> என் ராஜபாட்டை : April 2011

.....

.

Saturday, April 30, 2011

குழந்தைகளே இல்லாத அதிசய கிராமம்

ஸ்பெயின் நாட்டில் ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமம் உள்ளது. இது தலைநகர் மாட்ரிடில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு திரும்பவில்லை.

தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர். அவர்கள் அனைவரும் 65 வயது முதல் 70 வயதுக்கு மேல்தான் உள்ளனர். இதனால் அங்கு 40 வருடங்களாக புதிதாக குழந்தைகளே பிறக்க வில்லை. இப்போது இங்கு இருப்பவர்களில் 65 வயதுக் காரர்களே வயது குறைந்த இளைஞர்களாக உள்ளனர். இது ஒரு வித்தியாசமான கிராமம் என அங்கு வாழும் 82 வயது முதியவரான ஆர்துரோ ரெகாகோ கூறுகிறார்.

இங்கு 16-ம் நூற்றாண்டு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கிராமத்தின் நுழைவு வாயிலில் அழகிய விளையாட்டு மைதானம் உள்ளது. குழந்தைகள் இல்லாததால் விளையாடுவதற்கு ஆளின்றி வெறிச்சோடி கிடக்கிறது என்றார்.

Friday, April 29, 2011

கேணி இலக்கிய கூட்டம்

 
  கேணி இலக்கிய கூட்டம்  
       
பத்திரிகையாளர் / நாடகாசிரியர் ஞாநி தன்னுடைய வீட்டில் சென்ற மாதம் முதல் கேணி - இலக்கிய கூட்டத்தை நடத்துகிறார். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இம்மாத நிகழ்வு 12.07.2009 அன்று நடைபெற்றது. கூட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கியது. படைப்பாளிகள், வாசகர்கள் என சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஞாநி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நானும் பாஸ்கர் சக்தியும் மட்டுமே கேணியின் அமைப்பாளர்கள். இந்த வீட்டுக்கு குடிவந்த பின் வீட்டின் பின்புறம் கேணி, கேணியைச் சுற்றி நிறைய காலியிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியுற்று, படைப்பாளிகளும், வாசகர்களும் சந்தித்து இலக்கியம் பற்றி உரையாடவேண்டும் என்ற ஆர்வத்தில் கேணி
அமைப்பை உருவாக்கினோம், என கூறி தன்னுரையை நிறைவு செய்தார்.

தனக்கு பிடித்த சிறுகதைகள் குறித்து பேச எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்தார். நீர்வளம் மாறாத பூமியான புதுச்சேரிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர், என தன் பேச்சை தொடங்கினார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தை என்னை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். இளமையிலேயே பல நூல்களை வாசிக்க தொடங்கிவிட்டேன். பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட பல நூல்களை வாசித்தேன். குறிப்பாக மாப்பசானின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண் பெண் உறவு பற்றி இயல்பாக கூறியது எனக்கு பிடித்தது. நம்மூரில் ஆண் பெண் உறவு பற்றி பல கற்பிதங்கள் உள்ளன. அது புனிதமானதுமில்லை, மோசமானதுமில்லை இயல்பானது என கூறினார். புதுமைப்பித்தனின் இது மெஷின் யுகம், தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள், தி.ஜானகிரானின் தவம், லியோன் பட்வாங்கரின் சர்வாதிகாரின் மூளை, ஆல்பெயர் மெம்ய்ன அந்நியன், டால்ஸ்டாய் டாட்டாவஸ்கி, மாயாவஸ்கி என பலரின் படைப்புகளும் என்னை நெகிழச் செய்தன.
தமிழில் சுமார் 30 பேர் மிகச்சிறந்த சிறுகதை படைப்புகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில், இந்தியாவில், உலக நாடுகளில் பலரின் படைப்புகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அதனால்தான் என்னோடு புறப்பட்டவர்கள் பலர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பின்பும் என்னால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. தமிழில் இளம் படைப்பாளிகளின் முதல் தொகுப்பே மிகச்சிறந்ததாக விளங்குகிறது. அனைவரும் சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் நல்லது மட்டுமல்ல கெட்டதும் உள்ளது.
சங்க இலக்கியம் மேட்டுக்குடி மக்களின் காதல், வீரம், ஈகை பற்றி மட்டுமே பேசுகிறது. எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலை பற்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் ஈழத்திற்கு நான் சென்றதே இல்லை, அனுபவம் இல்லாமல் படைக்க கூடாது என்பதனால் என்னால் ஈழம் பற்றிய படைப்பை படைக்க முடியவில்லை.

இந்தி எதிர்ப்பு போராட்டம், கீழவெண்மணி படுகொலை பற்றி இதுவரை ஏதும் பதிவுகள் இல்லை. அந்த வரிசையில் ஈழமும் சேர வேண்டாம் என்றே விரும்புகிறேன். உங்களுடன் கலந்துரையாடியதனால் நானும் பல கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சி எனக்கு நிறைவை தருகிறது என கூறி பிரபஞ்சன் தன் உரையை நிறைவு செய்தார். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தன் நன்றியுரையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கேணி அமைப்பின் முதல் மாத நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி :www.thamizhstudio.com

Thursday, April 28, 2011

கருணா‌‌நி‌தி‌யி‌ன் கோப‌ம் ‌நியாய‌ம்தானா?

