> என் ராஜபாட்டை : June 2012

.....

.

Saturday, June 30, 2012

எனக்கு ஒரு சந்தேகம் ...
 1. குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)
                                                       
 1. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் எப்படி இன்னும் குரங்கு இருக்கின்றது.
                                                     
 1. சாலை ஒரத்திலும், பேருந்து நிலையங்களிலும் தவறவிட்ட ஒரு செருப்பு மட்டுமே கிடக்கிறதே, இன்னொன்று எங்கே?
                                                                          
 1. மின்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?
                                                               
 1. ஸ்ரீசாந்த் வீட்டில் CBI ரெய்டாம். அப்ப “ 10 நாளில் Bowling போட கற்றுகொள்வது எப்படி” Author ஆஷிஷ் நெகரா னு போட்ட புத்தகம் இருந்ததாமே உன்மையா?
                                                                           
 1. பேருந்தில் 2000 கிரைண்டர்க்கு லக்கேச் போடும் கண்டக்டர் 200000 நெக்லஸ்க்கு ஏன் போடுறதில்ல?

    7. அடிகடி தீகுளிப்பென்னு சொல்ற கருணாநிதி போன்ற தலைவர்கள்       
        யாரும்    ஏன்  அதை செய்வது இல்லை ?

                                                        
                 8. அதிககட்டனத்தையும் கட்டிவிட்டு பின்பு அந்த பள்ளியை எதிர்த்து
                       போராடுவதை விட அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த சொல்லி
                      யாரும் போராடவராதது என ?

          9. சுவிஸ்ல உள்ள கறுப்புபணத்தை மீட்க முடியாத அரசு வெளிநாட்டில்
               பணிபுரியும் இந்தியர் அனுப்பும் பணத்தில் மட்டும் அதிக வரி பிடிப்பது
               ஏன் ?

     10 . பார்பனர்கள் மற்றும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் கருணாநிதி 
            பிரணாப்பை மட்டும் ஆதரிப்பது ஏன் ? திராவிடர் கலாமை ஆதரிக்காதது 
              ஏன் ?

                இறுதி சந்தேகம் : இது உண்மையா ?
                        

Thursday, June 28, 2012

நான் அழகா பொறந்தது என் தப்பா ?


நான் பிறக்கும் பொது பிரசவம் பார்த்தது ஒரு பெண் டாக்டராம் . பிறந்த உடனே என்னை கையில் எடுத்து நீ அழகு செல்லம்டா என கொஞ்சி உள்ளார் . அது மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் நர்ஸ்களும் இவ்வளவு அழகா ஒரு குழந்தையை நாங்கள் பார்த்ததில்லை என ஆச்சர்யபட்டார்கலாம் . வளர வளர அழகும் சேர்ந்து வளந்தது . எண்கள் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் கட்டுனா என்னைத்தான் கட்டுவேன் அல்லது சாமியார போய்டுறேன் என்று சொல்வார்கள் . பள்ளியில் கூட நான் இருக்கும் வகுப்பில் சேரத்தான் மாணவிகள் போட்டி போடுவார்கள் .

## டேய்  நிறுத்து நிறுத்து .. எதுக்கு இப்படி ஓவரா பில்டப் குடுக்குற ? பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா ?

                                                   ## வீடு சுரேஷ் ###

அன்பு வாசகர்களே !! சுரேஷ் பொறாமையில் புலம்புகிறார் . நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள் .எனக்கு திருமனமாய் விட்டது என்று தெரிந்து இன்றும் எத்தனை காதல் கடிதம் வருகிறது தெரியுமா ? அதில் இரண்டை உங்களுக்கு சாட்சியாக சமர்பிக்கிறேன் .

கடிதம் 1 :

"ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல். binta முத்தம்."


என்ன ஒன்னும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..

