> என் ராஜபாட்டை : February 2012

.....

.

Wednesday, February 29, 2012

அண்ணே ஒரு சந்தேகம்



சந்தேகம் சாரங்கபாணி இவருக்கு சில சந்தேகங்கள் அதை இங்கே தந்துள்ளேன். பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.


பதிவர் வீடு சுரேஷ் இன்னொரு பிளாக் துவங்கினால் அதுக்கு சின்ன வீடு னு பெயர் வைப்பாரா ?


இடைதேர்தல் இடைதேர்தல்னு சொல்றாங்க ஆனா இடையே இல்லாதே குஷ்பு பிரசாரத்துக்கு ஏன் வாராங்க ?


மத்திய அரசு இரண்டு கேரளா மீனவர்கள் பலியானத்துக்கு காட்டும் வேகத்தை 200 தமிழ் மீனவர்கள் பலியாகும் போது காட்டாதது ஏன் ?



கூடல் பாலா தான் குழந்தைக்கு அணு என்று பெயர் வைப்பாரா மாட்டாரா ?


நாய் நக்ஸ் நக்கீரன் சாரை நாய் கடிக்குமா ?


தமிழ்வாசி பிரகாஷ் அமெரிக்காவுல செட்டில் ஆனா இங்கிலீஷ்வாசினு  சொல்லலாமா ?

விக்கி வெங்கட்க்கு தலைல இருப்பது விக்கா ?

பல வருடங்களாகவே பண்ணிகுட்டி ராமசாமி  , குட்டியாகவே இருக்கின்றாரே குட்டி ஏன் இன்னும் வளர வில்லை ?

திடுடி எடுக்குற படத்த சொந்த படம்னு சொல்றாங்க ஆனா சொந்தமா எடுத்த அம்புலி படத்தை திருடி (3D) படன்னு சொல்றாங்க ஏன் ?


கம்பியூட்டரை START  செய்யும் போது
KEYBOARD NOT CONNECT PRESS F1 TO CONTINUE என்று வருது எண்ண பண்ணுவது ?


Monday, February 27, 2012

கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?




சில வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு செமினார் எடுக்கவேண்டிய கஷ்டமான நில( “ மாணவர்களுக்குதானே கஷ்டம் “  - வீடு சுரேஷ்  உங்க  MAIND VOICE ய CATCH பன்னிடேன்). சில முக்கிய வேலைகள் இருந்ததால் பெரிதாக எதும் தயாரிப்பு செய்யவில்லை. ( இல்லனா மட்டும் பெரிசா கிழிச்சுடுவ..)

எப்பவும் ஒரு செமினார் அல்லது வகுப்பில் புதிதாக ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குட்டி கதை சொல்லுவது வழக்கம்( மனசுல என்ன ஜெயலலிதா, பாக்கியராஜ்னு நினைப்பா..?- விக்கி )

சரி SUBJECT தான் இல்ல கதையாது ஜாலியா சொல்லலாம்னு ஒரு கதை சொன்னென்.

“ அமெரிக்காவில் வருடா வருடம் பால் கறக்கும் போட்டி நடக்கும், பல நாட்டில் இருந்தும் பல போட்டியாலர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை காட்டுவார்கள்.

இந்த வருடம் இந்தியா சார்பில் யாரை அனுப்பலாம் என பயங்கரமா யோசித்து கடைசியில் நம்ம ராமராஜனை செலக்ட் செய்தார்கள். அவர்தான் பாட்டு பாடியே பால் கறப்பாரே


போட்டி துவங்கியது, அவரவர்கள் தாங்கள் கொண்டுவந்துள்ள மாடுகளுடன் தனி அறைக்கு சென்றனர். 2 மணி நேரம் கழித்து அனைவரையும் அவர்கள் கறந்த பாலுடன் வரசொன்னார்கள்.

ஜப்பாங்காரன் 15 லிட்டரும், அமெரிக்காகாரன் 10 லிட்டரும், ரஷ்யாகாரன் 8 லிட்டரும், பாகிஸ்தாங்காரன் 5 லிட்டரும் கறந்து இருந்தனர். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நம்ம ராமராஜன் வேறும் 2 லிட்டர் மட்டுமே கறந்து இருந்தார்.

அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. நடுவர்கள் அவரிடம் சென்று என்ன சார் நிங்கதான் ஜெய்பிங்கனு எதிர்பார்தோம், இப்படி 2 லிட்டர் மட்டும் கறந்து ஏமாத்திட்டிங்களே ? என கேட்டார்கள்.

அதுக்கு ராமராஜன் “ நான் என்ன சார் பன்னுறது அவசரத்துல வரப்ப "காளை “ மாட்டை ஓட்டிட்டு வந்துட்டேன், அதுல இவ்வளவு தான் கறக்க முடிந்தது “ என்றார் கூலாக.

(கதை முடிச்சுடு துங்குனவங்க முழிச்சுக்குங்க)

அதுபோல நானும் அவசரமா வந்ததால நிறைய PREPARE பன்ன முடியல, என்னால முடிந்த அளவு நடத்துறேன் பாத்துக்க்குங்க என கூறிவிட்டு நடத்த ஆரம்பித்தேன்.

எல்லாம் நடத்தி முடித்துவிட்டு “ யாருக்காவது எதாது சந்தேகம் இருந்தா கேட்களாம்” என்ரறேன்.( இதுக்கு பெயர்தான் வாயகுடுத்து வாங்கிகட்டிகிறது)

ஒரு மாணவன் எழுந்து கேட்டான் பாரு ஒரு கேள்வி !!!

“ இந்தியா தோற்கிறா போல எப்படி நீங்க கதை சொல்லலாம் “

அடங்கோய்யால  SUBJECT ல இருந்து ஒரு சந்தேகம் கேளுடானா கதைல கேட்ட அவன் நாட்டு பற்றை பாத்து நான் அழுவதா ? சிரிப்பதா?



Saturday, February 25, 2012

விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..


விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

செய்தி 2  :

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' மற்றும் 'காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய 2 படங்களுக்கும் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலுமே நாயகியாக நடித்தார் அமலாபால்.

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் சாருலதா என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியராகவும், 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார். 2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான 'வேட்டை' படமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இரண்டு படங்களிலுமே அமலாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்கு பதிப்பான LOVE FAILURE படம் அங்கு பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கு பலனாக விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.

இந்த வருடத்தில் தான் நடித்து வந்த படங்களின் வரவேற்பு, பெரும் நாயகர்கள் நடிக்க இருக்கும் படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது என 2012 அமலா வருடமாக அமைந்து இருக்கிறது.

நன்றி : விகடன்


இதையும் படிக்கலாமே :



இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?


Friday, February 24, 2012

இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?




சில தினங்களுக்கு முன்பு ஏன் உறவினர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள LKS நகை கடையில் ஒரு நகை எடுத்தார். அவர் வாங்கிய நகையை பார்த்தேன். நன்றாக இருந்தது. விலையை பற்றி பேச்சு வந்தது. நகை ரசீதை காட்டுங்கள் விலையை பார்க்கலாம் என கேட்டு வாங்கி பார்த்தால் பெரிய அதிர்ச்சி. காரணம் அந்த ரசீதை கீழே குடுத்துள்ளேன் நீங்களே பாருங்கள் தெரியும்.


  1. இதில் எந்த இடத்திலும் கடையின் பெயர் இல்லை

  1. வாங்கிய பொருளின் பெயர் இல்லை

  1. பொருளின் அளவு , செய்கூலி , சேதாரம் பற்றி ஒன்றும் இல்லை

  1. கடையின் விதிமுறைகள் ,வரிகள் பற்றி ஒன்றும் இல்லை

இதைவிட ஒரு கொடுமை , நகையின் அளவு 7.750 என போட்டிருந்ததாம், ஆனால் அளக்கும் போது 7.640 மட்டும் இருத்து இருக்கிறது காரணம் கேட்டதுக்கு அங்கு உள்ள விற்பனையாளர் சொன்ன பதில் காமெடியின் உச்சகட்டம். அவர் சொல்லியுள்ளார் எடை மெஷினில் உள்ள பாத்திரத்தில் எடைபோட்டால் இரு அளவு நகையை மட்டும் போட்டதால் ஒரு அளவு , முன்பு உள்ளது பாத்திரத்துடன் போட்ட அளவு என்று சொல்லியுள்ளார். நாம நகை வாங்க போறோமா அல்லது நகையுடன் அந்த எடை மிஷினில் உள்ள பாத்திரத்தையும் வாங்கபோகிரோமா ?