"மாநில சுயாட்சி, மத்திய-மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து, இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது'' எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌‌திய பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌‌‌‌ஷ் கார‌த்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, "நெருக்கடி கொடுமைக்கு ஈடுகொடுத்து இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு தான்'' என்று தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டே சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு, நானும், என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே, அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே "காரத்'' என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது'' எ‌ன்று கூ‌றி‌‌யிரு‌ந்தா‌ர்.

கருணா‌நி‌தி‌யி‌ன் இ‌ந்த அ‌றி‌க்கை‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌‌ர் ‌ஜி.ராம‌கிரு‌ஷ்ண‌ன், ''குடும்ப அரசியலின் நிர்ப்பந்தங்களுக்காக அரசியல் முடிவுகள் எடுப்பது, குடும்பத்தினரை வழக்குகளிலிருந்து பாதுகாப்பது, குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்காக மிரட்டல்களுக்காகப் பணிந்து போவது போன்ற காரியங்களில் தி.மு.க தலைவர் இறங்கிவிட்டதால்தான் குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற விமர்சனம் பொதுமேடைகளில் வைக்கப்படுகிறது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சுட்டிக்காட்டினார்''என்றார்.

தி.மு.க. குடு‌‌ம்ப அர‌சிய‌ல் எ‌ன்று சொ‌ல்வ‌தி‌ல் எ‌‌ந்த தவறு‌ம் இ‌ல்லை என்பதற்கு பல உதாரண‌ங்கள் சொ‌ல்லலா‌ம். க‌விஞராக இரு‌ந்த கருணா‌நி‌தி‌யி‌ன் மக‌‌ள் க‌னிமொ‌ழி, த‌ற்போது மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர். க‌ட்‌சி வாடையே இ‌ல்லாம‌ல் இரு‌ந்த க‌னிமொ‌ழியை அ‌ர‌‌சிய‌லி‌ல் கொ‌ண்டு வ‌ந்த பெருமை த‌ந்தை‌க்கு சேரு‌ம்.

ஒரு கால‌த்த‌ி‌ல் அர‌சியலே வே‌ண்டா‌ம் எ‌ன்று ஒது‌ங்‌கி இரு‌ந்த கருணா‌நி‌தி‌யி‌ன் மக‌னு‌ம், அ‌ஞ்சா நெ‌ஞ்ச‌ன் எ‌ன்று க‌ட்‌சி‌க்கார‌ர்களா‌ல் அழை‌க்க‌ப்படு‌ம் மு.க.அழ‌கி‌ரி இ‌ன்று ம‌த்‌திய இரசாயன‌த்துறை அமை‌ச்ச‌ர்.

ஆர‌ம்ப கால‌த்‌திலேயே க‌ட்‌சி‌க்காக ‌சிறை ச‌ெ‌ன்றவ‌ர், க‌ட்‌சி‌யி‌ல் பல பத‌விகளை வ‌‌கி‌த்தவ‌ர் எ‌ன்பத‌ற்காக மு.க.‌‌‌ஸ்டா‌லி‌ன் த‌‌ற்போது துணை முதலமை‌ச்ச‌ர் அளவு‌க்கு உய‌ர்‌ந்து ‌இரு‌ப்பத‌ற்கு த‌ந்தையே காரண‌ம்.

தி.மு.க. குடு‌ம்ப மு‌ன்னே‌ற்ற கழக‌ம் எ‌ன்று கூறுவதை ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாத கருணா‌நி‌தி, 2007ஆ‌ம் ஆ‌ண்டு குடு‌ம்ப‌த்து‌க்‌‌கு எ‌திராக செய‌ல்ப‌ட்ட முரசொ‌லி மாற‌‌னி‌ன் மக‌ன் கலா‌நி‌தி மாற‌‌ன், கே.‌பி.க‌ந்தசா‌மி‌யி‌ன் ‌'‌தினகர‌ன்' ப‌த்‌தி‌ரிகையை வா‌ங்‌கிய பிறகு ஒரு கரு‌த்து‌க் ‌க‌ணி‌ப்பை நட‌த்‌தினா‌ர். 