Hello Dear My name is binta I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).
Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot. kiss binta "
கடிதம் 2 :
" வணக்கம் அன்பே என் பெயரை நான் இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் மற்றும் நான் என் படத்தை அனுப்ப சொல்கிறேன் என்று (stellampka@yahoo.com~~V) நீங்கள் என் மின்னஞ்சல் முகவரி மூலம் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் மிஸ் ஸ்டெல்லா உள்ளது என்னை பற்றி மேலும். .
இதுவும் புரியலையா ? இதோட ஒரிஜினல் இங்கிலீஷ் லெட்டர் ..
Hello Dear my name is miss Stella i saw your profile today and became interested to know more about you i will like you to contact me through my Email address at(stellampka@yahoo.com)so that i will send you my picture and tell you more about me. "
இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!) வெளிநாட்டு பெண்கள் எல்லாம் போட்டி போடுறாங்கன்னு ...
"கடவுளே என்னை ஏன்டா அழகா படைச்ச ?"
டிஸ்கி 1 : மேலே உள்ள கடிதம் தமிழ் 10 முலமாக யாரோ அனுப்பியது . இங்கிலீஷ் அப்படியே Google translate மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர் . 

டிஸ்கி 2: இது போல வந்தா நம்பி யாரும் எமாறாதிங்க .. 

Tuesday, June 26, 2012

சிரிக்க சில படங்கள்

பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் சில படங்களை FACEBOOK ல பார்த்தேன் . அவற்றை உங்களிடம் பகிர்வதில் சந்தோஷபடுகிறேன் . 

கொலைவெறி விளம்பரம்  


இவர்களிடம் படித்தவன்    என்ன ?


மேலே உள்ள பள்ளியில் படித்தவனோ ?
தனியார் வேலையில் ..
அரசு வேலையில் ...
இதுகூட தெரியாதா ?


இது தெரியுமா தெரியாதா ?


இது படிப்பு ...


இது வாழ்க்கை ...


இதுவும் லிப்ட் தான் ..அம்மாவும் சும்மாவும் ..


பொண்ணுங்க  ரொம்ப முன்னேறி விட்டார்கள் 


கொஞ்சம் ஜொள்ளு .. கொஞ்சம் லொள்ளு 

டிஸ்கி : அனைத்தும் அளித்த முக புத்தக நண்பர்களுக்கு நன்றி 

Friday, June 22, 2012

சகுனி : ஹிட்டு மேல ஹிட்டுமுதலில் உங்கள் சார்பாகவும் , எனது சார்பாகவும் நமது இளையதளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .


இன்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு படம் வெளிவந்து உள்ளது . அது கார்த்தியின்"சகுனி ". பாடல்கள் முன்பே பிரபலமாக படத்தின் டிரைலர் (ரஜினி , கமல் , ஸ்ரீதேவி ) இன்னும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது . இப்படி பலத்த எதிர்பார்புகிடையே வந்த இந்த படம் ரசிகர்களிடம் எந்த மாதிரி ரியாக்ஷனை தந்துள்ளது என பார்ப்போம் 

1. நண்பர் சி பி யின் "அட்ரா சக்க " விமர்சனம் :


2. நண்பர் ஆரூர் மூனா செந்திலின் விமர்சனம் :


3. நண்பர் செங்கோவி அவர்களின் விமர்சனம் :


4. ஒரு கிண்டலான விமர்சனம் ( இதை விமர்ச்சனத்துல சேர்க்க முடியாது )Wednesday, June 20, 2012

பில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்கடந்த பல நாட்களாக நான் விரும்பி கேட்டும் பாடல் பில்லா பட பாடல்கள் தான். "அதிலும் உனக்குள்ளே ஒரு மிருகம் என்ற பாடல் தான் அடிகடி கேட்பது. தினமும் குறைந்தது பத்து முறையாவது கேட்பேன் . அதில் பல வரிகள் நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய செய்திகள் பல உள்ளன. என் அறிவுக்கு எட்டியவரையில் எழுதிள்ளேன்.


உனக்குள்ளே மிருகம் தூங்கி விட துடிக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலையும் வெடிக்கும்

 - ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நல்ல , கெட்ட மிருகம் இருக்கும் (மதன் கூட மனிதனுக்குள் ஒரு மிருகம் என புத்தகம் எழுதியதாக நினைவு ). அந்த நல்ல மிருகத்தை தூங்க விடாமல் பார்த்துகொண்டாள் நீ எரிமலையை கூட கடக்கலாம்

கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் குடுக்கும்

-          கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னார் , அந்த கனவுதான் உன்னை பற்றி நீ அறிய உதவும்.( தனிமையில் நீ என்ன சிந்திகின்றாயோ அதுதான் நீ விவேகானந்தர் )

"எரிக்காமல் தேனடைகள் கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது "

-          எதுவும் முயற்சி செய்யாமல் கிடைக்காது. தானாகவே நடக்கும் என நினைப்பவன் முட்டாள். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு நியுட்டன் லா


"வலியதுதான் உயிர்பிழைக்கும் உலகில்
இயற்கையின் விதி இதுதான் ."
Survivals of the fittest  இது டாவின்சி விதி . உலகை எதிர்த்து போராட துணிந்தவை  மட்டுமே உயிர் பிழைக்கும் .


"“நரகமத்தில் நீயும் வாழ்ந்தால் மிருகம் என மாற வேண்டும்
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து “"

     - வாழும் இடத்திருக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் . சொர்க்கத்தில் கடவுளாகவும் நரகத்தில் மிருகமாகவும் இருக்க வேண்டும் .

இங்கு நன்பான் யாரும் இல்லையே
இங்கு பகைவன் யாரும் இல்லையே
நீதான் உனக்கு நண்பனை இனி
நீதான் உனக்கு பகைவனே

 - இந்த உலகில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை . என்றுமே நான் தான் நமக்கு நண்பன் , நான் தான் எதிரி .

முதலடியில் நடுக்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்

-          தற்காப்பு கலையில் முதல் பாடமே இதுதான் . எதிரி அடிக்கும் முன் நாம் அடிக்கவேண்டும் அதுவும் அந்த அடியில் அவன் பயப்பட வேண்டும். அடுத்த அடியில் அவன் நம் அருகே வர தயங்க வேண்டும்.


அடிகடி நீ  இறக்கவேண்டும்
மறுபடியும் நீ பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழி திறந்தபடி  

இறந்து பிறந்தால் எப்படி புத்துணர்ச்சியாக இருப்போமே அதுபோல எப்பொழுதும் இருக்க வேண்டும். உறக்கத்தில் கூட உள் மனது விழித்துருக்கும். அலெக்சாண்டர் கண்களை திறந்து கொண்டே தூங்குவாராம்(உண்மையா என தெரியவில்லை ) அதுபோல எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் .


இனி நீ தான் உனக்கு தொல்லையே
இனி நீதான் உனக்கு எல்லையே

- அடுத்தவனுடன் ஒன்னை ஒப்பிடதே அது உன்னை நீயே கேவலபடுத்தி கொள்வது போல என சொல்வார்கள் . எப்பொழுதும் உனக்கு எல்லை என்பது நீ செய்த சாதனைகள் தான் அதை தாண்ட நீ முயற்சி செய். தானாகவே அடுத்தவர் சாதனைகள் முரியாடிப்பாய் .Monday, June 18, 2012

பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?


பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.

எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .


எனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .


முதல் வழி :

1 . ரப்பர் பயன்படுத்தலாம் 

       தமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த
       பிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்
       வீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.

2 . whitner (வெண் -  மை )

        இந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது
       மேலே புதிதாக எழுதலாம்.இது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய பேபரை  கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்


  டிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்

  டிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த ஆள்களுக்கு பலப்
                      தான்

  டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
                      நம்பர் மட்டும் தான் இதையும் படிக்கலாமே :


பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?

 

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

 

Saturday, June 16, 2012

பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .


இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் பலத்த எதிர்பார்ப்பு தல அஜித்தின் "பில்லா 2" தான். பில்லா வின் வெற்றி மற்றும் மன்காத்தாவின் வசூல் சாதனையால் பில்லா 2 வின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . கமலை இயக்கிய இயக்குனர் சக்ரி இந்தப்படத்தை இயக்குகிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் மதுரை பொண்ணு , உனக்குள்ளே ஒரு மிருகம் இரண்டும் அதிரடி ஹிட் . படத்தின் சண்டைகாட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பை அதிகபடுத்தயுள்ளது .


சகுனி :

தொடர் வெற்றிகளை குவித்துவரும் கார்த்திக்கின் அடுத்த அதிரடி ஆட்டம் சகுனி . காமெடி படமான இதில் சந்தானம் வேறு இருப்பது படத்திற்கு இன்னும் பலம் . டிவி யில் டிரைலர் கூட சந்தானத்தை முன் நிறுத்தி செய்யபடுகிறது . படங்கள் நன்றாக உள்ளது . இயக்குனர் புதியவர் .

ஜூலை 2 வர வேண்டிய படம் திடிரென 22 தேதி வருகின்றது . அன்றுதான் பில்லா 2 ரிலிஸ் . எனவே போட்டி கடுமையாக இருக்குன் என தெரிகின்றது . அன்றுதான் இளைய தளபதியின் பிறந்த நாள் .

இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .

Wednesday, June 13, 2012

விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMOஎன்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ? ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :

தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள் என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :
Make new friends and Love chat with beautiful Girl 24  Hours call Now 006745599251 Neha..    ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் ) 

ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

 • இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?
 • வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?
 • போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?
 • குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?
 • Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?
 • ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

டிஸ்கி : இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

 இதையும் படிக்கலாமே :

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 Tuesday, June 12, 2012

டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.


நோய் பரவும் முறை

Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும். உதாரணமாக:வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன

நோயின் அறிகுறிகள்

 • நல்ல காய்ச்சல்
 • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
 • கடும் தலைவலி
 • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
 • வாந்தி
 • தோல் சிவத்தல் (rash)
 • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
 • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)[1]
 • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

தடுப்பு முறைகள்


 • கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், 
 • கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.

நன்றி : விக்கிபீடியா

 இது பற்றிய மேலும் பதிவுகளுக்கு :

நண்பர் எடக்கு மடக்கு தளத்தில் :

டெங்கு காய்ச்சல் அறிந்ததும் அறியாததும்..

நண்பர்  சி பி யின் தளத்தில் :

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

 தன்னம்பிக்கை  தளத்தில் :

டெங்கு காய்ச்சல்

காமகோடி . org

 டெங்கு காய்ச்சல் குணமாக

 

Friday, June 8, 2012

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.
நமது SUPER STAR நடிப்பில் வெளிவந்து மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படம் பாட்ஷா. இப்போழுது பார்த்தால் கூட புது பொலிவுடன் இருக்கும் படம் அது. ரஜினியை அரசியலிக்கு இழுத்த படம் கூட அதுதான்.SUPER STAR ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி. அந்த அற்புத படம் மீண்டும் ரீ-மேக் செய்யபட போகிறது.

ரஜினி வேடத்தில் விஜய்


முதலில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜித் தான் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் கால்ஷிட் இல்லாத காரனத்தாலும், ரஜினிக்கு பின் மாஸ் ஹிரோவாக கருதபடும் விஜய் தேர்வு செய்யப்பட்டார். வேட்டைகாரன் படத்தில் ஆட்டோகாரனாக நடித்ததும் ஒரு முக்கிய காரனமாக கருதபடுகிரது.

சரன்ராஜ் வேடத்தில் அஜித்(கௌரவ தோற்றம்)


ரஜினியின் நண்பனாக சரன்ராஜ் நடித்த கேரட்டரில் அஜித் நடிக்க இருக்கின்றார். இப்போழுது அஜித் நடிக்கும் “ மங்க்காத்தா” படத்தில் விஜய் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்தார் ஆனால் முடியவில்லை .இருவரும் இணைந்து முழு படம் நடிக்க முடியாவிட்டாலும் இப்படியாவது இணையலாம் என நினைக்கின்றனர்

இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கதாநாயகி.


படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யபடவில்லை. ஷங்கர், ரவிகுமார், தரனி பெயர்கள் பரிசிலனையில் உள்ளது. இவர்கள் இல்லை என்றால் பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்னாவே இயக்கவும் வாய்ப்புண்டு. இசை A.R. ரஹ்மான் என்பது நிச்சயம். தயாரிப்பு பாட்ஷா எடுத்த அதே “சத்யா மூவிஸ்” R.M.வீரப்பன் தான். கதாநாயகியாக இலியானா அல்லது அமலாபால் இருக்கலாம்.

மேலும் இதுபோல பல தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என DND  நிருபர் கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும்  தெரியாதவர்களுக்காக..


DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)இது ஒரு ரீமேக் போஸ்ட் ( படத்தைதான் ரீ மேக் பண்ணனும்னு ஏதாவது விதி இருக்கா என்ன ?)


இதையும் படிக்கலாமே :

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

 

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

 

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

 

 Tuesday, June 5, 2012

அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்கூடிய விரைவில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது. இப்போதே நம் அரசியல் பெருந்தலைகள் தேர்தல் அறிக்கைகளுக்கு விஷயங்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுவர். நாட்டுக்காகப் படாதபாடு(!) படும் அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில், செய்யவேண்டிய அதிமுக்கிய வேலைகளையும் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டு முடிந்த வரை முக்கி முக்கி யோசித்ததில் வந்து விழுந்த ஐடியாக்கள் தான் இவை.இவை முழுக்க முழுக்க காப்பிரைட்(!) செய்யப்பட்டவை என்றும் இவற்றை உபயோகப்படுத்திக்கொள்ள தகுந்த கட்டணம் செலுத்த வேண்டுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிடக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! கட்டணம்??
ஏதோ நீங்க பார்த்துப் போட்டுக்குடுத்தா சரிதான் முதலாளி... நம்பிக்கை தானே வாழ்க்கை! கவிதை எழுதும்போது மானே தேனே அப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும்னு குணா படத்தில் கமல் சொல்வார். தேர்தல் அறிக்கைன்னா அது போல, நிச்சயமாக, ஆணித்தரமாக, உறுதியாக, கடவுள் சத்தியமாக, மக்கள் தலைமேல் ஆணையாக(!) இப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும். அப்போதான் கொஞ்சம் வெயிட்டா இருக்கும். கடைசியில மக்கள் 'குணா' மாதிரி ஆகணும்ல!!பாயிண்ட்சுக்குப் போவோமா..

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையைத் தூக்கி நிறுத்தி, சென்செக்ஸ் 50,000 புள்ளிகளுக்கு எகிறடிப்போம் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறோம்.

2. இந்திய ஹாக்கி அணிக்கு குளுக்கோஸ் கொடுத்து, புத்துயிரூட்டி 2040ல் நிச்சயம் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுவிடுவோம்.

3. இந்திய நதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குழாய்களில் அரபு நாடுகளுக்குத் திருப்புவோம். பதிலுக்கு எண்ணெய் பெற்று இந்தியாவை வளப்படுத்துவோம்.

4. கோதாவரியையும், நர்மதையையும் பெப்சிக்கும், கோக்கிற்கும், தாரை வார்த்து குளிர்பான அறுவடை செய்வோம்.

5. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் பெருவெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் கிளைகள் தொடங்குவோம். இந்தியாவை தண்ணியில்லாக் காடு என்று யார் சொல்ல முடியும்?

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறப்பான வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ஐநூறு கோடி ரூபாய் ஒதுக்குவோம்.

7. புதிதாக சாப்ட்வேர் பார்க் தொடங்க இடம் இல்லாததால் சத்தியமங்கலம் காடுகளை அழித்து இடம் உருவாக்கப்படும். இதன்மூலம் லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

8. சிறப்பான தமிழ் தலைப்புகளை படத்தின் பெயராக வைத்து 'தமிழ்' மொழியைப் பாதுகாத்து வரும் படத் தயாரிப்பாளர்களுக்கு அகில இந்திய அளவில் விருதுகள் வழங்கப்படும்.

9. ஐக்கிய நாடுகள் சபையை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய ஆவன செய்யப்படும்.

10. அமெரிக்காவிற்கு முன்னால் செவ்வாய்க்கு ஆள் அனுப்பி வெற்றிக்கொடி நாட்டப்படும்.

11. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த மென்பொருள் நிறுவனங்களின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படிப்படியாக அடுத்த ஐந்து பட்ஜெட்களில் இது ஈடுகட்டப்படும்.

12. அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

13. நான்குவழிப்பாதை திட்டம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகியும் அது இன்னும் முடியாமல் இருப்பதால் கையோடு எட்டு வழிப்பாதையாகவும் ஆக்கிவிடுவோம்.

14. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

15. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும்.

டிஸ்கி : இது 2009 இல் ஒரு நண்பன் அனுப்பிய மின் அஞ்சல் , அப்பொழுதே பதிவாக போடபட்டது . இது ஒரு மீள் பதிவு . 

இதையும் படிக்கலாமே :


சிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

யார் தெய்வம் ?