> என் ராஜபாட்டை : July 2015

.....

.

Wednesday, July 29, 2015

பயனுள்ள 6 மென்பொருள்கள் இலவசமாக ...(6 USEFUL SOFTWARE FREE)                      நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம். மிக சில மென்பொருள்களையே பணம் கொடுத்து வாங்குகின்றோம் . பல மென்பொருள்களை இலவசமாகவே பெறுகிறோம். அல்லது கிராக் செய்து பயன்படுத்துகிறோம். இன்று நாம் பார்க்க போவது இணையத்தில் இலவசமாக கிடைக்கும் முக்கியமான ஆறு மென்பொருள்களை பற்றிதான் .

1. MEmu 1.7.1

             ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தாத ஆட்களே இல்லை எனலாம். ஒரு சிலர் விண்டோஸ் போன் பயன்படுத்துகிறார்கள். அவர்களும் தங்கள் போனை ஆண்ட்ராய்ட் போல மற்ற இது உதவுகின்றது.


2. Synfig Animation Studio 1.0.1        2D அனிமேஷன் செய்ய பயன்படும் மிக சிறந்த மென்பொருள் இது. இதை பயன்படுத்தி அழகான, எளிதான அனிமேஷனை உருவாக முடியும்.

3. RadioDJ 1.2.8.0

 
இணையத்தில் அல்லது கணினியில் ரேடியோ மூலம் பாடல் கேட்கும் அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் இது .இதன்மூலம் துல்லியமாக பாடல்களை கேட்க முடியும் .
         நாம் கேமரா அல்லது மொபைல் மூலம் எடுத்த சாதாரண டிஜிடல் படங்களை அழகான கோட்டு ஓவியமாக, கார்டுனாக மாற்ற உதவும் மென்பொருள் இது. நமது போட்டோவை மிகவும் அழகாக மாற்ற இது உதவுகின்றது.
     MS OFFICE பயன்படுத்தாத நபர்களே இல்லை எனலாம். அதில் உள்ள அனைத்து ஆப்ஷன்களையும் கொண்டு மிக சிறிய அளவுடன் வந்துள்ள மென்பொருள் இது. இந்த தொகுப்பை பயன்படுத்தி கோப்புகள் , SPREADSHEET போன்றவை உருவாக முடியும். பயன்படுத்த மிக எளிதான ஒன்று இது.


            நமது கணினியில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கோப்புகளை காலி செய்ய உதவும் மென்பொருள் இது. கணினியில் நினைவு திறனை அதிகரிக்க இது உதவுகின்றது. இது சிறிய அளவிலான மென்பொருள் ஆகும். பயன்படுத்தி பாருங்கள்.


 

Tuesday, July 28, 2015

கலாம் : காலத்தால் அழிக்கமுடியாத பெயர்
                      இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.


குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அப்துல்கலாமின் பத்து கட்டளைகள்

பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தினார்!!!
1. நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.
2. நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன்.
3. எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.
4. எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.
5. மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன்.
6. துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.
7. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.
8. வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
9. என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.
10. நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்...

அவர் ஆத்மா சாந்தியடையட்டும் .

Thursday, July 23, 2015

வைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை மீட்பது எப்படி ?               இன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் இதனை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். பல கணினியில் இதை பயன்படுத்தும் போது பெண் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் அதில் வைத்திருந்த முக்கிய பைகளை எப்படி மீட்பது என பாப்போம் .

பிரச்சனை :

1. பைகள் அனைத்தும் SHORTCUT ஆக மாறியிருக்கும்.

2. பைல்கள் 1 KB சைஸ்க்கு மாறியிருக்கலாம் .

3. பைல்கள் மறைந்திருக்கலாம். பெண் டிரைவில் பைல் இருப்பதாக கணக்கு காட்டும் ஆனால் பைல் தெரியாது .

தீர்வு :

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக  கொடுக்கவும்.

6) நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

7) சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து 
     பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.இதையும் படிக்கலாமே ?


