனி அறையில், இணைய வசதியுடன் கணினி, WI-FI இணைந்த ஆண்ட்ராய்ட் போன் கொடுத்துவிட்டு பையன்படிக்கவேமாட்றான்னு சொன்னா ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவனை அவன் சிந்தனை மாறாவண்ணம் பார்க்கவேண்டியது உங்கள் பொறுப்பும் கூட..

  • ·   24 மணி நேரமும் படி படி என சொல்லாதிர்கள், நம்மால் 24 மணிநேரம் ஒரே வேலையை செய்யமுடியுமா? அவன் கவனம் சிதறாவண்ணம் அவனுக்கு ரெஸ்ட் எடுக்க வழிசெயுங்கள்.

  • ·    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நீங்களும் உணர்ந்து அவர்களுக்கும் புரியவையுங்கள்.

  • ·         அடுத்த மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.

  • · சரியான , சத்தான உணவுவகைகளை கொடுங்கள். இரண்டு மாதங்களுக்கு அசைவம், பானிபூரி , நூடுல்ஸ் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுவகைகளை தவிருங்கள். நிறைய பழசாறு, இளநீர் குடிக்க சொல்லுங்கள். சாதாரண தலைவலிக்கு மாத்திரைபோட சொல்லாதீர்கள்.

  •  இது பொதுவான கருத்துகளே ஆகும். அடுத்த பகுதியில் இருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வரு பாடத்திற்கும் எப்படி தயாராக வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளும் , மதிப்பெண் அதிகம் பெற உதவும் முக்கிய குறிப்புகளும் இடம் பெரும்.


டிஸ்கி : இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு தேவை. இங்கேயே உங்கள் கருத்துகளை பதியலாம் அல்லது உங்கள் கருத்துகளை rrajja.mlr@gmail.com மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம்.



Friday, January 29, 2016

ஆச்சர்யம் ஆனால் உண்மை

இந்த ஓவியங்கள் உங்களை சிரிக்க வைக்கும் ,ஆச்சர்யப்பட வைக்கும் , வியக்கவைக்கும் ,இது ஓவியமா அல்லது PHOTOSHOP WORK கா என்று குழப்ப வைக்கும் . ரசித்து பார்த்து உங்கள்கருத்தை சொல்லுங்கள் .

கிழி கிழின்னு கிழிச்சுடான்



கடற்கரையில் ஒரு ஓவியம்



வானவில் அலைகள்



இது வானவில் கடற்குதிரை


சின்னத்தில் இருந்து பெருசு வரை ..



பென்சில் சங்கிலி


மரம்மட்டுமா தெரிகிறது ?



தேங்காய் பறிக்கும் நண்டு




வீடா ??   விமானமா ?



பிறப்பு தேவா வச்ச மரமோ ???


நீருக்குள் புலி

மேம்பாலம் ???ரன்வே ???


உடைந்தமரத்தில் ஆந்தை




இது அசையுதா இல்லையா ?


சாக்லேட் கீ  போர்டு



எத்தன படி ?


அறிவியோரம் கடை




டிஸ்கி : எப்படி இருந்தது ? உங்கள்கருத்து என்ன ? பிடிச்சு இருக்கா ?

Tuesday, January 19, 2016

2600 ரூபாய் மதிப்புள்ள 7-Data Recovery Suite Home and Enterprise 3.2 இலவசமாக





                     நமது கணினியில் பலவகையான கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். நமது சொந்த விவரங்கள், முக்கிய ஆவணங்கள் , போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை வைத்திருப்போம். ஏதாவது காரணத்தால் கோப்புகள் அழிய வாய்புகள் உள்ளது. வைரஸ் தாக்குதல், ஹார்ட் டிஸ்க் வீனாகபோதல் , உடைத்தல் போன்ற காரணத்தால் கோப்புகள் அழியலாம்.