தி.மு.க.வில் த‌ற்போது துணை முதலமை‌ச்சராக இரு‌க்கு‌ம் மு.க.‌ஸ்டா‌லி‌னு‌க்கு 70 சத‌வீதமு‌ம், மு.க.அழ‌கி‌ரி, க‌னிமொ‌‌ழி‌க்கு 2 சத‌வீதமு‌ம், மதுரை‌யி‌ல் ம‌ட்டு‌ம் அழ‌கி‌ரி‌க்கு 6 சத‌வீத‌ம் ஆதரவு உ‌ள்ளதாக ‌தினகர‌ன் ப‌த்‌தி‌ரிகை கரு‌த்து‌க் க‌ணி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இதனா‌ல் வெ‌கு‌ண்டெழு‌ந்த அழ‌கி‌ரி‌யி‌ன் ஆதரவாள‌ர்க‌ள் மதுரை‌யி‌ல் உ‌ள்ள ‌தினகரன‌் அலுவலக‌த்தை ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர். இ‌தி‌ல் 3 ஊ‌ழிய‌ர்க‌ள் உ‌யிரோடு எ‌ரி‌‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வ‌ா‌ல் கோப‌ம் அடை‌ந்த கலா‌நி‌தி மாற‌ன், வ‌ன்முறை‌க்கு ரவுடி அழ‌கி‌ரி‌தா‌‌ன் காரண‌ம் எ‌ன்று‌‌ம், அவரு‌க்கு த‌ண்டனை வா‌ங்‌கி கொடு‌க்கு‌ம் வரை ஓயமா‌‌ட்டே‌ன் எ‌ன்று ‌வீராவசன‌‌ம் பே‌சினா‌ர். இதனா‌ல் ‌ஆ‌த்‌திர‌த்‌தி‌ன் உ‌ச்ச‌த்து‌க்கே செ‌ன்ற கருணா‌நி‌தி, கே‌பி‌ள் டி‌வி அரசுடைமை ‌ஆ‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌அ‌றி‌வி‌த்தா‌ர். ‌‌‌தயா‌நி‌தி மாறனையு‌ம் அமை‌ச்ச‌ர் பத‌வி உ‌ள்பட அனை‌த்து பொறு‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து‌ம் ‌‌நீ‌க்‌கினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கருணா‌நி‌தி, கலா‌நி‌தி மாற‌ன் இடையே அ‌றி‌க்கை போ‌‌ர் நட‌ந்து கொ‌ண்டிரு‌ந்த வேளை‌யி‌ல், ‌திடீரென கலா‌நி‌தி மா‌ற‌‌ன், கருணா‌நி‌தி‌யிட‌ம் சரண‌டை‌ந்து ‌வி‌ட்டா‌ர். 2009ஆ‌ம் ஆண‌்டு கருணா‌நி‌தி‌யுட‌ன் சரணடை‌ந்த கலா‌நி‌தி மாற‌ன், அழ‌கி‌ரி, தயா‌நி‌தி மாறன் ஆ‌கியோ‌ர் கருணா‌நி‌தியுட‌ன் சே‌ர்‌ந்து கொ‌ண்டு குரூ‌ப் போ‌ட்டோ எடு‌த்து‌க் கொ‌ண்டன‌ர். அ‌ப்போது கூ‌றிய கருணா‌நி‌தி, ''க‌ண்க‌ள் ப‌னி‌த்தன, நெ‌ஞ்ச‌ம் இ‌னி‌த்தது'' எ‌ன்றா‌ர். ஆன‌ா‌ல் ப‌ரிதாபமாக போனது 3 ‌தினகர‌ன் ஊ‌ழிய‌ர்க‌ளி‌ன் உ‌யி‌ர்தா‌ன். இதை‌த் தொட‌ர்‌‌ந்து ‌தினகரன் அலுவலக‌ம் எ‌ரி‌ப்பு வழக்கில் குற்றமசா‌ற்றப்பட்ட 17 பேரும் விடுதலசெய்யப்ப‌ட்டன‌ர்!

நாவரசு கொலை வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ஜா‌ன் டே‌வி‌ட் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்காவிட்டால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டிருப்பார் எ‌ன்று கூறு‌ம் கருணா‌நி‌தி, 3 ‌தினகர‌ன் ஊ‌ழிய‌ர்க‌ள் எ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட‌ வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து 17 பே‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌த்து ஏ‌ன் மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய‌வி‌ல்‌லை எ‌ன்பதே த‌ற்போதைய கே‌ள்‌வி.

கருணா‌நி‌தி‌யி‌ன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியிலும் மத்திய-மாநில ஆட்சியிலும் எத்தனை பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதையும், கேபிள் டிவி துவங்கி திரையரங்கு வரை, கல்வி நிலையங்கள் துவங்கி கப்பல், விமான போக்குவரத்து வரை கையகப்படுத்தி அதன் வழியாக தங்கள் சொத்துக்களை அதிகரித்திருக்கிறார்கள் எ‌ன்பது‌த‌ா‌ன் உ‌ண்மை. அ‌ந்த அளவு‌க்கு கருணா‌நி‌திய‌ி‌ன் குடு‌ம்ப‌ம் எ‌ல்லை‌யி‌ல்லா வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் பாதை‌க்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌‌கிறது எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

இ‌தி‌ல் இரு‌ந்து ‌தி.மு.க. குடு‌ம்ப மு‌ன்னே‌ற்ற கழக‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌‌திய பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌‌‌‌ஷ் கார‌த் கூ‌‌றிய‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றே ‌‌நினை‌க்க தோ‌ன்று‌கிறது.  

Thanks :webdunia.com

Tuesday, April 26, 2011

டீன் ஏஜில் மனப்புழக்கம் - பெற்றோர் காரணம்?

டீன் ஏஜ் பருவத்தில் முடிவுகள் எடுப்பதில் தயக்கம் இருக்கும். பெற்றோர்கள் இந்த நேரங்களில் தங்கள் குழந்தைகளிடம் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு அசோக் எனும் டீனேஜ் மாணவனின் அப்பாவிற்கு தன் மகன் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆவலாயிருக்க அசோக்கினால் அதன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போக இதனால் அவன் அப்பா அவன் மீது கோபம் கொண்டு வார்த்தைகளை வீசி விட்டார்.

"அந்த நாளில் எனக்குத் தான் இப்படியெல்லாம் படிக்க வசதி இல்லை யாரும் கைட் செய்யவில்லை நான் உனக்கு ஆறாவதிலிருந்து அடித்துக் கொள்கிறேன் என் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை உன்னால் ஹ்ம்ம்?" அசோக் இதனால் குற்ற உணர்வில் மாய்ந்து போனான்.

ஷ்யாம் என்னும் மாணவனுக்கு மெக்கானிகல் இஞ்சினீயரிங்கில் ஆர்வம் ஆனால் அவன் பெற்றோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வற்புறுத்தினர். அவர்களை ஏமாற்ற வேண்டாமென கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துக் கொண்டவனுக்கு மனதுக்குள் தன் கனவு கலைந்ததில் ஏற்பட்ட வருத்தம் கலகலப்பான சுபாவத்தை அழிக்கத் தொடங்கி விரக்தியும் வேதனையுமாய் ஆக்கி விட்டது.

வர்ஷாவிற்கு சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட படிப்பே பிடிக்கவில்லை. அக்கவுண்ட்ஸில் ஆர்வம் இருந்தது.
அவள் அம்மாவிற்கோ பெண் பில்கேட்ஸிற்கு வாரிசாய் இருக்க வேண்டுமென வெறி. தனது காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பெல்லாம் இல்லையென்ற ஆதங்கம் தன் ஆசையை மகள் மூலமாய் நிறைவேற்றிக் கொள்ள வர்ஷாவை தன் விருப்பப்படி படிக்க வைத்தாலும் சந்தேகம் படர்ந்தபடியே இருந்தது.

வர்ஷா படிக்கும் அறையினை அவள் அறியாமல் நோட்டமிடுவதும், கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாலே கண்ட பசங்களுடன் சாட்டிங்செய்வதாய் கற்பனை செய்வதும், போனில் பேசினால் கூடவே வந்து நிற்பதுமாய் பெண்ணை நம்பிக்கையின்றி சுற்றி வந்தாள். இதனால் வர்ஷா மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

சுமதியின் நிலமை இன்னும் மோசம். படிப்பறிவற்ற அவளது பெற்றோர் தினசரி சண்டை போடுவதும் கூக்குரல் இடுவதுமாய் அவளது மனநிலையை சிதைக்க, படிப்பில் கவனம் சிதறியது சுமதிக்கு.

டீன் ஏஜ் பருவத்தினரை முள் மேல் விழுந்த துணி போல ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. தங்களது ஆசை, அபிலாஷைகளை வளரும் பயிர் மீது திணித்தால் சுமை தாங்காமல் பயிரே அழிந்து விடக் கூடும். குழந்தைகளுக்கு ரோல் மாடலாய் பெற்றோர் இருக்க வேண்டும்.

· டீன் ஏஜ் பருவ மகன் அல்லது மகளிடம் தோழமையாய் பழகுங்கள்
· படிக்கும் போதில் அவர்கள் கவனம் சிதறாமலிருக்க ஒத்துழையுங்கள்
· வீட்டுப் பிரச்சினைகள், கவலைகளை அவர்களிடம் சொல்லி புலம்ப வேண்டாம்
· படிக்க, அவர்களுக்குப் பிடித்த நேரத்தை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும்
· சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்
· படிக்கும் பருவத்தில் பசி அதிகமிருக்கும். அன்போடு சமைத்துப் பரிமாறுங்கள். அவகாசமில்லையென்று அடிக்கடி அவர்களை ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்பாதீர்கள்
· ஹாஸ்டலில் விட்ட பிள்ளைகளுக்கு, கடிதம் அல்லது போன் மூலமாக அவர்களது நலன் விசாரித்துப் பொறுப்பையும் உணர்த்திச் சொல்லுங்கள்.
· உடன் பழகுபவர்களை அடிக்கடி கவனியுங்கள்.

Thanks : http://tamil.webdunia.com

புத்தம் புது படங்கள்நமது பதிவர்களுக்காக புத்தம்புது படங்களின் தொகுப்பு
பார்த்து மகிழுங்கள்

1. மாப்பிளை .avi
2. குள்ளநரி கூட்டம் .avi
3. கோ .aviMonday, April 25, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை: தி.மு.க.,வுக்கு நெருக்கடி

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்தான வழக்கில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறும் என்ற பரபரப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசுடனான தி.மு.க.,வின் உறவு நிலை என்ன என்பது இன்று தெரியும். உச்சகட்ட எதிர்ப்பாக தி.மு.க., மத்திய அரசில் இருந்து தன் அமைச்சர்களை வாபஸ் பெறும் நிலையும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., 17 மாதங்களுக்கு பின், தனது முதல் குற்றப் பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், சுவான் புரமோட்டர் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப் பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.