இவர்கள் இந்த விற்பனைக்கு வரி கட்டுவார்களா ? எந்த விலையின் அடிப்படையில் வரிகட்டுவார்கள்? நகை வாங்கும் அனைவரும் பில் போட்டு நகை குடுங்கள் என கேட்க தெரிந்தவர்கள் என சொல்லமுடியாது ? இது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா ? இதை திருட்டு என்று கூட சொல்லலாம்.



இவர்களை எப்படி தட்டி கேட்பது ? இதற்க்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் ? என விவரம் அறிந்தவர்கள் பின்னுடத்தில் தெரிவிக்கலாம். இந்த கடை மட்டும் அல்ல பல கடைகளில் இதுபோல நடக்கின்றது.


இதையும் படிக்கலாமே :

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

 

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.

 


Thursday, February 23, 2012

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...



எங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் cable Tv நிறுவனம் SKY TV என்ற channel நடத்தி வருகிரது. கடந்த வருடம்  12 வகுப்பு மாண்வர்களுக்காக “ வெற்றி சிறகுகள்” என்ற நிகழ்சி நடத்தியது. 12 வகுப்பு பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை அழைத்து நேர்காணல் நிகழ்சியாக நடத்தியது.

கணினி பாடத்திற்க்கு என்னை அழைத்தனர்.(பாவம் அவர்கள் கெட்ட நேரம்) வேறு நல்ல ஆசிரியரை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தார்கள் என கேட்டேன், அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, நீ தான் வெட்டியா இறுக்க So நீயே வா என சொல்லிவிட்டார்கள்.

என் மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும்  சிலருக்கு சந்தோஷம்(யார் வீட்டில் TV இல்லையோ அவர்களுக்கு)  சிலருக்கு வருத்தம்((யார் வீட்டில் TV இருக்கோ அவர்களுக்கு). சில மாணவர்கள் ஒரு முக்கியமான சந்தேகம் கேட்கபோவதாக கூறினர். அது “ நீங்க வெறும் ராஜா வா இல்ல ராக்கெட் ராஜா வானு”.

நிகழ்சி இரவு 7 To 8 .  மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல வினாக்கள் கேட்டனர்( SCHOOL ல நான் QUESTION கேட்டதுக்கு பழி வாங்கிடானுக). OVER PHONE CALL வந்ததால் நிகழ்சி 8.30 வரை தொடர்தது.

மயிலை மக்கள் பட்ட கஷ்டதை அனைவரும் படவேண்டும் என்ற நல்ல எண்னதில் அந்த நிகழ்சியின் வீடியோ (STOP ,  FULL அ இல்லை, கொஞ்சம் தான்) இனைத்து உள்ளேன். பாத்துவிட்டு (நல்ல மன நிலையில் இருந்தால் ) உங்கள் கருத்தை கூறவும்)




இது இப்போது உள்ள மாணவர்களுக்கும் பயன் படும் என எண்ணுகின்றேன். சரியனில் பகிரவும் . உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கின்றேன் .

Wednesday, February 22, 2012

ஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)



 

நாம் பலவகையான பைல் பார்மேட் பயன்படுத்தி வருகின்றோம். புதிதாக நான் தரவிறக்கும் அல்லது நாம் யாரிடமாவது காபி செய்த ஏதாவது பைல்களை எப்படி ஓபன் செய்வது என தெரியாமால் முழிக்கலாம். அல்லது அது ஓபன் ஆகமால் போகலாம்.

 

இது போன்ற சமயத்தில் உதவ வருகின்றது இந்த மென்பொருள். இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் 75 விதமான பைல் பார்மேட்களை இது ஓபன் செய்கின்றது. இதன்முலம் பலவிதமான பைகளை நீங்கள் எளிதாக திறக்கலாம்.

 

 

இது திறக்கும் பைல் பார்மேட்கள் இதோ ...

 

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint  Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft  Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

 

இந்த மென்பொருளை தரவிறக்கம்(Download) செய்ய ...

MultiFile Format Openner http://www.freeopener.com/

Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :




2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

 

Monday, February 20, 2012

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.