                            அவ்வாறு பாதிக்கபட்ட அல்லது அழிக்கபட்ட கோப்புகளை மீட்க உதவும் மென்பொருள்தான் 7-Data Recovery Suite Home and Enterprise 3.2. இதன் மூலம் பலவகையான கோப்புகளை மிக எளிதில் மீட்க முடியும் . இதன் விலை 2600 ரூபாய் ஆகும் . ஆனால் நமது வாசகர்களுக்காக இலவசமாக வழங்குகிறோம்.


பயன்கள் :

* அழிந்த கோப்புகளை மீட்கலாம் .

* வீடியோ, ஆடியோ என தனித்தனியாக தேடலாம்.

* USP / HARD DISK / MEMORY CARD என அனைத்திலும் அழிந்த கோப்புகளை மீட்க முடியும்.

* பயன்படுத்த எளிதானது .

* குறைந்த நினைவகம் போதும்.

* HOME  OR ENTERPRISE EDITION கிடைகிறது .



தரவிறக்கம் செய்ய :

மென்பொருள் 

கீ தரவிறக்கம் செய்ய 

எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிய 


டிஸ்கி : இதுபோல பல பயனுள்ள மென்பொருட்களை இலவசமாக பெற இந்த தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்யவும். 

Sunday, January 17, 2016

கதகளி : சினிமா விமர்சனம்








 விஷால் , கேத்ரின் , இமான், மதுசூதனன் மற்றும் பலர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்தபடம் கதகளி . இசை ஆதி, ஒளிபதிவு பாலசுப்ரமணியன்.கடலூர் பகுதியில் நடப்பதுபோல அமைக்கப்பட்ட கதைகளம் இது.


கதை :

கடலூரில் மீனவ தலைவனாகவும், ரவுடியாகவும் இருப்பவர் தம்பா (மதுசூதனன் ). அவருக்கு துணையாக இரண்டு மச்சான்கள். இவர்களால் நான்கு வருடத்துக்கு முன்பு பாதிக்கபட்டு அதன் பின் வெளிநாடு சென்று திரும்பும் விஷாலுக்கும், விஷாலின் காதலிக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யபடுகிறது . இந்நிலையில் தம்பா கொலை செய்யப்பட பழி விஷால் மேல் விழுகிறது. 

கொலையை செய்து யார் என தனது நண்பர்கள் துணையுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. கொலையை செய்ய காரணமானவர்கள் யாராக இருக்கலாம் என இயக்குனர் சிலரை அடையாளம் காட்ட அனைவர்மீதும் நமது சந்தேகம் ஓடுகிறது. முடிவு எதிர்பாராத ஒன்று.


+ பாயிண்ட் 

* கொலையாளி யார் என விஷால் தேட தேட நாமும் சேர்ந்து தேடவைக்கும் திரைகதை .

* கிளைமாக்ஸ் சண்டையில் கூட பாட்டை போட்டு கொள்ளும் சினிமாவில் பாடல்களை குறைத்தது .

* கருணாஸ் காமெடி

* சண்டைகாட்சிகளை வளவளவென இழுக்காதது .

* கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராத ஒன்று.


- பாயிண்ட் .

* விஷாலின் பிளாஷ்பேக் டம்மியாக உள்ளது. நல்ல வலுவான காரணம் இல்லாம போனதால் வில்லன் மேல் பெரியகோவம் வரவில்லை.

* கேத்ரினக்கு விஷால் மேல் வரும் காதல் காட்சிகள் ரொம்ப போர் .

* பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

* பாதிக்கு மேல் கதை இழுவையாக செல்வது. விஷால் அண்ணன் எங்கேபோவது என தெரியாமல் முழிப்பது போல கதையும் முழிக்குது.

*பாடல்கள் .

மொத்ததில் ...

பொழுதுபோகல என்றால் பார்க்கலாம். தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் போட நிறைய வாய்ப்புள்ளது .


இதையும் படிக்கலாமே :

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்


Junior Training Officer in TN Govt.( 329 posts) 

 




Saturday, January 16, 2016

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்





                      சில பசங்க விழுந்து விழுந்து படிப்பாங்க ஆனா மார்க் வராது ஆனால் சிலர் சாதாரணமா படிப்பாங்க ஆனா செமையா மார்க் வரும். சிவா இதில் இரண்டாம் வகை. கஷ்டபட்டு உடம்பை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை, புதுசா எதையும் ட்ரை செய்யல ஆனாலும் படம் செம . 

                      லிங்குசாமி தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவா, சூரி, கீர்த்தி சுரேஷ் , ஜான சம்பந்தம் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வந்த (போன வருடமே வரவேண்டிய ) படம்தான் ரஜினி முருகன்.

கதை :

  தமிழ் சினிமா வழக்கப்படி ஊரை சுற்றும் ஹீரோ , சின்ன வயசில் இருந்தே இவதான் உனக்குன்னு சொல்லி வளர்க்கபட்ட ஹீரோயினை காதலிக்க , குடும்ப பிரச்சனையில் பிரிந்த காதல் மீண்டும் இணைந்ததா ? இடையே புதுசா முளைத்த வில்லனின் கதி என்ன என சிரிக்க சிரிக்க சொல்லிருக்கங்க.




சிவா :

 படத்தின் முழுபலமே சிவாதான். ரஜினி விஜய்க்கு அடுத்து ஒரு ஹீரோ காமெடியில் கலக்குவது, குழுந்தைகளுக்கு பிடித்தாற்போல் இருப்பது சிவாதான். சூரியும் சிவாவும் பேசும் வசங்கள் பல இன்றைய இளம் வயதினர் பேசுவதுபோலவே இருப்பது சிறப்பு. நடனத்தில் சிம்புக்கும், விஜய்க்கும் போட்டியாக இருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் ஒரே மாதிரி அல்லது விஜய் மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுப்பது கடுப்பு.

பொன்ராம் - இயக்குனர்.

         வித்தியாசமா எடுக்குறேன் பேர்வழினு யாருக்கும் புரியாதமாதிரி எடுப்பது, அழகான ஹிரோவை பிசாசு போல காட்டுவது , தெருபுல்லா பெயின்ட் அடிச்சு புரடீயுசர் வயிற்றில் அடிப்பது என எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் மக்களையும் , தயாரிப்பாளரையும், வாங்கி விற்றவரையும் சந்தோஷமா கொண்டாட வைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.


+ பாயின்ட் :

* சிவாவின் நடிப்பு

* சிவா சூரி காம்பினேஷன்.

* ஆச்சர்யமாக சூரி கத்தாம நடிச்சது 

* பாடல்கள் 

* படம் முழுக்க சிரிக்கவச்சது 

* தண்ணி , தம் அடிக்காத ஹீரோ (தண்ணி போட்டு பாடுவது போல வரும் ஆனால் தண்ணி அடிக்கும் காட்சி இல்லை.)



- பாயின்ட்

* ஹீரோயின் ஏனோ மனசில் ஒட்டவே இல்லை.

* சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பு 

* அடுத்து என்ன நடக்கும் என தெரியவைக்கும் திரைகதை 

* சப்ப காரனத்துக்கான நண்பர்கள் பிரிவது 


கடைசியா ...

பொங்கலுக்கு குடும்பத்துடன் சிரித்துவிட்டு வர ஒரு நல்ல பேமலி என்டர்டைனர் இந்த ரஜினி முருகன்.

இதையும் பார்க்கலாமே :


Best Tamil Keyboard apk for android




Monday, January 4, 2016

ANDROID போனில் தமிழில் எழுத சிறந்த அப்ளிகேஷன்கள்





              இன்றைய உலகில ANDROID போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம். அனைத்து வசதிகளும் உள்ள இந்த போனில் நமது தாய் மொழில் நமது எண்ணங்களை எழுதினால் நன்றாக இருக்கும் என நாம் எண்ணலாம். ஆனால் அதில் தமிழில் டைப் செய்ய எந்த வசதியும் இருக்காது. நமக்கு தமிழ் தட்டச்சும் தெரியாது என்ற நிலையில் உதவ சில அப்ளிகேஷன்கள் உள்ளன. இதில் நாம் ஆங்கிலத்தில் அடித்தாலே தமிழில் தானாக வரும்.




