> என் ராஜபாட்டை : May 2011

.....

.

Tuesday, May 31, 2011

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி
கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புகழ்மிக்க தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு செய்யப்பட்டார்.
மிகவும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட, உலகம் முழுவதும் வெற்றிப்பெற்ற ஏந்திரன் பல விருதுகள் பெறும் என எதிர்பார்க்கபட்டது. அதில் அருமையாக நடித்த நமது SUPER STAR க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்தனர். ஆனால் கிடைக்கவில்லை. 


ஏன் கிடைக்கவில்லை என இப்போழுது தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க க்கு ரஜினி ஓட்டு போட்டதால் SUN TV GROUP அவர் மீது கோபத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியில் இருப்பதால் ரஜினிக்கு கிடைக்க வேண்டிய விருதை கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால் தங்கள் தயாரித்த படத்தில் நடித்தவர்க்கு விருது கிடைக்கும் படி செய்துவிட்டனர்.

தகவல் ஓளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி முதலில் இதற்க்கு மறுத்ததாகவும், பின்பு தயாநிதி மாறனின் வற்புறுத்தலாலூம், சோனியா காந்தியின் உத்தரவாலும் கடைசியில் ஒத்துகொண்டார். இந்த விஷயம் தெரியவந்துதான் தனுஷ் விருது பெற்றதை கொண்டாடவில்லை என நமது DND நிறுவனத்தின் நிருபர் தெரிவித்தார்.


மேலும் அவர் பல அதிர்ச்சியான தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும்  தெரியாதவர்களுக்காக..

DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)

Monday, May 30, 2011

பேஸ்புக்கின் கூட்டு அம்பலம்!மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது. சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.
கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி. இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும். வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது. கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே. வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது. பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.
வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது. அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.
Thanks : kingtamil.com

Sunday, May 29, 2011

உபயோக சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள்


2. இரண்டு கப் பச்சரிசி மாவில் தேன்குழல், தட்டை முதலியவை செய்தால் சுமார் 250 கிராம் கிடைக்கும். ஒரு கப் புழுங்கலரிசி ஊறவைத்து அரைத்து செய்தால் சுமார் 300 கிராம் கிடைக்கும்.

3. ரவை வாங்கியவுடன் நன்றாக வறுத்து வைக்கவும். வண்டு, பூச்சி வராது.

4. ஃப்ரூட் சாலட் பண்ணுவதற்கு பழங்களை நறுக்கி சிறிது உப்புக் கரை‌‌த்த தண்ணீரில் கழுவி எடுத்து வைத்தால் பழங்கள் நிறம் மாறாது.

5. பாசிப் பயறு முளை கட்டுவதற்கு பயறை இரவில் ஊறப்போட்டு காலையில் தண்ணீரை வடித்துவிட்டு காணுரோலில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். மாலைக்குள் நன்றாக முளை கட்டிவிடும்.

6. துவரம் பருப்பைக் குக்கரில் வைக்கும் முன் 10 நிமிடங்கள் கொதிக்கு‌ம் நீரில் ஊறவைத்து, நாலைந்து சொட்டு நல்லெண்ணை விட்டு வேக வைத்தால் பருப்பு நன்றாகக் குழைந்துவிடும்.

7. அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைத்து பின் சாதம் வைத்தால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.

8. பாயசத்திற்கு சர்க்கரையை நேரடியாகப் போடாமல் சர்க்கரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்றாகக் கரைந்து ஒரு நிமிடம் கொதித்தபின் பாயசத்தில் சேர்த்து கொஞ்சம் கொதிக்க விட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.

9. வாழைப் பூ, வாழைத் தண்டு ஆகியவற்றை வாங்கியவுடன் நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். காய் மூழ்கும்படி தண்ணீர் வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃமூடி பிரிட்ஜில் வைக்கவும். நாலைந்து நாள் கழித்துக் கூடச் சமையல் செய்யலாம். கலர் மாறாமல் இருக்கும்.

10. தேங்காய் முற்றலாக இல்லாமல் இளசாக இருந்தால் தேங்காய் துருவும்போது கொத்து கொத்தாக விழும். இந்த மாதிரி தேங்காய் இளசாக இருந்தால் உடைத்து ஃபிரிட்ஜில் சில மணி நேரம் வைத்திருந்து துருவினால் நன்றாக பூவாக விழும். முற்றிய தேங்காயை உடனே துருவி விடவும். 

