> என் ராஜபாட்டை : January 2014

.....

.

Monday, January 27, 2014

ஆயிஷா

ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .


6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது .     இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .

கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .


(அனைத்தும் ஒரே கோப்புதான் , UPLOAD SITE மட்டும் வேறு வேறு ...)
Thursday, January 23, 2014

சிரிக்கலாம் வாங்க .


உங்கள் மனம் விட்டு சிரிக்க சில நகைசுவை துணுக்குகள் உங்களுக்காக . படித்து விட்டு பிடித்துள்ளதா என சொல்லுங்கள் . 


=========================================================================
ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு போயிருந்தேன்.
இதை ஒரு 15காப்பி ஜெராக்ஸ்
போட்டு குடுங்கனு சொன்னேன்.
ஒயிட் சீட் ஒன்னு தான் இருக்கு . ஜெராக்ஸ்
போட முடியாது . வாங்கிட்டு வரணும்
கொஞ்சம் வெய்ட் பண்ண சொன்னாங்க.
அதுக்கு நான் சொன்னேன், அந்த ஒயிட்
பேப்பரை 20காப்பி ஜெராக்ஸ்
போடுங்கள்.அப்புறம்
எனக்கு இதை 15காப்பி ஜெராக்ஸ்
போட்டுதாங்கனு சொன்னேன் ஃப்ரெண்ட்ஸ் .

இதுக்கு போயி என்னை திட்டிட்டாங்க...


========================================================================

காதலை கண்டுபிடித்தவன்­ சைனாக்காரனா இருப்பானோ. கேரண்டியும் இல்லே. வாரண்டியும் இல்லே....

===================================================================


மகன் : குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா ?

அப்பா : ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ
வச்சிட்டு போய்டும்பா. !
மகன் : அப்ப நீ டம்மி பீசாப்பா. ?

அப்பா : ?????????????


=========================================================================

ஆண்களுக்கு ஆறுதலான விசயம் -
இரும்பினால் செய்யப்படுவதில்லை
பூரிகட்டைகள்..


========================================================================


என் தாத்தா தூங்கும் போதே இறந்து போனார்.
நல்ல சாவு, 

-
-
-
-
-
-
-
-


ஆனா அவர் ஓட்டிட்டு போன கார்ல இருந்த அஞ்சு பேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்
 
 
 

========================================================================

மொபைல்க்கும் Wifeக்கும் என்ன வித்தியாசம்னா!
ஒரு வித்தியாசதாங்க.

இரண்டுமே வந்ததுக்கு அப்பரந்தான் யொசிப்போம்,

கொஞ்ச நாள் Wait பன்னிருந்தா, நல்ல மாடல்லா கெடச்சிருக்குமே!


======================================================================


2 சொட்டு போட்டா அது போலியோ.

4 சொட்டு போட்டா அது உஜாலா

2880 சொட்டு போட்டா அது குவாட்டர்

இதுதான் இன்னிக்கு மேட்டர்.


=======================================================================

man1: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"

man 2: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்

man 1: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத்
தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"

man 2:??? ???


======================================================================
கடைசியா ஒரு தத்துவம் :

பூக்கள் தூவப்பட்ட பாதையின் மேல் மட்டுமே,
நடக்க விரும்பாதீர்கள் !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம் !!


=====================================================================     

டிஸ்கி : இவையனைத்தும் முகநூலில் ரசித்தவை  

Monday, January 20, 2014

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் கவனத்திற்கு
ஒன்றுமே ஒழுங்க எழுத தெரியாத என்னை     
 500 பேர் பின்தொடர்கிறார்கள் . உங்கள் அன்புக்கு நன்றி . இனி வரும் பதிவுகள் கண்டிப்பாக நல்ல பதிவாக வரும் .(அப்போ இதுவரை வந்தது ??????)

திருமண வாழ்கை நலமாக அமைய நல்ல மனம் எப்படி முக்கியமோ அதுபோல நல்ல மணம் கொண்ட உணவு முக்கியம் . சமையல் சரியில்லாமல் போவதுதான் குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் ஆகும் . 