அரசுக்கு சேர வேண்டிய வருவாயை மறைத்து, தனிப்பட்ட நபர்கள் தங்களின் சுய லாபத்துக்காக கோடிக்கணக்கில் சுரண்டியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒதுக்கீடு பெற்றனர், எவ்வித மோசடிகளை செய்திருந்தனர் என்ற தகவல்கள் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்து கொடுப்பதற்காக யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; இதில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் எப்படியெல்லாம் கைமாறியது; அதை எங்கே முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

ஏனெனில், இப்பணியில் அமலாக்கத்துறை உதவியையும் சி.பி.ஐ., நாடி தகவல் கேட்டது. இதனால், பலரும் கதிகலங்கி உள்ளனர். இந்த வரிசையில், "2ஜி' ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற சுவான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி' தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. கடன் கொடுத்தனரா, திருப்பிச் செலுத்திவிட்டனரா என்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம். ஒதுக்கீட்டில் கிடைத்த முறைகேடான பணம் எப்படி கலைஞர் "டிவி'க்கு போய் சேர்ந்தது என்பதற்கும், கடன் போல ஆவணங்களெல்லாம் எப்படி திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சி.பி.ஐ., கூறுகிறது.இந்த பரிமாற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த விஷயங்களையெல்லாம் தொகுத்து யார், யாரெல்லாம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே, கலைஞர் "டிவி'யில் பங்குதாரராக உள்ள கனிமொழி, தயாளு மற்றும் இயக்குனர் சரத்குமார் ஆகியோரது பெயர்கள் இடம் பெற உள்ளன.

இது தொடர்பாக, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி'யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். சரத்குமாருக்கு 20 சதவீத பங்குள்ளது. இவர்கள் பெயர்கள் இடம் பெற்றால், அடுத்ததாக கைது படலம் தொடரும் என்பதால், தி.மு.க., தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் ஏற்கனவே முதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற சிலர் கோர்ட் வரை சென்று, கைதை தவிர்த்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பரான மறைந்த சாதிக் பாட்சாவின் முக்கிய பங்கு குறித்து, இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெறலாம்.

இந்நிலையில், மத்திய அரசுடனான தி.மு.க.,வின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க., சந்திக்க நேரிடும் என தெரிகிறது. அந்த நிலையில், மத்தியில் உள்ள தன் ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க., மேலிடம் முடிவு செய்யலாம். அந்த நிர்பந்தத்தை தரக்கூடிய சூழ்நிலையை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

ஹலோ.. இங்கே கொஞ்சம் கவனிங்க…

நாம் தினமும் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என உங்களுக்கு தெரியுமா? கிழே உள்ள பட்டியலை பாருங்கள்.

உணவு பொருள்
 அளவு
கலோரி( Kcals)
இட்லி
115 கிராம்
155
சாதம்
100 கிராம்
110
கோதுமை சப்பாத்தி
35 கிராம்
85
வேகவைத்த உருளை
1 கப்
100
கோழி இறச்சி
100 கிராம்
109
மீன்
100 கிராம்
85
வேகவைத்த முட்டை
1
80
தக்காளி
100 கிராம்
20
கேரட்
100 கிராம்
48
வெண்னை
1 ஸ்பூன்
36
தயிர்
200 மில்லி
58
லஸ்ஸி
200 மில்லி
90
வறுத்த முந்திரி
1 கப்
600
ஜஸ் கிரிம்
 100 கிராம்
200
ரசக்குலா
2
110
ஆம்லெட்
1
130
ஆட்டிறச்சி
100 கிராம்
195
தோசை
85 கிராம்
255
கோலா(குளிர் பானம்)
350 மில்லி
145
ஜிலேபி(ஜாங்கிரி)
100 கிராம்
380
குலோப் ஜாமுன்
2
280

எனவே சாப்புடுரப்ப பாத்து சாப்புடுங்க முக்கியமா என்னை விட்டுடு சாப்பிட்டா எதுவும் செரிக்காது.

Sunday, April 24, 2011

தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது ?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க
வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும்
மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா'  சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய்,
அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற  இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு  வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை
போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில்
மட்டுமல்ல முடியிலும் தெரியும்.வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

Thanks : http://tamil.webdunia.com

ஊ‌ட்டி, கொடை‌க்கானலு‌க்கு சு‌ற்றுலா...

உதகைம‌ண்டல‌ம் என‌ப்படு‌ம் ஊ‌ட்டி‌க்கு‌ம், கொடை‌க்கானலு‌க்கு‌ம் ர‌யி‌ல் ம‌ற்று‌ம் பேரு‌ந்துக‌ள் மூல‌ம் சு‌ற்றுலா செ‌ல்லு‌ம் வச‌தியை த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌க் கழக‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌க் கழக‌ம் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், உதகை சு‌ற்றுலா ஒ‌வ்வொரு புத‌ன்‌கிழமையு‌ம் செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு, ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை காலை செ‌ன்னை வ‌ந்தடையு‌ம்.

சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கோவை வரை ர‌யி‌ல் (சேர‌ன் ‌விரைவு ர‌யி‌ல்) மூலமாகவு‌ம், கோவை‌யி‌ல் இரு‌ந்து உதகை வரை பேரு‌ந்து மூலமாக அழை‌த்து‌ச் செ‌ல்ல‌ப்படுவா‌ர்க‌ள். இ‌ந்த சு‌ற்றுலா செ‌ல்ல பெ‌ரியவ‌ர்களு‌க்கு ரூ.4,200‌ம், ‌சி‌றியவ‌ர்களு‌க்கு ரூ.3,700‌ம் க‌ட்டண‌மாக செலு‌த்த வே‌ண்டு‌ம்.