அன்பு காணமல் போன கனவுகள் பிளாக் சகோதரி ராஜீ அவர்கள் எனக்கு ஒரு விருது தந்துள்ளார். இதை கேள்விபட்டதும் பலபதிவர்களுக்கு ஒரு சந்தேகம் , இந்த விருது இவருக்கு எதுக்கு வழங்கப்பட்டது.( எனக்கும் அதே சந்தேகம்தான்). காரணத்தை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கபட்டது.( கூடன்குளத்துக்கு அமைக்கபட்ட குழுபோல இது பொய் சொல்லாது). இவர்கள் தாங்கள் கண்டறிந்த காரணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றனர்.


குழு 1 : ராஜாவின் எழுத்து நடையே இந்த விருதுக்கு காரணம் .

     இதில் எனது குரு கரண் , அகில உலக ஷகிலா ரசிகர்மன்ற தலைவர் சி.பி , அதிரடி நாயகன் மனோ பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 2 : ராஜாவின் தொழில்நுட்ப அறிவே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தொழில்நுட்ப காண்டாமிருகம் (எத்தனை நாளுக்குத்தான் புலினு சொல்றது?) அண்ணன் சசி , ஆனந்த விகடனில் சமிபத்திய ஓனர் ( என் விகடன்னு தானே சொன்னார் ..) தமிழ்வாசி , அமைதி புயல் பிளாக்கர்  நண்பன் அப்துல் பாசித் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 3 : ராஜாவின் நகைசுவை உணர்வே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தமிழ்மணம் கொன்றான் , நகைசுவை வள்ளல் bio-data புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்

நாள் : 30 2 2012

இடம் : நாயுடு ஹால் சாரி நாயகர் ஹால் மதுரை.


டிஸ்கி ; இந்த விருதை இன்னும் சிலருக்கு அளிக்க விரும்புகின்றேன் .

  1. வடகரை தாரிக் செலவில்லாமல் அனைத்து புத்தகங்களையும் தருவதால்

  1. S.ராமன் வேலூர் உழியர்களுக்காக குரல் குடுபவர் இவர்

  1. வினோ என்வழி என்னும் வலைத்தளம் முலம் கலக்கும் ரஜினி ரசிகர் .

  1. கவிதை வீதி சௌந்தர் இவர் என் இனம் ( ஆசிரியர்னு சொல்லவந்தேன்) கவிதை மன்னன்.

  1. தமிழ்த்தோட்டம் வித்தியாசமான வலைத்தளம் நடத்துகின்றார் .
  2. எனத் தி வேர்ல்ட் என்னும் தளம் முலம் பல அறிய தகவல் தரும் ஸ்டாலின் வெஸ்லி  

Friday, February 17, 2012

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...






பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.


1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள். 

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedgetAdd HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.


4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.


ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.



        5) இதை Add பன்னி save செய்யவும்.



இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால்

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.




இது ஒரு மீள் பதிவு :

இதையும் படிக்கலாமே :

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

 

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா



Thursday, February 16, 2012

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !



அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா ?

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

இரண்டு கதானாயகினா சந்தோசம் .. இதுல என்ன சந்தோசம் இருக்கு ?

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. 
'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். ( இதைதான் எல்லாரும் சொல்றிங்க ) இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர்.
(இது எல்லாருக்கும் தெரியும் )
விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

(இதுவும் உண்மையான விஷயம் )





ஒரு நல்ல வில்லன் வந்தா சந்தோசம் தான் 



இதையும் படிக்கலாமே :

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா ?

 

அஜித்தின் அடுத்த அதிரடி

 

Wednesday, February 15, 2012

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா ?




இன்றைய கணினி உலகில் கடவுச்சொல் திருட்டு என்பது சர்வசாதரமான விஷயம். விளையாட்டுக்காக அல்லது பழிவாங்க அல்லது ஒரு திரில்க்காக மற்றவர்கள் கடவுச்சொல்லை திருடுவது என்பது பல இடங்களில் நடக்கின்றது. இது போன்ற செயல்களில் இருந்து உங்கள் உங்கள் கடவுச்சொல்லை காப்பாற்ற அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யவேண்டும். கடவு சொல் எப்படி இருக்கவேண்டும் , எப்படி இருக்க கூடாது என பார்ப்போம்.

1.                  யாரும் எளிதில் யூகிக்க கூடிய கடவுச்சொல்லை பயன்படுத்தாதிர்கள். உதாரணம் : உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , அம்மா , அப்பா பெயர் , ஊர் பெயர் . இது மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவை .

2.                  இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கடவுச்சொல்லை மாற்றுங்கள்.

3.                  Upper case மற்றும் Lowercase எழுத்துகள் கலந்து பயன்படுத்துங்கள்.

4.                  எழுத்துகளுடன் எங்களை கலந்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 123456   or 1111111 என பயன்படுத்துவது தவறு.

5.                  strongpasswordgenerator.com என்ற தளத்தில் உங்கள் கடவுச்சொல்லை சோதித்து பார்க்கலாம் .

6.                  அனைத்து கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதிர்கள். வங்கி கணக்குக்கு உள்ள கடவுச்சொல்லை Facebook கணக்குக்கும் பயன்படுத்தினால் இரண்டும் ஹாக் செய்யப்படும் அபாயம் உள்ளது .

7.                  facebook இல் வரும் மெசேஜ் இல் இந்த லிங்கை கிளிக் செய்தால் .. என தொடக்கி வரும் எந்த லின்க்கையும் கிளிக் செய்யவேண்டாம்.

8.                  Gmail / Yahoo / Hotmail / facebook மற்றும் எதாவது வங்கியில் இருந்து வரும் மெயிலில் உங்கள் கடவுச்சொல் சம்பந்தபட்ட கேள்விகள் வந்தால் அந்த மெயில்லின் நண்பகதன்மை தெரியாமல் பதில் அளிக்கவேண்டாம்.

9.                  ப்ரௌசிங் சென்டரில் உலவும் நண்பர்கள் தங்கள் வேலை முடிந்ததும் உங்கள் ப்ரௌசெரின் ஹிஸ்டரி மற்றும் கோகிஸ் (cookis)  போன்றவற்றை அழித்துவிட்டு செல்லவும்.

10.              Gmail இல் 2 step verification option அய் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

11.              மேலும் தகவலுக்கு தமிழ்வாசி மற்றும் வந்தேமாதரம் சசி வலைதளத்தை பார்க்கவும்.( ஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )







இதையும் படிக்கலாமே :

காதலின் மறுபக்கம் !









Tuesday, February 14, 2012

காதலின் மறுபக்கம் !