இந்த பதிவு  திருமணமான ஆண்களுக்கும் (நிறைய வீட்டில் ஆண்கள் சமைக்கின்றார்கள் . "உங்க  வீட்டில் ? " என நீங்கள் கேட்பது என் காதில் விழவில்லை .). திருமணமாகாத பல ஆண்கள் தனியாக தங்கி வேலை பார்ப்பதால் பெரும்பாலும் அவர்களே சமைக்கின்றனர் . எனவே இது ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தேவையான பதிவு என எண்ணுகிறேன் .

கிழே சில உணவு வகைகளை எப்படி செய்வது என லிங்க் கொடுத்துள்ளேன் . படித்து, செய்து சாப்பிட்டு பாருங்கள் . பின்பு ( இருந்தால் ) எப்படி இருந்தது என கமென்ட் செய்யவும் .


 டிஸ்கி : தலைப்பும் , முதல் படமும் சும்மா ஒரு இதுக்கு ......

Friday, January 17, 2014

மாதம் 400 ரூபாய் இலவசமாக ரீ-சார்ஜ் செய்ய ஒரு இலவச ஆண்ட்ராய்ட் APPLICATION.முன்பு ஒரு பதிவில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்காலம் என பார்த்தோம் . படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்க்கவும் .

இந்த பதிவில் அதுபோலவே ஒரு அப்ளிகேஷன் பற்றி பார்க்க போகிறோம் . இதுவும் MADLOCK போலவே செயல்படுகிறது . இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் .

PAISA SWIPE :


நீங்கள் உங்கள் போனை அடிக்கடி UNLOCK செய்வீர்கள் . அப்படி செய்யும் போது சில விளம்பரங்கள் திரையில் தோன்றும் .  நீங்கள் ஒவ்வொருமுறையும் உங்கள் போனை UNLOCK செய்யும் போதும் பணம் ஏறும் . 


நன்மைகள் :

·         மிக சிறிய அப்ளிகேஷன் , எளிதில் டவுன்லோட் செய்யலாம் .

·         மிக குறைந்த அளவே GPRS மட்டுமே பயன்படுத்திகொள்ளும் .

·         குறைந்த பட்சம் 50 ரூபாய் வந்ததும் நீங்கள் ரீ-சார்ஜ் செய்துகொள்ளலாம் .

·         அல்லது 150 ரூபாய் வந்ததும் பணமாக பெருகொள்ளலாம் .

·         நீங்கள் ஒவ்வொருமுறையும் உங்கள் போனை UNLOCK செய்யும் போதும் பணம் ஏறும் .

·         விளம்பரங்களை உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்யலாம் .

·         E-MAIL , FACEBOOK மூலம் LOGIN செய்யும் வசதி .

·         உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் பணம் பெறலாம் .

குறைகள் :

·         பணமாக வேண்டும் என்றால் PAYPAL ACCOUNT மூலம் தான் பெற முடியும் . ( ரீ – சார்ஜ் செய்வதாக இருந்தால் பிரச்சனையில்லை )

·         கண்டிப்பாக GPRS இருக்க வேண்டும் .

MADLOCK அப்ளிகேஷனை விட பார்பதுக்கு மிக அழகாக உள்ளது . ஒவ்வொரு முறை நீங்கள் UNLOCK செய்யும் போதும் எவ்வளவு பணம் உங்கள் கணக்கில் ஏறி உள்ளது என தெரிந்து கொள்ளலாம் .


டவுன்லோட் செய்ய : CLICK HERE 

FOR DOWNLOAD  : CLICK HERE

Saturday, January 11, 2014

ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்செப்டம்பரில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இந்த புத்தகத்தை வாங்கினேன் . இதை பற்றி எழுதலாம் என பலமுறை நினைத்தும் முடியவில்லை .இபோதுதான் நேரம் கிடைத்தது .வாருங்கள் பதிவுக்குள் போகலாம் .
1991 MAY 21 அன்று ராஜீவ் கொல்லபட்ட பின் தமிழகத்தில் நடந்த , அந்த கொலை தொடர்பாக CBI மற்றும் இதர இலாக்காக்கள் விசாரித்த முறையில் இருந்த குறைகளை , தவறான நடைமுறைகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம் .இதன் ஆசிரியர் கேட்கும் பல கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை . அல்லது சொல்ல முடியவில்லை .ஒரு மர்ம நாவலை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பல சஸ்பென்ஸ் இந்த ராஜீவ் கொலையில் உள்ளது . இன்றுவரை இதற்க்கு சரியான பதில் இல்லை . அதில் சில கேள்விகள் இதோ ... • ·         குண்டு வெடிப்பு நடந்த பொதுகூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடக்டர் இல்லையே ஏன் ?
 • ·         ராஜீவுடன் எப்போதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட அந்த குண்டு வெடிப்பில் பலியாகவில்லையே எப்படி ?
 • ·         டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சுப்பிரமணியசாமி ஏன் போகாமல் சென்னையில் தங்கினார் ?
 • ·         ராஜீவ் கொல்லபட்டதும் காணாமல் போன வாழப்பாடியார்  30 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தார் . அதுவரை அவர் எங்கே சென்றார் ?
 • ·         ராஜேந்திர ஜெயின் என்பவர் ஜெயின் கமிஷன் முன் வாக்குமூலம் வழக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொல்லபட்டது எப்படி ? ஏன் ?

 • ·         சிவராசனில் டைரியில் வாழப்பாடி ராமமுர்த்தி அவர்களை அடிகடி சந்தித்தகாக இருந்தது அதை ஏன் சி.பி.ஐ கண்டுகொள்ளவில்லை ?
 • ·         ராஜீவ் கொலையாகும் போது மூப்பனார் அங்கு இல்லை , ஏன் என கேட்டதுக்கு பீடி குடிக்க போனேன் என்றார் , இது உண்மையா ?
 • ·         கொலை சதியில் முக்கிய பங்கு உள்ளவர் என சந்தேகிக்கப்படும் ரோசையாவுக்கு முதல்வர் பதியும் இப்பொது தமிழக ஆளுநர் பதவியும் காங்கிரஸ் வழங்கியது ஏன் ?
 • ·         மனித வெடிகுண்டாக இருந்த தானுவை காரில் அழைத்துவந்தது மரகதம் சந்திரசேகரின் மகள் லதாபிரியா . ஏன் அவர் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் வரவில்லை ?
 • ·         மே 21 (கொல்லபட்ட நாள் ) அன்று மாலை 5 மணிக்கு மேல் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்டாலின் ஏன் ரத்து செய்தார் ?

 • ·         போட்டோகிராபர் அரிபாபு என்பவர் விடுதைபுலிகளின் ஆதரவாளர் என சீ.பி.ஐ சொன்னது . ஆனால் அவர் எடுத்த புகைப்படங்கள் மூலமாகத்தான் கொலையாளிகள் படம் தெரிந்தது . கொலையாளிகள் எப்படி புகைபடகாரரை துணைக்கு வைத்துகொள்வார்கள் ?
 • ·         வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிகொடுத்ததுக்கு பேரறிவாளனுக்கு தூக்கு ஆனால் அந்த வெடிகுண்டை செய்து கொடுத்தது யார் என இதுவரை கண்டுபிடிக்காதது ஏன் ?
 • ·         காந்தியடிகள் , இந்திரா போன்றோரின் கொலை வழக்கை பகிரங்கமாக நடத்திய இந்திய அரசு ராஜீவ் கொலைவழக்கை மட்டும் ரகசியமாக நடத்தியது ஏன் ?

 • ·         மதுரை சி.பி.ஐ நகரமன்ற உறுப்பினர் லீலாவதி கொன்றவர்களை 7 வருடத்தில் விடுதலை செய்த அரசு நளினியை மட்டும் இன்னும் ஏன் விடுவிக்கவில்லை ?
 • ·         காந்தியை கொன்ற கோட்சேக்கு கூட 11 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை கிடைத்தது ஆனால் பேரறிவாளம், நளினிக்கு ?
 • ·         இந்த கொலைவழக்கின் முக்கிய ஆவணங்கள் ப .சிதம்பரம் வசம் இருந்த போது எப்படி காணாமல் போனது ?

 • ·         ராஜீவ் கொலைக்கு காரணம் சோனியாதான் என சுப்பிரமணிய சாமி ஒரு புத்தகமே வெளியிட்டு உள்ளார். ஏன் காங்கிரசார் அதை பற்றி கண்டுகொள்ளவில்லை ?

இதுபோல பல நூறு கேள்விகள் கேட்க்கபட்டு உள்ளது ஆனால் பதில்தான் இல்லை .


நூலின் தொகுப்பாசிரியர் : தமிழன் பாபு
வெளியிடு : வள்ளலார் பதிப்பகம் 
        (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும் )
விலை : 60