Thanks : webdunia.com

கையெழுத்தும் தலையெழுத்தும்

உன் கையெழுத்து எப்பொழுது ஆட்டோகிராப் ஆக மாறுகிறதோ அப்போதுதான் நி மனிதனாக பிறந்ததுக்கு ஆர்த்தம்  என சொல்லுவார்கள் . அப்படி சாதனை படைத்த சிலரின் கையெழுத்துகள் இதோ .
(இது எனது தோழி அனுப்பிய மெயில் )
Saturday, May 28, 2011

நான்களும் விடுவோம்ல பஸ்…..ஏன் காதலை தங்கைகள் ஆதரிக்கின்றனர், அண்னங்கள் எதிர்கின்றனர்?
தங்கைகளுக்கு காதலை பற்றி தெரியும்..
அண்னங்களுக்கு  ஆண்களை பற்றி தெரியும்.   # லவ்வாலஜி


நம்ம வீட்டில் கரண்ட் போனா உடனே வெளியே வந்து அடுத்த வீட்டில் கரண்ட் இருக்கானு பார்போம் # சந்தோஷலாஜி

எல்லாரும் கரண்ட் போனா தீப்பெட்டி தேடுவாங்க , நான் மட்டும் என் அப்பா சட்டை பையே தேடுவேன் # பைனானஸ் டைடாலஜி

யாரும் பார்காத ஃபிகரதான் நாம் பார்போம் , ஆனா நாம பார்தபின் பலர் அதையே பார்கின்றனர் # போட்டியாலஜி

பஸ் பயணத்தில் தாத்தாவுக்கு பக்கத்தில் மட்டும் நிறைய ஃபிகர்கள்
 # வயித்தெரிச்சலாஜி

நமக்கு டாடா காட்டிய பழைய காதலி, அவள் குழந்தையிடம் நம்மை காட்டி மாமாக்கு டாடா காட்டு எனும்போது அழுவதா? சிரிப்பதா?
# டவுட்டாலிஜி


சிபி பஸ்ஸ பார்த்து நானும் பஸ் விடுவது # காப்பியாலஜி

Friday, May 27, 2011

நமது பதிவரின் அனுபவம்


நமது பதிவர் “வேடந்தாங்கல்” கருண் பணிபுரியும் கிராமத்து பள்ளியில்..

கருண் : மாணவர்களே! நாளை D.E.O Inspection வாரார். எனவே நான்
           உங்களுக்கு 4 கேள்வியும், 4 பதிலும் சொலுரேன். நாளை அதே
           கேள்விய வரிசையா கேட்பேன், நிங்க பதிலை வரிசையா
           மனபாடம் பன்னி சரியா சொல்லுங்க.

கேள்வி 1 : இந்தியாவுக்கு எப்ப சுத்திரம் கிடைத்தது?

பதில்   1 : 1847 ல Try பன்னி 1947 ல கிடைதது.


கேள்வி 2: இந்தியாவின் பிரதமர் யார் ?

பதில்   2: அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்

கேள்வி 3: எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா?

பதில்  3: ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது.

கேள்வி  4: தாவூத் இப்ராஹிம் பத்தி என்ன நினைக்கிறாய்?

பதில்  4: அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
            சுடனும்.

மறுநாள் பள்ளியில்.. கருணுக்கு பதில் D.E.O கேள்வி கேட்க ஆரம்பிசார்.

கேள்வி 1 : நி எப்ப இந்த பள்ளியில் சேர்ந்தாய்?

மாணவன் : 1847 ல Try பன்னி 1947 ல

கேள்வி 2:உங்க அப்பா பெயர் என்ன?

மாணவன் : அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்

கேள்வி 3 : நி என்ன பைத்தியமா?

மாணவன் : ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது

கேள்வி 4 : உங்க வாத்தியார் கருண் எப்படி?

மாணவன் : அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
            சுடனும்.


குழந்தைகளும் இ‌‌ன்டர்நெட்டும்

குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிக்க பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது :
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது :
குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.