1. TAMILVISAI

              அதிகமான பயனாளர்களால் இப்போது பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் இது. இதை பயன்படுத்துவது மிக எளிது. மிக சிறிய அளவுகொண்ட அப்ளிகேஷன் இது.

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE


2. SELLINAM

           அடுத்தபடியாக அதிகபயனாளர்கள் விரும்பும் அப்ளிகேஷன் செல்லினம் ஆகும். இதுவும் தமிழ்விசை போலவே செயல்படும். இதில் நீங்கள் வார்த்தைகளை ஆரம்பிக்கும் போதே அதுவே சில சாய்ஸ் கொடுக்கும்.

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE

3. EZHUTHANI

       இதுவும் மிகவும் பயனுள்ள அப்ளிகேஷந்தான். இதில் ஒரு வசதி என்னவென்றால் இது மிகவும் பழைய ஆண்ட்ராய்ட் வெர்ஷனுக்கு கூட பயன்படுத்தமுடியும்.

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE


4. GOOGLE INDIC TAMIL

            தற்போது புதிதாக வந்துள்ளது இது. இணையத்தில் இதுவரை பிரபலமாக இருந்த இந்த முறை இப்போது ஆண்ட்ராய்ட்க்கும் வந்துவிட்டது.



தரவிறக்கம் செய்ய :  CLICK HERE


5. TAMIL PANINIKEYPAD

             சில கஷ்டங்கள் இருந்தாலும் இதுவும் பலரால் விரும்பப்படும் அப்ளிகேஷன் ஆகும். இது கொஞ்சம் பழைய அப்ளிகேஷன். 

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE


செயல்படுத்த :

* இன்ஸ்டால் செய்ய பின் உங்கள் போனில் SETTING=>  LANGUAGE & INPUT செல்லவும்.

* அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய அப்ளிகேஷன் பெயர் தெரியும். அதை டிக் செய்யவும்.

* அதுக்கு மேலே DEFAULT KEYBOARD என இருப்பதை கிளிக் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷனை செலெக்ட் செய்யவும்.


பயன்கள் :


* மிக எளிதாக தமிழில் அடிக்கலாம்.

* AMMA அனா அடித்தால் அம்மா என வரும்.

*RAJA என அடித்தால் ரஜ எனதான் வரும், RAAJAA என அடித்தால் ராஜா என வரும்.

Friday, January 1, 2016

ரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart Booster Pro 5.3 இலவசமாக


நல்லதே நடக்கும் , நம்பிக்கையுடன் ....புத்தாண்டு வாழ்த்துக்கள் 





  ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை RAM MEMORY தான். தேவையில்லாத அப்ளிகேஷன்கள் மெம்மரியை அடைத்துக்கொண்டு இருக்கும். இதனால் நமது போன் மொதுவாக வேலைசெய்ய துவங்கும். அந்த தேவையில்லாத மெம்மரியை எப்படி அழிக்கலாம் என தெரிந்திருக்கும். அதை தானாகவே அழிக்க உதவும் அப்ளிகேஷந்தான் Smart Booster Pro 5.3.

இந்த Smart Booster Pro 5.3 கூகிள் பிளே ஸ்டோரில் 260 ரூபாய்க்கு கிடைகிறது. இந்த அப்ளிகேஷன் உங்களுக்காக இலவசமாக அளிக்கிறோம். டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .


பயன்கள் :

* போனின் நினைவகத்தை அதிகரிக்க உதவும்.

* தேவையில்லாத அப்ளிகேஷன்கள் செயல்படுவதை நிறுத்தும்.

* மெம்மரி கார்டில் உள்ள JUNK பைல்களை  அழிக்கலாம்.

* டுப்ளிகேட் பைல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இதனால் மெம்மரி மிச்சமாகும் .

* RAM MEMORY அடிக்கடி கிளியர் செய்யபடுவதால் போனின் வேகம் அதிகரிக்கும்.

* போனின் பேட்டரியை அதிக நேரம் நீடிக்க உதவும்.



தரவிறக்கம் செய்ய :

* இங்கே கிளிக் செய்யவும் .

* போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

* இது PRE-CRACKED APPLICATION