இதே‌ப்போல கொடை‌க்கானலு‌க்கு ஒ‌வ்வொரு புத‌ன்‌கிழமையு‌ம் செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு, ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை காலை செ‌ன்னை வ‌ந்தடையு‌ம்.

சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் மதுரை வரை ர‌யி‌ல் (பொ‌திகை ‌விரை‌வு ர‌யி‌ல்) மூலமாகவு‌ம், மதுரை‌யி‌ல் இரு‌ந்து கொடை‌க்கான‌ல் வரை பேரு‌ந்து மூலமாகவு‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல‌ப்படுவா‌ர்க‌ள். பெ‌ரியவ‌ர்களு‌க்கு ரூ.4,300‌ம், ‌சி‌றியவ‌ர்களு‌க்கு ரூ.3,800‌ம் க‌ட்டணமாக வசூ‌லி‌க்‌க‌ப்படு‌ம்.

இ‌ந்த சு‌ற்றுலா ப‌ற்‌றிய மேலு‌ம் ‌விவர‌‌ங்க‌ள் அ‌றிய த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌க் கழக‌ம், 2, வாலாஜா சாலை, செ‌ன்னை - 2 எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் நே‌ரிலு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

தொலைபே‌சி எ‌ண் - 044-25383333/9857/2916 எ‌ன்ற எ‌ண்க‌ளி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு‌ம் கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம். 

Thanks : http://tamil.webdunia.com

வைரமுத்து கவிதைகள் ஒலி புத்தகமாக

கவி பேரரசு வைரமுத்து கவிதைகள் ஒலி  புத்தகமாக :


கவி பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைகளை ரசிகாதவர்கள் இருக்க முடியாது . அழகிய வார்த்தைகளில் அனைவரையும் கட்டிபோடும் வார்த்தை ஜாலத்தில் கவிதை எழுதுவதில் அவர் வல்லவர் .

கவிதைகளை படிப்பதே சுகம் . அதுவும் அவரே அதை படித்து காட்டினால் ?..
இதோ அவரின் சில கவிதைகளை அவரே படித்த ஒலி  புத்தகங்கள் உங்களுக்காக ...

கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
கவிதை 5
கவிதை 6

Saturday, April 23, 2011

வடிவேலு ஒரு சாக்கடை – டைரக்டர் அமீர் விளாசல்!வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தை பற்றியும் கேப்டன் குறித்த அவரது விளாசல் பற்றியும் முதன் முறையாக ஒரு நடுநிலையான சினிமாக்காரர் வாய் திறந்திருக்கிறார். அவர் அமீர்! இந்த வார ஆனந்த விகடன் இதழில் அமீர் தந்திருக்கும் பேட்டி செம சூடு…
 
இதோ பேட்டியிலிருந்து ஒரு பகுதி மட்டும்- வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படி பார்க்கிறீர்கள்? சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது.
 
விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு.
 
விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?
 
Thanks : kingtamil

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்எனது நண்பன் ஒருவன் ( விஜய்) அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகின்றான் . அவர்கள் ஒரு அதிசய சாப்ட்வேர் தயாரிக்கின்றனர். அதாவது கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் ஒரு சாப்ட்வேர் . இவனும் அந்த குழுவில் ஒருவன் . அந்த சாப்ட்வேர் இன் மிக சிறிய மாதிரி ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தான் .

அதை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் , அதிசயப்பட்டேன் . இதை நம் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் . 

இந்த சாப்ட்வேர்ய் பயன்படுத்துங்கள் தயவு செய்து யாருக்கும் மெயில் செய்யவேண்டாம். விருப்பம் உள்ளவர்களை என் வலையில் இருந்து டவுன்லோட் செய்ய சொல்லுங்கள் .

சாப்ட்வேர் டவுன்லோட் CLICK செய்ய பண்ணவும்

Friday, April 22, 2011

சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தார்; பழைய நடிகை காஞ்சனா - கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பு


தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார்.
 
சிவாஜியுடன் சிவந்த மண்படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. “சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது.
 
அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார். கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன. கோர்ட்டு மூலம் சமீபத்தில் சில சொத்துக்களை மீட்டு திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகையாகி தற்போது ஏழ்மையில் கஷ்டப்படும் காஞ்சனாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.
 
இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இவர் ராஜ்கிரண் நடித்த “பகடை” படத்தை டைரக்டு செய்தவர். “மௌனம் பேசியதே”, “காதல் கிசுகிசு”, “குண்டக்க மண்டக்க” படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிப்பார் என தெரிகிறது. காஞ்சனா வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசி வருகின்றனர். சோனியா அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
Thanks : kingtamil

கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?சில வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு செமினார் எடுக்கவேண்டிய கஷ்டமான நில( “ மாணவர்களுக்குதானே கஷ்டம் “  - கருண் உன் MAIND VOICE ய CATCH பன்னிடேன்). சில முக்கிய வேலைகள் இருந்ததால் பெரிதாக எதும் தயாரிப்பு செய்யவில்லை. ( இல்லனா மட்டும் பெரிசா கிழிச்சுடுவ..)

எப்பவும் ஒரு செமினார் அல்லது வகுப்பில் புதிதாக ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குட்டி கதை சொல்லுவது வழக்கம்( மனசுல என்ன ஜெயலலிதா, பாக்கியராஜ்னு நினைப்பா..?)

சரி SUBJECT தான் இல்ல கதையாது ஜாலியா சொல்லலாம்னு ஒரு கதை சொன்னென்.

“ அமெரிக்காவில் வருடா வருடம் பால் கறக்கும் போட்டி நடக்கும், பல நாட்டில் இருந்தும் பல போட்டியாலர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை காட்டுவார்கள்.

இந்த வருடம் இந்தியா சார்பில் யாரை அனுப்பலாம் என பயங்கரமா யோசித்து கடைசியில் நம்ம ராமராஜனை செலக்ட் செய்தார்கள். அவர்தான் பாட்டு பாடியே பால் கறப்பாரே


போட்டி துவங்கியது, அவரவர்கள் தாங்கள் கொண்டுவந்துள்ள மாடுகளுடன் தனி அறைக்கு சென்றனர். 2 மணி நேரம் கழித்து அனைவரையும் அவர்கள் கறந்த பாலுடன் வரசொன்னார்கள்.

ஜப்பாங்காரன் 15 லிட்டரும், அமெரிக்காகாரன் 10 லிட்டரும், ரஷ்யாகாரன் 8 லிட்டரும், பாகிஸ்தாங்காரன் 5 லிட்டரும் கறந்து இருந்தனர். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நம்ம ராமராஜன் வேறும் 2 லிட்டர் மட்டுமே கறந்து இருந்தார்.

அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. நடுவர்கள் அவரிடம் சென்று என்ன சார் நிங்கதான் ஜெய்பிங்கனு எதிர்பார்தோம், இப்படி 2 லிட்டர் மட்டும் கறந்து ஏமாத்திட்டிங்களே ? என கேட்டார்கள்.

அதுக்கு ராமராஜன் “ நான் என்ன சார் பன்னுறது அவசரத்துல வரப்ப "காளை “ மாட்டை ஓட்டிட்டு வந்துட்டேன், அதுல இவ்வளவு தான் கறக்க முடிந்தது “ என்றார் கூலாக.

(கதை முடிச்சுடு துங்குனவங்க முழிச்சுக்குங்க)

அதுபோல நானும் அவசரமா வந்ததால நிறைய PREPARE பன்ன முடியல, என்னால முடிந்த அளவு நடத்துறேன் பாத்துக்க்குங்க என கூறிவிட்டு நடத்த ஆரம்பித்தேன்.

எல்லாம் நடத்தி முடித்துவிட்டு “ யாருக்காவது எதாது சந்தேகம் இருந்தா கேட்களாம்” என்ரறேன்.( இதுக்கு பெயர்தான் வாயகுடுத்து வாங்கிகட்டிகிறது)

ஒரு மாணவன் எழுந்து கேட்டான் பாரு ஒரு கேள்வி !!!

“ இந்தியா தோற்கிறா போல எப்படி நீங்க கதை சொல்லலாம் “

அடங்கோய்யால SUBJECT ல இருந்து ஒரு சந்தேகம் கேளுடானா கதைல கேட்ட அவன் நாட்டு பற்றை பாத்து நான் அழுவதா ? சிரிப்பதா?

Thursday, April 21, 2011

மில்டன் கவிதைகள்

இவ்வளவு வெறுமையாகவும்
இவ்வளவு முழுமையாகவும்
ஒரே சமயத்தில் உணர்வது
காதலில் மட்டுமே சாத்தியம்

===============================================
எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது
எவ்வளவு கூட்டமாய்
பெண்கள் போனாலும்
எப்படி இவ்வளவு எளிதாக
உன்னை அடையாளம் கண்டுகொள்ள
முடிகிறதென்று.
====================================================

நெருங்கி வந்தால்
விலகி ஊடுகிறாய்
முத்தம் கேட்டால்
முகத்தை திருப்பிக் கொள்கிறாய்
அணைக்க முற்பட்டால்
பிடித்துத் தள்ளுகிறாய்
முரட்டுத்தனமாக சாதித்துக் கொண்டாலோ
சிரித்துக் கொண்டே
கண்மூடி நெஞ்சில் சாய்கிறாய்.
ம்..
காத்லின் வழிமுறைகள்
ஒன்றும் புரியவில்லை.

===================================================

உதடுகள்  பேசிக்கொள்வதும்
கண்கள் சந்தித்துக்கொள்வதும்
உலகறியும்

கண்கள்  பேசிக்கொள்வதும்
உதடுகள் சந்தித்துக்கொள்வதும்
காதல் மட்டுமே அறியும்

=====================================
Thanks :எஸ்.டி. விஜய் மில்டன்

லொள்ளு சபா : ஜல்லி


இந்த காமெடிய பாத்து நீங்க சிரிக்கலைனா உங்களுக்கு எதோ மனரீதியான பிரச்சனைன்னு அர்த்தம்
Wednesday, April 20, 2011

ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு இர‌ட்டை ஆயு‌ள் செ‌ல்லு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்பு

மாணவ‌ரநாவரசகொலவழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனை ர‌த்து செ‌ய்த செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தின‌் ‌தீ‌ர்‌ப்பஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்து ‌‌‌கடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ன் ‌தீ‌ர்‌ப்பை உறு‌தி செ‌ய்து‌ள்ளது.