Tuesday, July 21, 2015

சைபர் க்ரைம் (Cyber Crime)
        இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
இணைய குற்றங்கள் (Cyber Crimes):
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.
6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள்.https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு
2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்
3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].
4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்
5. கடன் அட்டை எண் திருட்டு
6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:

Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol@nic.in
சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber@nic.in

நன்றி : முகநூல் பக்கம் 

Sunday, July 19, 2015

பதிவர்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி

      பொழுதுபோக்காக இணையத்தில் நாம் எழுதிவந்தாலும் பலரின் முக்கிய நோக்கம் இந்த எழுத்தின் மூலம் ஏதாவது பணம் ஈட்ட முடியுமா என்பதே. விளம்பரம் மூலம் அதிக  சம்பாதிக்க உதவுவது ஆட்சென்ஸ் ஆகும். ஆனால் தமிழுக்கு அது கிடைபதில்லை. ஆங்கில வெப் சைட் துவங்கினாலும் ஆயிரத்துஎட்டு கண்டிஷன்கள். எனவே பலருக்கு அது கிடைபதில்லை.

                          அதுபோன்ற பதிவர்களுக்கு வரபிரசாதமாக வந்துள்ளது இந்த தளம். இந்த தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் சந்தோஷமடைகிறேன்.REVENUEHITS.COM என்ற தளம்தான் அது.

நன்மைகள் :

1. உடனடியாக உங்கள் தளத்துக்கு விளம்பர அனுமதி 

2.  எளிதான வகையில் நீங்களே விமபரன் மாதிரியை தேர்வு செய்யலாம்.

3. தினமும் எவ்வளவு சம்பாதித்து உள்ளீர்கள் என அறியலாம்.

4. எத்தனை தளத்தை வேண்டுமானாலும் இணைத்து கொள்ளலாம்.

5. நீங்கள் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலமும் சம்பாதிக்கலாம்.

6. paybal, wire , payoneer மூலம் பணத்தை பெறலாம்.

7 . குறைந்த பட்ச பணம் எடுப்பு தொகை 20 $  மட்டுமே .

இந்த தளத்துக்கு செல்ல : CLICK HERE 

Friday, July 17, 2015

மன நிறைவு தரும் ரமலான் நோன்பு

இது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது.


ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலாக்குதல் என்று வெவ்வேறு பொருள்களுண்டு. மனிதர்களின் பாவங்களைப் போக்கும் புனிதமான இம்மாதம் உண்மையிலேயே பொருத்தமான பெயரைத்தான் பெற்றிருக்கிறது.ரமலான் மாதம் முழுவதும்  விடியற்காலை முதல் மாலை வரை சுமார் பதினான்கு மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் இருப்பது என்பது உண்மையிலேயே உயர்வுக்குரிய ஒன்றுதான்.நோன்பு எனப்படும் இப்பசித்திருத்தலின் வழியே ஐம்புலன் அடக்கமும், மனஅடக்கமும் பெற வழி வகுக்கின்றது. இதுவே பின்னர் இறையச்சமாய் கருக்கொண்டு, நிறையச்சமாய் உருக்கொள்கிறது.‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த வர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறுவீர்கள்’ என்று திருமறையில் (2:183) இறைவன் கூறுகின்றான்.இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நோன்பு நோற்பது பருவம் அடைந்த முஸ்லிமான ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோயாளி, பயணி ஆகியோர் மட்டுமே நோன்பைக் கைவிட அனுமதியுண்டு. ஆனால் வேறு நாட்களில் அந்த நோன்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.நோன்பின் நோக்கம் பசி மட்டும்தானா என்றால் அதுமட்டுமல்ல. பசியை உணர்ந்து, ஐம்புலன் ஆசை களைத் துறந்து, தர்ம கரங்களைத் திறந்து, இறையச்சம் இதயமெங்கும் நிறைந்து வாழும் வாழ்க்கையே ரமலானிய வாழ்க்கை.‘எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசியைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததில் இருந்தே நோன்பின் உண்மை நிலையை நாம் நன்கு எடை போட்டுக் கொள்ள முடியும்.‘அஸ் ஸவ்மு ஜுன்னத்துன்’ அதாவது ‘நோன்பு–அது ஒரு கேடயம்’ என்பார்கள். ஆம், சைத்தானிய அம்புகளில் இருந்து நிச்சயம் நோன்பு ஒருவனைப் பாதுகாக்கிறது. தீய பார்வை, தீய பேச்சு, தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் என அனைத்திலும் இருந்தும் இக்கேடயம் ஒருவனைப் பாதுகாக்கிறது. ரமலானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த மாதத்தில்தான் இறை வசனங்களைக் கொண்ட திருக்குர்ஆன் இறங்கத் தொடங்கியது.‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. எனவே  இனி உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று திருமறை (2:185) தெரிவிக்கிறது.ஒரு சமூகத்திற்கு வேத நூல் வெகு முக்கியமான ஒன்று. அந்நூல் இந்த மகத்தான மாதத்தில்தான் அருளப்பட்டது என்றால் இந்த மாதத்தின் மகிமைதான் என்ன! இதற்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களுக்கும் இதே மாதத்தில்தான் அவரவர்களுக்கான வேதச்சுவடிகள் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.இந்த மாதத்தின் கண்ணியத்தைக் காக்கும் விதமாகத்தான் ‘இந்த மாதத்தை வணக்க வழிபாடுகளால் வளப்படுத்துங்கள்’ என்று வள்ளல் நபியவர்கள் கூறினார்கள்.‘நீதியுள்ள தலைவன், அநீதி இழைக்கப்பட்டவன், நோன்பு நோற்றிருப்பவன் இம்மூவரின் பிரார்த்தனைகளும் இறைவனிடம் மறுக்கப்படுவதில்லை’ (நூல்: திர்மிதி) என்பது நாம் அவசியம் அறிய வேண்டிய நபிமொழி. இதன் வழியே நோன்பின் மாண்பை நன்கு உணர முடிகிற தல்லவா? ஒரு நோன்பாளியின் பிரார்த்தனை ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை என்கிறபோது அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.‘தலைவிதியைக்கூட மாற்றும் மாயசக்தி பிரார்த்தனைகளுக்கு உண்டு’ என நபிகளார் கூறி இருப்பதில் இருந்து, நமக்கான நல்வாழ்வை ரமலான் மாத பிரார்த்தனைகள் தீர்மானிக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதுவும் ஒரு நோன்பாளியின் பசித்திருப்பு நிலையிலான அல்லது இரவு கால பிரார்த்தனை நிச்சயம் இம்மண்ணகத்தில் இருந்து புறப்பட்டு அவ்விண்ணகக் கதவுகளை கட்டாயம் தட்டவே செய்யும்.இது குர்ஆன் அருளப்பட்ட அருள் மாதம் என்பதால் நாமும் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டும். ‘குர்ஆன்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘ஓதுதல்’, ‘ஓதப்பட்டது’, ‘ஓதப்படக் கூடியது’ எனப்பொருள் உண்டு. குர்ஆனிய எழுத்துகளை கண்களால் கண் குளிரக் காண்பதற்கும், நாவினால் மனம் குளிர ஓதுவதற்கும் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் இந்த ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் ஓதும்போது நமக்கு இன்னும் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.ரமலான் நோன்பு காட்டும் இப்பசியின் வழியே ஏழை எளியோர், ஆதரவற்றோர் என அனைவரின் வயிற்றுப் பசிகளையும் நாம் உணர முடியும். இதன் மூலம் பசித்தவர்களின் பசியைப் போக்குவதில்தான் நமக்கான மனநிறை வாழ்வு மறைந்து கிடக்கிறது. அதற்காகத்தான் ரமலான் மாதத்தில் ‘ஜகாத்’ என்னும் கட்டாயக் கொடையை கொடுப்பதன் மூலமும், அம்மாதம் நிறைவு பெற்று ஈகைப் பெருநாளை இனிதே ஈந்துவந்து கொண்டாடுவதிலும் மனநிறைவு கொள்கிறோம். மன மகிழ்ச்சி அடைகிறோம். –பேராசிரியர் எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, திண்டுக்கல்.

Thursday, July 16, 2015

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை FREE E-BOOK

ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்

டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு