> என் ராஜபாட்டை : October 2011

.....

.

Monday, October 31, 2011

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

வேலாயுதம் படத்தில் “ரத்ததின் ரத்தமே.. “ பாடலில் “சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கி வந்தேன்” என ஒரு வரி வருகிறது. சென்னை சங்கமம் கனிமொழி நடத்தியது எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்வேண். ஜெயலலிதா.   # இமாஜினிஷன்.


மங்காத்தா படத்தில் அதிகமாக புகைபிடிக்கும் காட்சிகள் உள்ளது எனவே அந்த படத்தை தடை செய்யவேண்டும் அன்புமணி # சாரி கொஞ்ச நாள் தூங்கிடேன்.

7 ஆம் அறிவு படத்தில் தமிழர்கள் திருப்பி அடிக்க வேண்டும் என சூரியா கூறுவது வன்முறையை தூண்டும் வசனம் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.- தங்கபாலு  # ஏன்பா நான் சரியா பேசுறேனா?

“சோனியா, சோனியா சொக்கவைக்கும் சோனியா” என பாடி எங்கள் தலைவிய கிண்டல் செய்த ரஹ்மானை கைது செய்ய வேண்டும் # ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


“வ- குவார்டர் கட்டிங்” என பெயர் வைத்தது என்னை கிண்டல் செய்வது போல் உள்ளது  # விஜய்காந்த்“ஜில்லாக்” பாடலில் “நாட்டு கட்டை, டவுனு கட்டை இரண்டும் கலந்த செம கட்டை..” என மரத்தை பற்றி பாடி எங்களை கிண்டல் செய்கிறார் விஜய். # ராமதாஸ்.


விஜய் வேலாயுதத்தில்  “ஜில்லாக்” பாடலில் "சூரியனே தேவையில்லை .." என பாடியதால் தான் நாங்கள் தோற்றோம் ..  # கருணாநிதி
Saturday, October 29, 2011

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க இரண்டு படங்கள் வந்துள்ளது(ரா-ஓன் டப்பிங்க்). இதில் இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்பை ஏர்படுத்திய பட்ங்கள். இதில் விஜய் நடித்த வேலாயுதம் மிகுந்த எதிபார்பை ஏர்படுத்தியது. பல தோல்வி படங்களுக்கு பின் கண்டிப்பாக வெற்றி பெறவ்ண்டிய கட்டாய்த்தில் இருந்த விஜய்க்கு இது டாப்பா? அல்லது ஆப்பா? என தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்களுக்கு சென்று பலர் எழுதிய விமர்சனங்களை படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

1. தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை

 

2. வேலாயுதம் - தீபாவளி சரவெடி! பலருக்கு நெத்தியடி!

 

3. வேலாயுதம் 

4.வேலாயுதம் ஒரு கவிதை!


 

5. வேலாயுதம் - கமர்ஷியல் ஹிட்டா , விமர்சியல் ரிவீட்டா - சினிமா விமர்சனம்

 

6. வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!! 

7.வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!


 

டிஸ்கி : நமது பிளாகில் ஒரு POLL BOX வைத்திருந்தேன். அதன் முடிவு( நேற்று இரவு வரை)

வேலாயுதம் : 669

7 ஆம் அறிவு : 49

 நன்றி : லிங்க் குடுத்த புண்ணியவான்களுக்கு ..

Friday, October 28, 2011

அரசியல்வாதி ஆவது அப்படி ?
டாக்டர் ஆவது எப்படி? ஆசிரியர் ஆவது எப்படி? பிளாக்கர் ஆவது எப்படி? ஏன் சாமியார் ஆவது எப்படினு கூட எல்லாரும் எழுதிட்டாங்க. ஆனா அரசியல்வாதி ஆவது எப்படினு யாரும் எழுதவில்லை. இந்த உலகத்திலேயே அதை எழுத சிறந்த நபர் நீங்கள்தான் என கூறி என்னை எழுததூண்டிய 1,00,000 க்கு மேற்ப்பட்ட பதிவர்களுக்கு நன்றி.

  1. கட்சியை தெரிவு செய்யுங்கள்.

·         எதாவது ஒரு கட்சியில்  சேருங்கள். கொள்கை, கன்றாவிலாம் பாக்காதீங்க( எந்த கட்சில இதெல்லாம் இருக்கு?).

·         அந்த கட்சியில் உங்கள் ஊர் முக்கிய புள்ளியின் பிறந்த நாள், மகள் வயசுக்கு வந்த நாள், அவர் முதல் முறை குப்புர படுத்த நாள் என அனைத்து நாளுக்கும் வாழ்த்து போஸ்டர் அடித்து அவர் கண்னில் படும் இடத்தில் ஒட்டவும்.


  1. தலைமையை காக்காபிடிக்கவும்.

·         கட்சி தலைவருக்கு பேதிவந்தா கூட உடனே அவருக்காக மண் சோறு சாப்பிடனும்(அதையும் போட்டோ எடுத்துகனும்).
·         வருங்கால நிரந்தர முதல்வர், ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் என வாய்ல வந்தத அடிச்சுவிடனும்.
·         தலைவர் கைது செய்யபடலாம் என செய்தி வந்ததும் மண்னனெய்ல தண்னிய கலந்து மேல ஊத்திகனும்(வேண்டாம்னு தடுக்க 5 பேர் ரெடியா இருக்கனும்)

  1. போட்டோ .

·         வெள்ளை வேட்டி, சட்டையில் கும்பிடுவதுபோல, வயதான கிழவியை கட்டிபிடிப்பது போல, குழந்தையுடன் உட்காந்து சாப்பிடுவது போல, 1000 மக்கலுக்கு மத்தில நிற்ப்பது போல, யேசு, ராமர், காந்தி, போல போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  1. வாக்குறுதிகள் :

·         எந்த அரசியல்வாதியும் சொன்னதை செய்யபோவதில்லை. எனவே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களூக்காக சில..

·         18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.

·         எங்கள் ஆட்சியில் வங்கால விரிகுடாவில் கண்டிப்பாக தூறு வாரப்படும்

·         எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.

·         இலங்கையில் மக்கள் தொகைகுறைய நான்கள் தான் காரணம்.

·         எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்.டிஸ்கி : இவற்றை முயர்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல.

Wednesday, October 26, 2011

வாழ்த்தலாம் வாங்க


HAPPY

DIWALI
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 
 

Tuesday, October 25, 2011

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

இந்த திபாவளிக்கு சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளேன். கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         பிரபுதேவா வெடி.

இந்த வெடிக்கு இரண்டு பக்கமும் இரு வெடி வைக்கவேண்டும். ஓன்று பழய வெடி, மற்றொன்று புது வெடி. ஆனால் எது கூட சேர்ந்து வெடிக்கும் என யாருக்கும் தெரியாது.

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது கவர்ச்சி படம் ஒட்டுனாதான் வெடிக்கும்.

3.      விக்கி வெடி:

இந்த வெடியை விடியோக்கு பக்கத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும்.

6.      அழகிரி வெடி :

இது வெடிக்கும் மும்பு பயங்கர சத்தம் வரும், ஆனா பத்தவைத்தால் புஷ்னு போய்டும்.

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்)

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.
Monday, October 24, 2011

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

சினிமா ரசிகர்களுக்கு இந்த திபாவளி நல்ல விருந்தாக அமையபோகின்றது. காரணம் விஜய் நடிப்பில் “வேலாயுதம்” மற்றும் சூர்யா நடிக்கும் “ 7 ம் அறிவு” படமும் ஒரே நேரத்தில் வெளிவருகின்றது. இதனால் சிம்புவின் “ஓஸ்தி”, தனுஷின் “மயக்கம் என்ன?” போன்ற சில படங்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டன. இந்த இரண்டு படங்களில் வெற்றி பெற போவது எது என்பதை நாம் அலசுவோம்( ரீன் பவுடர் போட்டு)

வேலாயுதம்

        ஆஸ்கார் மூவிஸ் சார்பாக ரவிசந்திரன் தயாரிக்கும் படம் இது. ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் படம். தொடர் தோல்விக்கு பின் விஜய்யும், தில்லாலங்கடி தோல்விக்கு பின் ராஜாவும் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது. மிக பிரமாண்ட பொருள் செலவில் தயாராகும் படம்.

        பாடல்கள் அணைத்தும் இப்போதே மிகவும் பிரபலமாகிவிட்டது. படத்தின் டிரைலர் கூட அருமையாக இருப்பது பிளஸ் பாயிண்ட். இந்த படம் விஜய் ரசிகர்களை எமாற்றாது என நம்பலாம்.

7 ஆம் அறிவு

        சூர்யா நடித்த படங்களில் மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான். தீனா, ரமனா, கஜினி என்ற பிரமாண்ட வெற்றிக்கு வின் முருகதாஸ் இயக்கும் படம். ரெட்ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிபோய் இருக்கின்றது.

        ஹரிஸ்ஜெயராஜ் இசை படத்திர்க்கு மிக பெரிய பலம். படல்கள் இப்போதே பட்டிதொட்டியெல்லால் பட்டையை கிளப்புகிறது. போதிதர்மர் என்பவரை பற்றிய உண்மை கதை என்பதால் இன்னும் எதிபார்ப்பு அதிகமாக உள்ளது.

ஜெயிக்க போவது யார் ?

        இந்த படம்தான் ஜெயிக்கும் என சொல்ல நான் ஜோதிடர் அல்ல.(அப்ப எதுக்கு இந்த பதிவுனு கேட்ட்க கூடாது) நம்ம பிளாக் சைட்பாரில் ஒரு POLL Box உள்ளது. எது வெற்றி பெரும் என நீங்கள் நினைக்கின்றிர்களே அதுக்கு ஓட்டு போடுங்கள்.

விஜய், சூர்யா இருவர்க்கும் நமது வாழ்த்துகள்.


Sunday, October 23, 2011

என்ன கொடுமை சார் இது ?

கிழே சில படங்கள் உள்ளது . அந்த படங்களில் உள்ளவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்விர்கள் ...?
கண்டிப்பா மேலே உள்ள தலைப்பைதான் சொல்லுவிர்கள் ..

Saturday, October 22, 2011

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

“அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம்  # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?“யாருமே எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை “ காங்கிரஸ்
# ஐஸ்வர்யா வலைகாப்பிற்க்கு என்னை அழைக்கவில்லை சல்மான் கான்

………………………………………………………………………………………….

“ மணல் கடத்திய அ.தி.மு.காவினர் கைது. இது போல எங்கள் ஆட்சியில் நடக்குமா? # சென்னை பொது கூட்டத்தில் கருனாநிதி

# நீங்க இடத்தயேல கடத்துவிங்க.

…………………………………………………………………………………………

“ இளைஞர் அணி தலைவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அவரை முதியோர் அணி தலைவராக மாற்றுகிறேன்.”

கருனாநிதி அறிவிப்பு, ஸ்டாலின் அதிர்ச்சி.


“ புதிதாக 10000 காவலர்களை இந்த அரசு நியமித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு நிகராக குற்றவாளிகளின் என்னிக்கையை உயர்த்த இந்த அரசு எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை “ # கருனாநிதி குற்றசாட்டு.


நிருபர்; “ நீங்க எழைகளுக்கு குடுத்த பசு மாடு ஒன்னுகூட பால்
கரக்கமாட்டுதாமே ?“

தலைவர் : “அது எதிர்கட்சி சதி. எல்லா எருமை மாட்டிர்க்கும் பிளாஸ்டிக் சர்ஸரி பன்னி பசு மாடுனு சொல்லி எங்களை எமாத்திடாங்க.”


“ எங்கள் கட்சி மேல் போடபட்டிருக்கும் பொய் வழக்குகளை சந்திக்க  னா நாங்களே சொந்தமாக நீதி மன்றம் ஆரம்பிக்க இருக்கிறோம்.” கருனாநிதி # இமாஜினேஷன்.


“உள்ளாட்சி தேர்தலுக்கு பின் டாஸ்மாக் கடைகள் அடித்து மூடப்படும் என்று சொன்னிங்க, தேர்தல் தான் முடிந்துவிட்டதே ?”
“அது போன மாசம்..”

“அப்ப இந்த மாசம் என்ன சொல்விங்க..”

“ நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..”

“இதுக்கு நீங்க சிம்புக்கும் நயன் தாராக்கும் திருமணம் நடந்தானு சொல்லிருக்கலாம்”

பொது அறிவு சிங்கம்: துரைமுருகன் ( தி.மு.,க)

“ நம் நாட்டில் உள்ள ஆந்திரா, கேரளா, பூட்டான் போன்ற மாநிலங்களில் சொந்தமாக சட்டமன்றங்கள் உள்ளன”


Friday, October 21, 2011

நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்
இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.

மனோ பள்ளியில் படிக்கும் போது..:

ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?

மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..

( ஆசிரியர் அவுட்)

…………………………………………………………………………………….

ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

மனோ : டெலிவரி

………………………………………………………………………………….

ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?

மனோ : இரண்டும் இல்லை.

ஆசிரியர் : பின்பு?

மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்

------------------------------------------------------------

மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..

“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”

…………………………………………………………………………..

காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,

சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..

மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.

(மனோ புத்திசாலி)

…………………………………………………………………………….

மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?

மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.

………………………………………………………………………………..

மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?

மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட  புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?

மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை


விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You  சொன்னியே என்ன ஆச்சு ?

மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..


விக்கி : எப்படி சொல்லுற?

மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..


மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..

கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

விக்கி : ஆமா( டூமில்.. விக்கி காலி)

கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.

( என்ன ஒரு கொலைவெறி)
 ஒரு குருப்பாத்தான் இருக்கோம் 

Wednesday, October 19, 2011

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டாபெயர்                        :  விஜய்

ரசிகர்களுக்கு             : இளைய தளபதி

ஜெயலலிதாவுக்கு          : அணில்

தொழில்                      : நடிப்பு

உபதொழில்                 : அரசியல்

நீண்டகால எரிச்சல்      : ராகுல் பேச்சு( இளைஞ்சர் அணியில் சேர வயது
கடந்துவிட்டது என்றது)

சமிபத்திய எரிச்சல்       : சன் டீ.வி

நீண்டகால போட்டி        : தல

சமிபகால போட்டி         : சூர்யா

பலம்                          : நடனம்

பலவீனம்                     : “பன்ச்” டயலாக்

மறக்க நினைப்பது         : முன்பு      : சங்கவி

இப்போது  :சுறா, வேட்டைகாரன்

மறக்கமுடியாதது          : காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக


நிறைவேறிய ஆசை       : சினிமாவில் முதலிடம்

நிராசை                      : அரசியலில் முதலிடம்

விரும்புவது                  : ரீ-மேக் படங்களை

நம்புவது                     : பெரிய இயக்குனர்களை.

நம்ப முடியாமல் தவிப்பது        :  அப்பாவின் அரசியல் பேச்சை

எதிர்பார்ப்பு                 : வேலாயுதம் வெற்றியை..

அதிக எதிர்பார்ப்பு        : 7 அறிவு தோல்வியை..


Tuesday, October 18, 2011

தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUMசமிபகாலமாக  பிளாக்கர்களுக்குள் நடக்கும் விவாதம் டமில்மணம்( தப்பா அடிக்கவில்லை). அதுவும் நம்ம பண்னிகுட்டி அண்னன் பதிவு போட்டபின் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. டமில்மணத்திற்க்கும் எனக்கும் நடந்த சண்டை பற்றி போடலாம வேண்டாமா என யோசித்துகொண்டிருக்கும் போது நல்ல நேரம் சதிஷ் பதிவும், நண்பர் நக்கீரன்(நாய்-நக்ஸ்) அவர்கள் தொலைபேசியில் சொன்ன தகவல்களும் , இன்னும் பல பதிவர்கள் எழுதிய பதிவும் இதை எழுத துண்டின.

கடந்த மாதம் “ தமிழ்மணத்தில் பதிவே எழுதாமல் முதலிடம் பெறுவது எப்படி?” என மொக்கை பதிவு போட்டேன். அதுக்கு அந்த பெயரிலி( அறிவிலி ?) வந்து டஸ்சு, புஷ்னு இங்கிலிஷ்ல கமெண்ட் போட கடுப்பான நான் அதை Delete செய்துவிட்டேன். கோபப்பட்ட அது உங்களை டமில்மணத்தில் இருந்து விலக்கிவைக்கிறேன் என மெயில் பன்னியது.(மனசுல நாட்டாமைனு நினைப்பு..).

கடந்த மாதமே இப்ப டமில்மணத்திற்க்கு சொம்பு தூக்கும் ஐடியா மணிக்கு ஒரு பகிரங்க கடிதம் என்னும் பதிவில் “ தமிழ்மனம் இல்லை எனில் பதிவுலகமே நடக்காதா ?” என கேட்டேன். இப்போ அந்த அறிவிலி சாரி பெயரிலி தானே வந்து வாயகுடுத்து மாட்டிகிட்டு.

பல நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும், மனம் வருந்தும் பதிவர்களின் வருத்ததில் பங்கு கொள்ளவும், டமில்மனத்தின் கொட்டத்தை அடக்கவும் தமிழ்மணம் ஓட்டு பட்டையை என் தளத்தில் இருந்து நீக்குகிறேன்.SOLANUM TORVUM என்றால் சுண்டைகாய் என அர்த்தம்Monday, October 17, 2011

இவருடன் போட்டி போட யார் தயார் ?நகைசுவை திலகம்

காமடி பிசாசு

சிரிப்பு டாக்டர் ( விஜய் இல்லை )


நமது உள்ளம் கொள்ளைகொண்ட நகைசுவை புயல் சாம் ஆண்டர்சன் அவர்களின் வீடியோ தொகுப்பு  உங்களுக்காக ..நடிப்பு திறமை வளர்ப்பது எப்படி ?


நடனம் ஆடுவது எப்படி ?


ரஜினிக்கு போட்டியாக ..மைகேல் ஜாக்சண்க்கு இணையாக ..டிஸ்கி : விக்கியுடன் சேர்ந்து ரொம்ப கெட்டுபோய்டேன் ..
அதான் ஒரே வீடியோ பதிவா இருக்கு ..
Sunday, October 16, 2011

கண்களை நம்பாதே


நாம் பார்பது ஒன்று , ஆனால் படத்தில் இருப்பது வேறு. இப்படி நம் கண்களுடன் கண்னாமூச்சி ஆடும் படங்களின் தொகுப்பு உங்களுகாக..மேலே உள்ள படம் உங்கள் கன்னைதான் கட்டும், அடுத்து வர போவது உங்கள் மூச்சை நிருத்தி விடும் ஜாக்கிரதை