கம்ப்யூட்டரை பொதுவான இடத்தில் வைப்பது :
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

கம்ப்யூட்டரில் செலவிடும் நேரத்தை விதிப்பது :
இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க `பாஸ்வேர்ட்' உதவும்.

இன்டர்நெட் உபயோகத்தை கண்காணிப்பது :
வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் `சைபர் கஃபே'களுக்குச் செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதை விட கண்காணிப்பது சிறந்தது.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு‌ம் தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். 

Thanks: webduniya.com

Wednesday, May 25, 2011

அறியாப்பருவக் காதல்

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம். 

Thanks: webduniya.com

Tuesday, May 24, 2011

அப்ப என்னா______க்கு ஆட்சி பன்னுறாங்க?முஸ்லிமே ஆனாலும் ஒசாமா பிலேடனிக்கு பாகிஸ்தான்ல பாதுகாப்பு இல்ல, ஆனா 100 பேர்க்கு மேல கொன்ன கசாப்க்கு கோடிகணக்குல செலவு பன்னி பாதுகாப்பு.

கிடங்குல உணவு தானியங்கள் வீணாபோனாலும் போகும் ஆனா பொதுமக்களுக்கு தரமாட்டானுங்க..

கஷ்டப்பட்டு சம்பாரிக்கின்ற நாம சொத்து விவரதை தரனும், ஆனா M.P என்ற போர்வையில் கொள்ளை அடிக்கும் கூட்டம் சொத்து விவரத்தை அளிக்க தேவைல்லயாம்.

500,  1000 லஞ்சம் வங்குரவனை பிடிபானுங்க.. கோடி கணக்குல லஞ்சம் வாங்குனவனை ஜாமின்ல விடுவாங்க.

நாம பேங்குல பணம் போட்டா 1008 கேள்வி கேட்பானுங்க.. சுவிஸ் பேங்க் உள்ள பணத்தை பத்தி வாய தொரக்கமாட்டானுங்க.

என்ன தப்பு நடந்தாலும் எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்ல ஒரு P.M

நம்ம நாட்டு அறிக்கையா? அடுத்த நாட்டு அறிக்கையானு தெரியாமலே படிக்குர வெளியுறவு துறை அமைச்சர்.

போபால்ல செத்தவனுக்கு சரியான இழப்பிடுகூட வாங்கிதர வக்கு இல்லாத நீதி துறை.

அணுஉலை வைப்போம், மனித உயிருக்கும் உலை வைப்போம், அப்படி செத்தா நாங்க தர இழப்பிடதான்(பிச்சை) வாங்கிகனும்னு அமெரிக்கா சொன்னா தலையாட்டும் ஒரு அமைச்சரவை.

ஸ்பெக்ட்ரம்ல 120000 கோடி, S Band ல 3,00,000 கோடி காமன்வெல்த்ல 3000 கோடினு ஊழல் பண்னியவர்களின் பதவியைகூட பறிக்க முடியவில்லை

                     அப்ப என்னா______க்கு ஆட்சி பன்னுறாங்க?(_____ல என்ன கேவலமான வார்தை வேண்டுமானாலும் போட்டுகொள்ளுங்கள். அப்பவாது சொரனை வருதானு பார்போம்)

Saturday, May 21, 2011

ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து: கொளத்தூர் மணி
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் என கொளத்தூர் மணி கூறினார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ஐ.நா. சபை அறிக்கையில் ஈழத்தில் போர் குற்றம் நடைபெற்று இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
 
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே மற்றும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கடந்த 5ந் தேதி முதல் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் ஐ.நா.சபையின் அறிக்கைக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்திற்கு வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார்.
 

இந்தியா ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்யாமல் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை மனதில் கொண்டு இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும். ஐ.நா.சபையின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றார்.


Thanks: kingtamil

Friday, May 20, 2011

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

Thanks: webduniya,com

Wednesday, May 18, 2011

இது போல இங்கிலீஷ் பேச முடியுமா ?


கீழே  உள்ள வீடியோவ பாருங்க . அதுல உள்ளது போல உங்களால பேச முடியுமா ?


Tuesday, May 17, 2011

ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார் : வடிவேலுதமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் 
அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார். இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இ திமுகவைப்போல் அதிமுகவும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.
 
 
Thanks: kingtamil

Monday, May 16, 2011

IPL ல நம்ம பதிவர்கள்தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட ?

ஸ்ரீசாந்த் : இல்ல கேப்டன்.. அது வந்து?

தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்க தோனுச்சு ?

ஸ்ரீசாந்த் : மன்னிசுடுங்க கேப்டன்.. தெரியாம கேட்டுடேன்..

தோனி :என்னை பாத்தா உன்னக்கு எப்படி தெரியுது? எப்படிடா அத எங்கிட்ட கேட்ட?

சச்சின் : அப்படி என்ன கேள்விதான் அவன் உன்ன கேட்டான்?

தோனி : WORLD CUP அ நாம வச்சிருக்கோம், WORLD CUP அ வச்சுருந்த அந்த 2 பொன்னுகளை யார் வச்சுருக்கானு கேட்கிறான்.“நல்ல நேரம் “ சதிஷ் அப்பா : பக்கத்து வீட்டு பெண்னை பாரு .. அது
                                      எவ்வளவு MARK எடுத்து இருக்கு. அதை
                                      பார்த்தாவது ஒழுங்கா படி.

சதிஷ் : ஹ்ம்ம்.. அவளை பார்த்து பார்த்து தான் படிக்காமளே போனேன்.


என்ன கொடுமை இது ?

பெண்கள் 20-10 IPL TEAM

ஹன்சிகா ( C )
அனுஷ்கா ( WC)
திரிஷா
பாவனா
தம்மனா
ஷிரயா
ஜெனிலியா
சமிரா
அசின்
பிரியாமணி
அமலா பால்

COACH : “வேடந்தாங்கள்” கருன்
BOWLING COACH : “ வலைஜன் “ ரஹிம் கஸாலி
FIELDING COACH : “அட்ரா சக்க “ சி.பி.செந்தில்
MANAGER           : நாஞ்சில் மனோ
மகன் : அப்பா நேத்து எனக்கு வந்த MATHS TEACHER சூப்பர் பிகர் பா.!

அப்பா : சீ.. TEACHER அ அப்படி சொல்லகூடாது.. அவுங்க உனக்கு அம்மா போல..

மகன் : பாத்தியா சைக்கிள் கேப்புல நீ ரூட் போட பாக்குர..


கண்டக்டர் : நான் 3 தடவை விசில் அடிச்சும் ஏன் பஸ் நிற்க்கவில்லை?

டிரைவர் : போடா லூசு .. நான் 5 தடவை பிரேக் போட்டும் பஸ்
     நிற்க்கவில்லை..
இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு?: கி.வீரமணி

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு? என்று பலர் கேட்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்று வந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை - வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை.அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் 933-லேயே ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந்தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967-இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் - மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு - குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல.புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thanks : webduniya.com

Sunday, May 15, 2011

அடங்க மாட்டனுகளா இவங்க ?தேர்தல் முடிவு வந்த அன்று ப்ளாக் சரியாக வேலை செய்யவில்லை . மொபைல் ல facebook  ல இருக்கும் போது ஒருத்தர் ஒரு கமெண்ட் போடுருந்தார் .
" ADMK ஜெயிக்க வச்சுடனுங்க நாய்ங்க இனிதான் படபோரனுங்க "

தம்பி profile ல பாத புள்ள PMK ஆளு .

தேர்தலுக்கு முன்னாடி யார் காலுல விழுந்து ஒட்டு பிச்சை கேட்டனுகளோ அவர்கள் இப்ப நாய்களாம் ..
இவனுங்களுக்கு ஒட்டு போட்டா மனிதன் இல்லன நாய்.

அடுத்த கமெண்ட்

"PMK யாராலும் அழிக்க முடியாது .."

உண்மைதான் .. காங்கிரஸ் அ அழிக்க தங்கபாலு போதும் அது போல PMK அழிக்க ராமதாஸ் போதும்.
ராஜ் டிவி நேர்காணலில் PMK   ஒருவரிடம் கேட்டனர் "ஏன் அன்புமணி ராமதாஸ் தேர்தல்ல நிற்கவில்லை?"
அதுக்க அவர் சொல்லுறார் " எங்க கட்சி ஜெயிக்கணும்னு அவர் எல்லா தொகுதிக்கும் பிரசாரம் பண்ண வேண்டி இருந்தது அதன் நிற்கவில்லை "
அட பாவிகளா .. அப்பா கலைகர் , ஜெயலலிதா , விஜயகாந்த் நிற்கலியா? பிரசாரம் பண்ணலையா ?
நின்ன தோதுடுவோம் என்ற பயம் தான் காரணம்.

வேணா பாருங்க அடுத்த இரண்டு வருடத்தில் ராமதாஸ் ஜெயலலிதா கூட்டணிக்கு வராரா இல்லியான்னு ...

டிஸ்கி 1 :  ஏன் சம்மதம் இல்லாம குரங்கு படம் போடுருக்கேன்னு தெரியாதவங்க PMK  பத்தி இன்னும் புரிசுகனும்னு அர்த்தம்
Saturday, May 14, 2011

பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்

உணவு கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி கெட்டுப்போவதாக மீண்டும் செய்தி வெளியாகி உள்ள நிலையில், நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உணவுக்கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி வீணாகும் நிலையில், அவற்றை ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ கொடுத்தால் என்ன? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு நல்ல பயிர் விளைச்சல் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோரடங்கிய அமர்வு, நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் இந்த கோடையில் பொது விநியோக திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏழைகள் அதிகம் நிறைந்த 150 மாவட்டங்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவதற்காக 5 மில்லியன் டன் உணவு தானியங்களை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட கூடுதல் உணவு தானியங்களை பெற்றுக்கொண்டதை உறுதிபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thanks : tamil.webdunia.com

Wednesday, May 11, 2011

உங்கள் ப்ரௌசெர் (Browser) டான்ஸ் (Dance) ஆட வேண்டுமா ?பின் வரும் code காபி செய்து உங்கள் ப்ரௌசெர் (Browser) அட்ரஸ் பாரில் பேஸ்ட் பண்ணவும் ..

javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)

Monday, May 9, 2011

" ரானா " பட பெயர் விமர்சனம்


முதலில் ராணா என வைக்கப்பட்ட பெயர் பின்பு ரானா என மாற்றப்பட்டது.ரானா என்பது முன்பு வாழ்ந்த ஒரு மன்னனின் பெயர் . இப்படம் சரித்திர படம் என எதிர்பர்க்கபடுகிறது .ரஜினி , ரவிக்குமார் , ரகுமான் என பல ராவுடன் துவங்கும் பெரும் தலைகள் இதில் இருக்கின்றனர்.

ரானா என எழுதும் Style பழங்கால எழுத்துகள் போல கூர்மையாக உள்ளது .

கொயிய்யலே ... படத்துக்கு விமர்சனம் போட்டக பொறுத்துகிட்டேன் , பாடலுக்கு போட்டக பொறுத்துகிட்டேன்இப்ப போஸ்டர்க்கு போட்டாத என்னால பொறுக்க முடியல , அதன் விளைவு இந்த பதிவு ..

வாழ்த்துக்கள்

இன்று வெளிவந்த + 2 தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .


வெற்றியை தவறவிட்ட அனைவருக்கும் ஒரு வார்த்தை ..

கவலைபடாதே மறுதேர்வில் வெற்றி உங்களுக்காக காத்துஇருக்கிறது..

Sunday, May 8, 2011

ராஜபக்சேவை கைது செய்ய முடியும்! வெளிநாடுகள் செல்ல வேண்டாம் என சட்ட வல்லுநர் எச்சரிக்கை!

இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாடுகளுக்கு சென்றால் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுவார் என, அந்நாட்டின் மூத்த சட்ட வல்லுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஐ.நா. வல்லுநர் குழு அம்பலப்படுத்தியதையடுத்து, ராஜபக்சே உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
 
இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர தயாராகி வருகின்றனர். இதனால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மூத்த சட்ட வல்லுநர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, போர்க்குற்றம் அடிப்படையில் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளார்.

Thanks: kingtamil

Saturday, May 7, 2011

இப்படியும் கிரிக்கெட் விளையாடலாம்

இது கிரிக்கெட் சீசன் ...

இந்த கிரிக்கெட் அ பாருங்கள் ...

சிரிப்பை அடக்க முடியாது ...

Friday, May 6, 2011

சந்தேகம் கண்ணா சந்தேகம்
  1. குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)

  1. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் எப்படி இன்னும் குரங்கு இருக்கின்றது.

  1. சாலை ஒரத்திலும், பேருந்து நிலையங்களிலும் தவறவிட்ட ஒரு செருப்பு மட்டுமே கிடக்கிறதே, இன்னொன்று எங்கே?

  1. மிண்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?

  1. ஸ்ரீசாந்த் வீட்டில் CBI ரெய்டாம். அப்ப “ 10 நாளில் Bowling போட கற்றுகொள்வது எப்படி” Author ஆஷிஷ் நெகரா னு போட்ட புத்தகம் இருந்ததாமே உன்மையா?

  1. பேருந்தில் 2000 கிரைண்டர்க்கு லக்கேச் போடும் கண்டக்டர் 200000 நெக்லஸ்க்கு ஏன் போடுறதில்ல?


முக‌ அழகை‌க் கூ‌ட்ட

நமது முகத்தை அனைவரும் பார்த்து ரசிக்கவேண்டும் என நினைப்பது இயல்பு . எனவே முகத்தை அழகாக வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என webdunia.com  சொலுகிறது. இதை படித்து பயன் பெறுங்கள் .

 
5 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம். 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌ப‌ச்சை‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழுவவு‌ம்.

கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

உட‌ம்‌பி‌ல் கறு‌ப்பாக இரு‌க்கு‌ம் மு‌ட்டி, மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ளி‌ல் த‌யி‌‌ர் அ‌ல்லது எலு‌மி‌ச்சை சாறை தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கருமை ‌நீ‌‌ங்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் பரு‌க்க‌ள் உ‌ள்ளவ‌ர்க‌ள் பே‌‌சிய‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம். பரு‌க்கைள ‌கி‌ள்ளுவதோ, அதனை சுர‌ண்டுவதோ த‌வறு.

கறு‌ப்பான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள், உடனடியாக வெ‌ள்ளையா‌க்குவோ‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்களை ந‌ம்‌பி எ‌ந்த மரு‌ந்‌துகளையு‌ம் முக‌த்‌தி‌ல் போட வே‌ண்டா‌ம்.

Thursday, May 5, 2011

“ A “ ஜோக்ஸ்
அருண் : இந்த தேர்தல் ஒரு பிரசவம் போல ?

ஆனந்த் : ஏப்படி ?

அருண் : வரபோற C.M ஆணா? பெண்னா? னு தெரியலையே?


அரவிந்த் : நம்ம காதல பத்தி சொல்ல உன் வீட்டுக்கு போனேன். நம்ம
              காதல் ஜெய்காதுனு நினைக்கிறேன்?

அனிதா  : ஏன் எங்க அப்பாவை பார்திங்களா?

அரவிந்த் : இல்லை ! ! உன் தங்கசிய பார்தேன்.


அமல்(பேஷண்ட்) : நர்ஸ் ! ! நிங்க என் இதயதையே திருடிடிங்க

அனுஷ்கா : போடா லூசு டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார்.


அருள் : I LOVE YOU

அழகி : நான் ஒத்துகளனா என்னா பண்ணுவ?

அருள் : நி ஒத்துகளனா நான் “வேடந்தாங்கல்”, “அடரா சக்க”, நல்ல
           நேரம்” BLOG அ 24 மணி நேரமும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

அழகி : எனக்காக உன் உயிரயே பணயம் வைக்கிற.. SO   I LOVE YOU 
           டா


ஆதவன் : சைக்கிள் கடைகாரர் பையனை திருகுரள் சொல்ல சொன்னது
             தப்பா போச்சு..

ஆறுமுகம் : ஏன்?

ஆதவன் : பெல்லென்ப ஏனய பிரேக்கென்ப இவ்விரண்டும்
             கண்னென்ப ஓடும் சைக்கிளுக்கு.  என சொல்லுறான்.

இதுல எங்க “A” JOKE இருக்கு னு கேட்குறிங்களா ? இதுல வர எல்லா பெயரும்  A ல ஆரம்பிக்கும் பாருங்க.