செ‌ன்னப‌ல்கலை‌க்கழமு‌ன்னா‌ளதுணைவே‌ந்த‌‌ரபொ‌ன்னுசா‌மி‌‌யி‌னமக‌னநாவரசு. சித‌ம்பர‌மமு‌த்தையமரு‌‌த்துவ‌கக‌ல்லூ‌ரி‌‌யி‌லபடி‌த்தவ‌ந்மாணவ‌ரநாவரசு 1996 ஆ‌மஆ‌ண்டமாணவ‌ரஜா‌ன்டே‌வி‌டஎ‌ன்பவரா‌லகொலசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டா‌ர்.

மாணவ‌ரநாவர‌சி‌னஉடலது‌ண்டது‌ண்டாவெ‌ட்டி சூ‌ட்கே‌சி‌லஅடை‌த்து ‌வீ‌சி ‌வி‌ட்டசெ‌ன்மாணவ‌ரஜா‌ன்டே‌வி‌ட்டகாவ‌ல்துறை‌யி‌ன‌ரகைதசெ‌ய்து ‌‌சிறை‌யி‌‌லஅடை‌த்தன‌ர்.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்கடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கஇர‌ட்டஆயு‌ளத‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்தஜா‌ன்டே‌வி‌டசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெ‌‌ய்தா‌ர்.

இ‌ந்மே‌ல்முறை‌யீ‌ட்டமனுவை ‌‌விசா‌ரி‌த்உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஅரசதர‌ப்‌பி‌லசா‌ட்‌சிய‌ங்க‌ளச‌ரியாக ‌‌நிரூ‌பி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றி ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்இர‌‌ட்டஆயு‌ளத‌‌ண்டனையர‌த்தசெ‌ய்ததுங

இதையடு‌த்தஜா‌ன்டே‌வி‌ட் ‌விடுதலையஎ‌‌தி‌ர்‌த்தத‌மிழஅரசசா‌ர்‌பி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌ல் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற செய‌ல்பாடு ப‌ற்‌றி அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌‌த்து‌ள்ளது.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பை ர‌‌த்து செ‌ய்த ‌‌‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌‌ட் உடனடியாக சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

Thanks : http://tamil.webdunia.com

வாசித்ததில் பிடித்த ஹைகூகள்    மூட்டை தூக்கிகொள்ள
முன்பயிற்சி தருகின்றன
நர்சரி பள்ளிகள் !

================================================


ரொம்ப பசிக்கிறது
எப்போது சாப்பிடுவான்
எஜமானன் ?

வாசலில் நாய்..!

======================================================

“உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் “
எழுதத் தொடங்கினால்
முடிய மறுக்கிறது வரிகள்
உன்னை நான் நேசிக்கிறேனா?
இல்லை, எழுதி எழுதி
இந்தப் பேனாவே உன்னை நேசிக்கிறதா?

=======================================================
சில நிமிடம் கழித்துதான் போயேன்
அதுவரையாவது
காதலித்துக் கொள்ளட்டும்,
கோவில் வாசலில் அருகருகே கிடக்கும்
நம் செருப்புகள்.


குழந்தையைக்
காப்பகத்தில்
விட்டனர் பெற்றோர்..
பெற்றொரை
முதியோர் இல்லத்தில்
சேர்த்தான் மகன்.


சோதித்த மருத்துவர்
அதிர்ந்தே போனார்..
அவர் ஸ்டெதாஸ்கோப்பில்
கேட்டது
உன் பெயர்.
===============================================

எத்தனை புதிய வார்த்தைகள்!!
இலக்கியத்தில் இதெல்லாம் உண்டோ ?

குழாயடி சண்டை !

============================================Monday, April 18, 2011

சில சந்தேகங்கள் :


 


  1. MA    னா “ ம 
    CHI   னா “ ச்சி 
    NE    னா “ னி 

    அப்படினா

    MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு  
    சொல்றோம்???

  1. “கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
“விக்கெட் கீப்பர் “ னா?

  1. சோம்பல் நமது முதல் எதிரி  - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் ஏசு

இப்ப நான் எதை பின்பற்றுவது ?

  1. ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?

  1.  நல்ல பதிவு போட்டா “அட்ரா சக்கை”
பதிவு சரியில்லைனா  “சக்கையா அட்ரா “ வா?

  1. ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?

  1. “ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?

  1.  ராமதாஸ் நாங்க 234 தொகுதில ஜெயிப்போம்
     ஸ்டாலின்  நாங்க 220 தொகுதில ஜெயிப்போம்
     அழகிரி நாங்க 200 தொகுதில ஜெயிப்போம்
     அப்ப தி.மு.க கூட்டணி 654 தொகுதில ஜெயிக்குமா ?

          -- எனக்கு தெரிந்து 234 தொகுதிதானே இருக்கு ?

  1. இப்ப நான் போட்டு இருப்பது ஒரு பதிவா?

  1.  இதையும் ஒரு பதிவுனு மதிச்சு கமெண்ட் போடுவிங்களா?