''காதல் சிறப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கும் எனத் தெரியும். காதல் என்பது எல்லோருக்கும் வசந்தத்தை மட்டுமே கொடுத்துவிடாது. அது தரும் ஏமாற்றங்களும், துன்பங்களும் கொடூரமானவை. அதன் நிகழ்கால சாட்சிகளில் நானும் ஒருத்தியாக நிற்கிறேன். விருந்துக்கு நடுவில் வைக்கும் மருந்தைப் போல், இந்த இதழில் மிளிரும் காதல் கொண்டாட்டக் கட்டுரைகளுக்கு நடுவில், தவறான வயதில், தவறான நபரின் மேல், தவறான சூழலில் கைகோக்கும் காதலுக்கு... தோல்வியும், திண்டாட்டமுமே மிஞ்சும் என்று உணர்த்தும் என்னுடைய இந்த எச்சரிக்கை கடிதத்தையும் வையுங்கள்!''
- உரிமையுடன், உருக்கத்துடன் எழுதிஇருந்தார், மதுரையைச் சேர்ந்த 32 வயதான அவள் வாசகி (பெயர் மற்றும் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன).
''நான் ப்ளஸ் டூ படித்தபோது, எதிர்வீட்டில் குடியிருந்தார் கல்லூரி மாணவரான அவர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி, ரகசிய மணம் முடித்தோம். விஷயம் தெரிந்து இரு வீட்டாரும் கோபத்தில் பொங்க, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தோம். 'இருவரையும் பிரிக்க மாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்து, அழைத்துச் சென்றனர் இரு தரப்பு பெற்றோரும்.
அவருடைய பெற்றோர், 'பையன் பி.எஸ்சி, ஃபர்ஸ்ட் இயர்தான் படிக்கிறான். படித்து முடித்து வேலையில் சேரும் வரை, இந்தத் திருமணத்தை வெளியில் சொல்ல வேண்டாம். இவள், எங்கள் உறவினர் வீட்டில் இருக்கட்டும்’ என்று என் பெற்றோரிடம் சொல்லி அழைத்துச் சென்றனர். அவருடைய பாட்டி வீட்டில் ரகசிய விருந்தாளியாக வைத்தனர். ஒரு நாள் அவருடைய அம்மா, 'நாங்கள் சொல்லும் வரை அவனுடன் தாம்பத்ய வாழ்க்கை நடத்தக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்று சத்தியம் வாங்கினார். அவர்கள் மனமுவந்து என்னை ஏற்கவில்லை... காதல் திருமணப் பிரச்னையை வெளியில் தெரியாமல் மறைக்கவே அழைத்து வந்து வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்த நாட்களில்தான் புரிந்தது.
அவரிடம் அழுதேன். 'நமக்குக் குழந்தை பிறந்து பள்ளிக்குச் செல்லும்போது, நானும் படித்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? பெற்றோர் சம்பாத்தியத்தில் எப்படி பிள்ளையை வளர்ப்பது? பொறுத்திரு...’ என்றார். என் பெற்றோரிடம் சொன்னால் மனம் உடைவார்கள் என்பதால், என்னுள்ளேயே புதைத்தேன்.
நாட்கள் நகர்ந்தன. அவர் எம்.எஸ்சி. முடித்து... பிஹெச்.டி. படித்துக்கொண்டே வெளி மாநிலத்தில் வேலையில் சேர்ந்தார். அதுவரை பாட்டி வீட்டில் இருந்த என்னை, முதல் முறையாக தன்னுடன் வாழ அழைத்துச் சென்றார். அங்கே இருந்த நாட்களில் என்னைத் தமிழ்க் குடும்பங்கள் யாரிடமும் பழகவிடவில்லை. இன்கமிங் மட்டுமே உள்ள மொபைலை எனக்குக் கொடுத்தார். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த அழைப்பும், திருப்பி அனுப்புதலும் தொடர்ந்தது. பிறகுதான் புரிந்தது... மனைவி என்ற பந்தத்தில் அவர் அழைக்கவில்லை, தன் விரகத்தைத் தீர்த்துக்கொள்ள என்னை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்பது. அவர் பெற்றோரின் மனதும் அதுவே.
எதிர்பாராதவிதமாக நான் கர்ப்பமானேன். ஏதேதோ காரணங்கள் சொல்லி அவரும் அவர் குடும்பத்தாரும் கருவை கலைக்க வைத்தபோதுதான், என் வாழ்க்கையின் ஹீரோவாக நான் கரம்பிடித்தவர், ஒரு வில்லனாக மாறிவிட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டேன். தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் அவருக்கு நெருக்கம் வளர்ந்தது. கேட்டபோது, எல்லா ஆண்களும் பயன்படுத்தும் 'சகோதரி’ ஆயுதத்தைக் கையில் எடுத்தார். இடையே, அவர் என்னைக் கழற்றிவிட்டு அந்தப் பெண்ணுடன் அமெரிக்கா சென்று செட்டிலாக ரகசியத் திட்டமிட்டிருப்பது, நண்பர்கள் மூலமாக தெரிய வந்தது. நியாயம் கேட்டபோது, தமிழகத்துக்கு தன் பெற்றோர் வீட்டுக்கு என்னை அழைத்து வந்தார். அங்கிருந்து பலவந்தமாக வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைச் சாத்தினர். அழுதுகொண்டே பெற்றோரிடம் போனேன்.
நான் தந்த அதிர்ச்சியில் என் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். 'அவனை டைவர்ஸ் பண்ணிடு’ என்று உறவுகள் சொன்னபோது, அவருடன் வாழ்வதற்காக வாய்ப்புகளை அது முழுமையாகத் தூர்த்துவிடும், எப்படியும் அவர் வருவார் என காத்திருந்தேன். வந்தது... அவர் அனுப்பிய டைவர்ஸ் நோட்டீஸ்.
செல்லமாக வளர்த்த மகள் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கச் சகிக்காமல் அப்பா உயிரை விட்டார். அம்மாவும், நானும் அண்ணன் வீட்டில் தஞ்ச மடைந்தோம். 'என் குழந்தைகள் உன்னைப் பார்த்துக் கெட்டுப்போய் விடுவார்கள்’ என்று வெளியேறச் சொன்னார் அண்ணன். அம்மாவும், நானும் தனி வீட்டில் குடியேறினோம். வழக்குகள், வாய்தாக்கள் என்று கழிந்தது வாழ்க்கை. 'பேசாம விவாகரத்து கொடுத்துடும்மா...’ என்றார், அவர் வீட்டாரிடம் விலை போன என் வழக்கறிஞர். ஐந்து ஆண்டு போராட்டத்துக்குப் பின், விவாகரத்துக்கு சம்மதம் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியாது. நஷ்ட ஈடாக அவர் கொடுத்த சில லட்சங்களில் கரைந்து கொண்டுஇருக்கிறது என் நாட்கள்.
என் வாழ்க்கையில் நான் செய்த தவறுகள் பல. காதலுக்காக கல்வியைக் கைவிட்டதால் இன்று பிடியில்லாமல் தவிக்கிறேன். 'அவன் மட்டும் போதும்’ என்று பெற்றோரின் அன்பில் இருந்து விலகி, அப்பாவின் உயிர் பிரியவும், அம்மாவின் நிம்மதி பிரியவும் காரணமான பாவி ஆனேன். சுயபுத்தி இல்லாத, நிலை புத்தி இல்லாத ஒருவனை வயதின் ஈர்ப்பில் துணையாக்கத் துணிந்ததால், வாழ்க்கையைத் தொலைத்தேன். எதிர்கால பாதுகாப்புக்கு குழந்தையும் இல்லாத நிலை. காதலின் கறுப்புப் பக்கங்களில் ஒன்றாகி துயரப் புயலில் சுழல்கிறேன்.
காதல் என்ற பெயரில் வாழ்க்கையை வைத்து விளையாடிப் பார்க்காதீர்கள் தோழிகளே!''

நன்றி : ஆனந்தவிகடன் 

இதையும் படிக்கலாமே:

Monday, February 13, 2012

பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்





பிரபுதேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா .
# இப்ப கேளுங்கடா யாரு அடுத்த பிரபுதேவானு ...


ஒவ்வொருத்தர் வாழ்விலும்
சொல்லமுடியாத ரகசியம்
நிறைவேறாத கனவு
எட்டமுடியாத லட்சியம்
மறக்க முடியாத காதல்
மன்னிக்கமுடியாத துரோகம்
இருக்கின்றது ....


வடிவேலு காமெடி செத்து செத்து விளையாடலாம் வா என்பது போல மின்சாரத்த கொடுத்து கொடுத்து விளையாடுது .
# T.N.E.B


வில் அங்கம் பாத்தேன் வாசலில்..

வில்லங்கத்தை பார்க்கவில்லை மாடியில் ..

அவள் நைனா ...


திருமணத்திற்கு முன் ஜோடியா போறவங்களை பார்த்து பொறாமையா இருந்தது ...

திருமணத்திற்கு பின் தனியா சந்தோஷமா போறவனை பார்த்து பொறாமையா இருக்கு ..

# என்ன வாழ்கைடா இது ?


தன்னினாலே எப்பவும் சண்டைதானா ?

# முல்லை
# காவிரி
# குழாயடி
# டாஸ்மார்க்


நீதிபதி : அந்த பெண்ணை கெடுத்த குற்றத்திற்காக உனக்கு 11,641
         ரூபாய் அபராதம் விதிக்கிறேன் .

குற்றவாளி : அது என்ன 11,641 ரூபாய் கணக்கு ?

நீதிபதி : 10000  அபராதம்  4% VAT 10.2%  ENTERTAINMENT               
         TAX .
======================================================================================

இப்போதைய்க்கு ரொம்ப பாவமானவங்க +2 மாணவர்கள் தான் . சாப்பிட வாரியா னு கேட்டால் இந்த கொஸ்டின் எந்த லேசன்ல இருக்குன்னு கேட்குறாங்க ..


இவை அனைத்தும் FACEBOOK இல் படித்தவை.

இதையும் படிக்கலாமே :